கணினியில் விவசாயம்

விவசாயம், ஆதிமனிதனின் முதல் தொழில். நவீனப்படுத்துதலில் இறுதியில் நின்று கொண்டிருக்கும் தொழில். புதியதாக மரபனு மாற்று முறையில் பயிர்களை மாற்றி இயற்கையோடு போராடிக்கொண்டிருக்கும் தொழில். பல்வேறு பெருமைகள் இருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு விவசாயத்தை பற்றி அதிகம் தெரியாது என்பது உண்மை.

ஒரு முறை என்னுடைய தூரத்து சொந்தத்தில் ஒருவர் தன் மகனுடன் எங்கள் கிராமத்திற்கு வந்தார். அவனுக்கு விவசாயத்தைப் பற்றியும் இயற்கையை பற்றி அனுபவ அறிவு தருவதே அந்த வருகையின் நோக்கம். எங்கள் வயலில் விளைந்திருந்த நெல் நாற்றுகளைப் பார்த்து கேள்விகள் கேட்டான். நான் இதிலிருந்துதான் சாப்பிட அரிசி கிடைக்கும் என்றேன்.

என்னை திகைப்புடன் பார்த்தவன், அது அரிசி செடியிலிருந்துதானே கிடைக்கும். இது நெல் செடி அல்லவா என்றான். நாங்கள் சிரித்துக் விட்டோம். பிறகு எல்லாவற்றையும் விவரித்தோம். அந்தப் பையன் ஏதோ 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு என நினைத்துவிடாதீர்கள். அவன் அப்போது 10ம் வகுப்பு பொது தேர்வை முடித்திருந்தான்.

எனக்கும் எல்லாம் தெரியுமென வாதிடுவதற்காக இதைச் சொல்லவில்லை. வெள்ளாளர் சமூகத்தின் வாரிசுகளுக்கே அடிப்படை விவசாய அறிவு இருப்பதில்லை. இயற்கையோடு வாழ்ந்துவந்த கிராமத்தின் அடுத்த தலைமுறை நகரத்திற்கு சென்றால் விவசாயம் மறக்கடிக்கப்படுகிறது.

இனி அந்தப் பிரட்சனைகள் கொஞ்சம் தீரும். இணையத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விவசாயத்தை அறிமுகப்படுத்த விவசாயவிளையாட்டு வந்துவிட்டது. கைகளில் துப்பாகியை தூக்கிக் கொண்டு எதிரில் இருக்கும் நபர்களை சுடுவதும், வாகணங்களை ஓட்டி முதலில் செல்வதும் மட்டுமே விளையாட்டென இருந்தவர்களுக்கு, இது நிச்சயம் ஒரு மாற்று வழிதான்.

உழுவது, விதைப்பது, அருவடை செய்வது, கிடைக்கும் பணத்தில் பயனுள்ளவற்றை வாங்குவது என சுவாரசியமான ஒரு விளையாட்டு. என்னுடைய நண்பர்களின் அழைப்புகளால் அதில் இணைந்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. நீங்களும் விளையாட வேண்டும் என்றால்,..

facebook -ல் ஒரு அக்கௌன்ட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு FarmVille க்கு சென்று விளையாடுங்கள்.