தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்

என்னுடைய குலதெய்வம் மாசி பெரியண்ணின் கோவிலுக்கு சென்றிருந்த போதுதான், பல சுவாமிகளின் பெயர்கள் தெரியவந்தன. அவற்றின் கதைகள் அங்கிருக்கும் பூசாரிகளுக்குக் கூட தெரியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் கதையையே பல மாதங்கள் அழைந்து திரிந்து பலரிடமும் கேட்டேன். என்னுடைய அப்பாவுக்கு கொஞ்சம் செய்தி மட்டுமே தெரிந்திருந்தது. ஓமாந்தூர் பெரிய பூசாரியிடம் கேட்டப்போதுதான் உண்மையான கதையை முழுமையாக அறிய நேர்ந்தது.

என்னைப் போல பலரும் தங்களின் குலதெய்வங்களின் கதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். என்னுடைய நண்பர்களின் குலதெய்வங்களின் கதைகளை அறிய முற்பட்டபோது எனக்கு ஏராளமான ஆச்சிரியங்கள் நிகழ்ந்ததன. பெரும்பாலான கதைகளில் சிவனும், விஷ்னுவும் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு பார்க்கும் போது, உண்மையில் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதை கிடைத்தது. ரசவாதம், காயகல்பம் என சித்தர்களை தேடினால் எத்தனை சுவாரசியங்கள் கிடைக்குமோ, அந்தளவிற்கு எனக்கு இப்போது கிடைக்கின்றது.

இதுவரை நான் கேள்விப்படாத பல தெய்வங்களின் பெயர்களும், கதைகளும் கிடைத்திருக்கின்றன. குறைந்தது ஆயிரம் சுவாமிகளின் பெயர்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன். நான் சேகரித்த பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி இங்கு தொகுத்திருக்கிறேன்.

ஆண் தெய்வங்கள் –

தடிவீர சுவாமி

பெரியசாமி, பெரியண்ணாசுவாமி, மாசி பெரியண்ண சுவாமி, கொடை ஆல், மலையாளி, மலையாள கருப்பு, கருப்பண்ண சாமி, கொல்லிமலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, இரட்டைமலை கருப்பு, ஒன்டி கருப்பு, பனையடி கருப்பு, சங்கிலி கருப்பு, முத்து கருப்பண்ண சாமி, வேம்பழ முத்து கருப்பண்ண சுவாமி, கறுப்பண்ணா, கறுப்பு கூத்தாண்டவர், கீழேரி கருப்பு, உதிர கருப்பு, சமயக்கருப்பசாமி, கருப்பு, தலைவாயில் கருப்பசாமி,கழுவடியான், இருளப்பச்சாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன், உத்தண்டசாமி, பெரியாண்டவர், பசவன்னா, பதலமா, புத்தாகாசிப், எல்லைக்கறுப்பு, ஐயனார், மாதேஸ்வரா, ஊர் அத்தியன், மகாலிங்கா, ராஜவாயன், எதுமலை மதுரை வீரன், காத்தவராய சுவாமி, மந்திர மாகாமுனி, லாடசன்னாசி, அகோதரவீரபுத்திர சுவாமி, ஆலாத்தி வெள்ளையம்மாள், அனந்தாயி, ஆந்திரமுடையார், உச்சிமாகாளி, கட்டிலவதானம், சிதம்பர நாடார், தடிவீரசாமி, பிச்சைக்காலன், முத்துப்பட்டன் , வன்னியடி மறவன், வன்னியன், வன்னிராசன், வெங்கலராசன், பாவாடைராயன், பருதேசியப்பர், பொன்னர், சங்கர், ஒன்பது அண்ணன்மார்கள், விருமாண்டி, செங்கல்வராயன், வாழ்முனி, செம்முனி, செங்கா முனியப்பன், சங்கிலிபூதத்தார், நல்லமாடன், முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி, கருப்பராயர், காவல்ராயன், கருப்பராயர், மண்டுகருப்பு, சாத்தன்-சாத்தாயி, வெண்டுமாலைகருப்பு, மாலைக்கருப்பு, தொட்டியக்கருப்பு,தூண்டிவீரன், வாகையடியான், உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி, இருளப்பர், இருளாயி, கனரயடி காத்த அய்யனார், அனடக்கலம் காத்த அய்யனார், நீர் காத்த அய்யனார், அருஞ்சுனன காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், கருங்குளத்து அய்யனார், குருந்துனடய அய்யனார், இளம்பானள அய்யனார், கற்குவேல் அய்யனார், கொண்னறயான்டி அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், திருவேட்டழகிய அய்யனார், சமணர்மனல அய்யனார், கூடமுனடய அய்யனார், சினற மீட்டிய அய்யனார், மக்கமனட அய்யனார், செகுட்ட அய்யனார், வெட்டுனடய அய்யனார்,மருது அய்யனார், வேம்பூலி அய்யனார், நினறகுளத்து அய்யனார், ஆதிபுதிரங்கொண்ட அய்யனார், சித்தகூர் அய்யனார், பிரண்டி அய்யனார், வீரமுத்து அய்யனார், பாலடி அய்யனார், தந்தனல வெட்டி அய்யனார், கருமனல காத்த அய்யனார், அல்லல் தீர்த்த அய்யனார், ஹரி இந்திர அய்யனார், கானட பிள்னள அய்யனார், செல்லப் பிள்னள அய்யனார், வீர பயங்கரம் அய்யனார், மாணிக்கக் கூத்த அய்யனார்,

