தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்

என்னுடைய குலதெய்வம் மாசி பெரியண்ணின் கோவிலுக்கு சென்றிருந்த போதுதான், பல சுவாமிகளின் பெயர்கள் தெரியவந்தன. அவற்றின் கதைகள் அங்கிருக்கும் பூசாரிகளுக்குக் கூட தெரியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் கதையையே பல மாதங்கள் அழைந்து திரிந்து பலரிடமும் கேட்டேன். என்னுடைய அப்பாவுக்கு கொஞ்சம் செய்தி மட்டுமே தெரிந்திருந்தது. ஓமாந்தூர் பெரிய பூசாரியிடம் கேட்டப்போதுதான் உண்மையான கதையை முழுமையாக அறிய நேர்ந்தது.

என்னைப் போல பலரும் தங்களின் குலதெய்வங்களின் கதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். என்னுடைய நண்பர்களின் குலதெய்வங்களின் கதைகளை அறிய முற்பட்டபோது எனக்கு ஏராளமான ஆச்சிரியங்கள் நிகழ்ந்ததன. பெரும்பாலான கதைகளில் சிவனும், விஷ்னுவும் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு பார்க்கும் போது, உண்மையில் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதை கிடைத்தது. ரசவாதம், காயகல்பம் என சித்தர்களை தேடினால் எத்தனை சுவாரசியங்கள் கிடைக்குமோ, அந்தளவிற்கு எனக்கு இப்போது கிடைக்கின்றது.

இதுவரை நான் கேள்விப்படாத பல தெய்வங்களின் பெயர்களும், கதைகளும் கிடைத்திருக்கின்றன. குறைந்தது ஆயிரம் சுவாமிகளின் பெயர்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன். நான் சேகரித்த பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி இங்கு தொகுத்திருக்கிறேன்.

ஆண் தெய்வங்கள் –

தடிவீர சுவாமி

பெரியசாமி, பெரியண்ணாசுவாமி, மாசி பெரியண்ண சுவாமி, கொடை ஆல், மலையாளி, மலையாள கருப்பு, கருப்பண்ண சாமி, கொல்லிமலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, இரட்டைமலை கருப்பு, ஒன்டி கருப்பு, பனையடி கருப்பு, சங்கிலி கருப்பு, முத்து கருப்பண்ண சாமி, வேம்பழ முத்து கருப்பண்ண சுவாமி, கறுப்பண்ணா, கறுப்பு கூத்தாண்டவர், கீழேரி கருப்பு, உதிர கருப்பு, சமயக்கருப்பசாமி, கருப்பு, தலைவாயில் கருப்பசாமி,கழுவடியான், இருளப்பச்சாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன், உத்தண்டசாமி, பெரியாண்டவர், பசவன்னா, பதலமா, புத்தாகாசிப், எல்லைக்கறுப்பு, ஐயனார், மாதேஸ்வரா, ஊர் அத்தியன், மகாலிங்கா, ராஜவாயன், எதுமலை மதுரை வீரன், காத்தவராய சுவாமி, மந்திர மாகாமுனி, லாடசன்னாசி, அகோதரவீரபுத்திர சுவாமி, ஆலாத்தி வெள்ளையம்மாள், அனந்தாயி, ஆந்திரமுடையார், உச்சிமாகாளி, கட்டிலவதானம், சிதம்பர நாடார், தடிவீரசாமி, பிச்சைக்காலன், முத்துப்பட்டன் , வன்னியடி மறவன், வன்னியன், வன்னிராசன், வெங்கலராசன், பாவாடைராயன், பருதேசியப்பர், பொன்னர், சங்கர், ஒன்பது அண்ணன்மார்கள், விருமாண்டி, செங்கல்வராயன், வாழ்முனி, செம்முனி, செங்கா முனியப்பன், சங்கிலிபூதத்தார், நல்லமாடன், முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி, கருப்பராயர், காவல்ராயன், கருப்பராயர், மண்டுகருப்பு, சாத்தன்-சாத்தாயி, வெண்டுமாலைகருப்பு, மாலைக்கருப்பு, தொட்டியக்கருப்பு,தூண்டிவீரன், வாகையடியான், உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி, இருளப்பர், இருளாயி, கனரயடி காத்த அய்யனார், அனடக்கலம் காத்த அய்யனார், நீர் காத்த அய்யனார், அருஞ்சுனன காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், கருங்குளத்து அய்யனார், குருந்துனடய அய்யனார், இளம்பானள அய்யனார், கற்குவேல் அய்யனார், கொண்னறயான்டி அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், திருவேட்டழகிய அய்யனார், சமணர்மனல அய்யனார், கூடமுனடய அய்யனார், சினற மீட்டிய அய்யனார், மக்கமனட அய்யனார், செகுட்ட அய்யனார், வெட்டுனடய அய்யனார்,மருது அய்யனார், வேம்பூலி அய்யனார், நினறகுளத்து அய்யனார், ஆதிபுதிரங்கொண்ட அய்யனார், சித்தகூர் அய்யனார், பிரண்டி அய்யனார், வீரமுத்து அய்யனார், பாலடி அய்யனார், தந்தனல வெட்டி அய்யனார், கருமனல காத்த அய்யனார், அல்லல் தீர்த்த அய்யனார், ஹரி இந்திர அய்யனார், கானட பிள்னள அய்யனார், செல்லப் பிள்னள அய்யனார், வீர பயங்கரம் அய்யனார், மாணிக்கக் கூத்த அய்யனார்,

பெண் தெய்வங்கள் –

வெள்ளையம்மாள்

எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, முத்துநாச்சியார், அரியநாச்சியார், காளியம்மன், துர்க்கையம்மன், தோட்டுக்காரி அம்மன், செல்லியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன், வடக்கு வாய்ச்சொல்லி, அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், சந்தனமாரியம்மன், உமையம்மன், ராசாயி, பெத்தனாட்சி, சோலையம்மன், காமாட்சியம்மன், மரகதவல்லி, செண்பகவல்லியம்மன், சந்திரமாகாளி, அட்டங்கம்மா, அம்மாரி, அங்கம்மா, அன்னம்மா, அரிக்கம்மா, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, செமலம்மா, தாலம்மா, தோட்டம்மா, திரௌபதி, துர்க்கா, கங்கம்மா, கூனல்மாரி, கிரிதேவி, கன்னியம்மா, கன்னிகை, கீர்மாரி, மலைமாயி, மாரம்மா, முத்தாலம்மா, பிடாரி, பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன், பச்சை வாழையம்மன், சப்த கன்னிகள், நவ கன்னிகள், முக் கன்னிகள், இசக்கி, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, காத்தாயி அம்மன், குழந்தையம்மன், ராக்காச்சி , தீப்பாச்சியம்மன், இடைச்சியம்மன்,கிச்சம்மா, தொட்டிச்சிஅம்மன், ஆலாலகங்கா, வல்லடிக்காரர்

சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் ஒன்பது அண்ணன்மார்கள், மூன்று கன்னிகள் என பல்வேறு எண்ணிக்கையில் கூட தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் கதையும் கிடைக்கவில்லை.

