ராவணன் கதாநாயகனா காமக் கொடூரனா?

இயக்குனர் மணிரத்தினத்தின் உழைப்பால் மீண்டும் ராமாயணம் எழுச்சி பெற்றிருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் ராமனல்ல கதைநாயகன், ராவணன். அப்போது கதைநாயகி நிச்சயம் சீதை தான்.

படத்தின் கதை –

3rdeye வலைப்பூவில் வெளியிடப்பட்ட கதையின் சுருக்கம்.

குற்றவாளிதான் விக்ரமுக்கு வைக்கப்படும் குறியில் அவரது தங்கை ப்ரியாமணி கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தவர் காவல்துறை அதிகாரி பிருத்விராஜ்.

இதனால் பெரும் கோபமும், ஆதிரமும் கொண்ட விக்ரம், ப்ருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்குகிறார் விக்ரம். அதன்பின் காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து ஒருவழியாக போலீஸ் கைக்கு கிடைக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

மனைவி கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராயை சந்தேகப்படுகிறார். அவனும், நீயும் ஒண்ணா காட்டுக்குள்ள சுத்துனீங்க. நீ சுத்தமா இருக்கிறியா? அதாவது நீ பத்தினியான்னும் எனக்கு தெரியணும் என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார் பிருத்விராஜ். இதனால் அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யா ராய் எடுக்கும் முடிவுதான் கதையின் க்ளைமாக்ஸ்.

ராவணன் தமிழன் –

ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம். ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன. இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்துவருகிறது… இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.

ஆதாரத்தின் சுருக்கம் –

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப்படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம்[வானூர்தி] போன்றவற்றைக் கண்டுபிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே

ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004] குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

ராவண காவியம் –

ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது. கம்பனின் சொல்வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் தி.க வினரும் இதை கவணத்தில் கொள்வதில்லை.

இதன் சாராம்சத்தில்

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.

எனக் குறிப்படப்பட்டுள்ளது.

பத்து தலைக் காதல் –

எண்சான் உடம்பிற்கும் தலைதான் பிரதானம் என்பது முன்னோர்களின் மொழி. ஒரு தலையுள்ளவனின் அறிவினை விட பத்துதலை உல்லவனின் அறிவு எப்படியிருக்கும் எண்ணிப் பார்க்க வேண்டும். பல கலைகளிம் வல்லவனான ராவணனின் பெருமைஉணர்த்தவே ராவணனுக்கு பத்து தலை உருவக் கதை சொல்லப்படுகிறது.

தமிழர்களின் ஆதித் திருமணங்கள் எல்லாமே காந்தர்வ திருமணங்கள் தான். ராவணன் தமிழனல்லவா, எனவே அவளை காந்தர்வ மணம் செய்ய விருப்பம் கொண்டிருக்கின்றான். காந்தர்வ திருமணம் என்றால் காதல். இந்தக் கால திரைப்படங்களில் கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் செய்யும் கதாநாயகர்களைப் போல சீதையை தூக்கிக் கொண்டு போய் காதல் செய்திருக்கிறான் ராவணன்.

சீதையை கவர்ந்த காரணம்

இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன. காமவல்லி இறந்தாள்.

தன் தங்கை அழிந்த செய்தியை இராவணன் தூதரால் அறிந்தான். உடனே அவன் விந்தம் சென்று காமவல்லி வளர்த்த மானை விட்டு இராமலக்குவரைப் பிரிக்கச் செய்தான். வீரர்களைக் கொண்டு அவர்களை வளைத்துக் கொள்ளுமாறு செய்து சீதையைக் கவர்ந்து சென்று அவளைப் போற்றினான்.

ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன் –

பல விதமான கலைகளிலும், அறிவிலும் ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன். சீதை விசயத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்…

சீதையை தூக்கி வந்தானே ஒழிய அவளை வன் புணர்ச்சி செய்யவில்லை.

ராமனோ ராவணனுடன் இருந்ததிற்காக சீதையை தீக்குளிக்க செய்தான். பின்பு ஒரு ஒற்றன் வந்து ஊரே ராமனை ஏசுவதாச் சொல்ல சீதை காட்டில் கொண்டுபோய் விட்டுவர இலக்குமணை அனுப்பினான்.