பெண் தெய்வங்கள் –

வெள்ளையம்மாள்

எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, முத்துநாச்சியார், அரியநாச்சியார், காளியம்மன், துர்க்கையம்மன், தோட்டுக்காரி அம்மன், செல்லியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன், வடக்கு வாய்ச்சொல்லி, அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், சந்தனமாரியம்மன், உமையம்மன், ராசாயி, பெத்தனாட்சி, சோலையம்மன், காமாட்சியம்மன், மரகதவல்லி, செண்பகவல்லியம்மன், சந்திரமாகாளி, அட்டங்கம்மா, அம்மாரி, அங்கம்மா, அன்னம்மா, அரிக்கம்மா, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, செமலம்மா, தாலம்மா, தோட்டம்மா, திரௌபதி, துர்க்கா, கங்கம்மா, கூனல்மாரி, கிரிதேவி, கன்னியம்மா, கன்னிகை, கீர்மாரி, மலைமாயி, மாரம்மா, முத்தாலம்மா, பிடாரி, பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன், பச்சை வாழையம்மன், சப்த கன்னிகள், நவ கன்னிகள், முக் கன்னிகள், இசக்கி, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, காத்தாயி அம்மன், குழந்தையம்மன், ராக்காச்சி , தீப்பாச்சியம்மன், இடைச்சியம்மன்,கிச்சம்மா, தொட்டிச்சிஅம்மன், ஆலாலகங்கா, வல்லடிக்காரர்

சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் ஒன்பது அண்ணன்மார்கள், மூன்று கன்னிகள் என பல்வேறு எண்ணிக்கையில் கூட தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் கதையும் கிடைக்கவில்லை.

உதவுங்கள் –

விடுபட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் பெயர்களை சொல்லுங்கள் சேர்த்துக் கொள்கிறேன். இவர்களில் யாரின் கதை தெரிந்திருந்தாலும் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். இல்லை ஏதேனும் வலைப்பூவில் இருந்தால் லிங்க் கொடுங்கள், படித்து தெரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

ஒரு லட்சம் ஹிட்சைத் தொடர்ந்து ஒரு ஆனந்த தாண்டவம்

ஒரு லட்சம் ஹிட்ஸைக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல!.

சிவ தாண்டவங்கள் –

சிவ தாண்டவங்களை எண்ணிக்கையில் அடக்க இயலாது.

ஆனந்த தாண்டவம் –

சிவன் நடனமாடும் தளங்களில் முதன்மையானது தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம். இந்த தளத்தி்ல் சிவன் பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோர்களுக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது.

அனைத்து நடத்திற்கும் உள்ள ஏக தத்துவத்தை விளக்கும் வடிவமாக நடராஜர் நடனம் விளங்குகிறது. மிகையில்லாத உண்மையை வெளிப்படுத்தும் இந்த நடத்தை, பரத கலையின் சின்னமாக மக்கள் போற்றுகின்றனர். இது ஆனந்த தாண்டவம் எனவும் வழங்கப்படுகிறது.

இந்த ஆனந்த தாண்டவத்தை குற்றாலத்திலும், சிதம்பரத்திலும் காணலாம்.

