மனிதனுக்கு “பால்” ஊற்றும் பால் – மருத்துவ பார்வை

சமீபத்தில் ஒரு மருத்துவ இதலின் பழைய பிரதியை வாசிக்க நேர்ந்தது, அப்போது எனக்கு கிடைத்து மிகவும் அதிர்ச்சியான விசயம்.

மனிதன் பாலூட்டி வகையை சார்ந்தவன். ஆனால் மற்ற பாலூட்டிகளிலிருந்து பலவற்றிலும் வித்தியாசமானவன்.

நம்பிக்கை –

பால் ஒரு மகத்தான சத்துணவு என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதனால் தான் “காலையில் எழுந்ததும் காபி” என்ற நிலைக்கு மாறிவிட்டோம். குழந்தைகள் உயரமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்குவும் நமக்கு தெரிந்த ஒரே விசயம் பால்.

துரோகம் –

பால் ஒரு சைவ உணவு என்றாலும், ஆடு, மாடு, ஒட்டகம் என தங்கள் குட்டிகளுக்காக சுரக்கப்படும் பாலை வழுக்கட்டாயமாக கறந்து சுயநலத்துடன் குடிப்பது ஒரு வகையில் துரோகம் தானே.!

ஜீரணிக்கவே முடியாது –

அனைத்து பாலூட்டும் மிருகங்களும் குட்டிபருவத்தில் “லாக்டோஸ்”(Lactose) நொதிப் பொருளை அதிகமாக சுரந்து, வளர்ச்சி அடைய இதன் சுரப்பு படிப்படியாக குறைந்து சுரப்பு சுத்தமாக நின்றுவிடும் இதனால் லாக்டோஸ் சுரப்பு இல்லாமல் வளர்ந்துவிட்ட மிருகங்களால் பாலை ஜீரணிக்க இயலாது.

பால் ஒவ்வாம்மை –

பிற உயிர்களின் கன்றுகளுக்காக தயாரிக்கப்படும் பால் நமக்கு ஏற்றதா என்றால், 70% மக்கள் Lactose Intolerance எனப்படும் லாக்டோஸ் தாங்கி நிற்கும் வலுவின்மை பாதிப்பு உள்ளவர்களாக விளங்குகின்றார்கள். மனிதரில் ஓ குருப் இரத்தம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.

சிலருக்கு பாலே ஒவ்வாமையுடையதாக மாறி, பலவித பக்க விளைவுகளை பாலில் அடங்கியுள்ள சில வகை புரதங்கள் ஏற்படுத்துகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கலப்படப் பால்-

இந்திய உணவுப் பொருள், கலப்பட தடுப்பு சட்டம் 1954 மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட உணவு பொருள்.

ஆனால் எத்தனை விதமான கலப்படங்களில் பாலில் நிகழ்கின்றன. தரமில்லா தண்ணீர் கலப்பதனால் நுண்ணுயிர் உடலுள் செல்கின்றன. சுலபமாக உடலினுள் செல்லும் நுண்ணுயிர்கள் என்ன செய்யும் என உங்களுக்கு விளக்கிச் சொல்ல தேவையில்லை.

தண்ணீர் தவிற கலக்கப்படும் வேறு பொருள்கள், ஷாம்பு, டிடெர்ஜென்ட், யூரியா காஸ்டிக் சோடா – பால் அமிலத்தன்மைக்கு மாறாமல் இருக்க கலக்கப்படுபவை.

மாவுப் பொருள், சர்க்கரை, உப்பு – தரத்தினை போலியாக உயர்த்தி காட்ட கலக்கப்படுபவை.

நன்றி –

தி டயட் புட்

ஜூன் 2009

வாங்க ஒரு கப் விஷம் சாப்பிடலாம்

சாப்பாட்டுல தினமும் ஒரு கீரையை சேர்த்துக்கோங்க என்கின்றார்கள் மருத்துவர்கள். அதற்கு எப்போதும் பூச்சி அரிக்காத, பாலிஸ் கீரைகள் தான் நம்முடைய சாய்ஸ். ஆனால் அவ்வாறு பூச்சி அரிக்காத கீரைகளை சாப்பிடாதீர்கள் என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.

பூச்சிகள் கூட உண்ண முடியாத அளவிற்கு தகுதியற்று போயிருக்கும் விஷ கீரையை நீங்கள் உண்ணுவதால் என்ன நேரும் என நினைத்துப் பார்க்க சொல்கிறார். கீரையில் தானே விஷம் இருக்கிறது என பழங்களுக்குப் போனால், இதைவிட கொடூரமாக இருக்கிறது விளைவுகள். பளபளக்கும் பழங்களில் எல்லாம் மறைமுகமாக ஒளிந்திருக்கிறது விஷம்.

பயிர் செய்யும் முன்பிருந்தே விதைகளை பூச்சி கொல்லி மருந்தில் ஊர வைப்பதை எங்கள் கிராமத்திலேயே பார்த்திருக்கிறேன். அடுத்தடுத்து பூச்சி கொல்லி மருந்தை தெளிப்பதால் நிலமே விஷமாகிப் போயிருக்கின்றது. ஆங்கில மருத்துவத்திற்கு பயந்து சிலர் இன்னும் சித்த மருத்துவத்தையே கடைபிடிக்கின்றார்கள். விளைவுகள் இல்லாத மருந்தென தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தால் காலம்காலமாக பயன்படுத்தி வந்த வேப்பண்ணையே விஷமாகி உயிரைக் குடித்திருக்கின்றது.

சித்த மருத்துவம் வேண்டாமென சென்றவர்களையும் போலி மாத்திரைகள் பயமுருத்தியிருக்கின்றன. எதைச் சாப்பிட்டாலும் கண்டிப்பாக விஷம் நமக்குள் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கோக், பெப்சி மட்டுமல்ல சாதாரண குடிநீரையே இப்போது நம்ப முடியவில்லை.

இதிலிருந்து தப்புவது எப்படி, பூச்சி தின்ற கீரையை வாங்க வேண்டும், நன்கு அலசிவிட வேண்டும். பழம் வாங்கும் போது சரியான அளவிலும், சரியான ருசியையும் தருவதை மட்டுமே வாங்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

போலி மருந்து, போலியான காய்கறி, பழங்களை விற்பதாக உங்களுக்குத் தெரிந்தால் காவல் துறையை அனுகலாம். அதற்கான தொலைப்பேசி எண் – 044-24321830. பல உயிர்களை காப்பாற்றிய பெருமை உங்களுக்குச் சேரட்டும்.

நன்றி- குமுதம் சினேகிதி.