அரிதான மரபு விதைகளை வீட்டிலிருந்தே பெறுவது எப்படி

ஆதியகை விதை மையத்தை முகநூல் மூலமாக தெரியும். அதன் நிறுவனரான பரமேசுவரன் ஒவ்வொரு விதையும் தேடி பயணிக்கையில் நேர்ந்த அனுபவத்தை அவ்வப்போது எழுதுவார். கிடைத்திட்ட இரண்டு, மூன்று விதைகளைக் கொண்டு அவற்றை உருவாக்கி விதைகளை பெருக்கம் செய்துள்ளார். யூடிபில் வறண்ட நிலத்தில் சாகுபடி செய்யும் யுத்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அவை என்னைப் போன்ற மானாவாரி நிலங்களில் வாழ்வோருக்கு மிகவும் பயனுள்ளவை. என் இளையோனின் திருமணத்திற்கு நாட்டுவிதைகளை தாம்பூலத்துடன் தருவதற்கான யோசனை அவருடைய முகநூல் பதிவுகளிடமிருந்து பெற்றது.

30 வகையான சுரை, 13 வகையான வெண்டை, 12 வகையான கத்தரி, 7 வகையான அவரை என அவரிடம் உள்ளவை முழுமையான பட்டியல். கீரை ரகங்கள், மூலிகைகள் என 120 வகையான விதைகளை வைத்திருக்கிறார். அந்தப் பட்டியலில் நிறைய அரிதானவைகள் உள்ளன. அவற்றில் என்னால் வளர்க்க முடியுமென்ற சில ரகங்களை மட்டும் கேட்டுள்ளேன்.

ஆதியகை விதைப்பட்டியல்

பீர்க்கங்காய் ரகங்கள்
1. குண்டு பீர்க்கங்காய்
2. கொத்து பீர்க்கங்காய்
3. சித்திரை பீர்க்கங்காய்
4. பனையேரி பீர்க்கங்காய்
5. பேய் பீர்க்கங்காய்
6. மெழுகு பீர்க்கங்காய் (நுரை பீர்க்கங்காய்)
7. வரி பீர்க்கங்காய் – குட்டை
8. வரி பீர்க்கங்காய் – நீளம்
9. வரியில்லா குட்டை பீர்க்கங்காய்

பூசணிக்காய் ரகங்கள்
1. ஆந்திரா நாட்டு பூசணி
2. உருட்டு பூசணி
3. குளவிக்கல் பூசணி
4. சட்டி பூசணி
5. சதை பூசணி
6. சிட்டு பூசணி
7. தலைகாணி பூசணி
8. தேங்காய் பூசணி
9. நீள பூசணி
10. வரி பூசணி
11. வெண்புள்ளி பூசணி
12. வெண்புள்ளி பூசணி 2
13. வெளிர் மஞ்சள் பூசணி

images (9)

வெண்டை ரகங்கள்
1. உருட்டு வெண்டை
2. ஊசி வெண்டை
3. சிவப்பு வெண்டை
4. சுனைமர வெண்டை
5. பச்சை வெண்டை
6. பருமன் வெண்டை
7. பலகிளை சிவப்பு வெண்டை
8. பலகிளை வெள்ளை வெண்டை
9. பொம்மடி நீள வெண்டை
10. மலை வெண்டை
11. மாட்டுக்கொம்பு வெண்டை
12  யானைதந்த வெண்டை
13. வெளிர்பச்சை வெண்டை

கத்தரி
1. உடுமலை உருண்டை கத்தரி
2. உடுமலை சம்பா கத்தரி
3. ஊதா முள் கத்தரி
4. ஊதா முள் கத்தரி
5. எலவம்பாடி கத்தரி
6. கடவூர் உருண்டை கத்தரி
7. கல்லம்பட்டி கத்தரி
8. கும்பகோணம் குண்டு கத்தரி
9. கோபி பச்சை கத்தரி
10. சேலம் முள் கத்தரி
11. திண்டுக்கல் ஊதா கத்தரி
12. தொப்பி (அ) தக்காளி கத்தரி
13. நத்தம் கீரி கத்தரி
14. நந்தவன பச்சை கத்தரி
15. நாமக்கல் பொன்னு கத்தரி
16. நெகமம் வரி கத்தரி
17. பச்சை கத்தரி
18. பச்சை குண்டு கத்தரி
19. மணப்பாறை கத்தரி
20. வெண்வரி உருண்டை கத்தரி
21. வெள்ளை வரி கத்தரி