காளிகா தாண்டவம்

பிரம்மாவுக்கு படைத்தல், விஷ்னுவுக்கு காத்தல், சிவனுக்கு அழித்தல் என பொதுவாக சொன்னாலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களை ஈசன் செய்கிறார். இதைக் குறித்து ஆடும் நடனம் காளிகா தாண்டவம் எனப்படுகிறது.

இந்தக் காளிகா தாண்டவத்தை திருநெல்வேலியில் காணலாம்.

சந்தியா தாண்டவம்

பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்வம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள்.

மற்ற தாண்டவங்களைப் போல இடதுகாலை தூக்கி ஆடாமல் சிவன், வலது காலை தூக்கி ஆடுவது மேலும் சிறப்பு.

இந்த சந்தியா தாண்டவத்தை மதுரையில் காணலாம்.

ஊர்த்துவ தாண்டவம்

சிவனுக்கும், சக்திக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு காலை தலைக்கு மேல் தூக்கி நடமாடினார் சிவன். அதைப் போல சக்தியால் நடனமாட இயலவில்லை. இந்த தாண்டவத்தை ஊர்த்துவ தாண்டவம் என்கின்றனர்.

இந்த ஊர்த்துவ தாண்டவத்தை திருவாலங்காட்டில் காணலாம்.

கஜ சம்ஹாத் தாண்டவம்

தருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார்.

இந்த கஜ சம்ஹாத் தாண்டவத்தை நன்னிலம் அருகேயுள்ள திருச்செங்காட்டாக்குடியில் காணலாம்.

உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சின்னத்தில் சிவன்

செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக தமிழுக்கு நடத்தப்படும் மாநாடு என்பதால் அதிக எதிர்ப் பார்ப்பு.

மாநாட்டு சின்னம் –

முதல்வர் கலைஞர் பார்த்து பார்த்து மாநாட்டிற்கான வேலைகளை செய்கிறார். வரலாற்றில் தனக்கென இடம் கிடைக்கும் என அவருக்கு தெரியும். அதிலும் மிகுந்த கவணம் எடுத்து அமைக்கப்பட்ட மாநாட்டு சின்னத்தை அவரே வெளியிட்டார்.

திருவள்ளுவர் –

பொய்யாமொழிப் புலவன், சைவ நெறியை அழகான குறளாக மாற்றி உலகமெங்கும் செல்ல வழிவகுத்தவன். எனவே தமிழின் பெருமையை உலகுணரும் வகையில் புலவனினை சிறப்பிக்க சின்னத்தின் நடுவே இடம் கொடுத்திருக்கின்றார்கள்.

திருவள்ளுவர் சிலையின் பெருமை –

இச்சிலை பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது.

அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் என்ற சைவ நெறியை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரீகம் –

மிகத் தொன்மையான நாகரீகமான சிந்து சமவெளி நாகரித்தினை முதல் நாகரீகமாக அறிஞர்கள் கருதிகின்றார்கள். சிந்து நதியின் கரையில் ஆரமித்த இந்த நாகரீகம், மிகப் பெருமளவு பரவியிருந்தது. காவேரி கரையின் சில இடங்களில் கூட இந்த நாகரீக சின்னங்கள் கிடைத்திருப்பதாக விக்கிப் பீடியா சொல்லுகிறது. தமிழ்ச் சமூகத்தின் மக்களே சிந்து நாகரீகத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என கருதுகின்றார்கள். இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

பசுபதி –

தியான நெறிகளில் சிறந்து விளங்கிய தமிழ் மக்கள் பசுபதி என்ற தியானத்தில் இருக்கும் கடவுளையே வழிப்பட்டு வந்துள்ளனர்.

பசுபதி கடவுளே பிற்காலத்தில் சிவனாக கருதப்பட்டார் என்பதற்கு சான்றுகள் உள்ளன.எனவே தியானத்திற்கும் யோகத்திற்கும் அதிக முக்கியத்துவம் தந்த சைவ சமயம் தான் தமிழர்களால் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரிய வரும்.

செம்மொழிச் சின்னத்தில் சிவன்

சிந்து சமவெளிச் சின்னங்களுடன் இருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டு சின்னத்தில் முதன் முதலாக இருப்பதே பசுபதி என்ற சிவன் தான்.