உதவுங்கள் –

விடுபட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் பெயர்களை சொல்லுங்கள் சேர்த்துக் கொள்கிறேன். இவர்களில் யாரின் கதை தெரிந்திருந்தாலும் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். இல்லை ஏதேனும் வலைப்பூவில் இருந்தால் லிங்க் கொடுங்கள், படித்து தெரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

எம்.ஜி.ஆர் 25 – ஆனந்த விகடன்

ஒரு கடவுள் மனிதாக அவதரித்ததாக இன்றும் மக்கள நினைவுகளில் வாழும் தலைவன். அவருடைய ரசிகனாக நான் ஆரமித்திருக்கும் தளம் எம்.ஜி.ஆர். ஆனந்த விகடன் தொகுத்த தந்த 25 முத்துகள் இங்கே!…

 • எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936).கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
 • பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !
 • எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
 • எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
 • விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
 • சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
 • முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
 • ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம் ’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
 • நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும்,ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் !
 • எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
 • எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
 • காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
 • நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள்.
 • சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
 • எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
 • தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 – ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்….‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும் !’
 • ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
 • அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!
 • ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
 • ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
 • அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
 • எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
 • முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !
 • அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.
 • ‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !

மகாத்மா காந்தியடிகள் சொன்ன ஆன்மீகம்

அமைதிக்கு காந்திய வழி என்று பெயரே நிலைத்துவிட்டது. ஒரு சாதாரண மனிதன் தேசத்தின் தலைவனாக மாறிய வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவருக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும். ஒரு முறை காந்தியடிகள் “நான் என் வாழ்க்கையையே மக்களுக்காக விட்டுச் செல்கின்றேன்” என்றார். அவரது சுயசரிதை மிகவும் உண்மையானது. அதை படித்தவர்களுக்கு அவரது பக்தியும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

மகான் சொன்ன சில ஆன்மீக சிந்தனைகள்:

அறிவையும் விட மேலானது

* பாவத்தை வெறுக்கவேண்டுமே ஒழிய, பாவியை வெறுத்தல் கூடாது. இதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தீய செயல் செய்பவன் திருந்துவதற்கு உதவியாக இருக்கவேண்டும்.
* கீதையை வழிபாடு செய்வது என்பது கிளிப்பிள்ளை போல பாராயணம் செய்வது அல்ல. அதன் உபதேசப்படி நடப்பதே கீதையைப் பின்பற்றுவதாகும். கண்ணன் காட்டிய வழியில் நடப்பதற்கு வழிகாட்டியாக கீதையை படிக்க வேண்டும்.
* வழிபாடு உண்மையானதாக இருக்க வேண்டும். வெறும் ஜெபமாலையை உருட்டுவதாக இல்லாமல் இதயம் வழிபாட்டில் லயிக்க வேண்டும். எங்கும் நிறைந்திருக்கின்ற பரிபூரணமான கடவுளிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட வேண்டும்.
* சத்தியமே நான் கடைபிடிக்கும் மதம். அகிம்சையே அதற்கான வழி. அறிவையும் விட சத்தியம் மேலானதாகும். யார் ஒருவன் ஆணவமே இல்லாமல் பணிவின் இருப்பிடமாகத் திகழ்கிறானோ அவனே சத்தியத்தை காண்கின்ற பாக்கியத்தைப் பெறுவான்.
* உண்மையாக நடக்க விரும்புகிறவன் தனது தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒப்புக் கொள்ளவும், அதற்கு பரிகாரம் தேடிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

மன்னிக்கும் மனம் வேண்டும்

* சேவை செய்வதற்காகவே கடவுள் நமக்கு இவ்வுடலைக் கொடுத்திருக்கிறார். உடல் சுகங்களை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள். இன்பவாழ்வில் ரகசியம் சேவை செய்வதில் தான் இருக்கிறது.
* தீமை செய்தவனையும் வெறுப்பது நல்ல குணமல்ல. தீமை செய்பவர்கள் மீது இரக்கம் காட்டுவது தான் சிறந்தது.
* நன்மை செய்தால் நன்மை செய்வது தான் உலகவழக்கம். தீமை செய்தாலும் நன்மையே செய்வேன் என்பது உத்தமர் வழக்கம். எங்கே மன்னிக்கும் குணம் இருக்கின்றதோ அங்கே இறைவனே விரும்பி இருப்பான்.
* எத்தனை துன்பங்கள் குறுக்கிட்டாலும் நம் மனம் தீமையைச் சிந்திக்காமல் நல்வழியில் நடப்பதையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.
* ஒரு துளி விஷம் பால் முழுவதையும் பாழ்படுத்துவதுபோல, கோபம் என்னும் கொடிய குணம் நம்மை அழித்துவிடும்.
* மனதிற்கும் கண்கள், காதுகள் உண்டு. எத்தனையோ விஷயங்களை மனம் பார்க்கவும், கேட்கவும் செய்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி நிலைநிறுத்துவதே தியானம் ஆகும்.

தூய்மை தரும் ராமநாமம்

* நான் வழிபாடு செய்யும் ராமன் இறப்பும் பிறப்பும் இல்லாதவன். ஈடுஇணையில்லாத பெருமை உள்ளவன். அவன் திருவடிகளையே எப்போதும் வணங்குகிறேன். ராமவழிபாடு எல்லாருக்கு உகந்த வழிபாடாகும்.
* ராமநாமம் என்பது வெறும் கண்கட்டி வித்தையன்று. அதன் உட்பொருளை உணர்ந்து மனத்தூய்மையோடு சொல்பவர்கள் சாதனைகள் பல புரிந்து நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
* இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.
* எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும். ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
* ராமநாமத்தை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தலாமே அன்றி, ஒருபோதும் தீமைக்கு பயன்படுத்துதல் கூடாது. அப்படி பயன்படுத்துபவர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.
* உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு.

