பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன? – பத்மஹரி மென்நூல் தரவிரக்கத்துடன்

இந்தியாவில் 1990 வரைக்கும் ஆணுரையின் உபயோகம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க ஆட்கள் இல்லை. எகிறிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், எய்ட்ஸை தவிர்க்கவும் பீஹார் பகுதியில் சிலரை கட்டாயப்படுத்தி அனுப்பியது அரசு. அந்த சமூக சேவகர்கள் ஆணுரையை எங்கு மாட்டுவது என்று வெளிப்படையாக சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டு கட்டை விரலில் மாட்டிக் கொண்டு “இப்படி அணிந்து கொண்டால் எய்ட்ஸ் வராது” என்று சொன்னார்கள். விளைவு நீங்கள் நினைப்பதுதான், மக்கள் எல்லோரும் ஆளுக்கு ஒன்றை கட்டை விரலில் மாட்டிக் கொண்டார்கள், அதனால் பலனில்லை என்பதை அறியாமலேயே. இந்த சம்பவத்தினை விவரிக்க காரணம் கூச்சம் நம்மை தவறான பாதைக்கு இட்டு சென்றுவிடுவதோடு நம்மை சார்ந்தவர்களையும் கொண்டு செல்லும் என்பதை சொல்லவே. அதனால் கூச்சத்தினை இங்கேயே விட்டுவிட்டு தொடருங்கள்.

மேலிருப்பான் தளத்தினை நடத்தி வரும் நண்பர் பத்மஹரியை அறிந்திருப்பீர்கள். அறிவியலை தமிழ் மொழியின் வாயிலாக மக்களிடம் சேர்க்க வேண்டும். அதுவும் வலைப்பூவின் மூலமாக செய்ய வேண்டும் என்ற என் ஆசையில் ஒத்துப் போகும் மனம் அவருடையது. வீணான விவாதங்கள், தேவையற்ற தேடல்கள் என இல்லாமல் அறிவியலை மட்டுமே சொல்லும் வலைப்பூ அவருடையது. அவர் என்னுடன் இரண்டு முறை தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். அப்போது அதிகம் சொன்னதெல்லாம் மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்வதைப் பற்றியே. அவர் இப்போது துறை ரீதியாக டாக்டர் பட்டத்திற்கு முயன்று கொண்டிருக்கிறார். செக்ஸ் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன என்பதை டாக்டர் நாராயணரெட்டியின் “உயிர்” புத்தகத்தின் மூலம் அறிந்திருக்கிறேன். ஆனால் அவைகள் என்ன கூறுகின்றன என்பதைப் பற்றி, நண்பர் பத்மஹரியின் “பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன” புத்தகத்தின் மூலமாகதான் தெரியவந்தது. இந்த இடுகை அந்த நூலினைப் பற்றியதே!. இத்தனை வேலைகளுக்கிடையே எப்படி நூலினை தந்தார் என்பதே வியப்பாக இருக்கிறது.

மொத்தமாக 25 தலைப்புகளில் பல ஆய்வுகளைப் பற்றி விரிவாக விவரிக்கின்றார். முத்த வைரஸ் மற்றும் ஜேம்ஸ் பாண்டுக்கும் செக்ஸிற்கும் உள்ள சம்மந்தம் என சில சுவாரசியத்திற்காக இருக்கின்றன. போர்னோ வீடியோக்கள், மது, போதை மற்றும் உடல்பருமன் இவைகள் நம்முடைய செக்ஸ் வாழ்க்கை எப்படி பாதிப்படைகிறது என்பதைப் பற்றி தனிதனியாக அலசியிருக்கிறார். இப்படி புத்தகத்தில் உள்ள எல்லாவற்றையும் ஒரே இடுகையில் சுட்டிக்காட்ட முடியாது. எனவே நான் மிகவும் ரசித்த மூன்று பகுதிகளைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

1. குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு –
பாலியல் வக்கிரங்கள் என்பனவற்றில் ஓரினச்சேர்க்கை, மிருகப்புணர்ச்சி, குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என சிலவற்றை சொல்லலாம். இவை எல்லாவற்றையும் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு பகுதியில் நண்பர் ப்த்மஹரி குறிப்பிடும் ஒவ்வொரு செய்தியும் மிகவும் ஆச்சிரியமானது. ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கஸ்டமாக இருக்கலாம், ஆனால் 2002 ஆம் ஆண்டு புள்ளிவிரப்படி 89,000 குழந்தைகள் பாதிக்கப் பட்டிருக்கின்றார்களாம். இன்னும் வேதனை என்னவென்றால் இந்த பாலியல் வக்கிரங்களுக்கு ஆளானவர்கள் அதே போல பாலியல் வக்கிரங்களை தொடர வாய்ப்புள்ளதாம். ஆய்வின் மூலம் நிருபித்திருக்கின்றார்கள். ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் குழந்தைகள் வக்கிரமான பாலியல் துன்புருத்தருலுக்கு ஆளாகின்றன எனும் போது கொஞ்சம் கலக்கம் ஏற்படுகிறது. இப்படி வியக்கத் தக்க பல ஆய்வின் முடிவுகளின் மூலம் இதனை தடுக்கும் முறையையும் மிக அழகாக சுட்டியிருக்கிறார். வக்கிர எண்ணத்தினை அகற்ற முயன்ற முயற்சிகளும், மருந்துகளும் என ஏகப்பட்ட செய்திகள்.