ஒரே நேரத்தில் சிவனும், சிவனடியாரான திருவள்ளுவரும் தமிழ்ச் சின்னத்தில் இருப்பதை வைத்தே சைவத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது என்பதை உணரலாம்.

சம்போ சிவ சம்போ!

இந்த இடுகைக்கு தமிழிஸில் ஓட்டுப் போட்டு அதிக மக்களை சென்றடைய உதவுங்கள்!.

நக்கீரன் சிவன் – யார் சொன்னது சரி

ஆண்டாடு காலமாக ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்து வருகிறது. அந்தக் கேள்வி.

“இந்த காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வைச்சிருக்காங்க” கரகாட்டகாரன் படத்தில் செந்தில் இந்தக் கேட்டு கவுண்டரிடம் வாங்கி அடிகள் ஏராளம் ஆனால் பதில் கிடைக்கவில்லையென ஒரு குறுஞ்செய்தி இப்போது சுற்றிக் கொண்டு வருகிறது.

இதே போல எனக்கும் ஒரு கேள்விக்கு பதில் நெடுங்காலம் தெரியாமல் இருந்தது. அது “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?”.

திருவிளையாடல் படத்தில் நக்கீரருக்கும் சிவனுக்கும் இடைய நடக்கும் வாதங்கள் கூட ஞாபகம் இருக்கின்றது. ஆனால் முடிவை சரியாக சொல்லாது, தருமி போல தனியாக புலம்ப வைத்துவிட்டார்கள் நம்மை. இருந்தாலும் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் வலைதளத்தில் (gunathamizh.blogspot.com) முடிவை அறிந்து கொண்டேன்.

பாடல் 1 –

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.“

பொருள் –

தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல இப்பாடலை அமைந்திருக்கின்றது.

பாடல் 2 –

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

பொருள் –

இயற்கைப் புணர்ச்சிக்குப் (தலைவியைத் தலைவன் இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்) பின்னர் தலைவியைச் சந்திக்கும் தலைவன் அவளின் நாணத்தை நீக்குதல் பொருட்டு, மெய்தொட்டுப் பயின்று (தலைவியின் உடல் தொட்டு உரையாடல்) நலம் பாராட்டுதல் ( தலைவியின் அழகு நலத்தைப் பாடுதல்)

தலைவி நாணத்தோடு இருப்பதை உணர்ந்த தலைவன் அவளின் நாணத்தை நீக்க தும்பியைப் பார்த்துப் பேசுகிறான்.பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்க்கை வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே!

எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?

அறிவியல் அடிப்படையில் –

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.

அப்பாடி சந்தேகம் தீர்ந்தது. உங்களுக்கு இது முன்பே தெரியும் என்றாலும் அவருடைய வலைதளத்தை பார்வையிடுங்கள், ஏகப்பட்ட அமுதுகள் இருக்கின்றன.

கோயில்களில் தலைவிரித்தாடும் குற்றங்கள்

கொடுமை கொடுமையின்னு கோவிலுக்கு போனா, அங்கே ஒரு கொடுமை அவுத்து போட்டு ஆடுச்சாம் என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இப்போது அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. திருவிழா நாட்களில் பெரிய கோவிலுக்கு சென்றால் நீண்ட நெடு வரிசையில் ஏழை மக்கள் நின்று கொண்டிருக்க, அரசு அதிகாரிகளும், பெரிய பணக்கார்ர்களும் கருவரைக்கு அருகே சென்று கடவுளை பார்த்து வருகின்றார்கள். காத்து கிடக்கும் மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருபதடிக்கு முன்பே இரும்பினால் ஆன தட்டி. எப்படி மக்களுக்கு பக்தி வருமென தெரியவிவல்லை.

செருப்பையும், பொருளை பாதுகாக்கவும் பணம் வாங்கிக் கொள்கிறார்கள். அதன் அவசியத்தை உணர்ந்து நாம் தருகிறோம். பின்பு கோவிலுக்கு உள்நுழைய சீட்டு, அர்ச்சனை செய்ய சீட்டு, தேங்காய் பழம் உடைக்க சீட்டு, புகைப்படம் எடுக்க சீட்டு, வீடியோ எடுக்க சீட்டு என அடுக்கிக் கொண்டே போகின்றார்கள். கார்களில் வரும் பணக்கார்ர்களுக்கு மட்டும் என்றால் பரவாயில்லை. கால்நடையாக வரும் ஏழைகளுக்கும் இதே சீட்டு முறை. இதற்கு பணம், அதற்கு பணம் என பணம் பிடுங்கும் குரங்குகளினால் ஏழை மக்கள் பிய்த்து எறியப்படுகின்றார்கள்.

