கதைகளும் நானும் – விடலை ஞாபகங்கள்

கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள் ன் தொடர்ச்சி,..

சிறுவர் மலரில் தொடங்கிய என் வாசிப்பனுவபம் வாரமலர், குமுதம், ஆனந்தவிகடன் என சிற்றிதழ்களாக நீண்டது.  சிற்றிதழ் கதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொஞ்சம் சிற்றின்பமும் இணைந்தன.  மலரின் வாசனையில் மதிமயங்கிய வண்டென மனம் தள்ளாடின. அதன் புரிதலை நோக்கிய பயணத்தில் புராணக் கதைகளில் கூட இதுவரை தெரிந்த கதைகளிலேயே சில சம்பவங்கள் உடன் சேரத் தொடங்கின.  பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்கள், தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள், இராமனின் மனைவிக்கு இராவணன் ஆசை கொண்டது என கதைகளின் அடிநாதம் காமமாக இருந்தது.

உடலுறவு என்பதை வெறுத்தோ, குழந்தைகளுக்கு சொல்ல மறுத்தோ புராண, இதிகாசங்களில் ஒரு நகைப்புக்குறிய விசயத்தினை செய்திருப்பார்கள். குமரன் சிவ நெற்றி பொறியில் இருந்து பிறந்தான், வினாயகன் சக்தியின் அழுக்கில் இருந்து பிறந்தான், ஐயப்பனை மன்னன் கண்டெடுத்தான் என்று கதையளந்திருப்பார்கள். மகாபாரதத்தில் பாண்டு இறந்தபிறகு குந்திக்கு ஐந்து மகன்கள் பிறந்தன என்றும், ஒவ்வொருவரின் தந்தையும் எமன்(தர்மனின் தந்தை), வாயு(பீமனின் தந்தை), இந்திரன்(அர்ஜூன்னின் தந்தை), அஸ்வினி தேவர்கள்(நகுலன்,சகாதேவனின் தந்தை) என்று சொன்னவர்கள். மந்திரத்தால் பிறந்தவர்களாக சுட்டியிருப்பார்கள். அதனால்தான் கண்ணனும், இயேசுவும் கன்னித்தாய்க்கு பிறந்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

நல்லவேளை சிற்பிகளும் அவ்வாறு நினைக்காததால் பாலியல் கல்வி கோயில் சிற்பங்களாக இருந்துவந்துள்ளன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருந்தன. கோயிலே கதியென இருந்த அந்தகால மக்களுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு இருந்திருக்கலாம். கருவறை மட்டுமே பிரதானமாக மாறியிருக்கும் இந்த காலத்தில் நிச்சயம் கோவில்சிற்பங்களால் பலனில்லை. காரைக்கால் அருகே இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் 500 ரூபாய் தரிசன நபர்கள் மட்டுமே ராஜகோபுரம் வழியாக நுழைய முடியும். விழாக்காலங்களில் வாசலில் ஆரமிக்கும் இரும்பு தடுப்புகள், சனீஸ்வரை நமக்கு காட்டிவிட்டு மறுபடியும் வாசலுக்கே கொண்டுவந்து விட்டுவிடும். பிறகு எங்கிருந்து கோயில் சிற்பங்களை கண்டுகளிப்பதெல்லாம்.

ஒவ்வொரு ஆணின் பருவ வயது ஒரு சிக்கலான நூல்கண்டினைப் போன்றது. அதன் சிக்கல்களை நீக்க முடியாமல் நூல் முழுவதையும் வீணாக்கிவிடுகின்றதைப் போல வாழ்க்கையை வீணடித்த ஆண்களே இங்கு அதிகம். வெகுசிலரே அதன் சிக்கல்களை புரிந்துகொண்டு வாழ்கின்றார்கள். இந்த சமூகத்தின் கட்டமைப்பில் ஆண்களின் நிலையை விட பெண்ணின் நிலை மிகவும் தெளிவானதாக இருக்கிறது. அவளுக்கு அன்னை, பாட்டி என எல்லோரும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள். போதாக்குறைக்கு சமூலநல இயக்கங்களும் உடனிருக்கின்றன. ஆனால் ஆணின் அருகில் வரக் கூட தகப்பன்மார்கள் விரும்புவதில்லை. சமூகமும் அதன் பொறுப்புணர்வில்லாமல் ஊமையாக இருந்துவிடுகிறது. அதனால் முட்டிமோதி பருவத்தினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்படுகிறது.

என் சகவயது தோழர்களும் ஏறக்குறைய இதே நிலையில்தான் இருந்தார்கள். அவர்களிடமும் பல கேள்விகள் இருந்தன, விடையின்றி. எங்கிருந்து இதற்காக விடைபெறுவது. இணையம் அறிமுகம் இல்லா காலம் என்பதால் ஒரே உபாயம் புத்தகம் மட்டுமே. அறிமுகமானது குறுநாவல் படிக்கும் வழக்கம். ஒரு கதாநாயகன் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதிலிருந்து கதை ஆரமிக்கிறது. அவன் அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நேரம்கால கணக்கின்றி அவளை அனுபவிப்பதிலேயே குறியாக இருக்கிறான். அவள் அன்னையிடம் புகார் கூறும் போது, அன்னை அதை அலட்சியம் செய்கிறாள். இப்படி போகின்ற கதையின் இறுதியில் அவளின் தகப்பன் இறந்ததை கூட மறைத்து இரவு முழுதும் அவளுடன் கழித்துவிட்டு காலையில் சொல்கிறான். அதனால் கோபம் கொண்டு அவள் வெளியேறுவதாக முடிகிறது கதை. எது புரிந்த்தோ இல்லையோ, இவ்வகை கதைகளை படிப்பதால் கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று நன்கு புரிந்தது.

ஆனாலும் பருவக் கதைகள் சகதோழர்களிடம் ஏகம் இருந்தன. வழிவழியாக நாடோடிப் பாடல்களைப் போல கடத்தப்பட்டுவந்த அது, இன்னமும் வரிவடிவம் பெறாமல் இருக்கின்றன. சில எழுத்தாளர்கள் சுஜாதா, கி.ராஜநாராயணன் போல துணிந்து எழுதினாலும் அதெல்லாம் முதல் மழைதுளி போன்றதே. இன்றும் கடலளவு கதைகள் காற்றோடு காற்றாய் பரிமாறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுத்துருவம் பெறும் கதைகள் திரிதலுக்கும் உட்படுகின்றன. நாட்டார் பாடல்கள் போல அப்படியே ஆவணம் செய்தல் கடினமே. மூன்றாம் தர எழுத்தாளர்களால் எழுதப்படும் கதைகளில் நான் மேலே கூறிய எதையும் நீங்கள் பெற முடியாது. காமத்தினை காசாக்க நினைப்பவர்களின் கதையில் சதை வர்ணனை தவிற ஏதையும் எதிர்பார்க்க முடியாது. 13+, 18+ என வயதுவரையரை செய்தாலும் கதைகளுக்கு வயதில்லை.