கட்டுப்பாடு மனதில் வரவேண்டும்

* பிறர் உதவியை நம்பி இராமல் உங்கள் சொந்த பலத்தையே நம்பியிருக்க வேண்டும். ஆத்மபலம் இல்லாத வேறு எந்த பலமுமே அற்பமானது. பயனற்றது. எண்ணிக்கையில் உயர்ந்திருந்தாலோ, ஆயுதபலத்தில் உயர்ந்திருந்தாலோ அதெல்லாம் உண்மையான பலமாகிவிடாது.
* கருணையே உருவானவர், அன்பு மயமானவர், நம் பிழைகளைப் பொறுப்பவர் என்றெல்லாம் கடவுளுக்கு இலக்கணம் சொல்லிவிட்டு அவர் பெயரால் வாயில்லாப் பிராணிகளைக் கொல்லுவது மன்னிக்க முடியாத பாவமாகும்.
* வீரமுள்ள மனிதன் தனக்கு எப்போது மரணம் வந்தாலும் வரவேற்பான். அதை நண்பனைப் போல் வரவேற்பான். அதற்காக யாரும் மரணத்தை அறைகூவி அழைக்க வேண்டியதில்லை.
* மனதைக் கட்டுப்படுத்தாமல் வெறும் உடலை மட்டும் கட்டுப்படுத்த முயல்வது முடியாத காரியமாகும். கட்டுப்பாடு மனதிலிருந்து உண்டானால் மட்டுமே பயனுடையதாக இருக்கும்.

தவறு செய்யாதவர் யாருமில்லை

* பகுத்தறிவு இல்லாதவர்களும், சுகபோகத்திற்காகவே வாழ்கின்றவர்களும் தங்கள் பிழைகளை ஒருநாளும் அறிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.
* தவறு செய்தல் மனித இயல்பு என்பர். ஆனால், தவறு என்று கண்டதும் இனிச் செய்வதில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த உறுதியில் இருந்து விலகாமல் வெற்றி பெற்றுவிட்டால் நாம் முன்பு செய்த தவறுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடி விடும்.
* நான் தவறே செய்யாதவன் என்று யார் ஒருவனும் கூறிக் கொள்ள முடியாது. தவறு திருத்தத்திற்கு உரியது. திருத்தப்படும்போது பிழைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
* தவறு செய்து விட்டதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் தோல்வி என்பதே கிடையாது. அவமானமும் கிடையாது. அதுதான் நிஜமான வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
* ஒரு மனிதன் தவறு செய்தபின் அதை எண்ணி வருந்துவதோ அல்லது அதனைத் திருத்திக் கொள்ள முற்படுவதோ சரியானது தான். ஆனால், அதைக் காட்டிலும் எளிய காரியம் ஒன்று உண்டு. விழுந்து எழுந்திருப்பதைவிட விழாமல் இருப்பதே சிறந்தது.
* நம் தவறுகளை புறம்காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும், பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும் பார்க்கப் பழகுங்கள். தவறுகளின் உண்மையான தன்மையை அறிய இதுவே சிறந்தவழி.

இது மனிதர்களுக்கான இடுகை

குவிந்துகிடக்கும் உணவுகள்

குப்பைகளாய் உணவுகள்

உணவுக்காக கையேந்தி

உணவுக்காக போராடி

போராட்டத்தில் வெற்றிபெற்றவர்கள்

போராட்டத்தில் தோல்வியடைந்தவர்கள்

ஒரு புறம்…
மலைகளாக மாறியிருக்கும் மாமிசங்கள்!
குவியலாக மாறியிருக்கும் குஸ்காக்கள்!

சாப்பிட ஆட்களின்றி குப்பைகளாய்
உணவுகள்!

மறுபுறம்…
சாப்பிட உணவின்றி குப்பைகளாய்
மனிதர்கள்!

விவேக் – வெளியே தெரியாத உண்மைகள்

நாத்திகம் பேசுகின்றவர்களும், ஊருக்கு உபதேசம் செய்கின்றவர்களும் உண்மையான வாழ்க்கையில் அதை கடைபிடிப்பதே இல்லை. நாத்திகத்தின் மூச்சாக செயல்ப்ட்டு வந்த பெரியார் தாசன் பல மதங்களுக்கு மாறி மாறி போய்கொண்டிருக்கின்றார். நாத்திக தலைவராக தன்னை முன்நிறுத்திக் கொள்ளும் கருணாநிதியின் பல ஆன்மீக செயல்கள் எல்லோருக்கும் தெரிந்தது. இப்படி பொய்களை மக்களிடம் பேசுபவர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர் சின்னக் கலைவானர் விவேக்.

நாத்திகம் –

கல்லை வழிபடும் கிராமத்து மக்கள் முதல் மண் சோறு சாப்பிடும் பெண்கள் வரை எல்லோரையும் அறிவில்லாத மடையர்கள் எனவும், ஆயிரம் பெரியார் வந்தால் கூட திருந்த மாட்டார்கள் எனவும் நாத்திகம் பேசிய ஒரு நடிகர்.

ரஞ்சிதா புகழ் நித்தியானந்தரின் புத்த வெளியிட்டு விழாவில் தன்னுடைய ஆன்மீக பக்தியை வெளிக்காட்டியுள்ளார். அதில் அவர் “கலைஞர் 30 வயதில் பராசக்தி எழுதினார், ஆனால் இங்கு பராசக்தியே 30 புத்தகம் எழுதியுள்ளது” என்று சொல்ல நித்தியனந்தரே வெக்கப்படுகிறார். அந்தக் காணோளியை இங்கே இணைத்துள்ளேன்.

இந்த விழாவில் நடிகர் விஜய் அப்பா சந்திரசேகர், மனோரம்மா, சரத்குமார் என ஏகப்பட்ட திரைத்துறையினர் கலந்து கொண்டுள்ளனர், ஆனால் விவேக் அளவிற்கு அவரை புகழ்ந்தது யாரும் இல்லை.