இத்தனைக்கும் கோயில்கள் நஸ்டத்தில் இல்லை. அவர்களுக்கென தனியான கோவில் சொத்துகளும், நிலங்களும் இருக்கின்றன. எல்லா பெரிய கோவில்களுக்கும் தினம் தினம் பல கோடி வருமானம் வருகின்றது. அதையெல்லாம் பங்கிட்டு கொள்ளும் கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு வசதி செய்வதாக சொல்லி இன்னும் இரண்டு மூன்று இரும்பு வேலி வரிசைகளை கோவிலுக்குள் அமைக்கின்றார்கள். நடமாடும் உண்டியல்கள் செய்கின்றார்கள். கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே இடைவெளியை உண்டு செய்ய இவர்கள் யார்.

நாமக்கல் ஆஞ்சினேயர் முன்பு மிக தொலைவிலிருந்து பார்த்தாலே தெரிவார். இப்போது அவரை சுற்றி சுவர் எழுப்பி விட்டார்கள். அருகிலியே இரும்பு கம்பிகளை அமைத்துவிட்டார்கள். வசுல் வேட்டை ஆரமித்துவிட்டார்கள். பிசாதம் என்றால் பிறருடைய சாதம், கோவிலுக்கு வரும் பக்தர்களை கொடுக்கும் பொருட்களில் அதை செய்து அவர்களிடமே அதை விற்கின்றார்கள். அவர்கள் பணக்காரர்களுக்கு தான் கடவுள் என்று நினைத்துவிட்டார்கள். மனதில் ஏதாவது குறையிருந்தால் கடவுளிடம் போய் முறையிட செல்பவர்களென்றால் கூட பரவாயில்லை. வருமானத்திற்கு வழி செய்து கொடு என வேண்டிக் கொள்ள செல்பவரிடம் இருப்பதையும் பிடுங்கிக் கொண்டால் அவர்கள் என்ன தான் செய்வார்கள்.

முன்பாவது ஜாதியை வைத்துதான் பாகுபடுத்தி வந்தார்கள். இப்போது பணத்தினை வைத்து செய்ய ஆரமித்துவிட்டார்கள். விசேச நாட்களில் கோவிலுக்கு செல்வதென்றாலே மனதிற்குள் கசக்க தொடங்கி விடுகிறது. நீண்ட வரிசையில் நெடு நேரம் நின்றாலும் கடவுளை தரிசிக்க சில நொடிகள் தான். அதுவும் இலவச வரிசை, கடைசி தரிசன சீட்டு என போய்விட்டால் பத்தடி இருபதடிக்கு முன்பே ஒரு மேடையில் ஏறி கடவுளை எட்ட நின்று பார்த்துவிட்டு சென்றுவிட வேண்டும். எத்துனை அநியாம் இது. காசிற்காக ஆசைப்பட்டும் சிலர் செய்யும் வேலையால் இந்து மதம் அழிந்து கொண்டே இருக்கின்றது. இந்த கொடுமையை ஒழித்தால் மட்டுமே இந்து மதம் ஒளிரும்.

நம் மதம் வளரவோ, இல்லை அழியாமல் காக்கவோ நாம் செய்ய வேண்டியது.

1. பணத்தினை மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்கும் மனிதர்களை கோவில் பொறுப்புகளிலிருந்து முழுவதுமாக நீக்க வேண்டும்.
2. கோயில்களில் எல்லோரையும் கருவறை வரை அனுமதி செய்யவேண்டும். அதற்கு தற்போதுள்ள கோயில் கட்டமைப்பு வழி வகை செய்யாது. சென்னையில் இருக்கும் பாபா கோயில், திருச்சியில் இருக்கும் ஐயப்ப சாமி கோயில் போல கட்டமைப்பு வேண்டும்.
3. குளங்களை மக்களின் பயண்பாட்டிற்கு கொடுக்க வேண்டும். அது அமைக்கப்பட அடிப்படை காரணமே அதுதான்.
4. அறநிலையதுறையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழை மக்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் தந்து உதவு வேண்டும்.
5. சேரி மக்களும், மலைவாழ் மக்களும் பொருளாதாரதாரத்தில் உயர வழி வகை செய்ய வேண்டும்.
6. இறைவிக்கு வரும் பட்டுப்புடவையை ஏலத்தில்விடும் பணத்தில் ஏழைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க வேண்டும்.
7. எல்லா கோவில்களிலும் அண்ணதானம் செய்ய வேண்டும்.
8. ஆன்மீகம் பணக்காரர்களுக்கு மட்டும் தான் என்று ஆன்மீக புத்தகங்களின் விலைகளும் சொல்லுகின்றன. அவற்றை ஏழை மக்கள் படிப்பதற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்ய வேண்டும். முடிந்தால் இலவசமாக கொடுக்க வேண்டும்.
9. இந்து ஏழைகளை வளமாக்குவது எப்படி என சிந்தியுங்கள். அவர்களிடம் எப்படியெல்லாம் சுரண்ட வேண்டுமென சிந்தனை செய்யும் மனிதர்களை அடித்துவிரட்டுங்கள்.
10. விழாகளை சிறப்பாக நடத்துவதோடு நம் பண்பாட்டு கலையையும் வளர்க்க வேண்டும்.

மக்களை விரோதித்துக் கொண்டு மதநெறியை பரப்பி லாபமில்லை. அவர்கள் நல்வாழ்விற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்து மதத்தினை அவர்களுக்கு எதிராக மாற்றுவது மிகவும் கொடுமையானது. அடிப்படைகளை மத நெறியை அறிய சொல்லுவோம், அதை மாற்றுபவர்களுக்கு புத்தி புகட்டுவோம்.

சிவ சிவ

“அன்பே சிவம்”

உலகில் இருக்கும் அத்தனையும் அடங்கிவிடும் வார்த்தை இது. ஆன்மீக ஞானியோ, அறிவியல் ஞானியோ இதை ஏற்றுக் கொள்ள மறுப்பதில்லை. மதங்கள் தேவையில்லை என்றால் என்றோ அவை அழிந்திருக்கும். மக்களுக்கு மதங்களின் தேவை இருப்பதனால்தான் இன்னும் அவை நிலைத்திருக்கின்றன.

மதங்களை அழிக்க நீங்கள் முயன்றால் மதமில்லாத ஓர் மதம் என மதங்களின் பட்டியலில் புதியதாக ஒரு மதம்தான் சேரும். பின்பு அதற்கென ஒரு கோட்பாடு, அதற்கென ஒரு நெறிமுறை என வளர்ந்து, இறுதியில் மற்ற சராசரி மதங்களில் ஒன்றாக மாறிவிடும். நாத்திகவாதிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் தி.க காரர்களும், அவர்களின் வழிதோன்றல்களும் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது மதங்களை மறைத்தா சேர்க்கின்றார்கள். ஜாதியின் பெயரையும் அழுத்தமாக சொல்லி சேர்க்கின்றார்கள். காரணம் சலுகை.

மதங்களைப் பற்றிய என்னுடைய புரிதல், சற்குருவின் சிந்தனைகளோடு ஒத்துப் போகிறது. அனைத்திற்கும் ஆசைப்படு நூலில் சற்குரு,…

இத்தனை மதங்கள் இருப்பதால்தானே மனிதர்களுக்குள் போராட்டங்கள் பேசாமல், எல்லா மதங்களையும் தடை செய்துவிட்டால் என்ன?

மதம் சொல்லிக் கொடுப்பதும், மதத் தலைவர் சொல்லிக் கொடுப்பதும் நேர் எதிர் துருவங்களாக இருப்பதுதான் அடிப்படைக் கோளாறு.

ஏதாவது ஒன்றை தடை செய்ய முயன்றால், அது தலைமறைவாக செயல்பட்டு, இன்னும் தீவிரமாகிறது. அதிக பலத்துடன், அதிக வன்முறையுடன் வெளிபடுகிறது என்பதைத்தான் உலக வரலாறு சொல்கிறது.

அதனால் மதத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பிரத்யோகமானதொரு மதம் இருந்தால் கூடத் தப்பில்லை.

தன் புத்திசாலித்தனத்தை முழுமையாக பயண்படுத்தி, மதத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டால், அவன் தன்னை உணரத் தலைப் படுவான். அடுத்தவருடன் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கமாட்டான்.