சின்னபுள்ள விளையாட்டு

நாம் சிறுவர்களாய் இருந்த போது ஏகப்பட்ட வினோத விளையாட்டுகளை அறிந்து வைத்திருப்போம். யாரேனும் புதியவர்கள் மாட்டிக்கொண்டால் அவர்களிடம் இந்த விளையாட்டுகளை விளையாடி நற்பெயர் எடுத்திருப்போம். நாம் விளையாடிய விளையாட்டுகளை நம் குழந்தைகளுக்குச் சொல்லி தர இப்போது முடியாது. ஏனென்றால் நம்மில் பலருக்கு காலையில் சாப்பிட்ட உணவு எது என்றே நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.

என்னுடைய பள்ளி வாழ்க்கையில் நான் விளையாடிய ஒரு விளையாட்டு கணினி மயமாக்கப்பட்டு கிடைத்தது. அதனுடைய லாஜிக் மறந்து போனாலும் மகிழ்வோடு விளையாடினேன்.

கணித முறையை கணக்கில் கொண்டு செய்யப்பட்ட விளையாட்டு இது.

முதலில் continueஐ சொடுக்கவும்.

ஒரு எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

கீழே அந்த எண்ணின் நிறத்தில் சொடுக்கவும்.

ஏதேனும் ஒரு நிறத்தை தேர்வு செய்து சொடுக்கவும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த எண் உள்ள வீட்டினை கண்டறிந்து சொடுக்கவும்.

ஏதேனும் ஒரு பந்தின் மீது சொடுக்கவும்.

ஏதேனும் ஒரு கதவின் மீது சொடுக்கவும்.

என்ன நீங்கள் தேர்வு செய்த எண் காணுகிறீர்களா. இது தான் அந்த விளையாட்டு.

கணினியில் விவசாயம்

விவசாயம், ஆதிமனிதனின் முதல் தொழில். நவீனப்படுத்துதலில் இறுதியில் நின்று கொண்டிருக்கும் தொழில். புதியதாக மரபனு மாற்று முறையில் பயிர்களை மாற்றி இயற்கையோடு போராடிக்கொண்டிருக்கும் தொழில். பல்வேறு பெருமைகள் இருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு விவசாயத்தை பற்றி அதிகம் தெரியாது என்பது உண்மை.

ஒரு முறை என்னுடைய தூரத்து சொந்தத்தில் ஒருவர் தன் மகனுடன் எங்கள் கிராமத்திற்கு வந்தார். அவனுக்கு விவசாயத்தைப் பற்றியும் இயற்கையை பற்றி அனுபவ அறிவு தருவதே அந்த வருகையின் நோக்கம். எங்கள் வயலில் விளைந்திருந்த நெல் நாற்றுகளைப் பார்த்து கேள்விகள் கேட்டான். நான் இதிலிருந்துதான் சாப்பிட அரிசி கிடைக்கும் என்றேன்.

என்னை திகைப்புடன் பார்த்தவன், அது அரிசி செடியிலிருந்துதானே கிடைக்கும். இது நெல் செடி அல்லவா என்றான். நாங்கள் சிரித்துக் விட்டோம். பிறகு எல்லாவற்றையும் விவரித்தோம். அந்தப் பையன் ஏதோ 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு என நினைத்துவிடாதீர்கள். அவன் அப்போது 10ம் வகுப்பு பொது தேர்வை முடித்திருந்தான்.

எனக்கும் எல்லாம் தெரியுமென வாதிடுவதற்காக இதைச் சொல்லவில்லை. வெள்ளாளர் சமூகத்தின் வாரிசுகளுக்கே அடிப்படை விவசாய அறிவு இருப்பதில்லை. இயற்கையோடு வாழ்ந்துவந்த கிராமத்தின் அடுத்த தலைமுறை நகரத்திற்கு சென்றால் விவசாயம் மறக்கடிக்கப்படுகிறது.

இனி அந்தப் பிரட்சனைகள் கொஞ்சம் தீரும். இணையத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விவசாயத்தை அறிமுகப்படுத்த விவசாயவிளையாட்டு வந்துவிட்டது. கைகளில் துப்பாகியை தூக்கிக் கொண்டு எதிரில் இருக்கும் நபர்களை சுடுவதும், வாகணங்களை ஓட்டி முதலில் செல்வதும் மட்டுமே விளையாட்டென இருந்தவர்களுக்கு, இது நிச்சயம் ஒரு மாற்று வழிதான்.

உழுவது, விதைப்பது, அருவடை செய்வது, கிடைக்கும் பணத்தில் பயனுள்ளவற்றை வாங்குவது என சுவாரசியமான ஒரு விளையாட்டு. என்னுடைய நண்பர்களின் அழைப்புகளால் அதில் இணைந்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. நீங்களும் விளையாட வேண்டும் என்றால்,..

facebook -ல் ஒரு அக்கௌன்ட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு FarmVille க்கு சென்று விளையாடுங்கள்.

ஐ.பி.எல் போட்டியும் இலவச தரிசனமும்

சென்னை சேப்பாக்கத்தில் பிரம்மாண்டமான ஐ.பி.எல் போட்டி இரண்டு நாளுக்கு முன் நடந்தது. முதன் முதலாக போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றேன். நேரில் பார்க்கிறோம் என்ற பிரம்மிப்பு இருந்தாலும், பந்து எங்கே போகிறது, யார் விளையாடுகிறார்கள் என்று அறிவது சிரமமாக இருந்தது.

சரி ஆடும் அழகிகளை பார்க்கலாம் என்று போனால் ஐந்து ஓவரிலேயே அவர்கள் சோர்ந்து போய்விட்டார்கள். இரண்டு முன்று ஸ்டெப்ஸ் தவிற வேறு புதிதாக ஆடவில்லை. அதைவிட நாக்கு மூக்க பாட்டிற்கு செத்துபோனவன் கையில் வெத்தலைப் பாக்கு கொடுத்தது போல ஆடவும், மிகவும் நொந்து போனேன்.

என்னுடன் வந்த இரண்டு நண்பர்களும் கிரிக்கெட் தீவிர ரசிகர்கள் என்பதால் அவர்கள் முழுவதையும் ரசித்தார்கள். நான் வீட்டிற்குப் போய் பார்த்துக் கொள்ளாலாம் என ரயில் நிலையத்திற்கு வந்தேன்.

உயிரை துச்சமாக மதித்து ஏகப்பட்ட இளைஞர்கள் ரயில் டிராக்கிலிருந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்டேடியத்தில் நான் பார்த்ததை விடவும் அங்கு நன்றாக தெரிந்தது. அப்போது ஒரு பிச்சைக்காரர் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வந்த காவல் துறையினரிடம் ரயில் நிலைய அதிகாரி புகார் சொல்லவும் அவர்கள் இளைஞர்களை விரட்டினர். அந்தப் பிச்சைகாரரையும் விரட்டிவிடுவார்களோ என பயந்தேன். அவர் நிலையத்திற்குள்ளிருந்தே பார்த்ததால் அவரை எதுவும் சொல்லவில்லை.

அந்த சுவாரசியமான புகைப்படங்கள் இங்கே…