சாதியொழிப்பு –

மதத்தினை பற்றி மட்டுமல்ல, சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதியாரின் வரிகளை பயன்படுத்தி மக்களுக்கு அறிவுரை சொல்லவும் தவறவில்லை. ஆனால் தலித் மக்களின் குழந்தைகளை சகிலா படம் பார்க்கும் தவறானவர்களாக, சேரியில் வசிக்கும் பெண்களை ஆபாசமாக, இன்னும் இன்னும் கேவலமான மக்களாகவே மற்றவர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றார், என்பதை யாரேனும் மறுக்க முடியுமா.

தனக்கென ஒரு பிரட்சனை வந்தவுடன் சாதிச் சங்கத்திடம் சரணடைந்த ஒரு தன்னல மனிதன் தானே விவேக். நக்கிரன் இணையதளம் கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ” மூட்டலுக்கு எதிர்ப்பு! என்று உண்மையை வெளியிட்டுள்ளது. ஊருக்கு உபதேசம் செய்யும் முன் தன்னைப் பற்றி அவர் சிந்தித்தாரா?

ஆபாசம் –

புறாவை பிரா என்பதும், சகிலா, பாபிலோனா, மும்தாஜ் என மசாலா மாமிகளுடன் அவர் அடித்த கொட்டங்களை பார்த்து தமிழ் அரங்கம் சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! என ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆபாச, இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடிக்கும் நடிகனாக மட்டுமல்லாமல், பத்திரிக்கை துறையில் பணி செய்யும் அனைத்து மக்களின் மனைவி, மகள்களை அசிங்கமாக பேசியது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

கதாநாயகி –

தனக்கு பிடித்த கதாநாயகி தான் வேண்டும் என கேட்டு அவரோடு நடிப்பதே விவேக்கின் பாணி, மாளவிகா வேண்டுமென அவர் ஆசையோடு கேட்டதும், இணைந்து நடித்ததும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்போது விவேக் கேட்பது பிரேமப்பிரியா என்கிற நடிகையை, தமிழ் சோர்ஸ் இணையதளம் பிரேமப்பிரியாதான் வேண்டும் – விவேக்கின் அடம்! என செய்தி வெளியிட்டுள்ளது.

பதிவுக்கு கொஞ்சம் மாறுபட்ட எண்ணம் –

நண்பர் ஜவகர் விவேக் காமெடியிலிருந்து கொஞ்சம் பொறியியல் என்றொரு புதிய அனுகுமுறையை சொல்லியுள்ளார்.

அடிப்படையான மதநம்பிக்கைகளை கேளியும் கிண்டலும் செய்தாலும், சில நல்ல கருத்துகளை சொல்லியுள்ளார் என்பதால் அவருக்கு இருகக்கும் சில ரசிகர்களையும் அவர் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். சென்னையில் ஒரு பிரபல வானோலி நிலையத்திற்கு அவர் கொடுத்த பேட்டியில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கும் மக்களை திட்டினார். திரைதுறையின் உச்சத்தில் இருக்கும் பிரபலங்கள் கூட தங்களின் ரசிகர்கள் கொடுக்கும் தொல்லைகளை தங்களுக்கு கிடைத்த வரமாக நினைத்துக் கொள்ளும் இந்த காலத்திலும் இப்படியும் ஒரு மனிதரா என வியப்பாக இருந்தது எனக்கு.

விவேக் ரசிகர்களின் மனதை புண்படுத்தாமல், பண்படுததவே இந்த இடுகை.

எம்.ஜி.ஆரை காப்பாற்றுங்கள்

தலைமுறைகள் பல கடந்த பின்னும் மக்கள் நாயகனாக இருப்பர் எம்.ஜி.ஆர் தான். சென்ற மாதம் நடந்த குடியரசு தின அணிவகுப்பிற்காக மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அரசின் சாதனை விளக்க வாகணங்களின் அணிவகுப்பு மட்டும் தான் இருந்தது.

இறுதியில் ஒரே ஒரு ராணுவ ஹெலிகாப்டர் மட்டும் வந்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. மாணவ மாணவியர்களின் நடனம் நேர தாமதத்தால் இல்லை என சொன்னார்கள். மக்கள் வெள்ளத்தில் இருந்த பகுதி இறுதி வாகணம் வந்தவுடன் சுவடே இல்லாமல் கலைந்து போனது.

வெயில் அதிகம் என்பதால் அருகேயிருந்த எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்றோம். எல்லா மக்களும் அவருடைய சமாதியில் காதை வைத்து கடிகாரச் சத்தத்தை கேட்க முட்பட்டுக் கொண்டிருந்தார்கள். அருகில் போக கூட முடியவில்லை. நாங்கள் அவருடைய நினைவுப் பொருட்கள் வைத்திருக்கும் அறைக்கு சென்றோம். எத்தனையோ முறை எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்ற போதும், நினைவுப் பொருட்களை பார்க்க செல்வது இது தான் முதல் முறை.

அவருடைய உடைகளுடம், பரிசு பொருட்களும், கையெழுத்துடன் உள்ள டைரியையும் பார்த்தோம். எதற்காக வழங்கப்பட்ட பரிசுகள் என்பது பற்றி குறிப்புகள் இல்லை. சுற்றி இருக்கும் புகைப்படங்களிலும் எம்.ஜி.ஆர் யாருடன் இருக்கிறார், எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் இல்லை. திரைப்பட துறையில் கதாநாயகிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிக்க அத்தனை கூட்டம். சில தெரியாத பழைய நாயகிகளின் பெயர்களையும் ஒரு ரசிகர் மூலம் அறிந்து கொண்டோம். ஆனால் அவருடன் இருந்த அரசியல் தலைவர்களை அறிய முடியவில்லை.

அருகிலிருக்கும் அண்ணா நினைவகத்தில் எல்லாம் சரியாக இருந்தது. பல பெருந்தலைவர்களின் முகங்களை அப்போது தான் பார்த்தேன். நெடுஞ்செலியனின் இள வயது படம் மிகவும் ஈர்த்தது. இன்றும் அழியாத புகழுடன் வாழும் மனிதன் எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்கும் கூட்டமும், அவர் வளர்த்துவிட்ட தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைவர்களும் அவரின் நினைவகத்தை இப்படி கண்டுகொள்ளாமல் வைத்திருப்பது மிகவும் வேதனையாக இருந்தது .

கிராமத்திலிருந்து வந்த பாமர மக்கள் பார்க்கும் ஒரு சில இடங்களையும் இப்படி கவணிக்காமல் வைத்திருக்கும் சுற்றுலா துறையை எப்படி நொந்து கொள்ள.