இதில் ரசனை மிகுந்த நகைச்சுவை கதைகளும் ஏராளம். விடுதியின் ஞாயிறுகளில் மேடைமீதேறி ஒவ்வொருவராய் கதை பகிர்ந்திருக்கிறோம். மண்குடம் கதை சொல்லி நான் அமர்ந்த பிறகு அரங்கேறிய கதைகளால் விடுதியறை வெட்கம் கொண்டிருக்கும். குபீர் சிரிப்பலைகளை அடக்கி விடுதி கண்காணிப்பாளரிடமிருந்து தப்பிய அனுபவங்களை எத்தனை தோழர்கள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே கேள்விக் குறிதான். இறுக்கமாக இருக்கும் நம் சமூகத்திலேயே இத்தனை கதைகள் புழங்குகையில், வெளிநாடுகளில் எளிமையான  காமிக்ஸ் வரை சென்றது வியப்புகுறியதல்ல.

பாலுறுப்புகளின் அமைப்பினையும், செயல்பாட்டினையும் பள்ளி பாடபுத்தகம் கற்றுக் கொடுத்தாலும், வாழ்வியல் சந்தேகங்களை அவைகள் கண்டுகொள்வதில்லை. காமகதைகளும் உதவாது என்றானபோது, ஏன்?ஏதற்கு?எப்படி? என்பதில் வாசகர் சுயஇன்பம் பற்றி கேட்ட கேள்விக்கு சுஜாதா விடை எழுதியிருந்தார். எதார்த்த உண்மையானது கதையில் வருவது போல கற்பனையல்ல என்று உணர்ந்த போது, நாராயணரெட்டி, ஷாலினி போன்ற மருத்துவர்களின் நூல்கள் கிடைக்க தொடங்கின. இதெல்லாம் இணையமென்ற பரந்தவெளி அறிமுகமி்ல்லா காலத்தில் நிகழந்த ஒரு விடலை வாழ்வியல் நிகழ்வுகள். இப்போதிருக்கும் விடலைகளுக்கு இதைவிட அதிக கதைகள் கிடைத்திருக்கலாம், இல்லை கிடைக்கப்பெறாமல் கூட போயிருக்கலாம். கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லமுடியாத போது என்ன கவலை?

பி.கு –

விரசமின்றி எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இருப்பினும் விரும்பாதவர்கள் பொருட்செய்யாதீர்கள்.

ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்


இந்த சகோதரன் வலைப்பூவில் எல்லா காலங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்று விடும் இடுகை ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள். அங்கு வருகின்றவர்களில் பெரும்பாலானோருக்கு சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? என்ற கேள்வியே மேலோங்கி ஒலிக்கிறது. சில அடிப்படையான பாலியல் கேள்விகளுக்கு இந்த இடுகை பதில் சொல்லும் என நம்புகிறேன்.

கீழிருப்பவைகளை நீங்கள் நம்பலாம். இது போன்ற அறிவியல் சம்மந்தப்பட்டவைகளில் என்னுடைய எண்ணங்களை திணிப்பதில்லை. இது தினகரன் நாளிதலில் மருத்துவர்கள் எழுதிய சில பாலியல் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டது.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? –

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.

இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

குழந்தை பிறக்காமல் இருக்க ஆணும் காரணமா? –

குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? –

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.

குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? –

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை.ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் ஏதேனும் உண்டா? –
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

பிற்சேர்க்கை –
பேரீச்சை(நன்றி நண்பர் விஜய்.)

குறிப்பு –

இந்த இடுகையில் தவறான தகவல்கள் ஏதேனும் இருந்தால் உடனே மறுமொழியில் குறிப்பிடுங்கள். தவறு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இந்தக் கட்டுரைகளில் நாளிதலில் வெளியாகி, பலதரப்பு மக்களையும் சென்றடைந்துள்ள ஒன்று!.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை

இதெல்லாம் தப்பு என்று சட்டத்திலிருப்பதை நமக்குச் சொல்ல ஆட்கள் இல்லை. சாதாரணமாக எல்லோரும் கடந்து செல்லும் தண்டவாளத்தில் நடப்பதற்கு கூட சட்டம் அனுமதிப்பது இல்லை. ஆனாலும் தினந்தோறும் சட்டங்கள் தெரிந்தோ, தெரியாமலோ மீறப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இணையத்தில் உலாவும் போது பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் தளத்தினைப் பார்த்தேன். அதன் இடுகைகளில் வாய்வழிப்புணர்ச்சிக்கு உட்படுத்துதலும், சுய இன்பம், ஆசனவாய் புணர்ச்சி என எல்லாவற்றையுமே வன்முறையென பட்டியலிட்டிருந்தார்கள்.

இந்தச் சட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமா, இல்லை உலகமுழுவதுக்குமா என தெரியவில்லை. மிருகங்கள் கூட சுயஇன்பம் செய்வதாக படித்திருக்கிறேன். மனிதனுக்கு சுகந்தரமி்ல்லை போலும், சட்டங்களை காலத்தி்ற்கு தக்கவாறு மாற்றுவார்களா என தெரியவில்லை.

இனி உங்கள் பார்வைக்கு!

பெண் இன உறுப்பை சேதமாக்குதல் –

பெண் இன உறுப்பை சிதைக்கும் நடவடிக்கைகள் அதிகளவில் பாரம்பரிய அல்லது சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ள காரணங்களை மேற்கோள்காட்டி நடத்தப்படுகின்றன. சுன்னத் என்ற பெயரில் பெண் உறுப்பின் நுனி இதழ்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.

இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி –

இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி அல்லது முறை தவறிய புணர்ச்சி என்பது உடல் அல்லது உறுப்புகள் புணர்வது மட்டுமன்றி வேறுவகைப்பட்ட பாலியல் அணுகுமுறையையும் குறிக்கின்றது. அதாவது தீயநோக்கத்தோடு அரவணைத்தல், ஆடைகள் இன்றி நிர்வானமாக காட்சியளித்தல் அல்லது வற்புறுத்தி நிர்வாணமாக்குதல், வாய் அல்லது ஆசனவாய் முலமான புணர்ச்சி, சுயஇன்பத்தில் ஈடுபடல் அல்லது சுயஇன்பத்தில் ஈடுபடத்தூண்டுதல், நிர்வாண படங்களைக் காட்டுதல் அல்லது நிர்வாணமாகப் படங்கள் எடுத்தல்,விபச்சாரத்தில் ஈடுபடுத்தல் ஆகிய நடத்தைகள் முறைதவறிய நடத்தைகளுக்குள் வருக்pன்றன.

குடும்ப உறுப்பினர் ஒருவரினால் குடும்பத்திலுள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு நடத்தை பாடசாலையில் ஆசிரியர் அல்லது சமய நிறுவனங்களில் சமய பெரியார் குருக்கள், துறவிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு அணுகுமுறை.

எமது விசுவாசத்திற்கும் மதிப்பிற்கும் உரியவரிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான நடத்தைக் கோலங்களை இதற்குள் உள்ளடக்கலாம்.

பாலியல் வல்லுறவு –

ஐக்கிய நாடுகள் சபையின் பாலியல் வல்லுறவு குறித்து வரையறை பின்வருமாறு அமைகின்றது. பாதிக்கப்பட்ட நபர் இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில் பாலுறவுக்கு அச்சறுத்தி அல்லது கட்டாயப்படுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து இடம்பெற்றதென அறியப்படும் இடத்து, பாதிக்கப்பட்டவரின் பெண் உறுப்புக்குள் அல்லது ஆசனவாய்க்குள் ஆண்குறி, நாக்கு, விரல், அல்லது வேறு ஏதாவது பொருளை உட்செலுத்துவதாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரை வாய் புணர்வுக்கு தூண்டுவதாகவோ இருந்து இதில் ஏதாவது ஒரு வழிமுறை பாலியல் வல்லுறவாக கருதப்படும்.

பொதுவாக அதிகாரத்தின் கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் பாலியல் வல்லுறவாகிய வன்புணர்ச்சி இன்றளவும் பெண்கள் மீது பெருமளவில் பிரயோகிக்கப்படும் வன்முறையாக தொடர்கிறது. குடும்பத்திலும்,கல்விக்கூடங்களிலும், மதநிறுவனங்களிலும்,வேலைத்தளங்களிலும், வெளியிடங்களிலும் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக கொண்டேவருகிறது.

பாலியல் ரீதியிலான வன்முறை –

இயற்கைக்கு அல்லது வழமைக்கு மாறான பாலியல் நடத்தை குறித்து பாதிக்கப்பட்டவர் தெளிவான தகவலோ அல்லது முறைப்பாடோ தராதவிடத்து அது பாலியல் வன்முறை சம்பவம்தான் என்பதை வரையறுத்துக் கூறுவது கடினமாகும். கட்டாயப்படுத்தி பாலுறவு, ஓரினப்புணர்வு, சிறுவர் தொல்லை, இரத்த உறவுகளுக்கு இடையிலான அல்லது முறைதவறிய புணர்ச்சி, தழுவுதல் அல்லது வல்லுறவுக்கு முயலுதல் போன்றவையும் இதற்குள் அடங்கும்.
இன்னும் விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இன்னும் சில சிறப்பு உதாரணங்களை கவனிப்போம்,
அ. எதிர்ப்பு அல்லது விருப்பமின்னைக்குமத்தியில் இயற்கயான உறவு அல்லது வாய்முல புணர்வு.
ஆ. வாய்முல பாலியல் நடத்தைக்கு கட்டாயப்படுத்துதல்,
இ. சுயஇன்பத்திற்கு கட்டாயப்படுத்துதல் அல்லது இன்னொருவர் சுயஇன்பம் காண்பதற்கு உதவத்தூண்டுதல்.
ஈ. பாலுணர்வைத் தூண்டும் படங்களை பார்ப்பதற்கும் அல்லது பொருள்களை பயன்படுத்துவதற்கும் கட்டாயப்படுத்தல்,
உ. சுயநினைவற்ற நிலையில் அல்லது போதையில், வயதுக்கு வராத பருவத்தில் அல்லது சித்தசுவாதீனமுற்ற நிலையில் அல்லது மனநோயாளிகள் மீதான பாலியல் நடத்தைகள் போன்றனவாகும்.

பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள் –

வேலைவாய்ப்பில் சமத்துவமான சந்தர்ப்பங்களிற்கான ஆணைக்குழு பாலியல் தொல்லைகள் அல்லது வதைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. அலுவலகங்கள், வேலைத்தளங்கள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், பிரயாணங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் வார்த்தைகள் முலமாகவோ அல்லது உடலசைவு, சைககள் முலமாகவோ பெண்கள் மீது பின்வருமாறு வதைகள், தொல்லைகள் மேற்கொள்ளப்படுவதை இது குறிக்கின்றது.
அ. பாலியல் நடத்தைகளை எதிர்பார்ப்பாக கொண்ட உதவிகள்
ஆ. பாலியல் ரீதியில் உதவும்படி கோருதல்
இ. தொழில் ரீதியில் பயஉணர்வை ஏற்படுத்தி பாலியல் நடத்தை தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்
ஈ. பகமை உணர்வை பாராட்டி பாலியல் நடத்தைக்கு இணங்கச்செய்தல்
உ. ஊழியர்கள் மத்தியில் ஒத்துழைப்பின்மையை ஏற்படுத்துவதன் முலம் பாலியல் நடத்தைக்கு இணங்கச் செய்தல்

ஆணைக்குழுவின் அறிக்கையில் மேற்கண்டவாறு பாலியல் தொல்லை சந்தர்ப்பங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் தெளிவான வரையறை செய்யப்படவில்லை.
பாலியல் பகிடிகள், பாலியல் குத்தல் பேச்சுக்கள், பாலியல் நொட்டை, பெண்ணியன் அழகை உள்நோக்கம் கொண்டு விமர்சித்தல் அல்லது அவமதித்தல், பாலியல் சைகைகள், தொடுதல், கிள்ளுதல், இடித்தல், தடவுதல், கவர்ச்சிப் படங்களை காண்பித்தல் அல்லது பார்வையில் படும்படியாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளும் பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகளுக்குள் அடங்கும்.

பாலியல் அடிமைகள் –

அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கலாக 190 நாடுகளில் காணப்படுகின்றன. ஆபிரிக்கா ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பபட்டுக் அல்லது கடத்தி வரப்படும் பெண்களும் சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள். புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும்.

இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது.

புவியியல் அடிமைகள் பிரச்சினை அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல்கள் சிக்கல்கள் எங்குமே காணப்புடுகின்றன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்படும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியாவிட்டாலும் அமெரிக்கா அரசின் புள்ளிவிபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைககளாக ஒவ்வொருவருடமும் கடத்திவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யமான முறையில் உத்தரவாதம் அறிக்கும் வகையில் குறிக்கப்பட்டுள்ளன சம்பந்தப்பட்டவர் சமர்ப்பிக்கும் தொடர்புகள மிகவும் இரகசியமாக ஆராயப்படும். இதன் பிரகாரம் அரசு தரப்பினருக்கு தீர்விற்கான தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக ஆறு மாத கால சகவாசம் வழங்கப்படும். பெண்கள் உரிமை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்கள் அம்மாற்று மனு சம்பந்தமான மரபொழுங்கில் கையொப்பமிடுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துலதோடு மேலும் அதனை வலுவுள்ள பெண்கள் உரிமைகளுக்கான மனித உரிமை சாசனமாக்க வேண்டிய நீதிமுறையாக நடவடிக்கை எடுப்பதற்கும் முயல வேண்டும்.

இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் ஆசிய ஆபிரிக்கா நாடுகளில் இருந்து பெண்கள் கடத்திச் செல்லப்படுவதற்கு பாதாள உலக கும்பல்களுக்கிடையில் இருக்கும் வலைப்பின்லை; காரணமாக அமைகின்றது.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

சிறுமிகளை கற்பழிப்பது எப்படி? – சொல்லித் தருகின்ற தமிழர்கள்

காலையில் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்த அம்மா “ச்சீ கருமம் புடிச்ச நாயிங்க!. இதுகளையெல்லாம் நடு ரோட்டுல வச்சு சுட்டுப் போட்டாதான் மத்த எருமைகளுக்கும் புத்தி வரும்” என வசை பாடினார். தியான வகுப்புகளுக்கு செல்ல ஆரமித்ததிலிருந்து அதட்டி பேசுவதைக் கூட நிறுத்தி விட்ட அம்மாவா, நாயி எருமை என்று சொல்வது என வியந்தாவறு செய்தித் தாளைப் புரட்டினேன். சிறுமிகளை கற்பழித்த ஐந்து பேர் கைது என்ற தலைப்பு பெரியதாக தெரிந்தது.

இலங்கையில் ஈழத்தமிழச்சிகளை கெடுத்துக் கொன்ற கொலை வெறிக் கும்பல் அல்ல,. தமிழர்கள் தான் இப்படிச் செய்வது என அறியும் போது என்ன செய்வதென்றே புரியவில்லை. காமுகர்கள் இலங்கையில் மட்டுமல்ல , நம்முடன் இணைந்தே இருக்கின்றார்கள்.

சிறுமிகளை கற்பழித்த ஐந்து பேர் கைது –

திருச்சி அரியமங்கலத்தை அடுத்துள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராணி(35). இவருடைய கணவன் இறந்துவிட்டார். ராணிக்கு கவிதா(12), கீதா(10) என இரண்டு மகள்கள். ஒரு மகன். வறுமையின் கோரப்பிடியினாள் ராணி கூலி வேலைக்கு செல்கிறார். குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்தியுள்ளார்.

இவர்களின் வீட்டருகே கொத்தனார் வேலை செய்யும் மன்சூர் அலி(18) என்பவர் அவ்வப்போது சிறுமிகளுக்கு சாக்லேட், இனிப்பு வாங்கி கொடுத்து சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, முத்தமிடுவது என செக்ஸ் விளையாட்டில் பல காலம் ஈடுபட்டு வந்துள்ளார். விவரம் அறியாத பிஞ்சுகளுக்கு எதுவுமே தெரியவில்லை.

தான் இவ்வாறு அனுபவிப்பதை நணபர்களிடம் பகிர்ந்து கொள்ள, அவர்களுக்கும் சிறுமிகளை அனுபவிக்கும் ஆசை உண்டானது. நடராஜன்(14), செல்வா(14) என்ற நண்பர்களுடன் சேர்ந்து சிறுமிகளிடம் சிற்றின்பங்களை அனுபவித்துள்ளனர்.

இரண்டு நாட்டகளுக்கு முன் ராதா பீட்டர்(42), குமார் (34) என்ற இருவரும் இவர்களைக் கவணித்துள்ளனர். சபலம் இவர்களிடமும் வேலை செய்ய அடுத்த நாள் மூவர் ஐவராக சிறுமிகளிடம் சிலிமிசங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விசயம் பொதுமக்களின் கவணத்திற்கு வந்து, இப்போது காவல்துறை வரை போய் நிற்கிறது. (நன்றி – ஜூன் 26, 2010 தினமலர்).

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி –

ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர்.

பார்க்க – தினமலர்

இது ஒன்றும் புதிதல்ல –

இது போல சம்பவங்கள் தினம் தினம் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. செல்வாக்கும், மனிதநேயமும் பலவற்றை மறைத்துவிடுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் திருச்சி காவேரி கல்லூரியில் இப்படியொரு சம்பம் நடந்ததாக நண்பன் கூறினான்.

ஒரு பெண் குழந்தை களைவதற்கு எடுத்துக் கொண்ட மருந்தினால் அறை குறையாய் குழந்தையைக் கொன்று, பின்டமாக கழிவரையில் பெற்றுள்ளாள். தோழிகளிடமிருந்தும், விடுதி காப்பாளர்களிடமிருந்தும் மறைக்க, ஒரு பையில் இட்டு வைத்துள்ளாள். வெளியே தூக்கியெறியக் கூடிய சந்தர்ப்பம் அமையாமல் போகவே, அந்த பிண்டம் பைக்குள்ளேயே கிடந்துள்ளது.

கல்லூரி முடிந்து விடுதியைவிட்டு வெளியேறும் போது பையை எடுத்தால், நாற்றம் மிக அதிகமாக வெளிவர, வாச்மேன் பையை திறந்து பார்த்து அதிர்ந்திருக்கின்றார். இது செவி வழிச் செய்தியென்பதால் நம்பகத்தன்மை இல்லாமல் இல்லை. நடந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களே மிக அதிகமாக தெரிகிறது.

யார் காரணம் –

இத்தகைய கலாச்சார சீரழிவுகளுக்கு பெரியதிரை, சிறியதிரை, அரசியல் தலைவர்கள், கணினி, கைப்பேசி என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவைகளை ஒன்றும் செய்ய இயலாது. செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளுக்கு தவறான தொடுதலை இனம் காட்டுவதும், சரியான பாலியல் கல்வியை சொல்லிக் கொடுப்பதுமே ஆகும்.

ஆண்களும் கற்பழிக்கப்படுகின்றார்கள் –
வருகின்ற செய்திகள் எல்லாம் பெண்களைப் பற்றியே இருக்கின்றன. ஆனால் ஆண்குழந்தைகளுக்கும் இதே நிலைதான் இருக்கின்றது. யோனியும், கற்பப் பையும் இல்லாததால் இவர்களுடைய வழக்குகளை சமூகம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. உதாரணம் பரவலாக எழும் பாதிரியார்களின் வழக்குகள். பெண்குழந்தைகளைப் போலவே ஆண்குழந்தைகளுக்கும் மனம் உண்டு, இந்தக் கேடு கெட்டவர்களால் அந்த மனதில் நஞ்சு கலந்துவிட்டால், வக்கிரம் பிடித்தவர்களாகவோ, மனம் பாதிக்கப்பட்டவர்களாகவோ ஆகிவிடும் அபாயம் உண்டு.

உங்கள் குழந்தைகளின் மீது கவணமாய் இருங்கள்!,. வருங்கால தமிழன் தமிழோடு இல்லாவிட்டாலும், கற்போடாவது இருக்கட்டும்.

மேலும் –

அம்பாறையில் மாணவி கர்ப்பழித்து படுகொலை;
நாகரீக கோமாளிகள்?
மாணவியை கற்பழித்த வாத்தியார்!
குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா
வேளாங்கண்ணி செக்ஸ் வீடியோ
நேற்று ஓமலூர்! இன்று கடலூர்

கார்டூன் –

தமிழிஸில் ஓட்டுப் போட இங்கு சொடுக்கவும்.

விலங்குகளுடன் கில்மா – 18+

சில ஆண்களுக்கு பெண்களைப் பார்த்தால் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், சில பெண்களுக்கு ஆண்களைப் பார்த்தால் இப்படி தோன்றும். ஆனால் ஆணோ பெண்ணோ யாரெனும் விலங்குகளைப் பார்த்தால் அதனோடு உறவு கொள்ள தோன்றினால், அதற்கு மருத்துவம் Zoophilia ஜுபீலியா என்று கூறுகிறது.

பழங்காலத்திலும் –

எதுவும் இன்றோ நேற்றோ புதிதாக முளைத்துவிடும் விசயமில்லை. பழங்காலத்திலும் மனிதன் விலங்கோடு புணர்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளான். அதற்கு சான்றாக கஜரோகாவில் உள்ள சிற்பங்களில் ஒன்று இருக்கிறது. கிரேக்க புராணங்களில் இப்படிபட்ட கதைகள் வருகின்றன.

இந்து, கிறித்துவ மக்களின் திருமணச் சட்டத்தில் தகாத உறவுகளோடு விலங்குகளோடு வைத்துக் கொள்ளும் புணர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பறவைகளுடன் –

இந்த பழங்கால ஓவியம் பறவைகளுடன் மக்கள் ஈடுபட்டிருந்த புணர்ச்சியை தெரிவிக்கின்றது.

வீட்டு விலங்குகளுடன் –

டாக்டர் ஷாலினி அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் ஆடுகளுடன் புணர்ந்த மனிதர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இந்த புணர்ச்சி மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆடு மட்டுமல்ல, மாடு, மீன், பாம்பு எனவும் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

காட்டு விலங்குகளுடன் –

இதற்கென பல தளங்கள் கூட இயங்கி வருகின்றன. காமத்தினை காசு பார்க்க அலைகின்ற கூட்டம், இதை மட்டும் விட்டுவிடுமா என்ன.

இதைப் பற்றி விக்கிப் பீடியாவில் படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்த இடுகை அதிக மக்களை சென்றடைய தமிழிஸில் ஓட்டு போடவும். அதற்கு இங்கு சொடுக்கவும்.

பெண்களின் டீ சர்ட் படங்களும் – ஹாட் காணோளியும்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பக்குவம் அடைந்தவர்களுக்கும் இந்தப் பதிவு.

“கற்றது தமிழ்” படத்தில் நடிகர் ஜீவா, தன்னுடைய நண்பனின் அலுவலகத்திற்கு செல்வார். அங்கே ஒரு பெண் “” என்று டீ சர்டில் எழுதியுருப்பார். ஜீவாவும் எழுதியிருப்பதை செய்து விடுவார். அவ்வளவு தான் ஓவென ஒப்பாரி வைத்து அலுவலகமே அரண்டு போய் விடும்.

தமிழ் போக்கிரிக்கு முன்பே தெலுங்கில் போக்கிரியை பார்த்து விட்டதால், மகேஸ் பாவு – இலியான சந்திப்புக் காட்சியிலும் பொறி தட்டியது. மார்பின் மேல் எழுத்துகளை எழுதிய டீ சர்ட்டுகளைப் போட்டுக் கொண்டு திரியும் பெண்களுக்கு, எதிர் பாலினத்தின் பார்வை அவர்களின் மீது, குறிப்பாக அந்தப் பகுதியின் மீது பார்வை பட வேண்டும் என்று எண்ணம்.

தான் அணிந்திருக்கும் உடையில் என்ன எழுதியிருக்கின்றது, அதன் விளைவுகள் என்ன என்று கூட தெரியாமல் சில பெண்கள் அணிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பலர் விளைவுகளைத் தெரிந்து கொண்டு அதை அணிந்திருக்கின்றனர். ஏனென்றால் ஆண்களை விட பெண்கள் அறிவாளிகள் என்று சமூகம் சொல்கிறது.

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பெண்களின் மனோ தெகிரியம் புரியும்.


பெண்களின் டீ சர்ட் படங்கள் –

கணோளி –

போலி சாமியார்களின் உண்மை முகம் – காணோளியுடன்

சில புதிர்களை எப்போதும் அவிழ்க்க முடிவதில்லை. விஞ்ஞானம் வளர வளர மேஜிக் எனப்படும் சாகசங்கள் அதிகமாகிக் கொண்டேப் போகின்றன. சிலவற்றின் மர்ம முடிச்சுகளை எளிதாக அவிழ்த்தெரிந்துவிட முடியும் என்றாலும் மக்கள் அவ்வாறு செய்ய முன்வருவதில்லை.

சில உத்திகளைக் கையாண்டு மக்களிடம் பணம் பரிக்கும் கும்பல்களின் முகத்திரையை கிழித்தெரியவே இந்த இடுகை.

இந்தக் காணோளியில் ஒரு சாமியார் நடந்து வருகின்றார். அவரை எல்லோரும் வணங்குகின்றார்கள். அவர்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு கைகளிலிருந்து திருநீரு எடுக்கின்றார், பணம் வரவலைக்கின்றார், சொம்பில் தண்ணீர் தருகின்றார்.

பரவசத்துடன் மக்கள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண்ணை அவளின் பெற்றோர்கள் கூட்டிவருகின்றார்கள். ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவள் போல அப்பெண் தெரிகின்றாள். அந்தப் பெண்ணிடமிருந்து எதையோ எடுத்து ஒரு தேங்காயில் செலுத்துவது போல பாவனை செய்கின்றார். அதை கீழே வைக்க,தேங்காய் தானாக உருண்டு ஓடுகின்றது.

மீண்டும் வேறொரு தேங்காய் கையில் வாங்கிக் கொண்டு அதன் குடுமியில் தண்ணீர் ஊற்ற அது எரிகிறது. பிறகு அதை உடைக்கின்றார். தேங்காய் உடைகிறது. ஆனால் அது சிவப்பு நிறமாக காட்சியளிக்கின்றது.

அதற்கு தட்சனையாக பணம் வாங்கும் போது சாமியாரை சுற்றி வளைக்கின்றார்கள். உருண்டு ஓடிய அந்தத் தேங்காய்க்குள் ஒரு வெள்ளை எலி இருக்கின்றது. இது போதாதா அவர் எப்படி பட்ட சாமியார் என்பதற்கு.

அடுத்து பறக்கும் சாமியார். அவரை விடவும் இந்த சாமியார் கொஞ்சம் அறிவாளி. அவராவது ஏதோ வேதியல் படித்துவந்து தேங்காயை எரிய வைத்தார். இவர் செய்தது ஒரு குச்சியுடன் அமரும் ஆசனம், அவ்வளவு தான்.

இவர்களைப் போல வித்தை காட்டும் மனிதர்கள் வெளி நாடுகளிலும் இருக்கின்றார்கள். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றி அல்ல. வித்தைகளை மற்றவர்களிடம் காட்டி வியக்க வைக்கும் மந்திரக்காரர்களாக. ஒரு உதாரணம்.

பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்

பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்

ஆண்களின் வக்கிரமா?
பெண்கள் உடை அணியும் முறையா?

குமுதம் சினேகிதியில் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் பெண்கள் சொன்ன சில கருத்துகள்.

1. இரண்டு அர்த்தம் சொல்லும் வாசகங்களை மார்பில் அணிந்து அடுத்தவர் பார்வைக்கு அளிப்பது யார்க் குற்றம்?. இது பாலியல் தொந்தரவுகளை தாம்பூலம் வைத்து அழைப்பதாகாதா?.
2. பல பெண் குழந்தைகளின் பெற்றோரே தம் பெண்கள் இறுக்கமான மற்றும் உடலழகை எடுத்துக் காட்டும் ஆடைகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதுடன் பெருமையும் படுகின்றனர். இந்த நிலைக்கு ஆண்களை குறை சொல்லுதல் இரண்டாம் பட்சமாகிவிட்டது.
3. புடவை கட்டினால் லோ நெக் ஜாக்கெட், சுடிதார் போட்டாலோ துப்பட்டாவை ஒழுங்காகப் போடுவதில்லை. இல்லையென்றால் ஜீன்ஸ், டீ சர்ட் இப்படி பண்ணினால் ஒழுங்காய் இருக்கும் ஆண்கள் கூட சபலப்படதான் செய்வார்கள்.

இதில் எழுபத்தி இரண்டு சதவீதப் பெண்கள் பெண்களுடைய உடையின் மீதான தவறை சுட்டி காண்மித்திருக்கின்றார்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உடைகளிலிருந்து பாட்டிகள் போட்டிருக்கும் உடைகள் வரை பெண்களே தவறுகள் செய்கின்றார்கள் என்கிறது ஒரு தரப்பு.

இல்லை எப்படி ஆடை அணிந்து வந்தாலும் ஆண்கள் மோசமாக தான் நடந்து கொள்வார்கள் என்கிறது இன்னொரு தரப்பு. எல்லா ஆண்களும் சபலப் பிரியர்கள், அவர்கள் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றார்கள். பெண்கள் ஆடை விசயத்தில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அந்த சந்தர்ப்பம் கிடைக்கின்றது. சிலர் அதை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். வேறு சிலர் சந்தர்ப்பம் கிடைத்தும் சமூகத்தின் தண்டனைக்கு பயந்து தவறு செய்யாமல் இருந்து விடுகின்றார்கள்.

ஆனால் சந்தர்ப்பங்கள் பலவும் சமூகத்தின் மீதான பயத்தினை போக்கி விடுகின்றது என்பதே உண்மை. வன்புணர்ச்சி எனபடும் கற்பழிப்புகள் பல நடப்பதற்கு சமூகமும் ஒரு முக்கிய காரணம் என்றே எனக்கு படுகின்றது. ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை ஆண் காணும் போது அவனுக்கு இச்சை உண்டாதல் இயற்கை. அது தவறென்று சமூகம் சொன்னாலும், சட்டங்கள் சொன்னாலும் இயற்கை அனுமதிக்கின்றது. அதனால் மட்டுமே இன்றுவரை ஏகப்பட்ட பாலியல் தொந்தரவுகள் பெண்களுக்கு இருக்கின்றது.

இடுப்பு தெரிய சேலை, மார்பு தெரிய டீசர்ட், துப்பட்டா இல்லாமல் சுடுதார், பின்புறம் தெரியும் ஜீன்ஸ் என எல்லாவற்றையும் பெண்கள் அதில் குறிப்பிட்டுவிட்டாலும், முக்கியமான ஒரு ஆடையை மறந்துவிட்டார்கள் அது இரவு உடை நைட்டி. உடலழகை அப்படியே காட்டிடும் இந்த உடைய இரவு அவர்கள் வசதிக்காக அணிந்து கொண்டிருந்த பலரும் பகல் நேரங்களிலும் அணிந்து வெளியே பவணி வருகின்றார்கள்.

ஆடை அணிவதில் தவறு செய்துவிட்டு பாலியல் வன்முறைக்கு அழைப்பு வைக்கும் பெண்களுடன், அந்த அழைப்பிற்கு செவி சாய்க்கும் ஆண்களை குற்றவாளியாக ஆக்கி விடுகின்றார்கள் பெண்கள். இதைப் பெண்களே ஒப்புக்கொண்டபின் நமக்கு என்ன வேலை.

இதற்கு சான்றாய் ஒரு இந்து மதக் கதை –

மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கும், அசுர்ர்ரகளுக்கும் மாறி மாறி ஏமாற்றி அமுதமும், திரவமும் கொடுக்கின்றார் விஷ்னு. அந்தப் பணி முடிந்த பிறகு அதே கோலத்தில் சிவனைப் பார்க்க செல்கின்றார். அகில லோகமும் தங்களை மறந்து மோகினியை ரசிக்கின்றது. அப்படி ஒரு அழகு. மோகினியை சிவன் பார்க்கின்றார். இது வரை இப்படியொரு அழகான பெண்ணை கண்டிராத சிவனுக்கோ மோகம் வருகிறது மோகினி மேல். தன்னுடைய ஆசையை மோகினியிடம் சொல்கிறார் சிவன். அந்த ஆசையை நிறைவேற்ற மோகினியும் தயாராகிறாள். சிவனும் மோகினியும் உடலுறவில் இடுபடுகின்றார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தையையே ஐயப்பன் என மக்கள் வழிபடுகின்றார்கள்.

இந்தக் கதை சொல்வது மோகினியின் அழகை பார்த்த சிவனுக்கே மோகம் வருகின்றது. காமதேவனை எரித்தவனுக்கே ஒரு பெண்ணால் மோகம் உண்டாகுமானால் சாதாரண ஆண்கள் எம்மாத்தரம் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் கதை.

மார்பின் மேல் தெகிரியம் இருந்தால் தொடு, மிகவும் ஆபத்தான பகுதி, வெளியில் பார்ப்பதை விடவும் உள்ளே பெரியது என இரட்டை அர்த்த வசனங்களை எழுதிப் போகும் பெண்களுக்கு யாராவது வக்காலத்து வாங்க ஆள் இருக்கின்றார்களா?. இருந்தால் அவர்கள் 28 சதவீதம் பேரில் ஒருவர். நீங்கள் என்ன 72%மா 28% மா.

அம்மனம் – வயது வந்தோருக்கு மட்டும்

நீங்கள் பதினெட்டு அல்லது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் மட்டும் இதை படிக்கவும்….

பிரம்மச்சரியம் போலவே பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது இந்த அம்மனம் என்கின்ற நிர்வாணம். மனம் – அதன் எதிர்ச்சொல்லாக அம்மனம். வாழ்க்கையின் மீது பற்றில்லாமல் இருப்பதற்கான அடையாலம். நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லி மலையில் இன்னும் சித்தர்கள் இருப்பதாக சொல்கின்றார்கள். அத்தகைய கொல்லிமலையின் இயற்கையை ரசிக்க ஏராளமானோர் வருகின்றனர். அப்படி வரும் சில தொழிலதிபர்கள் அங்கிருக்கும் குகைகளில் தியானம், தவம் செய்வதாகவும் சிலர் ஆடையின்றி இருப்பதாகவும் ஒரு இதழ் தகவல் வெளியிட்டிருந்தது.

குழந்தையின் நிர்வாணத்தை கிண்டல் செய்கின்ற பலர். பெரியவர்களின் நிர்வாணத்தினை புகழ்ந்து சொல்கின்றார்கள். காரணம் குழந்தைகள் வெட்கத்தையோ, அவமானத்தையோ பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை ஆனால் வளர்ந்த ஒரு மனிதனுக்கு இவை இரண்டும் இல்லை என்பது வியப்பு தானே. அதை தான் சாதுக்களும், ஜென் குருக்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

சமணர்கள் நிர்வாணமாக வந்து மக்களிடையே அடிவாங்கி ஓடிப்போன சம்பவங்கள் கூட உண்டு. எனவே அவர்கள் காட்டுப்பகுடியிலும், மலைப்பகுதுயிலும் குடியேரிவிட்ட்னர். கும்பமேளாவின் குளிப்பதற்கு மட்டும் இவர்கள் சிலர் கங்கைக்கு வருவதுண்டு. அப்போது தான் இவர்களின் தரிசனம் மக்களுக்கு கிடைக்கும்.

நிர்வாணமாக இருக்க வெளிநாடுகளில் தனியாக கடற்கரைகளை ஒதுக்கி இருக்கின்றார்கள். ஆண், பெண் பாகுபாடின்றி எல்லோரும் நிர்வாணமாய் திரிகின்ற உலகம் அது. ஆடை என்பது பிறருக்காக நாம் நம் உடல் மேல் போட்டிருக்கும் வேலி. அந்த வேலி தகர்க்கப்படும் போது உணரப்படும் சுகந்திரத்திற்காகவே இப்படி.

நிர்வாணப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்பட கண்காட்சிக்கு வருகின்ற அனைவரும் நிர்வாணமாக மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். உணர்ந்தவர்களுக்கு மட்டுமே உன்னதம் தெரியும் என்பது அவர்கள் கோட்பாடு. மார்பை மூடாமல் இருக்கும் பழங்குடிகள் பல நாடுகளில் உண்டு. இந்தியாவில் கூட களபிரர்கள் ஆட்சிக்கு முன் அப்படி இருந்த்தாக தகவல்கள் உண்டு.

இயக்குனர் சங்கரின் ஜீன்ஸ் படத்தில் கவிப்பேரசுவின் பாடல் ஒன்றில் “நிர்வாண மீன்கள் போல நீந்தலாம்” என்ற வரியொன்று வரும். இதுபோல பலருக்கும் நீர்நிலைகளில் நிர்வாணமாக இருக்க ஆசை உண்டு. யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற மனோதெகிரியம் வந்தால் அம்மனமாக மாறிவிடுவார்கள். ஆனால் பலரும் பார்க்க இப்படி செய்பவர்களை வக்கிர எண்ணம் உள்ளவர்களாக அடையலாப்படுத்தி விடுகின்றோம்.

ஒரு இடத்தில் பெரும்பான்மை மிக்கவர்கள் எதை செய்கின்றார்களோ, அவர்களின் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கின்றதோ அதுவே நியாயம் ஆகிறது. நிர்வாணச்சாமியார்கள் இருக்கும் இடத்தில் கோமணம் கட்டியவன் கூட புழுவைப்போல இகழ்ச்சியாக தான் பார்க்கப்படுவான்.

புகழ் பெற்ற நடிகைகள், பாப் பாடகிகள் என பல துறையை சார்ந்த பெண்களும் தங்களின் நிர்வாண படங்களை நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றார்கள். இப்படி நிர்வாணப் படங்களை வெளியிட பல பத்திரிக்கைகள் இருக்கின்றன. பமிலா ஆண்டர்சன், ஏஞ்சலீன ஜூலி, பிரிட்டனி ஸ்பியஸ் என்ற வரிசையில் இறுதியாக இணைந்திருப்பவர்கள் ஏராளம்.

இந்த நிர்வாணத்தினை மையமாக வைத்து சைவ சமயத்தில் புனையப்பட்ட ஒரு கதை தான் பிச்சாண்டவர் கோலம். சிவன் நிர்வாணமாய் இருப்பார், அவரைச்சுற்றி முனி பத்தினிகள் இருப்பார்கள். ஆணவம் அழித்திட வந்த ஒரு அவதாரமான சிவன் இருப்பதைப் பற்றி எடுத்துக் கூறிடும் கதை அது.

உடலினை மதித்து அதில் வரைந்திடும் கலைக்கு வெளிநாடுகளில் இப்போது மவுசு அதிகம். நிர்வாண உடலில் அந்த நிர்வாணத்தை ரசிக்கும் மக்களுக்கு நிர்வாண ஓவியங்களிலும் கவணம் அதிகம். இந்து மத கடவுள்கள் நிர்வாணமாக தான் இருந்தன என்று சிலர் சொல்வதுண்டு. அவர்களின் கூற்றுப்படி மகாராணி விக்டோரியா காலத்தில் ராஜா ரவிவர்மா பெண் தெய்வங்களுக்கு அதிக ஆடை கொடுத்து வரைந்த்தாக சொல்லுகின்றார்கள். பல கோவில்களில் பாவைகள் திறந்த மார்புடம் முலைகளை காட்டியபடி இருப்பது கலையும் பண்பாடும் இணைந்திருந்த பழைய வரலாறே.

நிர்வாணம் ரசிக்கும் மக்களுக்கு வரமாகவும், மற்றவர்களுக்கு அசிங்கமாகவும் காலம்காலமாக இருந்து கொண்டே வருகின்றது.

ரியலான அந்தரங்க கிளு கிளு

பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது பலமொழி. எல்லா விசயங்களுககும் பொருந்திப் போகும் இந்தப் பழமொழி புணர்ச்சிக்கும் பொருந்தும். ஒரு ஆணோ, பெண்ணோ பல்வேறு எதிர்பாலினரோடு புணர்வதறகே ஆசை கொள்கின்றார்கள் என செக்ஸியாலஜி்ட்டுகள் கூறுகின்றார்கள். அதற்கு சான்று சொல்வது போல இந்து மதத்தில் ஒரு கதை.

ராமன் ராவனனைக் கொன்றுவிட்டு சீதையை மீட்டுவிடுகின்றான். அயோதியில் ராமனுக்கு பட்டாபிசேகமும் நடந்து முடிந்து விடுகின்றது. பிறகு நெடுநாட்களுக்கு பிறகு தம்பதிகள் புணர்ச்சியில் ஈடுபடுகின்றார்கள். உணர்ச்சியின் கடைசி கட்டத்தில் இருக்கும் போது சீதை எதையோ முனுமுனுக்கின்றாள்., அது ராமன் காதுகளில் விழுகின்றது. அவன் அதிர்ச்சியில் உறைந்து போகின்றான். ஏனென்றால் சீதை சொன்னது “ராவணனின்” பெயரை என்பதோடு கதை முடிகின்றது.

புனைவுக் கதையாக இருந்தாலும் சீதை ராவணனோடு புணர்வதாக நினைத்துக் கொண்டாள் என்றே கதையில் அறிவுறுத்தப்படுறது. ஒரே துணையுடன் புணர்ந்தாலும் மனதில் வேறு ஒருவரை கற்பனை செய்து கொண்டே காலம் கழித்து வருகின்றார்கள் தம்பதிகள். அப்படியிருக்க எத்தனை காலம் தான் காசிற்காக நடித்துக் கொடுதக்கும் அந்தரங்க காட்சிகளே பார்ப்பது என சிலர் ரியாலட்டி ஷோக்களுக்கு மாறிவிட்டார்கள்.

நித்தியானந்தர் ஆபாச வீடியோவும், திரிசா குளியல் காட்சியும் இந்த ரியாலட்டி சோக்களுக்கு எடுத்துக்காட்டு. அமெரிக்காவிலிருந்து கேமரா வாங்கி வந்து தகுந்த இடத்தில் பொருத்தி அடுத்தவர் அந்தரங்களை படம் பிடித்து விற்று பணம் பெறுவது ஒன்றும் புதிதல்ல. பிரபலங்கள் என்பதால் சில பெரியளவில் பேசப்படுகின்றன. இன்று கூட எத்தனை பிரபலங்களின் அறைகளில் கேமரா பொருத்தப்பட்டிருக்கின்றன என தெரியவில்லை.

வாரம் ஒரு பிரபலம் என வீடியோக்கள் வெளி வந்தாலும் ஆச்சிரியம் கொள்ள தேவையில்லை. ஒரு காலத்தி்ல் நாடகம், திரைப்படம் என்றாலே மிகையான நடிப்பும், ஒப்பனையும் தேவைப்பட்டது. ஆனால் இப்போது நம்பகத்தன்மையோடு எதார்த்தமான நடிப்பும் ஒப்பனையும் மட்டுமே தேவைப்படுகின்றது. அந்த படங்கள் மட்டுமே வரவேற்பு பெருகின்றன.

அதேதான் எல்லா தளத்தலும் நடக்கின்றது. 8 மில்லி மீட்டர் என்ற ஆங்கில படம் இத்தகைய ரியாலிட்டி படத்திற்காக உழைக்கும் மக்களை பற்றியதாகும். நேரமிருப்பின் அந்தப் படத்தை இணையத்தில் தேடிப்பாருங்கள். குழந்தைகளுன் செக்ஸ், விலங்குகளுடன் செக்ஸ், துன்புறுத்தி சுகம் அனுபவித்தல் என ஏகப்பட்ட வக்கிரங்கள் இருந்தாலும், மனதளவில் மாற்று மனிதர்களை நினைத்து சுகம் பெருதல் குற்றமாக இல்லை.

வயது வந்தும் உடலுறவு கொள்ள சமூகம் திருமணம் என்ற முட்டுக்கட்டை போட்டிருப்பதாலே இந்த வகையான வன்புணர்வுகளும் மனவக்கிரங்களும் அதிகரிக்கின்றன. செக்ஸ் டாய்ஸ் எனப் படும் பலவகையான பொருட்கள் வெளிநாடுகளில் கிடைக்கின்றன. பலர் அதன் மூலம் தங்கள் காமத்தை தீர்த்து கொள்கின்றார்கள். சிலிகான் பொம்மையால் பெண்ணைப் போன்ற தோற்றம் கொண்ட உருவத்தை வாங்கி சிலர் பயண்படுத்தி கொள்கின்றார்கள். இங்கே அந்தப் பொம்மைக்கு பதில் பெண்களே பயண்படுகின்றார்கள்.

மனதனின் மன வக்கிரம் எல்லா வகையாலும் அதிகமாகிக் கொண்டே போகின்றது என்பதை தவிற சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. அடுத்தவரின் அந்தரங்கத்தினைப் பார்க்கும் வன்மம் சில காலம் கழித்து அங்கிகாரமில்லா வருமானம் கொழிக்கும் தொழிலாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஏறக்குறைய அது ஈடேரிவிட்டதாகவே மனதிற்கு படுகிறது. மனதினை தூய்மை செய்ய ஆலோசனை இருந்தால் கூறுங்கள்.