2. திருநங்கைகள் –
கல்லூரி காலம் வரை எனக்கு திருநங்கைகள் மேல் கவணம் இருந்தில்லை. ஆனால் கல்லூரியிலிருந்து ஒரு இன்பச் சுற்றுலா சென்ற போது, நாங்கள் சென்ற தொடர்வண்டியில் அவர்கள் செய்த அசிங்மான செயலால் எங்களுடன் வந்த மாணவிகள் பலர் அழுதே விட்டார்கள். எனக்கு மட்டுமல்ல என்னுடைய நண்பர்கள் பலருக்கும் மிகப் பெரிய வெறுப்பு தோன்றியது. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகே, அவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்ற கேள்வி தோன்றியது. அந்தக் கேள்வியின் பயனாக அவர்களைப் பற்றி அறியும் போது வெறுப்பு மறைந்து.

திருநங்கைகள் என்பவர்கள் உடலால் ஆணாக இருந்து மனதளவில் பெண்ணாகவோ, இல்லை உடலால் பெண்ணாக இருந்து மனதளவில் தன்னை ஆணாகவோ நினைத்துக் கொண்டிருக்கின்ற மனித இனம் என்று மிக எளிமையாக விளக்கம் சொல்கிறார். பெற்றவர்களும், மற்றவர்களும் ஒதுக்கிவிடும் அவர்களை மருத்துவம் சரியான பாதையில் செல்ல உதவுகிறது. இதற்கான அறுவைச் சிகிச்சை மிக எளிமையானதாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் பெண்ணிலிருந்து ஆணாக மாற கருப்பை, சினைப்பை, யோனி என எல்லாவற்றையும் அகற்றிவிட்டு புதிய ஆண்குறியையே உருவாக்க வேண்டும். ஆணிலிருந்து பெண்ணாக மாற விதைப்பை, ஆண்குறிமூலம் ஆகியவற்றை அகற்றி விட்டு பெண்குறி மூலத்தையும் யோனியையும் உருவாக்க வேண்டும் என்கிறார். அப்பப்பா எல்லாவற்றிற்கும் தனித் தனியான அறுவை சிகிச்சைகள் வேறு.

இத்தனை அறுவை சிகிச்சைகளையும் முடித்துவிட்டு ஹார்மோனுக்காக தனி சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இதில்லாமல் ரேசன் அட்டை முதற்கொண்டு பாஸ்போட் வரை தங்கள் பாலினத்தினையும், பெயரையும் மாற்ற வேண்டும். திருநங்கையாக வாழவேண்டாம் என நினைப்பவர்களே இத்தனை பிரட்சனைகளை தாண்டிவர வேண்டுமானால் திருநங்கையாக வாழ்பவர்களைப் பற்றி சொல்ல வார்த்தகளே இல்லை.

3. உச்சக்கட்டம் –
பாலியல் பற்றிய கொஞ்சம் அறிவு வந்தவுடனையே முதன் முதலாக எழும் கேள்வி இந்த உச்சக்கட்டத்தினைப் பற்றியதுதான். உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?. அல்லது உச்சக்கட்டம் என்றால் என்ன?. இந்த கேள்வியை மிக சாதாரணமாக ஒதுக்கிவிட இயலாது. ஏனென்றால் நண்பர்களிடம் இருந்து நிச்சயம் பதில் கிடைக்காது. உச்சக்கட்டம் பற்றி அறியாத்தால் மனைவியை திருப்தி செய்ய இயலாதோ என பயந்து, பல இளைஞர்கள் இதனை அறிந்து கொள்ள விபச்சாரிகளிடம் சென்று எய்ட்ஸை வாங்கிக் கொண்டு வருகின்றார்கள். சமீபத்தில் எய்ட்ஸால் இறந்த என் உறவினர் உட்பட இந்தக் கேள்வியால் பலியானவர்கள் அதிகம்.

சரி சட்டென உச்சக்கட்டம் பற்றி சொல்லுங்கள் என்றால் இதுதான் உச்சக்கட்டம் என வரையறுக்க இயலாது. என்ன சிரிப்பு வருகிறதா. ஆனால் உண்மை இதுதான். நண்பர் பத்மஹரி இதனை அழகாக கையாண்டிருகிறார். உச்சக்கட்டத்தினை மருத்துவ ரீதியாக, அனுபவ ரீதியாக, உளவியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக தனித்தனியாக அனுகி, அவற்றை விவரிக்கின்றார். இதன் சாரம்சத்தினை தொகுத்து வழங்க இயலாது என்பதால் உச்சக்கட்டத்தினைப் பற்றி நான் சொல்லப்போவதேயில்லை. புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இவையில்லாமல் ஆண்களின் மூளையைப் பற்றி பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்களும், பெண்களின் மூளையைப் பற்றி ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்களும் மிகவும் அருமை. இன்னும் ஆறு ஏழு தலைப்புகளைப் பற்றி சொல்லவில்லை, அதற்குள்ளவே இடுகை நீளமாக போய்விட்டது. அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

மென்நூல் வடிவில் –

எல்லோரையும் சென்றடையட்டும் என்று பத்மஹரி அண்ணாச்சிக்கிட்டக் கூட சொல்லாம புத்தகத்தினை மென்நூலாக மாற்றிவிட்டேன். தரவிரக்கம் செய்ய இங்குசொடுக்குங்கள். (இம்மென்நூலில் இருப்பது முன்னுரை, கிடைக்கும் இடம் மற்றும் விமர்சனங்கள் மட்டுமே).