விஷ்னுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் மூன்று

மனித உருவில் வாழ்ந்த தெய்வத்தை பற்றியும், மனித உருவெடுத்த தெய்வத்தை பற்றியும் தெரியவந்த ஆச்சிரியமான செய்திகள் இக்கட்டுரை.

எம்.ஜி.ஆர் செய்த உதவி –

மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் வியக்கதக்க பல விசயங்கள் இருக்கின்றன. தமிழினத் தலைவர் என்று மார்தட்டிக் கொள்ளும் கருணாநிதியும், அவரது ஜால்ராக்களும் ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எம்.ஜி.ஆர் ஈழத் தமிழர்களுக்கு உதவிய விஷயம் எல்லோருக்கும் தெரியாது. என்ன வியப்பாக இருக்கிறதா. எனக்கும் அப்படிதான் இருந்தது.

1987- இல் அவர் முதலமைச்சராக இருந்த போது 15 கோடி ரூபாயை ஈழத் தமிழர்களின் உணவு, உடை, மருந்துச் செலவுக்காகக் கொடுத்திருக்கிறார். அந்தக் காலக் கட்டத்தில் மத்திய அரசு வழக்கம் போல இலங்கை அரசுக்கு தான் ஆதரவு தந்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழர்களுக்கு உதவி செய்திருக்கிறார் தலைவர்.

இந்தக் கட்டுரைக்கும் ஈழத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும் எம்.ஜி.ஆரின் உதவியை சுட்டிகாட்டுவது அவசியம் என தோன்றியது. இப்போது செய்திக்கு போவோம்.

விஷ்னுவுக்கும் மூன்று –


திருவரங்கத்திற்கு குடும்ப சகிதமாக நான் சென்ற போது, ஆண்டாளின் கண்ணாடி சேவையை பார்க்க நேர்ந்தது. ஒரே ஒரு சிலைதான் அதைச் சுற்றிலும் அத்தனை கண்ணாடிகள். எல்லா பக்கங்களிருந்தும் அந்த சிலையின் அழகை ரசிப்பதற்காக ஒரு ரசிகன் செய்த ஏற்பாடு அது. ரசித்த எனக்கு ஆச்சிரியம் ஒன்று காத்திருந்தது. அது நீளா தேவி. பெருமாளுக்கு அருகே நீளா தேவி என்ற பெண் சிலை.

பெருமாளுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி என்ற மனைவிகள் இருப்பது தெரியும், இது யார் நீளா தேவி என அர்ச்சகரிடம் கேட்க, இவரும் பெருமாளின் மனைவி என்றே பதில் சொன்னார். ஏகப்பட்ட கதைகள் உலாவரும் மதம் என்பதால் இதற்கும் ஒரு கதை இருக்குமே என தோன்றியது. சமீபத்தில் அதற்கு விடையும் கிடைத்தது.

மக்களை மயக்கும் மண், பொன், பெண் என்னும் மூன்று சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டால் தான் வீடு பேறு கிடைக்கும், எனவே தான் இந்த சக்திகளுக்கு மூலமாக மூன்று தேவியரை திருமால் ஆட்கொண்டுள்ளார். (மண்- பூதேவி, பொன்- ஸ்ரீ தேவி, பெண்- நீளா தேவி).

எம்.ஜி.ஆருக்கு மூன்று –


எம்.ஜி.ஆருக்கு மண்,பொன்,பெண் என்ற கோட்பாடெல்லாம் அவருக்கு கிடையாது. 1940-ல் தங்கமணி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தையில்லை. மிகுந்த வறுமையில் இருந்ததால் தங்கமணியை அவரின் பெற்றோர்கள் சொந்த ஊருக்கே அழைத்துப் போய்விட்டனர். வறுமை காரணமாக தங்கமணி இறந்துவிட எம்.ஜி.ஆர் வந்து பார்ப்பதற்கு முன்னரே புதைத்தும் விட்டனராம்.

1942-ல் எம்.ஜி.ஆருக்கு இரண்டாம் திருமணம் சதானந்தவதியுடன் நடந்தது. இதயக் கோளாறு, குறைப்பிரசவம், காச நோய் போன்ற காரணங்களால் சதானந்தவதியும் இறந்து போனார்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி போன்றவை உட்பட 25 பிரபலமான படங்களில் நடித்தவர் கணபதி பட். இவர் தான் ஜானகி அம்மையாரின் கணவன். இவருக்கும் ஜானகிக்கும் சுரேந்திரன் என்ற மகனும் இருந்திருக்கிறான். இருப்பினும் 1950- இல் வெளிவந்த ‘ மந்திரி குமாரி ‘ என்ற படத்தில் கணேஷ் பட்டும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் படப் பிடிப்பின் போதுதான் எம்ஜியாருக்கும் ஜானகிக்கும் காதல் உண்டாகியிருக்கிறது. உடனே , கணபதி பட்டை விவாக ரத்து செய்து விட்டு எம்ஜியாருடன் வாழத் தொடங்கியிருக்கிறார் ஜானகி.

இரண்டு புதியதாக தெரிந்த செய்திகளை இங்கு சொல்லியிருக்கிறேன். இது போல பல தலைவர்கள் வாழ்க்கையில் வெளிச்சத்திற்கு வராத பக்கங்கள் அதிகம் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

மகரிசி, ஜக்கி, நித்யா என் பார்வையில்

சர்வம் சிவ மயம் என்று எண்ணுகிற தீவிர சைவன் நான். “நான் கடவுள்” என்று யாராவது தன்னை அறிமுகம் செய்து கொண்டாலே தலைதெரிக்க ஓடிவிடுவேன். இருப்பினும் மூன்று சாமியார்கள் என்னுடைய வாழ்க்கையில் அவர்களுடைய எழுத்துகளாலேயே அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய சிந்தனை இக்கட்டுரை.

வேதாந்திர மகரிசி –

எனக்கு அறிமுகமான மகான்களில் முதலிடம் வகிப்பவர் வேதாந்திர மகரிசி. என் அம்மா அவருடைய தியான மையத்தில் சேர்ந்து பட்டங்களுக்கு மேல் பட்டங்களாக வாங்கி குவித்துக்கொண்டிருக்கின்றார். அ ம்மாவின் குரு என்பதாலும், தியானத்தினை கற்பிக்க பணம் வாங்குவதில்லை என்பதாலும், அவர்மேல் மிகுந்த மரியாதை எனக்கு. அவருடைய புத்தகங்களை படித்திருக்கின்றேன். அதிகமாக சுவாரசியம் என்றெல்லாம் சொல்ல இயலாது. ஆனால் ஓர் வகையான ஈர்ப்பு இருக்கும்.