பீன்ஸ்
1. கருப்பு பீன்ஸ்
2. குத்து செடி பீன்ஸ்
3. கொடி பீன்ஸ்
4. ரெட்டை பீன்ஸ்
5. வரி பீன்ஸ்

மிளகாய்
1. காந்தாரி மிளகாய்
2. குண்டு மிளகாய்
3. சம்பா மிளகாய்
4. குண்டு மிளகாய்

புடலை

1. குட்டை புடலை
2. திருச்சி நீள புடலை
3. தேனி நீள புடலை
4. பாம்பு புடலை

வெள்ளரி
1. குமரி வெள்ளரி
2. பழ வெள்ளரி
3. குமரி வெள்ளரி

கீரைகள்

1. அகத்திக்கீரை
2. அரைக்கீரை
3. காசினிக்கீரை
4. கொத்தல்லி
5. சக்கரவர்த்தி கீரை
6. சிவப்பு அகத்திக்கீரை
7. சிவப்பு சிறுகீரை
8. சிவப்பு தண்டங்கீரை
9. சிவப்பு புளிச்சகீரை
10. பச்சை சிறுகீரை
11. பச்சை தண்டங்கீரை
12. பச்சை புளிச்சகீரை
13. பருப்பு கீரை
14. பாலக்கீரை
15. மணதக்காளி கீரை
16. முளைக்கீரை

பல்லாண்டு பயிர்
1. கோவில்பட்டி முருங்கை
2. சுண்டக்காய்
3. நாட்டு ஆமணக்கு
4. நாட்டு பப்பாளி
5. மர பருத்தி எ செம்பருத்தி
6. மரத்துவரை

இந்த பட்டியலில் சுரை ரகங்கள், தட்டை, காராமணி போன்றவற்றை இணைக்கவில்லை. சுரையில் ஆள் உயர சுரை, கும்ப சுரை, உருட்டு சுரை, செம்பு சுரை போன்ற சில ரகங்களின் பெயர்கள் மட்டுமே இணையத்தில் இருக்கின்றன. முழுமையான பட்டியல் இல்லை. உழவர் ஆனந்த் அவர்களைப் போல ஒரு பீடிஎப் செய்தால் பரவாயில்லை. ஆனால் ஆதியகை நிறுவனருக்கு கூடுதல் வேலையாக இது இருக்கும்.

20191119_121358

என் தேர்வுகள்-
மூக்குத்தி அவரை
கோவில்பட்டி முருங்கை
மர பருத்தி
நாட்டு பப்பாளி
நாட்டு ஆமணக்கு
காந்தாரி மிளகாய்
யானைதந்த வெண்டை
பாம்பு புடலை

ஆதியகை பரமேசுவரன் எண் – +91 85263 66796

இந்த எண்ணிற்கு நமக்கு தேவையான விதைகளின் பட்டியலையும், உடன் முகவரியையும் வாட்சப்பில் அனுப்ப வேண்டும். பகல்நேரங்களில் வேலையில் இருப்பதால் பெரும்பாலும் இரவு நேரங்களில் பதில் தருகிறார். அவர் நமது பட்டியல் மற்றும் நமது முகவரியின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து நமக்கு கூறுகிறார். என் பட்டியலுக்கு 200 ரூபாய் என்றார். பாம்பு புடலைக்காக சென்னை வரை சென்று சேகரித்திருக்கிறார் என்பதை அறிவேன். அந்த தொகையை அவரின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு மீண்டும் தகவல் தர வேண்டும். அவ்வளவே. அரிதான மரபு விதைகள் நம் வீடு தேடி வந்துவிடும். விதைகளைப் பெற்றதும் இடுகையிடுகிறேன். அரிதான சில ரகங்களை வீட்டு தோட்டத்தில் வளர்க்க தொடங்கினால் பரவலாக்கம் பெற்றுவிடும். மரபு ரகங்களில் இருந்து விதை எடுத்து சுற்றியுள்ள ஆர்வளர்களுக்கும், உறவினர்களுக்கும் தருதல் வேண்டும். நம்மிடம் விதைகள் இல்லாது போனாலும் அரிதான ரகங்கள் நாம் கொடுத்தவர்களிடம் இருக்கும். அவற்றை மீளப்பெருதல் எளிதாக இருக்கும். நன்றி.

நாட்டு காய்கறி விதைகள் மற்றும் மரவிதைகள் ஆன்லைனில் வாங்குவது எப்படி

மணவாடிப் பகுதியில் எப்போதும் மழை குறைவாக உள்ளது. காவேரி கரையில் முப்போகம் விளைந்த இடத்தில் வளர்ந்துவிட்டு வானைநோக்கி பார்த்துக் கொண்டே இருப்பது கடினம்தான். ஆடி பட்டம் தேடினாலும் வராது என எல்லோரும் தயாராகிவிட.. இங்கு ஒன்றுமே செய்யவில்லை. ஆவடி புரட்டாசியில் மழை எட்டிபார்க்க‌ காட்டில் உழவு ஓட்டி சோளம் போட்டாச்சு. அம்மாவாசையில் விதைப்பது வழக்கமாகிவிட்டதால் பாவை, புடலை, அவரை, வெண்டை என விதைத்தோம்.

கத்திரி, மிளகாய், தக்காளி எல்லாம் பின்னால் சேர்ந்து கொண்டது. நீர் பூசணியும், பரங்கிக்காயும், பீர்க்கனும் மாட்டுக் கொட்டகையில் விதைத்தோம்.‌ இப்போது காய்கறிகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

வீட்டு தோட்டத்திற்கும் பண்ணையில் பசுமை உண்டாக்கவும் நாட்டு விதைகளை உழவர் ஆனந்த் அண்ணனிடம் கேட்டுள்ளேன். கொடி அவரை சொதப்பலாகிவிட்டது. நாட்டு வெண்டை ஆறு அடிக்கு வளர்ந்து இரண்டு நாட்களாக காய் தர தொடங்கியிருக்கிறது.

அடுத்தது கார்த்திகை பட்டம். ஆடிக்கும் தைக்கும் இடையேயான பனிக்கால நாட்கள். அதனை பயன்படுத்திக்கொள்ள புதிய நாட்டின காய்கறி செடி வகைகளை வாங்கலாமென முடிவெடுத்தேன்.

உழவர் ஆனந்த்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே கடை அமைத்திருக்கிறார். காய்கறி செடி விதைகளை 10 ரூபாய்க்கும், மரவிதைகளை 20 ரூபாய்க்கும் தருகிறார். யூடிபில் தோட்டம் சிவா போன்ற பலரும் உழவர் ஆனந்திடம் விதைகளை வாங்கி பயன்படுத்தி நன்றாக உள்ளது என கூறியிருக்கின்றார்கள்.

உழவர் ஆனந்த் எண் – 9840960650

இந்த எண்ணிற்கு விதைகள் தேவைப்படுகிறது. விலைப்பட்டியல் அனுப்புங்கள் என கேட்டால் சீரான பிடிஎப் கோப்பினை அனுப்புகிறார். அதிலிருந்து வேண்டியதை தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரிக்கலாம். பிறகு விலையை கூட்டி வைத்துக்கொண்டு கொரியர் செலவுக்கு 40 ரூபாயை சேர்த்து அனுப்பினால் போதுமானது. அவர் அனுப்பிய பட்டியலைக் கீழே கொடுக்கிறேன். ஒவ்வொரு முறையும் விதையின் இருப்பின் அடிப்படையில் மாறும். எனவே புதுப் பட்டியலை கோருதல் நலம்.

IMG_20191118_154124

IMG_20191118_154134

IMG_20191118_154145

IMG_20191118_154213

என்னுடைய பட்டியல்

சிகப்பு புளிச்சக்கீரை -2
சிகப்பு தண்டுக்கீரை -2
காசினி கீரை-2
சக்ரவர்த்தி கீரை-2
பசலைக்கீரை
பப்பாளி -2
தர்பூசணி
வெள்ளரி
நீட்ட மிளகாய்
நீள் புடலை
குண்டு சுரக்காய்
நீட்ட சுரக்காய்
செடி முருங்கை

சவுக்கு
கொய்யா
சீதா
கொடுக்காப்புலி

இவற்றுக்கு 260 ரூபாயும் கூரியர் செலவு 40 ரூபாய் என மொத்தம் 300 ரூபாய் வந்தது. எஸ்பிஐ வங்கியில் IMPS FUND TRANSFER வசதியானது காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணியிலிருந்து வரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். உழவர் ஆனந்திற்கு பணம் அனுப்பிவிட்டு காத்திருக்கிறேன். விதைகள் வந்ததும் இடுகை இடுகிறேன். நன்றி.