இதுவே ராவண காவியம் சொல்லும் உண்மை!

59 comments on “ராவணன் கதாநாயகனா காமக் கொடூரனா?

  1. விஜய் சொல்கிறார்:

    மயன் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர். அசுரர்கள் என்று பிராமணர்களால் அழைக்கப்படும் பலரும் இச்சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    இதற்க்கு பல சான்றுகள் உள்ளது.

    விஜய்

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      பிராமணர்களுக்கு ரொம்ப தொல்லை கொடுத்திருப்பாங்க போல!.

      சும்மா சொன்னேன். தமிழர்களையெல்லாம் அரக்கர்களாக மாற்றி கதை எழுதியிருக்கின்றார்கள். அதுவும் தலைசிறந்தவர்களை கூட இப்படி மாற்றியவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவில்லை எனும் போது தான் வேதனையாக இருக்கிறது.

    • சரவணன் கா சொல்கிறார்:

      உண்மையில் ஆரியர்கள் படையடுக்க தொடங்கியதும். அவர்கள் படையடுத்த முதல் இனம் Assyria (தமிழில் அசிரியர்கள் / அசுரர்கள்) இவர்கள் மத்திய ஆசியாவில் வாழ்ந்த ஒரு கருப்பு இனம். அதன் பின் ஆரியர்கள் படையெடுத்த கருப்பு இனமான தமிழ் இனத்தவரையும் அப்படியே குறிப்பிட்டனர்.. இப்படியும் தமிழருக்கு அசுரர்கள் என பெயர் வந்திருக்கும்…

      https://en.wikipedia.org/wiki/Assyria

  2. Nanban சொல்கிறார்:

    குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர் – its entirely wrong man. please do not open rumour

  3. படைப்பாளி சொல்கிறார்:

    ராவணன் தமிழன் நம்ம தலைவன் தலைவா…உங்கள் கட்டுரையில் தமிழனின் உணர்வை பார்த்தேன்..தமிழனாய் தலை வணங்குகிறேன் .

  4. Ramakrishnan சொல்கிறார்:

    ராவணனுக்கு ஒரு சாபம் உண்டு விருப்பப்படாதப் பெண்ணை தொட்டால் தலை வெடித்துச் சிதறும் என்று .அதனால்தான் அவன் சீதையைத் தொட முயற்ச்சிக்கவில்லை.அவன் ஒன்றும் உத்தமனல்ல . .தவிர அவன் எந்த இனத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் நல்லவனில்லை என்பது உண்மை

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      ராமனுடைய மனைவியை தூக்கி சென்றதால் அவனை நல்லவன் இல்லை என்கிறீர்களா ராமக்கிருஷ்ணா. சாபமெல்லாம் ஒன்றுமில்லை. கம்பர் ராவணனை சீதையை தொடாமல் இருந்ததை எழுதியதும். வழக்கம் போல பிராமணர்கள் சொன்ன கட்டுக்கதைதான் சாபமெல்லாம்.

      தங்கள் வருகைக்கு நன்றி்!

      • ஜெயவேல் சொல்கிறார்:

        இராவணனுக்கு சாபம் இருந்தது பற்றி நண்பர் கூறிய கூற்று உண்மைதான். வால்மீகி ராமாயணம் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் தொடவில்லை என்பது பொய் தன் இரு கைகளில் தாங்கி சீதையை சுமந்து சென்றான் என வால்மீகி விவரிக்கிறார். எனது கேள்வி என்னவென்றால், விருப்பமில்லாத பெண்ணை தொட்டால் இராவணன் தலை சிதறும்தானே. பின் ஏன் சீதையை தொட்டுத்தூக்கும்போது இராவணன் தலை சிதறவில்லை. அப்படியானால் சீதை விரும்பிதானே இராவணனுடன் சென்றிருக்கவேண்டும்

    • karuppasamy சொல்கிறார்:

      ramakrishnare ungal karuthey atharikkiren ungal pani thodara en vazhthukal nandri

  5. gTheeban சொல்கிறார்:

    வணக்கம். நல்லதொரு முயற்ச்சியை தாங்கள் செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள். எனக்கு தெரிந்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன். இராவணனன் சீதையை கடத்தி சிறை வைத்தார் என்றால், பாதுகாவலர்கள் பெண்களாகத்தான் இருந்தார்களே தவிர, ஆண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதை கட்டளையை மீறிய அநுமாரை பிடித்து, தன் சபையில் நின்ற வைத்தார். காரணம், அரச கட்டளையை மீறி அனுமதியின்றி, சீதையை பார்க்க சென்றது குற்றம் தானே. குற்றம் புரிந்தவனை நாற்காலியில் உட்கார வைத்து, உணவு உபசரிப்பார்களா? தனது சக்தியை வெளிப்படுத்த, தனது வாலால், இராணவனனின் இருக்கையை விட பல மடங்கு உயர்த்தி உட்கார்ந்து, தனது ஆணவத்தை வெளிப்டுத்தினார் அநுமர்…….இப்படி இன்னும் பல தகவல்கள் பிராமணர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது…….இன்னும் பல தகவல்களை நாம் ஆராய்ந்து பகிர்ந்து கொள்வோம்.

  6. tony சொல்கிறார்:

    It did not stop with ravanan. What about Vishu, the king for kerala and the reason for onam.

    The brahmins, or the hindus from north certainly changed history in southern part to their taste!. Thats true.

    I am a christian by belief. but I love lord muruga, as he is the only god for tamils. whether he is son of siva or brother of vinayaga is doubtful. Because when religions were spread & merged these things were introuduced so that the process of new religion will not be dramatically diffrent.

  7. kalaiyukan சொல்கிறார்:

    சீதை ராமனின் மனைவி.
    ராவணன் அவளை கவர்ந்து சென்றான்.
    காரணங்கள் பல கூறினாலும்,
    பிறர் மனைவியை கவர்ந்து சென்றது குற்றம் அல்லவா!

  8. prameen சொல்கிறார்:

    மா மன்னன், வீரத்திருமகன் ,சிவ சீலச் செல்வன் எங்கள் இராவண நாட்டவன் (இலங்கை) என் குலம் சான்றார் குலம் (நாடார்) இந்த உங்கள் கட்டுரை கண்டு மனம் மகிழ்கின்றது உன்மையில் நீங்கள் கூறியது யாவும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. உங்கள் சேவை இன்னும் வேண்டும்

  9. saravana arun(nan tamilan) சொல்கிறார்:

    nanri jagatheswaran, i’m happy 2 read tis article, bcoz i’m also hve doubtful abt ramayana…. nw its cleared… thanks for ur worthful post, sry for my comment in english.. my email id s

    saranarun03@gmail.com

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      மிக்க நன்றி நண்பரே. இராமன் என்ற மன்னனை அபரிவிதமாக புகழ்ந்து கடவுளாக்கியதாக கூட சிலர் நம்புகின்றார்கள். அவர்களின் கண்ணோட்டத்தில் ராவணன் அரக்கனல்ல, ராமனைப் போல மனிதன்தான்.

  10. தமிழ்ப் புதிர்கள் சொல்கிறார்:

    ராமன் கவர்ந்து சென்றதற்கும் காரணம் உண்டு. சிவதனுசை முதலில் முறிக்க வந்தவன் ராவணன். அவனால் முறிக்க முடியும் என்பதால் அவனை திசைதிருப்பி தாமதப்படுத்துகின்றனர். இப்பொழுது சைக்கிள் கேப்பில் ராமன் சென்று சீதையைத் திருமணம் செய்துகொள்கின்றான்.

    எனவே ராவணன் வெறுங்கையோடு திரும்பக்கூடாது என்பதற்காகவும் சூர்ப்பனகையை அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கவும் சீதையைக் கவர்ந்து செல்கிறான்.

    பிறன்மனை நோக்காப் பேரான்மை ராமனுக்கு வேண்டுமானால் இருந்திருக்கலாம். அவனது தந்தைக்கு அது கிடையாது. ஒரு ஆண்மகன் பல பெண்களை மணம்புரிவது அன்றைய நாகரிகம்தான், அன்று அது காட்டுமிராண்டித்தனம் அல்ல.

    வென்றவன் எழுதுவதே வேதவாக்கு என்பதால் ராவணனின் கதை திரிக்கப்பட்டுவிட்டது.

