வலைப்பூவைப் பற்றி

சக வலைபதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் என் முதற்கண் வணக்கம். இந்த வலைப்பூ மற்ற வலைப்பூக்களை போல சாயல் கொண்டிருந்தாலும், எண்ணங்களால் விலகி நிற்க வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். அதற்கென கொள்கைகளெல்லாம் வரையறுக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டாக நான் வலைப்பூக்களில் எழுதி வருகிறேன். அந்த அனுபவம் இந்த வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையிலும் மிளிரும்.

அரசியல் முதல் ஆன்மீகம் வரை அலசும் போது அதன் தாக்கங்கள் சில உள்ளங்களில் சிராய்ப்புகளை ஏற்படுத்தலாம். அந்த சிராப்புகளை மனமுவந்து மன்னிக்க வேண்டுகிறேன். எல்லா வகை மனிதர்களையும் ஒரு சேர திருப்தி படுத்த முடியாது என்பதால் அனைத்து இடுகையிலும் என்னை தேடாதீர்கள். அவ்வாறு செய்தால் உங்களுக்கு தோல்வி நேரலாம்.

நகைச்சுவைக்காக எழுதப்படும் இடுகைகளில் பிரபலங்களை பற்றி சில வரிகள் வந்தால் ரசியுங்கள். ரசிகர் என்று சொல்லி வருத்தமடையாதீர்கள். மிகவும் உன்னதமானது மதம் அதைப்பற்றி படிக்கும் போது கொஞ்சம் அறிவையும் துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் சகோதரர்கள் காமத்தினையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இடுகைகளில் விரசம் கலக்காத வகையில் காமத்தை பற்றி வரும்போது, ச்சீயென ஒதுக்கி விடாதீர்கள். அதன் இன்னியமையாத தன்னமையை உணருங்கள்.

பல பூக்கள் கலந்த கதம்பமாக இந்த வலைப்பூ இருப்பதற்கான ஆதரவை தாருங்கள். பொருள், காலம் செலவு செய்து நான் எழுதுவதற்கு காரணம், ஓர் அங்கிகாரத்திற்கு தான். அது நிச்சயம் உங்களிடமிருந்து கிடைக்கும் என பூர்ணமாக நம்புகிறேன்.

22 comments on “வலைப்பூவைப் பற்றி

  1. ஜோதிஜி சொல்கிறார்:

    உங்களிடமிருந்து கிடைக்கும் என பூர்ணமாக நம்புகிறேன்.

    முற்றிலும் உண்மை.

    அரசியல் முதல் ஆன்மீகம் வரை அலசும் போது அதன் தாக்கங்கள் சில உள்ளங்களில் சிராய்ப்புகளை ஏற்படுத்தலாம். அந்த சிராப்புகளை மனமுவந்து மன்னிக்க வேண்டுகிறேன்/

    பின்புலம் உள்ள நிறத்தையும் மனதில் தோன்றிய எண்ணங்களையும் உங்களை வளர்த்த இந்த சிந்தனைகளுக்கு காரணம் என்று நிணைக்கிறேன்.

    http://deviyar-illam.blogspot.com
    .

    http://deviyar-illam.blogspot.com

  2. butterfly surya சொல்கிறார்:

    தொடருங்கள்..

    மேலும் மேலும் உயர வாழ்த்துகள்.

  3. seasonsali சொல்கிறார்:

    மிகவும் உன்னதமானது மதம் அதைப்பற்றி படிக்கும் போது கொஞ்சம் அறிவையும் துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள்

    மதம் அல்ல மார்க்கம். நம்ப்புவோர்க்கு

  4. Heena சொல்கிறார்:

    Good Blog… Interesting topics… Info about Tamil Gods are very nice. Best Wishes!

  5. SRI சொல்கிறார்:

    Dear sir,
    To day first time i read your msg . realy i am very happy and i say thanks to god

    Thanks & Regards .
    SRI.

  6. jothi சொல்கிறார்:

    Dear sir,
    To day first time i read your msg . realy i am very happy and i say thanks to god

    Thanks & Regards .

    Jothi

  7. rajapandian சொல்கிறார்:

    it is great site. We are getting lot of useful information from this site.

    Please continue your services…

    All the best..
    Thanks,

  8. anbarasan சொல்கிறார்:

    வணக்கம் …உங்களின் வலைப்பூ உண்மையில் என்னை பிரமிக்க்வைக்கிறது.குறிப்பாக உங்களின் தேடல்கள் மற்றும்
    அனைத்துப் படைப்புகளையும் மிகவும் ரசித்து நீங்கள் இங்கு
    தொகுத்து தந்துள்ளமைக்கு பெரிய சபாஷ் போடத்தான் வேண்டும்.
    இதில் இடம் பெற்றுள்ள நல்ல கட்டுரைகளை எனது முகநூலில்
    இடம் பெறச் செய்வதற்கு நீங்கள் அனுமதி அளிப்பீர்களா சார்.?

  9. Mr.s KalpanaSelvaraj சொல்கிறார்:

    வண்டமிழ் வளர்த்த வள்ளல் தன்மைக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்

பின்னூட்டமொன்றை இடுக