குறிப்பு –

என்னுடைய மனநிலையை வெளியிட்டதும், ஆறுதல் ஊக்கம் அறிவுரை என எனக்காக நேரம் ஒதுக்கி கருத்துகளை சொன்னவர்களுக்கு மிக்க நன்றி. முன்பை விட இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். பதிவே இடவில்லை என்றாலும் தினம் 1000 நண்பர்களாவது படித்துப் போகின்றார்கள். நாளுக்கு நாள் இடுகைகளைப் பற்றி குறிப்பஞ்சல்களை பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. இது என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தெளிவாக காட்டுகிறது. வேலைதேடும் நேரம் தவிற மற்ற நேரங்களில் தீவிர வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.  விரைவில் விதவிதமான கட்டுரைகளோடு சந்திக்கிறேன். ஆதரவுக்கு மிக்க நன்றி.

ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்


இந்த சகோதரன் வலைப்பூவில் எல்லா காலங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்று விடும் இடுகை ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள். அங்கு வருகின்றவர்களில் பெரும்பாலானோருக்கு சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? என்ற கேள்வியே மேலோங்கி ஒலிக்கிறது. சில அடிப்படையான பாலியல் கேள்விகளுக்கு இந்த இடுகை பதில் சொல்லும் என நம்புகிறேன்.

கீழிருப்பவைகளை நீங்கள் நம்பலாம். இது போன்ற அறிவியல் சம்மந்தப்பட்டவைகளில் என்னுடைய எண்ணங்களை திணிப்பதில்லை. இது தினகரன் நாளிதலில் மருத்துவர்கள் எழுதிய சில பாலியல் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டது.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? –

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.

இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

குழந்தை பிறக்காமல் இருக்க ஆணும் காரணமா? –

குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? –

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.

குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? –

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை.ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் ஏதேனும் உண்டா? –
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

பிற்சேர்க்கை –
பேரீச்சை(நன்றி நண்பர் விஜய்.)

குறிப்பு –

இந்த இடுகையில் தவறான தகவல்கள் ஏதேனும் இருந்தால் உடனே மறுமொழியில் குறிப்பிடுங்கள். தவறு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இந்தக் கட்டுரைகளில் நாளிதலில் வெளியாகி, பலதரப்பு மக்களையும் சென்றடைந்துள்ள ஒன்று!.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை

இதெல்லாம் தப்பு என்று சட்டத்திலிருப்பதை நமக்குச் சொல்ல ஆட்கள் இல்லை. சாதாரணமாக எல்லோரும் கடந்து செல்லும் தண்டவாளத்தில் நடப்பதற்கு கூட சட்டம் அனுமதிப்பது இல்லை. ஆனாலும் தினந்தோறும் சட்டங்கள் தெரிந்தோ, தெரியாமலோ மீறப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இணையத்தில் உலாவும் போது பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் தளத்தினைப் பார்த்தேன். அதன் இடுகைகளில் வாய்வழிப்புணர்ச்சிக்கு உட்படுத்துதலும், சுய இன்பம், ஆசனவாய் புணர்ச்சி என எல்லாவற்றையுமே வன்முறையென பட்டியலிட்டிருந்தார்கள்.

இந்தச் சட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமா, இல்லை உலகமுழுவதுக்குமா என தெரியவில்லை. மிருகங்கள் கூட சுயஇன்பம் செய்வதாக படித்திருக்கிறேன். மனிதனுக்கு சுகந்தரமி்ல்லை போலும், சட்டங்களை காலத்தி்ற்கு தக்கவாறு மாற்றுவார்களா என தெரியவில்லை.

இனி உங்கள் பார்வைக்கு!

பெண் இன உறுப்பை சேதமாக்குதல் –

பெண் இன உறுப்பை சிதைக்கும் நடவடிக்கைகள் அதிகளவில் பாரம்பரிய அல்லது சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ள காரணங்களை மேற்கோள்காட்டி நடத்தப்படுகின்றன. சுன்னத் என்ற பெயரில் பெண் உறுப்பின் நுனி இதழ்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.

இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி –

இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி அல்லது முறை தவறிய புணர்ச்சி என்பது உடல் அல்லது உறுப்புகள் புணர்வது மட்டுமன்றி வேறுவகைப்பட்ட பாலியல் அணுகுமுறையையும் குறிக்கின்றது. அதாவது தீயநோக்கத்தோடு அரவணைத்தல், ஆடைகள் இன்றி நிர்வானமாக காட்சியளித்தல் அல்லது வற்புறுத்தி நிர்வாணமாக்குதல், வாய் அல்லது ஆசனவாய் முலமான புணர்ச்சி, சுயஇன்பத்தில் ஈடுபடல் அல்லது சுயஇன்பத்தில் ஈடுபடத்தூண்டுதல், நிர்வாண படங்களைக் காட்டுதல் அல்லது நிர்வாணமாகப் படங்கள் எடுத்தல்,விபச்சாரத்தில் ஈடுபடுத்தல் ஆகிய நடத்தைகள் முறைதவறிய நடத்தைகளுக்குள் வருக்pன்றன.

குடும்ப உறுப்பினர் ஒருவரினால் குடும்பத்திலுள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு நடத்தை பாடசாலையில் ஆசிரியர் அல்லது சமய நிறுவனங்களில் சமய பெரியார் குருக்கள், துறவிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு அணுகுமுறை.

எமது விசுவாசத்திற்கும் மதிப்பிற்கும் உரியவரிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான நடத்தைக் கோலங்களை இதற்குள் உள்ளடக்கலாம்.

பாலியல் வல்லுறவு –

ஐக்கிய நாடுகள் சபையின் பாலியல் வல்லுறவு குறித்து வரையறை பின்வருமாறு அமைகின்றது. பாதிக்கப்பட்ட நபர் இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில் பாலுறவுக்கு அச்சறுத்தி அல்லது கட்டாயப்படுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து இடம்பெற்றதென அறியப்படும் இடத்து, பாதிக்கப்பட்டவரின் பெண் உறுப்புக்குள் அல்லது ஆசனவாய்க்குள் ஆண்குறி, நாக்கு, விரல், அல்லது வேறு ஏதாவது பொருளை உட்செலுத்துவதாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரை வாய் புணர்வுக்கு தூண்டுவதாகவோ இருந்து இதில் ஏதாவது ஒரு வழிமுறை பாலியல் வல்லுறவாக கருதப்படும்.