அவரிடம் பிடித்தது அம்மாவுக்காகவும், அப்பாவுக்காகவும், நண்பர்களுக்காகவும், காதலர்களுக்காகவும் ஒருதினத்தினை மக்களை ஏற்று அனுசரிக்க, மனைவிக்காகவும் ஒருநாளை தேர்ந்தெடுத்து நடத்தி காட்டியவர். இன்றும் லட்சக்கணக்கான தம்பதிகள் அதை விழாவாக கொண்டாடுவதை பார்த்திருக்கின்றேன். கணவன்கள் மனைவிகளின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு திருவிழா அது. “வாழ்க வளமுடன்” என்ற மந்திரச் சொல்லாக மாறிய வாழ்த்து பல வீடுகளில் மாற்றங்களை கொண்டுவந்திருக்கும் என தெரியும். அவர் மறைந்து விட்டார் என்றாலும் அவருடைய பணிகளை மிகச்செம்மையாக சீடர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்.

வேதாந்திர மகரிசியின் மகிமை –

அவருடைய தலைநகரான ஆழியாருக்கு சென்றவர்கள் எல்லோரும் (என் அன்னை உட்பட) ஏதோ பரவச நிலை அடைந்ததாக தெரிவித்தனர். அந்த இடம் முழுக்க தெய்வீக மனம் வீசுவதாகவும், எல்லையற்ற ஆனந்தம் பெருகுவதாகவும் கூறினார்கள். அங்கு செய்யும் தியானதில் தான் முழுமையைக ஈடுபட்ட திருப்தி ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் பலரும் மிகவும் மரியாதையுடனும் கணிவாகவும் பேசுவதை கேட்டிருக்கிறேன்.

சற்குரு ஜக்கி வாசுதேவ் –

தியான லிங்கம் அமைத்து அதன் மகிமையை மதங்கள் கடந்து கொண்டு செல்லும் ஞானி சற்குரு ஜக்கி வாசுதேவ். இவருடைய எழுத்துகள் தான் எனக்கு நெருக்கத்தினை உண்டு பண்ணின. சில கேள்விகளுக்கு அவரிடமிருந்து பதிலாய் சாட்டையடி கிடைக்கும். சில கேள்விகளுக்கு அனுதாபம் கிடைக்கும். எப்படியிருப்பினும் எனக்கு சற்குரு முதல் குரு. அவருடைய எல்லா புத்தகங்களையும் கடனுக்காவது வாங்கி படித்துவிடுவேன். அவருடைய எழுத்துகளின் ரசிகன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம்.

சற்குருவின் வசியப்பார்வையும், உருவமும் எனக்குள் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரபல தொலைக்காட்சியில் அவருடைய உரையை கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஈசா என்ற தியானமைய முன்னுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றேன். தியானத்தின் அற்புதங்களை மக்கள் சொல்ல நேரில் கேட்டிருக்கிறேன். அதில் கடந்த ஒரு மாதத்தில் எத்தனை பேர் பட்டாம்பூச்சியை பார்த்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கை தூக்கிய சொற்ப ஆட்களில் நானும் ஒருவன். எனக்கு தியானம் இப்போதைக்கு தேவையில்லை என தோன்றவே, அதில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

சற்குரு ஜக்கி வாசுதேவின் மகிமை –

தியான நிகழ்ச்சிக்கு சென்ற போது இவரைப் பற்றியும், தியானத்தினால் அடைந்த பயனையும் பற்றி ஒரு பெண்மணி சொன்னார். பல இன்னல்களை வாழ்கையில் அனுபவித்து, வாழ்க்கையை மிகவும் வெறுத்த நிலையில் இருந்திருக்கிறார். பெற்றோர்களிடம் யாரோ ஈசாவைப் பற்றிச் சொல்ல, அவர்கள் பெண்ணை சேர்த்துவிட்டிருக்கிறார்கள். பின்பு படிப்படியாக எல்லா துயரங்களையும் கடந்து வந்து இந்த நிலையில் இருப்பதாக சொன்னார். சொல்லும் போதே கண்களில் நீர் வந்து விழுந்தது அவருக்கு.

நித்யானந்த பரமஹம்சர் –

சிவசொருபத்தினை நித்யானந்த பரமஹம்சர் முழுமையாக ஏற்றிருக்கிறார் என்பதை அவருடைய ஊர்வலத்தில் பார்த்திருக்கின்றேன். வெகுஜனப் பத்திரிக்கையில் நித்தியானந்தரின் பல தொடர்களை படித்திருக்கிறேன். நான் நித்தியானந்தரை பார்த்து வியந்த விசயங்கள் அவருடைய இளமையும், அழகிய சிரிப்பும் தான்.பொதுவாக சாமியார்கள் என்பர்வர்கள் தாடி வைத்து முதிர்ந்த வயதை கொண்டிருக்க வேண்டும் என்ற இயல்பை முறியடித்தவர். கொஞ்சம் அதிகமாக சொன்னால் பெண்ணா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அழகு எனலாம்.

நித்யானந்த பரமஹம்சர் மகிமை –

நித்தியானந்தர் பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களின் வலைதளத்தில் படித்திருக்கிறேன். சாரு நித்தியானந்தரை கடவுள் என்றே குறிப்பிடுகின்றார். கல்பதரு பற்றி வியந்து பேசுகிறார். தன்னுடைய அனுபவங்களைப் பற்றி அழகாக சொல்கிறார். அது அப்படியே.

நான் கேட்ட வரம் இதுதான்: ஸீரோ டிகிரி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அது ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. டெஹல்கா போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அது பற்றிய உற்சாகமான மதிப்புரைகள் வந்துள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதை எடுத்துச் செல்ல ஆள் இல்லை.இந்த வரத்தைக் கேட்டு மூன்று வாரங்களுக்குள் உலகின் மிக முக்கியமான, 200 ஆண்டுகள் பழமையான ப்ரிட்டிஷ்/அமெரிக்கப் பதிப்பகம் ஒன்றிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 50 Indian Classics இல் ஒன்றாக ஸீரோ டிகிரியும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு ஒரு unconventional choice ஆக இருந்தது என்றும் அக்கடிதத்தில் கண்டிருந்தது. கடிதத்தில் அந்த இரண்டாவது வாக்கியத்தை நான் மிகவும் ரசித்தேன்.