  11. Siva Sundar சொல்கிறார்:

    i agree with tamil puthirgal

  12. kumar சொல்கிறார்:

    ippathan nan romba santhosam adaikiren

  13. ramnath சொல்கிறார்:

    ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன் . அறியப்படுத்தியமைக்கு நன்றி. தொடர்க.

  14. ஜெ‌யவேல் சொல்கிறார்:

    கம்பராமாயணம் முழுவதும் முரண்பாடோடு ‌‌புணையப்பட்ட கதை… அ‌தை எழுதியவன் ஒரு தமிழன் என்பது இன்னும் வெட்கக்கேடான விடயம். ஏனெனில்,
    வால்மீகி ராமாயணத்தில் ஒரு இடத்திலும் இராவணன் தீயவனாக சொல்லப்படவில்லை. மேலும், ராமன் முறித்ததாக சொல்லப்படும் தனு‌சு இராவணன் சிவனிடம் தவமிருந்து பெற்ற தனுசு. அது எவ்வாறு சீதையிடம் வந்நது. காரணம்….
    சீதை ஜனகனின் வளர்ப்பு மகள், உண்மையில் அவள் இராவணனின் மகள். தவம் மேற்கொள்ள இக்குழந்தை இடைஞ்சலாக இருக்கும் என எண்ணியே இக்குழந்தையையும் அதனோடு சிவதனு‌சுவையும் ஆற்றில் விட்டான் இராவணன். தந்தை மகள்மேல் காமம் கொண்டான் என உரைக்கும் ஈனபுத்தி ஆரியர்களுக்கு மட்டுமே சொந்தம்போல…..
    மேலும் விபரங்களுக்கு வால்மீகி ராமயணம் படியுங்கள்

  15. இராவண பாண்டியன் சொல்கிறார்:

    அற்புதமான பதிவு நண்பரே……… இராவண காவியத்தின் விளக்கவுரை அளித்தால் இன்னும் பயனுள்ளாதாக இருக்கும்!!!!

  16. U.SELVAKUMAR சொல்கிறார்:

    Maraikkappatta UNMAIYAI indru therithu kondom. Mikka Magizchi

  17. J.P சொல்கிறார்:

    நண்பரே உங்கள் வலைப்பூ மிகவும் அருமையான உள்ளது…..வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆர்வலருக்கும் உள்ள வித்தியாசம் உங்கள் வலைப்பதிவில் நன்றாகவே தெரிகிறது அப்படியே சான்றோர் (நாடார்+ஈழவர்) சமூக மக்களின் உண்மையான வரலாற்றினை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்…….உங்கள் சேவை தொடருட்டும்….. வாழ்த்துக்கள்

  18. n.gayathri சொல்கிறார்:

    thasavatharangalin padi ram avatharam eduthukonda pathiram athaividuthu ravanani epadi nalavan ena koora mudium nanbare

  19. தமிழ்த்தாமன் சொல்கிறார்:

    நான்படித்த இராவண வரலாற்றை தருகிறேன். இராவணனும் சகோதரர்களும்
    ஈழநாட்டை மூன்றாக பிரித்து ஆட்சி செய்தனர். இராவணனுடைய நாடு கல்யாணி இராவணன் சிவனுக்காக கோயில் கட்டியது அன்று கல்யாணி நகர் என்று அழைக்கப்பட்ட இன்றைய திருகோணமலை . இராவணனுடைய கோட்டை அமைந்த இடம் இன்று திருக்கோயில் என அழைக்கப்படும் ஊர் . இன்றும் அந்த கோட்டை கடலின்கீழ் உள்ளது . சுனாமியின்போது அவதானிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்ய முற்பட்டபோது இலங்கை அரசால் தடுக்கப்பட்டது

  20. ராம்குகன் சொல்கிறார்:

    ராவணன் கண்ணியம் ராமனிடம் இல்லை. தமிழன் என்றுமே தன்னிகரற்றவன்.

  21. srinivasan சொல்கிறார்:

    இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன

    எனக்கு புரியவில்லை ராமன் காமுற்றானா எதை வைத்து இப்படி சொல்ரீங்க நண்பரே
    ங்

  22. parthiban சொல்கிறார்:

    Full of wrong information. I think you don’t know Ramayanam.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s