பொதுவாக அதிகாரத்தின் கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் பாலியல் வல்லுறவாகிய வன்புணர்ச்சி இன்றளவும் பெண்கள் மீது பெருமளவில் பிரயோகிக்கப்படும் வன்முறையாக தொடர்கிறது. குடும்பத்திலும்,கல்விக்கூடங்களிலும், மதநிறுவனங்களிலும்,வேலைத்தளங்களிலும், வெளியிடங்களிலும் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக கொண்டேவருகிறது.

பாலியல் ரீதியிலான வன்முறை –

இயற்கைக்கு அல்லது வழமைக்கு மாறான பாலியல் நடத்தை குறித்து பாதிக்கப்பட்டவர் தெளிவான தகவலோ அல்லது முறைப்பாடோ தராதவிடத்து அது பாலியல் வன்முறை சம்பவம்தான் என்பதை வரையறுத்துக் கூறுவது கடினமாகும். கட்டாயப்படுத்தி பாலுறவு, ஓரினப்புணர்வு, சிறுவர் தொல்லை, இரத்த உறவுகளுக்கு இடையிலான அல்லது முறைதவறிய புணர்ச்சி, தழுவுதல் அல்லது வல்லுறவுக்கு முயலுதல் போன்றவையும் இதற்குள் அடங்கும்.
இன்னும் விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இன்னும் சில சிறப்பு உதாரணங்களை கவனிப்போம்,
அ. எதிர்ப்பு அல்லது விருப்பமின்னைக்குமத்தியில் இயற்கயான உறவு அல்லது வாய்முல புணர்வு.
ஆ. வாய்முல பாலியல் நடத்தைக்கு கட்டாயப்படுத்துதல்,
இ. சுயஇன்பத்திற்கு கட்டாயப்படுத்துதல் அல்லது இன்னொருவர் சுயஇன்பம் காண்பதற்கு உதவத்தூண்டுதல்.
ஈ. பாலுணர்வைத் தூண்டும் படங்களை பார்ப்பதற்கும் அல்லது பொருள்களை பயன்படுத்துவதற்கும் கட்டாயப்படுத்தல்,
உ. சுயநினைவற்ற நிலையில் அல்லது போதையில், வயதுக்கு வராத பருவத்தில் அல்லது சித்தசுவாதீனமுற்ற நிலையில் அல்லது மனநோயாளிகள் மீதான பாலியல் நடத்தைகள் போன்றனவாகும்.

பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள் –

வேலைவாய்ப்பில் சமத்துவமான சந்தர்ப்பங்களிற்கான ஆணைக்குழு பாலியல் தொல்லைகள் அல்லது வதைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. அலுவலகங்கள், வேலைத்தளங்கள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், பிரயாணங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் வார்த்தைகள் முலமாகவோ அல்லது உடலசைவு, சைககள் முலமாகவோ பெண்கள் மீது பின்வருமாறு வதைகள், தொல்லைகள் மேற்கொள்ளப்படுவதை இது குறிக்கின்றது.
அ. பாலியல் நடத்தைகளை எதிர்பார்ப்பாக கொண்ட உதவிகள்
ஆ. பாலியல் ரீதியில் உதவும்படி கோருதல்
இ. தொழில் ரீதியில் பயஉணர்வை ஏற்படுத்தி பாலியல் நடத்தை தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்
ஈ. பகமை உணர்வை பாராட்டி பாலியல் நடத்தைக்கு இணங்கச்செய்தல்
உ. ஊழியர்கள் மத்தியில் ஒத்துழைப்பின்மையை ஏற்படுத்துவதன் முலம் பாலியல் நடத்தைக்கு இணங்கச் செய்தல்

ஆணைக்குழுவின் அறிக்கையில் மேற்கண்டவாறு பாலியல் தொல்லை சந்தர்ப்பங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் தெளிவான வரையறை செய்யப்படவில்லை.
பாலியல் பகிடிகள், பாலியல் குத்தல் பேச்சுக்கள், பாலியல் நொட்டை, பெண்ணியன் அழகை உள்நோக்கம் கொண்டு விமர்சித்தல் அல்லது அவமதித்தல், பாலியல் சைகைகள், தொடுதல், கிள்ளுதல், இடித்தல், தடவுதல், கவர்ச்சிப் படங்களை காண்பித்தல் அல்லது பார்வையில் படும்படியாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளும் பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகளுக்குள் அடங்கும்.

பாலியல் அடிமைகள் –

அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கலாக 190 நாடுகளில் காணப்படுகின்றன. ஆபிரிக்கா ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பபட்டுக் அல்லது கடத்தி வரப்படும் பெண்களும் சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள். புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும்.

இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது.

புவியியல் அடிமைகள் பிரச்சினை அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல்கள் சிக்கல்கள் எங்குமே காணப்புடுகின்றன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்படும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியாவிட்டாலும் அமெரிக்கா அரசின் புள்ளிவிபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைககளாக ஒவ்வொருவருடமும் கடத்திவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யமான முறையில் உத்தரவாதம் அறிக்கும் வகையில் குறிக்கப்பட்டுள்ளன சம்பந்தப்பட்டவர் சமர்ப்பிக்கும் தொடர்புகள மிகவும் இரகசியமாக ஆராயப்படும். இதன் பிரகாரம் அரசு தரப்பினருக்கு தீர்விற்கான தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக ஆறு மாத கால சகவாசம் வழங்கப்படும். பெண்கள் உரிமை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்கள் அம்மாற்று மனு சம்பந்தமான மரபொழுங்கில் கையொப்பமிடுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துலதோடு மேலும் அதனை வலுவுள்ள பெண்கள் உரிமைகளுக்கான மனித உரிமை சாசனமாக்க வேண்டிய நீதிமுறையாக நடவடிக்கை எடுப்பதற்கும் முயல வேண்டும்.

இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் ஆசிய ஆபிரிக்கா நாடுகளில் இருந்து பெண்கள் கடத்திச் செல்லப்படுவதற்கு பாதாள உலக கும்பல்களுக்கிடையில் இருக்கும் வலைப்பின்லை; காரணமாக அமைகின்றது.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

சிறுமிகளை கற்பழிப்பது எப்படி? – சொல்லித் தருகின்ற தமிழர்கள்

காலையில் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்த அம்மா “ச்சீ கருமம் புடிச்ச நாயிங்க!. இதுகளையெல்லாம் நடு ரோட்டுல வச்சு சுட்டுப் போட்டாதான் மத்த எருமைகளுக்கும் புத்தி வரும்” என வசை பாடினார். தியான வகுப்புகளுக்கு செல்ல ஆரமித்ததிலிருந்து அதட்டி பேசுவதைக் கூட நிறுத்தி விட்ட அம்மாவா, நாயி எருமை என்று சொல்வது என வியந்தாவறு செய்தித் தாளைப் புரட்டினேன். சிறுமிகளை கற்பழித்த ஐந்து பேர் கைது என்ற தலைப்பு பெரியதாக தெரிந்தது.

இலங்கையில் ஈழத்தமிழச்சிகளை கெடுத்துக் கொன்ற கொலை வெறிக் கும்பல் அல்ல,. தமிழர்கள் தான் இப்படிச் செய்வது என அறியும் போது என்ன செய்வதென்றே புரியவில்லை. காமுகர்கள் இலங்கையில் மட்டுமல்ல , நம்முடன் இணைந்தே இருக்கின்றார்கள்.

சிறுமிகளை கற்பழித்த ஐந்து பேர் கைது –

திருச்சி அரியமங்கலத்தை அடுத்துள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராணி(35). இவருடைய கணவன் இறந்துவிட்டார். ராணிக்கு கவிதா(12), கீதா(10) என இரண்டு மகள்கள். ஒரு மகன். வறுமையின் கோரப்பிடியினாள் ராணி கூலி வேலைக்கு செல்கிறார். குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்தியுள்ளார்.

இவர்களின் வீட்டருகே கொத்தனார் வேலை செய்யும் மன்சூர் அலி(18) என்பவர் அவ்வப்போது சிறுமிகளுக்கு சாக்லேட், இனிப்பு வாங்கி கொடுத்து சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, முத்தமிடுவது என செக்ஸ் விளையாட்டில் பல காலம் ஈடுபட்டு வந்துள்ளார். விவரம் அறியாத பிஞ்சுகளுக்கு எதுவுமே தெரியவில்லை.

தான் இவ்வாறு அனுபவிப்பதை நணபர்களிடம் பகிர்ந்து கொள்ள, அவர்களுக்கும் சிறுமிகளை அனுபவிக்கும் ஆசை உண்டானது. நடராஜன்(14), செல்வா(14) என்ற நண்பர்களுடன் சேர்ந்து சிறுமிகளிடம் சிற்றின்பங்களை அனுபவித்துள்ளனர்.

இரண்டு நாட்டகளுக்கு முன் ராதா பீட்டர்(42), குமார் (34) என்ற இருவரும் இவர்களைக் கவணித்துள்ளனர். சபலம் இவர்களிடமும் வேலை செய்ய அடுத்த நாள் மூவர் ஐவராக சிறுமிகளிடம் சிலிமிசங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விசயம் பொதுமக்களின் கவணத்திற்கு வந்து, இப்போது காவல்துறை வரை போய் நிற்கிறது. (நன்றி – ஜூன் 26, 2010 தினமலர்).

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி –

ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர்.

பார்க்க – தினமலர்

இது ஒன்றும் புதிதல்ல –

இது போல சம்பவங்கள் தினம் தினம் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. செல்வாக்கும், மனிதநேயமும் பலவற்றை மறைத்துவிடுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் திருச்சி காவேரி கல்லூரியில் இப்படியொரு சம்பம் நடந்ததாக நண்பன் கூறினான்.

ஒரு பெண் குழந்தை களைவதற்கு எடுத்துக் கொண்ட மருந்தினால் அறை குறையாய் குழந்தையைக் கொன்று, பின்டமாக கழிவரையில் பெற்றுள்ளாள். தோழிகளிடமிருந்தும், விடுதி காப்பாளர்களிடமிருந்தும் மறைக்க, ஒரு பையில் இட்டு வைத்துள்ளாள். வெளியே தூக்கியெறியக் கூடிய சந்தர்ப்பம் அமையாமல் போகவே, அந்த பிண்டம் பைக்குள்ளேயே கிடந்துள்ளது.

கல்லூரி முடிந்து விடுதியைவிட்டு வெளியேறும் போது பையை எடுத்தால், நாற்றம் மிக அதிகமாக வெளிவர, வாச்மேன் பையை திறந்து பார்த்து அதிர்ந்திருக்கின்றார். இது செவி வழிச் செய்தியென்பதால் நம்பகத்தன்மை இல்லாமல் இல்லை. நடந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களே மிக அதிகமாக தெரிகிறது.