பலர் மதிக்கின்ற பெரிய எழுத்தாளர் சாரு. அவரே வியந்து பேசியிருப்பதால் நித்தியானந்தர் மேல் ஓர் கவணம் ஏற்பட்டுவிட்டது.

ஒற்றுமைகள் –

இவர்கள் மூன்று பேரிடமும் பலபல வேற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் மூவரும் தியானத்தையும், யோகாவையும் கொண்டு மக்களின் பிரட்சனைகளை தீர்த்து வைக்கின்றனர். ஈசனினை நீங்கள் பெரும்பாலும் தியான நிலையில் மட்டுமே காண முடியும். காரணம் தியானம் ஒன்று தான் மனதை வெல்ல கூடிய வழி.

“சிவ மயம்”.

காந்தியும் ஹிட்லரும் – ஒரு ஒப்பீடு

காந்தி, ஹிட்லர் இந்த இரண்டு தலைவர்களின் மரணங்களைப் பற்றி பல்வேறு பட்ட கருத்துகள் உலா வரத் தொடங்கியுள்ளன. இந்த இரண்டு தலைவர்களுக்கும் கொள்கை ரீதியாக வேற்றுமைகள் இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கதான் செய்கின்றன. மகாத்மாவோடு சர்வதிகாரியை ஒப்பிடுவதா என நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் மிகவும் சிறியது. எவரையும் எவருடனும் ஒப்பிட்டு எழுதுவது எழுத்தாளனின் வலிமை. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதுமில் இரண்டு பெருந்தலைவர்களின் கருத்துகளை ஒப்பிட்டு எழுதியிருப்பார். இங்கும் அதைப் போல ஒரு தேவை ஏற்பட்டுவிட்டது.

காந்தி – ஹிட்லர் ஓர் ஒப்பீடு

1. காந்தியடிகளும் ஹிட்லரும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். பின் நாட்களில் மாபெறும் தலைவர்களாக மாறினார்கள்.

2. காந்தியின் குழந்தை பருவமும், ஹிட்லரின் குழந்தை பருவமும் கூச்சத்தினாலும், அறியாமை பயத்தினாலும் நிரம்பியிருந்தது. இருவரும் அந்த பயத்தினையும், கூச்சத்தினையும் படிப்படியாக வென்றனர்.

3. இருவரின் புகழும் வெளிநாட்டில்தான் ஆரம்பமானது. காந்திக்கு தென்ஆப்பிரிக்கா போல ஹிட்லருக்கு ஜெர்மனி. (ஹிட்லருடைய தாய் நாடு ஆஸ்திரியா).

4. தன்னை தொடர்வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் மூலம் ஆப்பிரிக்காவில் இந்திய மக்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதை பார்த்த காந்தி வெகுண்டார். இது காந்தியின் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம். ஹிட்லர் ராணுவத்தில் இருந்து போர் செய்யும் போது கைது செய்யப்பட்டார். அந்த முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்தை கண்டு வெகுண்டார். இது ஹிட்லரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்.

5. அடிமை தனங்களை தகர்த்தெரிய இந்தியாவும் ஜெர்மனியும் ஒரு தலைவருக்காக காத்துகிடந்தன. அந்த சூழ்நிலை இருவருக்கும் சாதகமாக இருந்தது.

6. காந்தியடிகள் செய்த செயல்கள் எப்படி தொடக்க காலம் முதல் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனவோ, அதே போலதான் ஹிட்லரின் செயல்களையும் ஜெர்மனி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. விடிவு காலத்திற்காக காத்திருந்தவர்கள் அதற்காக எதுவும் செய்ய துணிந்திருந்தார்கள்.

7. இருவரும் பல முறை தங்களுடைய போராட்டங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள். கொண்டிருந்த எண்ணங்களில் மிகவும் உறுதியானவர்கள்.அந்த எண்ணம் தவறென பலர் சொன்னாலும் ஏற்க மறுத்தனர். இதனால் கட்சிக்குள் ஏகப்பட்ட பெரும் தலைவர்கள் எதிரிகளாயினர்.

8. மற்றவர்களின் கருத்துகளை காந்தி ஏற்றுக் கொண்டதே இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. அம்பேத்கார், நேதாஜி போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் மதிக்கப்படாமல் போனார்கள். தன்னை ஆதரிப்பவர்களை மட்டுமே காந்தியடிகள் விரும்பினார். ஒரு சர்வதிகாரியாகவே காந்தி விளங்கினார் என்று சில சம்பவங்கள் நிறுபிக்கின்றன. ஹிட்லரின் சர்வதிகாரத்தினால் எதிர்த்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள்.

9. காந்தியடிகளின் பேச்சு திறன் பற்றி சொல்லத் தேவையில்லை. நாடு முழுதும் அவர் செய்த பிரச்சாரம் மிகவும் பிரம்மிக்கதக்கது. இன்றளவும் ஹிட்லரின் பேச்சு திறமையை வியந்து பேசும் அளவிற்கு ஹிட்லரும் மிக திறமையான பேச்சாற்றல் கொண்டவர். சிறந்த உலக பேச்சாளர்களின் பட்டியலில் ஹிட்லர் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

10. காந்தியடிகளும் சரி ஹிட்லரும் சரி மது, மாது போன்ற பழக்கங்களிலிருந்து விலகி இருந்தவர்கள். மாமிசம் உண்ணும் பழக்கமும் இருவருக்கும் இல்லை. அகிம்சையை போற்றிய காந்தியடிகளுக்கு இருந்த அடிப்படை தனியொழுக்கம் ஹிட்லருக்கும் இருந்து வியப்பான ஒன்றுதான்.

11. காந்தி கஸ்தூரிபாய் மீது அளவுகடந்த காதல் கொண்டிருந்தார். அவரும் கணவனுக்காக பல துன்பங்களை தாங்கி கொண்டார். ஹிட்லரும் நடிகை மீது காதல் கொண்டிருந்தார். ஹிட்லருக்காக மரணம் வரை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார் அந்த நடிகை.

