திருமாலின் திருமச்சம் – சிற்ப ஆய்வு

திருமச்சம் அல்லது சிறீ வத்சம் என்பது திருமாலின் மார்பிலுள்ள மச்சம் ஆகும். இது திருமாலின் வலது மார்பு பகுதியில் உள்ளது. இது முக்கோண வடிவு கொண்டது. இதனை மச்சம், மரு என்றும் கூறலாம்.உலோக சிற்பங்கள், கற் சிற்பங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும், மார்பில் திருமச்சம் உள்ளதென அறிந்தால் அச்சிற்பத்தை திருமால் என்று கூறலாம்.

மூன்று துளசி இலை வடிவ திருமச்சம்
லட்சுமி தேவி

திருமால் சிலையின் வலது மார்பில் முக்கோண வடிவிலான புடைப்பாக காட்சி தரும். முக்கோண பகுதியில் மூன்று துளசி இலைகளை கொண்டதாகவோ, திருமகளின் வடிவு கொண்டதாகவோ அமைகின்றன.திருமச்சம் திருமகளாக கருதப்படுவதால் அரூபதிருமகள் என்றும் திருமால் திருவுறை மார்பன் என்றும் அறியப்படுகிறார்.

ஓவியங்கள் – விக்கிப்பீடியா கட்டுரைக்காக வரைந்தது.

பின்னூட்டமொன்றை இடுக