யார் காரணம் –

இத்தகைய கலாச்சார சீரழிவுகளுக்கு பெரியதிரை, சிறியதிரை, அரசியல் தலைவர்கள், கணினி, கைப்பேசி என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவைகளை ஒன்றும் செய்ய இயலாது. செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளுக்கு தவறான தொடுதலை இனம் காட்டுவதும், சரியான பாலியல் கல்வியை சொல்லிக் கொடுப்பதுமே ஆகும்.

ஆண்களும் கற்பழிக்கப்படுகின்றார்கள் –
வருகின்ற செய்திகள் எல்லாம் பெண்களைப் பற்றியே இருக்கின்றன. ஆனால் ஆண்குழந்தைகளுக்கும் இதே நிலைதான் இருக்கின்றது. யோனியும், கற்பப் பையும் இல்லாததால் இவர்களுடைய வழக்குகளை சமூகம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. உதாரணம் பரவலாக எழும் பாதிரியார்களின் வழக்குகள். பெண்குழந்தைகளைப் போலவே ஆண்குழந்தைகளுக்கும் மனம் உண்டு, இந்தக் கேடு கெட்டவர்களால் அந்த மனதில் நஞ்சு கலந்துவிட்டால், வக்கிரம் பிடித்தவர்களாகவோ, மனம் பாதிக்கப்பட்டவர்களாகவோ ஆகிவிடும் அபாயம் உண்டு.

உங்கள் குழந்தைகளின் மீது கவணமாய் இருங்கள்!,. வருங்கால தமிழன் தமிழோடு இல்லாவிட்டாலும், கற்போடாவது இருக்கட்டும்.

மேலும் –

அம்பாறையில் மாணவி கர்ப்பழித்து படுகொலை;
நாகரீக கோமாளிகள்?
மாணவியை கற்பழித்த வாத்தியார்!
குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா
வேளாங்கண்ணி செக்ஸ் வீடியோ
நேற்று ஓமலூர்! இன்று கடலூர்

கார்டூன் –

தமிழிஸில் ஓட்டுப் போட இங்கு சொடுக்கவும்.

ஆண்குறி அளவு + கருத்தடை முறை

ஆண்குறி அளவு –

பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் இருக்கும் கவனம் போல சில ஆண்களுக்கு தங்கள் ஆண்குறி அளவின் மீது கவனம் இருப்பதுண்டு. இதனை பயன்படுத்தி பல மோசக்கார பண ஆசை பிடித்தவர்கள், மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் தொழில் நுட்பங்கள் என பயனில்லாத மருத்தவம் செய்து பண்த்தினை கொள்ளை அடிக்கின்றார்கள்.

குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்று நினைக்கும் சில ஆண்கள், உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்க வேண்டும். இது ஒரு சராசரி அளவு.

அளவிற்காக அறுவை சிகிச்சை –

குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மருத்தவர் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் இந்த அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது. நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல்.

ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை –

பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை சிறப்பு வாய்ந்தது. பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும்.

வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.

No Scalpel Vasectomy (NSV)

ஆண்களுக்கான புதிய கருத்தடை முறையில் மயக்க மருந்து கொடுப்பதில்லை. உடலின் உள் உறுப்புகளில் எதையும் அறுவை செய்யாமல், வெளிப்பக்கத்தில் மட்டும் ஓரிரு நிமிடங்களில் செய்துவிடலாம். இது அறுவையில்லாத ஆண் கருத்தடை முறை என்று அழைக்கப்படுகிறது. ஆணுறுப்பை மரத்துப் போகச் செய்ய ஊசி போடுவதால், இதைச் செய்யும்போது வலி ஏற்படாது.

விரைப்பையில் சிறுதுளையிட்டு, உயிரணுக்கள் செல்லும் குழாயை கட் செய்து, இருபக்கமும் மூடி(seal) விடுவார்கள். அறுவையே இல்லாததால் தையல் போட வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தழும்பும் இருக்காது.

மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடலாம். இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் சாதாரண வேலைகள் செய்யலாம். எந்த உணவுக்கட்டுப்பாடும் தேவையில்லை. பின்விளைவுகள் ஏதும் இருக்காது.

இல்லற வாழ்வு –

சிகிச்சைக்குப் பின் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது. உடலுறவின் உச்சகட்டத்தின் போது வெளியேறும் திரவத்தில், உயிரணுக்கள் ஒரு பங்கும் மற்ற திரவங்கள் ஒன்பது பங்கும் இருக்கும். இதில் உயிரணுக்கள் வருவதை மட்டும் இந்த சிகிச்சை முறை மூலம் தடை செய்வதால், மற்ற 9 பங்கு திரவம் வழக்கம் போல் வெளியேறும். இல்லற வாழ்க்கை முன்போலவே இருக்கும்.

கருத்தடைப் பற்றிய அதிக தகவலுக்கு –

திட்ட அலுவலர் குடும்ப நலப்பிரிவு எண் – 35,

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை – 10.

தொலைபேசி: 28364951 Extn: 319. கைப்பேசி: 98413 08266

நன்றி –

கீற்று இதழ்

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்

என்னுடைய இந்த சகோதரன் தளத்தில் எந்த குறிச்சொல் கொண்டு மக்கள் தேடிவருகின்றார்கள் என வேர்ட்பிரஸ் காட்டிடும். அதில் லியோனி பட்டிமன்றம், கவர்ச்சி, கலவி சந்தேகங்களும் தீர்வுகளும் என பல குறிச்சொற்கள் இருந்தன. மற்றவர்கள் தேடி வந்தது கிடைத்திருக்கும், ஆனால் கலவி சந்தேகம் போக்கும் கட்டுரையை நான் இதுவரை எழுதவில்லை. நண்பர்களுக்கு அவசியமானதை தரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. என்க்காக எத்தனையோ கட்டுரைகளை நண்பர்கள் படித்து சென்று கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்காக ஒரு கட்டுரை எழுத வேண்டுமென துணிந்ததே இக்கட்டுரை.