12. சுகந்திரத்திற்காக பாடுபட்ட காந்தி இறுதியில் இஸ்லாமிய மத தலைவர்களுடன் (ஜின்னா) ஒன்று சேர்ந்து இந்திய நாட்டின் சிந்து சமவெளி பகுதியை பாக்கிஸ்தான் என பிரித்துக் கொடுக்க சம்மதம் சொன்னார். அவர்கள் பங்களாதேஸையும்(அப்போது கிழக்கு பாக்கிஸ்தான்) சேர்த்து கேட்டனர். அதற்கும் யோசிக்கமலேயே சரியென்றார். தங்கள் நாடு இரண்டாக (இப்போது மூன்றாக) பிளவுபடுவதை சுகந்திர வீரர்கள் விரும்பவில்லை. நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன. ஹிட்லர் அமைதியாக இருந்த நாட்டினை போரில் ஈடுபடுத்தினார். பொருளாதாரம் சரிவடைந்ததனால் ஜெர்மனியிலும் மக்கள் கொதித்தெழுந்தனர்.

13. காந்தி, ஹிட்லர் இருவரின் இறுதி வாழ்க்கையும் துன்பமயமாகவே கழிந்தது. தான் தொடங்கிய அகிம்சை கொள்கை தன் கண்முன்னே அழிவது கண்டு மிகவும் நொந்து போனார் காந்தி. காந்தி சுடப்பட்ட போது கோட்சேவை மக்கள் அடித்தனர். இதுவரை கட்டிகாத்த அகிம்சை அவருடனே செத்து போனது. நாசிசம் அழிவது கண்டு மனம் குழைந்தார் ஹிட்லர். இரண்டு கொள்கைகளும் பின் நாட்களில் யாரினாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. அப்படி பின்பற்றுதலும் சாத்தியமில்லாமல் போயிற்று.

14. சுகந்திரம் வாங்கும் வரை காந்தியின் பேச்சை கேட்டவர்கள். சுகந்திரம் வாங்கிய பின்பு கேட்கவில்லை. காங்கிரசை கலைத்துவிட்டு அல்லது அதிலிருந்து விலகி எல்லா தலைவர்களும் நாட்டிற்காக பாடுபட வேண்டுமென அவர் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் (நேரு உட்பட) பதவிக்காக செயல்பட்டனர். காந்தி செல்வாக்கிழந்து காணப்பட்டார். ஹிட்லருடைய மரணம் நிகழ்வது தெரிந்த ஒன்றான பின் பலரும் படையிலிருந்து விலக ஆரமித்தனர். ஹிட்லரின் செல்வாக்கும் குறைந்தே காணப்பட்டது.

15. இந்துகள் இஸ்லாமியர்களால் (வேறு நாட்டிலிருந்து குடியேரியவர்கள்) படுகொலை செய்யப்பட்டார்கள். பாக்கிஸ்தானிலிருந்து பல ஆயிரம் இந்துகளை நிர்வாணமாக அடித்து துரத்தினார்கள். இந்து பெண்களின் கற்பு முகமதியர்களால் சூரையாடப்பட்டது.(ஹே ராம் படத்தில் கமலின் மனைவி கற்பழிக்கப்படுவது போல சித்தரிக்கப்பட்டது அதனால்தான்). நாடே ரத்த வெள்ளத்தில் மிதந்தது.இனி அகிம்சை செல்லாது என இந்துகளும் ஆயுதம் எடுத்தனர். எல்லாவற்றையும் காந்தி ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. யூதர்கள் சித்திரவாதை செய்யப்பட்டார்கள். யூத பெண்களின் கற்பு சூரையாடப்பட்டது. ஜெர்மனியிலும் இந்தியாவின் நிலையே காணப்பட்டது. இரண்டு இனப்படுகொலைகளையும் வரலாறு மிகவும் கோரமாக கருதுகிறது.

16. காந்தியின் மீது அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் தாக்குதல்களினால் அவரை பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாமென தொண்டர்கள் அறிவுருத்தினர். ஆனால் காந்தி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஹிட்லரை பதுங்கு குழியில் தங்காமல் வேறு நாட்டிற்கு தப்பி ஓடிவிடும்படி அவரது விசுவாசிகள் சொன்னார்கள். ஹிட்லர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வேளை விசுவாசிகளின் கருத்தினை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச காலம் அவர்கள் வாழ்ந்திருப்பார்கள்.

17. இருவரின் மரணமும் இயற்கையாக நிகழவில்லை. காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

18. இருவரும் தங்கள் வாழ்க்கையை மக்களுக்கு செய்தியாக விட்டு சென்றவர்கள். அமைதியென்றால் உலக அளவில் உடனே நினைவுக்கு வந்துவிடுவார் காந்தி. சர்வதிகாரம் என்றால் ஹிட்லரை தவிற வேறுயாருமில்லை.

19. உலக சமாதான அரசர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் காந்தி. உலக கொடுங்கோல் அரசர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ஹிட்லர். அலேக்சான்டர், நெப்போலியன் போன்றவர்கள் நிகழ்த்திய பேரழிவைவிட அதிகம் ஏற்படுத்தி முன்னிலை பெருபவர் ஹிடலர் மட்டுமே.(அறுபது லட்சம் யூதர்களை கொன்றார் என கணக்கு காட்டப்பட்டிருக்கிறது).

20. இறந்து பல வருடங்கள் ஆன பின்பும் இருவரின் தாக்கமும் உலக அளவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

என்னதான் இரு வேறு துருவங்களாக இருந்தாலும் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் வியப்பை அளிக்கின்றன என்பதைவிட வேறென்ன சொல்ல முடியும்.

காந்தியும் ஹிட்லரும் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். பின்பு தலைவர்களானதும் இருவரின் செயல்கள் மூலம் மக்கள் மிகவும் துன்பப் பட்டார்கள். இனி இவர்களின் தலைமை வேண்டாம் என நினைக்க தொடங்கி வேளையில் இருவரின் வாழ்க்கையும் முடிக்கப்பட்டுவிட்டது.
மரணத்திற்கு பிறகு தொடரும் சர்ச்சை

மகாத்மா மோகன்லால் கரம்சந்த் காந்தி –
காந்தி இறந்த போது ஹேராம் என சொல்லவில்லை என்ற கருத்து இப்போது வலுபெற்றிருக்கிறது.

சர்வதிகாரி அடால்ப் ஹிட்லர் –

மண்டையோடு ஹிட்லருடையது அல்ல. எனவே அவர் இறந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை எனவும் கூறப்படுகிறது.

வாழும் போதும் மட்டுமல்ல சிலர் இறந்த பின்பும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அந்த வகையிலும் இருவருக்கும் ஒத்துப் போகிறது.