தவறான விளம்பரங்கள் –

லேகிய சித்தர்களும், மூலம் பவுத்திர விற்பனை மருத்துவர்களும் பெரும்பாலும் குறிவைப்பது ஆண்களை தான். இயல்பாக இருக்கும் ஆண்குறியின் தன்மைகளையே நோயாக உருவம் செய்து மிரட்டுகின்றார்கள். இந்த தவறான விளம்பரங்களை படித்து பல முறை நான் அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன். ஏனென்றால் நான் தேடல் மூலமே கலவி பற்றி அறிந்து கொண்டவன். எனக்கு தெரிந்த அளவுக்கே அவர்கள் கூறுவது எத்தனை பெரிய பொய் என தெரியும். படித்த மருத்துவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.

அறிவு –

மற்ற மதங்கள் எல்லாம் கலவியை இறைக்கு அப்பாற்பட்டே பார்க்கின்றன. இந்து மதம் மட்டும் தான் அதையும் இறையோடு சேர்த்தது. கடவுளுக்கு உருவம் கொடுத்து அவருக்கு திருமணமும் செய்து வைத்தது. பழைமையான கோயில் கோபுரங்களை நன்றாக உற்று நோக்குங்கள். அங்கே கலவி பாடமாக சிற்பங்கள் இருக்கும். ஆயிரமாயிரம் சிலைகளினுள்ளே அதை தேடுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் படியாய் செய்திருப்பார்கள் வல்லுனர்கள். வாஸ்தனையார் முதல் நாராயணரெட்டி வரை எல்லா அறிஞர்களும் அங்கே தான் வியந்துபோகின்றார்கள்.

மூடநம்பிக்கைகள் –

90% மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார் மாத்ரூ.

1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.

2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.

3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.

4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.

5. ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.

6. சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.

7. இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.

8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.

9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.

10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.

11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.

12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.

என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.

விளக்கங்கள் –

1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.

2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.

3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.

4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.

5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.

6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)

7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.

8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.

9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.

10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.

11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.

12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா.

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். வடிவேலுவின் பாணியில் ரூம் போட்டு யோசிக்கராங்களோ என்று கேட்டால். ஆமாம் தொலைக்காட்சிகளில் அப்படிதான் சொல்லுகிறார்கள். உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்திருக்கலாம், இல்லை அவசியமற்றதாய் இருந்திருக்கலாம். தேடி வரும் சிலருக்காக என்னால் முடிந்தது இதுதான்.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

 

பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…

 

காம வக்கிரம் – மருத்துவ பார்வை

எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என முடிவு செய்துவிட்டு காமத்தை மட்டும் விட்டால் பெரிய தவறாகிவிடும். சமூகத்தில் நடைபெரும் குற்றம் பெரும்பாலும் காமத்தினை சார்ந்ததாகவே இருக்கிறது. சிசு கொலையை எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கும் பாலின வேறுபாடுதான் முக்கிய காரணம்.

பேருந்தில் போகும் பெண்களை இடிப்பது, கடத்தி கற்பழித்து கொலை செய்வது, ஆசிட் ஊற்றுவது, விபச்சாரத்திற்கு விற்பது, கள்ளக் காதல் அப்பப்பா பெரிய பட்டியலே இருக்கிறது. இதெல்லாம் நேரடியாக சம்மந்தம் பட்டவை. மறைமுகமாக இருப்பது சிசு கொலை, வரதட்சனை போன்றவை. யாருக்கும் தெரியாது ஒன்று இருக்கிறது. தெரிந்தாலும் அதை நாம் கண்டு கொள்வதே இல்லை, அது ஆண்களுக்கு எதிரான வன்முறைகள்.

என்னடா ஏதோ புதுசா சொல்லறானு நினைக்கின்றீர்களா. ஒன்றும் புதுசில்லை, இல்லறவாழ்க்கையை நடத்த முடியாமல் மனைவிக்கு பயந்து துறவிகளாக மாறியவர்களையும், கொடுமை தாங்காமல் பைத்தியங்களாய் அலைபவர்களையும் கொஞ்சம் யோசனை செய்தால் உங்களுக்கு புரியும். இந்த ஆணுக்கு எதிரான பாலியல் வன்முறையும், குடும்ப வன்முறையும் ஏனோ மக்களுக்கு தெரியாமலே போய்விட்டது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் சிறுவயது கதாநாயகனை ஒரு இளம் பெண் தன் பெற்றோர்களிடம் மாட்டி விடுவாளே ஞாபகம் இருக்கின்றதா. ஆண்களுக்கு (ஆண் குழந்தைக்கு) எதிரான பாலியில் வன்முறை சுட்டி காட்டிவிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறையாகவே மாறிவிடுகின்ற படம் அது. இப்படி ஆண், பெண் மீது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கின்றது என்று சொல்ல கொஞ்சம் மனவருத்தமாகதான் இருக்கின்றது.

பாலியல் வக்கிரங்கள் –

இயல்புக்கு மீறியது, சட்டத்தினால் அங்கிகாரம் செய்யப்படாதது, பிறர் விருப்பமின்றி செயல்படுவது, பிறருக்கு துன்பம் விளைவிப்பது போன்ற அடிப்படைகளினால் பாலியல் செயல்கள் வக்கிரங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளை அனுமதியுடன் செய்தால் தவறில்லை எனவும் அவர்களின் அனுமதியை பெறாமல் செய்தால் வக்கிரங்கள் எனவும் சொல்லப்படுகின்றன.

இவைகளை படித்துவிட்டு நமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என நீங்கள் சென்றுவிடுவீர்கள் என்ற பயத்தினால் சில இடங்களில் படங்களின் பெயரை பயண்படுத்தியுள்ளேன். என்னுடைய தலைவன் படத்தை எப்படி இதில் குறிப்பிடலாம் என கோபம் கொள்ளாமல் கொஞ்சம் அமையாக இருங்கள்.

வகைகள் –

வஸ்து உறவாடல் –

ஆடை போன்ற பொருட்களை பயண்படுத்தி காமசுகம் காணுதல். 7ஜி படத்தில் நடிகர் ரவிகிருஷ்ணா நடிகை சோனியா அகர்வாலின் உடையை திருடி வைத்திருப்பாரே அதுபோலதான். பெரும்பாலான படங்களில் நாயகனின் நினைவாகவோ, நாயகியின் நினைவாகவோ அவர்கள் பயண்படுத்திய பொருட்களை வைத்துக் கொண்டு அலையும் செயலின் இறுதிவடிவம் இது.

எதிர்பாலின உடையணிதல் –

காமஇச்சை ஏற்பட எதிர்பாலின உடையை அணிதல். இதில் வேலைக்கு போகும் பெண்களை விட்டுவிடுங்கள். அவர்களை இதற்குள் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். காமஇச்சைக்காக அணிவது மட்டுமே வக்கிரத்தில் சேரும்.

உரசல் –

மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் காம இச்சைக்காக உடலினை உரசுதல். ஏதோ ஆண் மட்டுமே செய்வதாக நினைத்துவிடாதீர்கள் பட்டியலில் பெண்களும் உண்டு.

குழந்தைகளோடு உடலுறவு கொள்ளுதல் –

பருவம் அடையாத குழந்தைகளுடன் உறவு கொள்ளல். மூன்று வயது சிறுமி, ஐந்து வயது சிறுவன் என்றில்லை, பச்சை குழந்தைகளும் இதில் அடக்கம். சமீப காலமாக தமிழகத்திலும் இது அதிகரித்துவருகிறது. சந்தேகம் உள்ளவர்கள் கடந்த ஒரு வார செய்திதாள்களை திருப்பி பாருங்கள். தடுக்க குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். காம கொடூர்ர்களிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

உறுப்பை பகிரங்கமாக காட்டுதல் –

இந்த செயல் மனமுதிர்ச்சி அடையாத ஆணிடம் காணப்படுகின்றது. வெளிநாடுகளில் இதற்காக தண்டனை பெற்றவர்கள் அதிகம்.

எட்டிப்பார்த்தல் –

பிறர் உடைமாற்றுவதையோ, உறவு கொள்வதையோ அவர்களின் சம்மதமின்றி எட்டிப் பார்த்தல். தமிழ் மசாலா திரைப்படங்களில் கதாநாயகன் சம்மதம் வாங்கி செய்யும் செயல். வில்லன் என்றால் சம்மதம் வாங்காமல் செய்வார்.

துன்பப்பட விரும்புதல் அல்லது துன்புருத்த விரும்புதல் –

பிறரை துன்புருத்தியோ, பிறரால் துன்பப் பட்டோ காம திருப்தி அடையும் வகை. மிகவும் கொடூரமான வகையில் இதுவும் ஒன்று.

சவத்துடன் உறவு கொள்ளுதல் –

இறந்தவர்களின் உடலோடு உறவு கொள்ளல். வள்ளுவப் பெருமானே ஒரு குரலில் இதைப் பற்றி குறிப்பிடுகின்றார். இதில் உயிரோடு இருப்பவர்களை பிணமாக்கி உறவு கொள்ளும் முறையும் உண்டு. கஜினி திரைப்படத்தின் இறுதிகட்டத்தில் வில்லன் ஒரு பெண்ணை கொன்றுவிட்டு நிர்வாணப்படுத்துவான். அந்த செயல் தான் இது.

விலங்கோடு உறவு கொள்ளுதல் –

இந்த முறை பண்டைய கிரேகத்தில் இருந்துள்ளது. இப்போதும் ஆங்காங்கே நடப்பதாக டாக்டர் ஷாலினி அவர்கள் ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.இப்போதும் இதற்கென பிரத்தியோக வலைதளங்கள் காணப்படுகின்றன.

ஒரே பாலின சேர்க்கை –

ஓரினச்சேர்க்கை என்ற பரவலாக அறியப்படுகின்ற ஒன்று. ஆண் மீது ஆணோ, பெண் மீது பெண்ணோ மோகம் கொள்ளும் வினோதம்.

இவைகளை நான் ஒன்றும் கண்டுபிடித்து உங்களுக்கு சொல்லவில்லை. மறைந்த மாபெரும் மனநல மருத்துவர் மாத்ருபூதம் அவர்கள் புதிரா புனிதமா நூலில் சில பாலியல் வக்கிரங்களை குறிப்பிட்டுள்ளார். டாக்டர் நாராயணரெட்டி அவர்களின் உயிர் புத்தகத்தில் இதற்கான முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. செக்ஸிக்காகவே தனியாக மருத்துவப்பிரிவும் மருத்துவர்களும் இருக்கின்றார்கள். மதங்களுக்கு அடுத்தபடியாக மூடநம்பிக்கை உலாவும் பகுதி பாலியலாகதான் இருக்கும். எல்லா துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொண்டாலும் வாழ்க்கையின் சில அடிப்படை அறிவு காமத்தை சார்ந்துதான் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டால் நலமே.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு