பூச்சியம்மன் பட்டபிரான் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

கதையின் நாயகனான பட்டபிரான் திருநெல்வேலி வல்லநாட்டினை சார்ந்த மறவன். தனது தொழிலுக்காக மேற்கே இருக்கும் ஊரான பாவூர் கிராமத்திற்கு செல்கிறான். அங்கு பொல்லாம் பூச்சி என்றொரு அருந்ததியினப் பெண்ணை காண்கிறான். இருவரும் காதல் கொள்கின்றார்கள்.

ஓர்நாளில் பொல்லாம் பூச்சியும், பட்டபிரானும் காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டினை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அவர்களுடன் பூச்சி என்ற நாயும் வருகிறது. உழக்குடி என்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் தங்குகிறார்கள். தங்களுடைய பசியினைப் போக்கிக் கொள்ள கிராமத்திலிருக்கும் ஆட்டினை திருடி சமைத்து உண்கிறார்கள்.

பூச்சியம்மன் பட்டபிரான் கதை

பூச்சியம்மன் பட்டபிரான் கதை

எட்டு நாட்களுக்கு ஒருமுறை ஆடு களவு போவதை கிராமத்துக்காரர்கள் கண்டுகொள்கிறார்கள். அப்போது பொல்லாம் பூச்சியை தேடிவரும் ஏழு அண்ணன்மார்கள் அக்கிராம்த்திற்கு வருகிறார்கள். அவர்களின் விசாரனையில் ஆடு களவு போவதும், காட்டுனுள்ளே நண்பகலில் வெண்புகை வருவது பற்றி அறிந்து கொள்கிறார்கள்.

பாறையொன்றில் ஏறி புகை வரும் நேரம் வரை காத்திருக்கிறார்கள். புகை வருவதைக் கண்டபின் அதனை நோக்கி செல்கிறார்கள். அங்கு பொல்லாம் பூச்சியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் பட்டபிரானை கண்டு கோபம் கொண்டு தங்களுடைய ஈட்டியால் குத்தி கொல்கிறார்கள். அப்போது சத்தமிடும் நாயையும் கொன்றுவிடுகின்றனர்.

அண்ணன்மார்கள் தங்களுடன் பொல்லாம் பூச்சியை வந்துவிடும்படி கூறுகின்றனர். அவள் தன்னுடைய கணவனும், செல்லப்பிராணியும் கொலையுண்டது கண்டு மனம்நொந்து அண்ணமார்களுடன் செல்ல மறுக்கிறார்கள். அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் இறுதி சகோதரன் தடுத்தும் கேளாமல் மற்றோர் பொல்லாம் பூச்சியையும் கொன்றுவிடுகின்றனர்.

வந்த பிணி முடிந்து பாவூர் திரும்பும் அண்ணன்மார்களில் முதல் ஆறு நபர்களும் வழியிலேயே இறந்துவிடுகின்றனர். அதற்கு தன் தங்கையான பொல்லாம்பூச்சியே காரணம் என நினைத்து இளைய அண்ணன் கோயில் எழுப்பி வழிபடுகிறார்.

பூச்சியம்மன் பட்டபிரான் கதையை அறிந்த பொழுது வழமையான காதல் கதையில் நிகழ்வது தான் இதுவென அலட்சியம் செய்ய முடியவில்லை. மறவருடன் ஓடிப்போன பெண்ணான பொல்லாம்பூச்சியையும் கொன்றிருப்பதை காணுகையில் அருந்ததி இனத்தில் இருந்த கட்டுப்பாடுகளும், மறவர் இனத்தில் திருமணம் செய்து கொண்டாலும் ஏற்கா உறவுகளையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. காலம் அருந்ததி இனத்தினையும், மறவர் இனத்தினையும் மாறுபட்ட இடத்தில் வைத்துள்ளதா என வரலாற்று ஆய்வாளர்கள் தான் நோக்க வேண்டும்.

திண்ணைத் தீர்ப்பு- [சிறுகதை]

திண்ணைத் தீர்ப்பு

திண்ணைத் தீர்ப்பு – சிறுகதை

“இந்தா,.. ஊர்பிரட்சனையெல்லாம் தன்பிரட்சனையா நினைக்கிற பெரியமனுசன் ஊஞ்சலாட்டிக்கிட்டு இருக்காரு, அவருக்கிட்ட போய் சொல்லுடி. அடுப்படிக்கு வந்து தொனதொனன்னு உசிரு எடுக்காத”. கமலம்மாவின் குரல் காதில் விழுந்தாலும் அதை சட்டை செய்யாமல் வீட்டின் வாசலைப் பார்த்தபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தார் பஞ்சராட்ச பிள்ளை. “அம்மா அப்பா காதுல விழப்போகுது. மெதுவா பேசு” மகள் சமாதானம் செய்ய முயன்று தோற்றாள்.

“ம்.. ஒத்த மனுசியா இருந்து வடிச்சுகொட்டரவ புலம்பிக்கிட்டு இருக்காளே, என்ன ஏதுன்னு ஏதாவது கேட்போமுன்னு வரதுக்கு இந்த வூட்டுல ஒரு நாதியிருக்கா..” பொதுப்படையான வசனங்கள் எல்லாம் தனக்குத்தான் என்று பிள்ளைக்கு நன்கு தெரியும். இருந்தும் மௌனமாக இருப்பதற்காகவே மடியில் இருந்த வெள்ளி வெத்தலைப் பெட்டியை எடுத்து சிறு வெத்தலை இரண்டில் சுண்ணாம்பு தடவி, சீவலை வைத்து மடித்து வாய்க்குள் தள்ளினார்.

முற்றத்திலிருந்து ஊஞ்சலின் ஓசை தொய்வில்லாமல் ஒலிப்பது கமலம்மாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. சமையல் செய்வதை நிறுத்திவிட்டு மகளை இழுத்துக்கொண்டு வெளியேவந்தாள். வாய்நிரம்பியிருக்கும் வெத்தலையை குதப்பி குடுவையில் துப்பிவிட்டு, ஆத்தாளுக்கும் மகளுக்கும் அடுப்படியில என்ன பஞ்சாயத்து என கேட்டு கமலம்மாள் வாய்திறக்கும் முன் முந்திக்கொண்டார். “ம்க்கும் என்னான்னு கேட்கவே இம்புட்டு நேரமான்னா எப்பதான் பஞ்சாயத்தைக் கேட்டு தீர்ப்பு சொல்லுவீங்களோ? ”

“அதான், பஞ்சாயத்து என்ன கேட்டாச்சே.. விரசா சொல்லு”

“உங்க மவ காலையிருந்து அஞ்சு ஆறுதடவ பாறைக்கு போய் வாரா. வயிறு சரியில்லையாம்”

“வைத்தியரை வரச் சொல்லட்டுமா”

“அதெல்லாம் வேணாம். இப்பதான் லேகியம் வைச்சு தந்திருக்கிறேன். அதுக்கு அடங்கிலேயினா வைத்தியரைப் பார்ப்போம்”

“இதுக்கா இப்படி சத்தம் போட்டுக்கிட்டு கிடக்கிறவ”

“ம்.. வயசுக்கு வந்த புள்ள ஆத்தர அவரசதுக்கு ஒதுங்க ஒரு கக்கூஸ் உண்டா. நடையா நடந்து போக வேண்டிகிடக்கு”

பஞ்சராட்ச பிள்ளைக்கு என்ன சொல்லுவதென்றே தெரியல. இப்போதைக்கு சமாதனம் செய்துவைக்க மட்டுமே முடியும் என்பதால். “உடனே இதக் கட்டுங்க, அதக் கட்டுங்க சொன்னா செய்யறதுக்கு பூதமா இருக்கு, இந்த அறுவடை முடியட்டும் ஏற்பாடு செய்யறேன். வேறென்ன,..”

“உங்க மவள கொஞ்சமாச்சும் வீட்டு வேலையை செய்து கத்துக்கிட சொல்லுங்க. ஆத்தா வீடுவாச தெளிக்கிறதிலிருந்து கஸ்டப்படராளேன்னு, ஒருநாளாவது ஒத்தாசையா இருக்காளா. இவ சாப்பிட்ட தட்டை கழுவராளா, இல்ல உடுத்துற துணியைதான் துவைக்கிறாளா. எல்லாத்தையும் நான்தான் செய்ய வேண்டி கிடக்கு”.

பிள்ளை மகளைப் பார்த்தார். அவள் அம்மாவின் முதுகுக்குப் பின்னால் தரையை பார்த்தபடி ஒளிந்திருந்தாள்.

“ஏங்கழுத ஆத்தா இவ்வளவு வசவுபாடராளே, உன் வேலையாச்சும் சுயமா செய்ய வேண்டியதுதானே.”

“நாளையிலிருந்து..” என்ற சன்னமான குரல் வெளிவந்தது. அதான் சொல்லிட்டால்ல, எல்லா வேலையும் அவளே செய்துக்கிடுவா, போய் சமையலைப் பாரு. நான் முத்துகருப்பு முதலியார் வீடுவரைக்கும் போயிட்டு வந்துடறேன்.”

“உடனே, துண்ட தொள்ல உதரிப்போட்டுக்கிட்டு கிளம்பிடுவீங்களே, இவ இப்ப பாறைக்கு போக பயமா இருக்கு கூடவான்னு வந்து நிக்கிறா. கிழக்கு தெரு பசங்க நாளு கூடி நின்று கிண்டல் பண்ணுதுகளாம். நான் சமையல செய்யறதா இல்ல இவகூட சுத்தரதா”

“அதுக்கு என்னை என்ன பண்ண சொல்லற”

“நீங்க துணைக்கு…”

“அடி வெளங்காதவளே. சாப்பாடும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம், அவ கூட போ. இதுக்கெல்லாம் சீக்கிறம் ஒரு முடிவு கட்டறேன்.” பிள்ளை வீட்டைவிட்டு வெளியேறினார்.

****

முத்துகருப்பு முதலியார் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் நலம் விசாரித்தப்படி அமர்ந்திருந்தார். பஞ்சராட்ச பிள்ளை வருவதைக் கண்டு உரத்த குரலில்,..

“வாங்க பிள்ளை. உங்களைத்தான் எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தேன்”.

“வழக்கமான நேரத்துக்கே கிளம்பிட்டேன், வீட்டு சின்ன பஞ்சாயத்து அதான் தாமதமாயிடுச்சு.”

“அதானேப் பார்த்தேன், நேரம்தவற ஆள நீங்க. செத்த இருங்க காபி சொல்லிட்டு வந்திடறேன்”. முதலியார் எழுந்து வீட்டிற்குள் சென்றார்.

பஞ்சராட்ச பிள்ளை சாலையில் சென்ற மாடசாமியை கண்டுகொண்டார்.

“எலேய் மாடசாமி,.”

“ஐயா” என பிள்ளை அமர்ந்திருந்த திண்ணை அருகே ஓடிவந்து கைகளை கட்டிக் கொண்டு நின்றார் மாடசாமி.

“இளவட்ட பசங்க ஒரு அஞ்சு பேர கூட்டிக்கிட்டு நாளைக்கு நம்ம வீட்டுப் பக்ககம் வந்திடு. குழி தோன்டற மாதிரி இருக்கும், கடப்பாறை, மமுட்டி, சட்டியெல்லாம் எடுத்தாந்திடு.”

“சின்னப் பண்ணை வீட்டுல வேலை நடந்திக்கிட்டு இருக்குங்க. நாளை மறுநாள் வரைக்கும் வேலை கிடக்குதுங்க. அதனால நான் வரமுடியாதுங்களே.”

“சரி வேற ஆளிருந்த அனுப்பிவை.”

“சரிங்க. உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?”

“ம்..”

கையில் காபியுடன் வந்து முதலியாரும் சேர்ந்து கொண்டார். இருவரும் காபியை குடித்தபடி பேசத் தொடங்கினர்.

“என்ன பிள்ளை வீட்டுல ஏதோ பஞ்சாயத்துன்னு சொன்னீங்க”

“இன்னும் எத்தனை காலம் நம்ப புள்ளைக்குட்டிக ஆத்திர அவரசதுக்கு பறைக்கு போறது. அதான் டவுன்ல இருக்கிற மாதிரி கக்கூஸ் கட்டிடலாமுன்னு இருக்கேன்.”

“வாஸ்தவம்தான், மழைக் காலத்துல நாமலே ரொம்ப சிரமப்படறோம். அதுங்க பாவம் என்ன செய்யும்.”

“”

“ஆமாம் உடனேயே வேலைக்கு ஆள வரச் சொல்லறீங்க. ஆறுவடை முடிஞ்சதுக்குப்புறம்தானே பணம் கைக்கு வரும்.”

“இரண்டு மாசம் முன்னாடியே,. நம்ப பஞ்சாயத்துக்கு கக்கூஸ் கட்டச் சொல்லி முன்பணம் கொஞ்சம் சர்கார்கிட்டருந்து வந்திருக்கு. அதெல்லாம் எதுக்கு கட்டிக்கிட்டுன்னு கிடப்புல போட்டாச்சு.”

“இப்ப அத எடுத்து வீட்டுக்கு கட்டப்போறீங்களா?”

“வீட்டுக்கு இல்ல ஊருக்குத்தான் கட்டப்போறேன். ஊரு வேற நாம வேறையா?. நம்மள தவிற வேறுயாரு பயன்படுத்தப்போறா”

“அதானே..”

****

பிள்ளைமார் சமூகம்

பெரியாரும் அவரது சீடர்களும் இன்றும் தோல்வி அடைவது கடவுள் மறுப்பு கொள்கையிலும், சாதி ஒழிப்பிலும் தான். தமிழகத்தில் தெருக்கு தெரு முளைத்திருக்கும் கோவில்களும், சாதிச் சங்கங்களும் இதை நன்கு உணர்த்துகின்றன. சாதியின் அடிப்படையில் மட்டுமே ஓட்டுகள் கிடைக்கும் என அரசியல் வாதிகள் அதனை வலு சேர்க்க, சாதியின் அடிப்படையில் மட்டுமே சலுகை கிடைக்கும் என மக்களும் சாதியை வளர்க்க தொடங்கி விட்டார்கள்.

வன்னியர் சமூகம் அரசியலில் பெரும் பங்கு கொண்டுவிட்டதை முன் உதாரணமாக கொண்டு, சாதியின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகளுக்காக எல்லா சாதி மக்களும் தங்களை குழுவாக ஒருங்கினைக்க பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளன. சாதிச் சங்கம் அமைப்பது, தங்களுக்கென திருமண மண்டபம் அமைப்பது, தங்களுடைய குல தெய்வங்களின் கோவில்களை அமைப்பது என மிக தீவிரமாக செயல்பட்டு வரும் மக்களுக்கு, இப்போதைய உடனடித் தேவை தலைவர்கள்.

தங்களுடைய சாதியில் பெரிய மனிதராக விளங்கியவரையோ, அல்லது பெரிய மனிதர்களில் தங்கள் சாதியை சார்ந்தவர்களையோ தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவர் சமூகத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க அய்யாவும், நாடார் சமூகத்திற்கு காமராசர் அய்யாவும் உள்ளது போல பிள்ளைமார் சமூகத்திற்கு யாரை தேர்ந்தெடுப்பதென தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மிகவிரைவில் புதிய ஜாதிக் கட்சி மிகுந்த பலத்தோடு அரசியலில் குதிக்கும் எனவும் தெரிகிறது.

பிள்ளைமார் சமூகத்தில் உள்ள பெரியவர்களின் பட்டியல் இது –

வ.உ.சிதம்பரம் பிள்ளை – கப்பலோட்டிய தமிழன்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை – தமிழ்தாத்தா உ.வே.சாவின் ஆசிரியர்
மனோன்மணியம் சுந்திரம் பிள்ளை – தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர்
தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி
ஆனந்தரங்கப் பிள்ளை – கப்பல் ஓட்டிய முதல் தமிழர்
எஸ்.வையாபுரிப் பிள்ளை – தமிழறிஞர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை – தமிழ் நாவலாசிரியர்
சுப்ரமணியபிள்ளை – கட்டபொம்முவின் மந்திரி
சர்தார் வேதரத்தினம் பிள்ளை – சுகந்திர போராளி
ஜெய்ஹிந்த் செண்பகராமன் – சுகந்திர போராளி
வடலூர் வள்ளலார் – சைவ சன்மார்க்கத் தலைவர்
மறைமலையடிகள் – தமிழ்த் தொண்டர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் – புலிகளின் தலைவர்
தோழர் ஜீவா – கம்யூனிச தலைவர்
ஏ.சி.பி. வீரபாகு – முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
எம்.சி. வீரபாகு – சுகந்திர போராட்ட தியாகி
பரலி. சு. நெல்லையப்பர் – பாரதியின் உற்ற நண்பர்
சி.வை. தாமோதரம் பிள்ளை – பதிப்புப் பணியில் முன்னோடி
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை – விடுதலைக் கவிஞர்
கி.ஆ.பெ. விஸ்வநாத பிள்ளை – தமிழ் வளர்த்த மகாஞானி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – சிறந்த திரையுல கவிஞர்
கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை – உலகப் புகழ் பெற்ற கணித மேதை
அகிலன் – இலக்கிய எழுத்தாளர்
வல்லிக்கண்ணன் – பிரபல எழுத்தாளர்
சுகிசிவம் – ஆன்மீகப் பேச்சாளர்
ஜெயகாந்தன் – பிரபல எழுத்தாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

இந்தப்பட்டியலில் இடம் பெறாத தலைவர்கள் மன்னிக்கவும், சாதித் தலைவர்கள் யாரேனும் இருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும். பெயரோடு அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்தால் வருங்கால கட்சிக்கு உதவியாக இருக்கும்.

நன்றி –

இரா. மணிகண்டன், குமுதம்

அழிந்துவிடுமா பார்பனீயம்?

பிராமணர்கள் தமிழர்களா
ஆரிய படையெடுப்பு உண்மையா
இந்து மத அழிவுக்கு பிராமணர்கள் காராணமா

இது போன்ற கேள்விகள் வலையுலகில் அதிகம் காணப்படுகின்றன. முறையான விளக்கமும் வரலாறு நிகழ்வுகளும் இரு தரப்பிலும் முன்வைக்கப்படுகின்றன. என்றாலும் இந்த இடுகை முற்றிலும் மாறுபாடானது.

பார்பாணியம் என்பது “தாங்கள் தான் மேலான மக்கள்” என்ற எண்ணம் என எல்லா நாத்திக நண்பர்களும் சுட்டி காட்டி விட்டனர். “தங்களுடைய மொழியான சமஸ்கிருதம் தான் உயர்ந்தது” என்பதும், “கடவுளுக்கு தொண்டு செய்ய தாங்கள் தகுதியானவர்கள்” என்பதும் பார்பனியமாகிறது. இதனை எதிர்க்கும் பலர் பிராமணர்களை மட்டுமே எதிர்க்கின்றார்கள். ஆனால் பார்பனீய வியாதி எல்லா மக்களிடமும் ஊறி போய்க்கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

கருவறையில் இருக்கும் கடவுளை தரிசனம் செய்ய அங்கிருக்கும் பிராமணர்களுக்கு தட்சனை கொடுக்க வேண்டும் என்பதும், தங்களுடைய குறைகளை அவர்கள் சொன்னால் மட்டுமே கடவுளுக்கு கேட்கும் எனவும் மக்கள் நம்பிக்கொண்டேயிருக்கின்றார்கள். பார்பாணியம் பிராமணர்களால் மட்டுமல்ல, நம்பிக்கை கொண்டவர்களாலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்” என்பது சாதாரண பழமொழி. தட்சனை கொடுக்கும் நபர்களுக்குதான் சாமி தரிசனம் நன்கு கிடைக்கின்றது.

இலவசமாக தரிசனம் செய்யும் மக்களுக்கு என தனி வரிசையை பல பிரபல கோவில்கள் இந்த பிராமணர்கள் செய்து வைத்திருக்கின்ரார்கள். அந்த வரிசை கருவறையில் இருக்கும் கடவுளுக்கு வெகு தொலைவிலேயே திருப்பி விடப்படுகின்றது. கருவறைக்கு அருகில் செல்ல காசு கொடுக்க வேண்டும். அதிக காசு கொடுப்பவர்கள் மிக அருகில் சென்று தரிசனம் செய்யலாம். ஏழை தொலைவிலிருந்தே பார்த்துக் கொண்டு போய்விட வேண்டும்.

மக்களுக்காக கட்டப்பட்ட கோவில்களில் இந்தப் பேதங்களை புகுத்தி அரிவு ஜீவி யார் என எல்லோருக்கும் தெரியும். மாதக் கோவில்களில் வெகு அருகே சென்று மெழுகு தீபமேற்றி தங்கள் குறைகளையும், பிராத்தனைகளையும் சொல்லி திரும்பும் மக்களுக்கும், இருட்டான கருவறையில் இருக்கும் கடவுளை தொலைவிலிருந்து எட்டிப் பார்த்தும் செல்லும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று புரிகின்றதா.

தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று பலகை வைத்திருந்தாலும் எத்தனை கோவில்கள் மக்கள் விரும்பி தமிழில் அர்ச்சனை செய்ய முன்வருகின்றார்கள் என பாருங்கள். மிக அபூர்வமாக தான் இருக்கும். எங்கள் ஊரில் இருக்கும் பெருமால் கோவில் அய்யரிடம் நான் தமிழில் அர்ச்சனை செய்ய சொன்னபோது, அவருடைய முகமே மாறிப்போனது. அருகில் உள்ள சிலரும் அதன் பிறகு தமிழில் அர்ச்சனை செய்ய சொல்லவில்லை. மக்களே விரும்பி கேட்டாலும் முகம் சுழிக்கும் பிராமணர்களை என்ன செய்ய. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை என கட்டளை இட்டால் தான் கருவறையில் தமிழ் வாழும். அதற்கு நிச்சயம் பிராமணர்கள் இடம் தர மாட்டார்கள். கோவில்களில் மட்டுமல்ல பல வீடுகளிலும் இதே நிலைதான்.

என்னுடைய ஊர்கார் ஒருவரின் வீட்டிற்கு வேலை விசயமாக சென்றிருந்தேன். ஜ.டி துறையில் இலட்சக்கணக்கில் பணம் வாங்குபவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். தன்னுடைய மகனுக்கு ஸ்லோகமெல்லாம் தெரியும், தினமும் அதை சொல்லிதான் சாமி கும்பிடுவான் என சொல்லி அவனை சொல்ல சொல்ல,. அவன் சொன்னது எல்லாம் சமஸ்கிருத மந்திரங்கள். தமிழில் மந்திரங்கள் தெரியாத என நான் சந்தேகம் கேட்க, தமிழிலா என்ற ஏளன தோணியில் கேட்டார்.

சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்காத வீடுகளே இப்போது இல்லை என்ற அளவிற்கு மந்திரங்களை சொல்லும் கருவிகள் எல்லா இடங்களுக்கும் பெருகிவிட்டது. சிறிய கருவி ரூபாய் 50 லிருந்தே சந்தையில் கிடைக்கின்றது. குழந்தைகளுக்கு தமிழில் பாடல்கள் சொல்லி கொடுத்து பக்தி பரப்புவது இல்லை. காயத்திரி மந்திரமும், குரு ஸ்லோகமும் மட்டுமே குழந்தைகளுக்கு தெரிந்திருக்கின்றன. சிதம்பரம் கோவிலில் கூட தமிழ்பாடலுக்கு போராடி அங்கிகாரம் வாங்கிவிட்டோம். ஆனால் நம் அருகிலிருக்கும் வீட்டின் சாமி அறைகளில் சம்மனமிட்டு உட்காந்து கொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை மறந்துவிட்டோம்.

வராகி, கௌமாரி என புதிது புதிதாய் தெய்வங்கள் கண்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கன்னிமார்களுக்காக மந்திரங்கள் எல்லாம் புனையப்பட்டு புத்தகங்களாக வெளிவருகின்றன. திருமந்திரமும், திருவாசகமும் எத்தனை வீட்டில் பாராயணம் சொல்லப்படுகின்றன என்பது கேள்விக் குறியே. தமிழ் முருக பக்தர்களிடமும், ஐயப்ப பக்தர்களிடமும் மட்டுமே கொஞ்சம் வாழந்து கொண்டிருக்கின்றது. அதையாவது காப்பாற்றுவோம். அதற்கு பிராமணர்களை கோவில்களிலிருந்து அகற்றியே தீர வேண்டும்.

\\சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் சமூக ஆதிக்க நிறுவனமாக செயல்பட்டன. கோயில்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தினர். அரசனை தலைமையாகக் கொண்ட பெரும் நிலவுடைமையாளர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது சோழர் கால கல்வெட்டுக்களிலிருந்து நன்கு தெரிய வருகிறது. சமூகத்தின் இந்த ஆளும் வர்க்கங்களுக்கு பிராமணியம் தத்துவமாக விளங்கியது. சமூக ஆதிக்க சக்திகள் பிராமணர்களையும், சமஸ்கிருத மொழியையும் ஊட்டி வளர்த்தனர்.\\ என்று கீற்று வலைதளத்தில் அத்திவெட்டி வே.சிதம்பரம் கூறியுள்ளார். கோவில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் அரசர்களுக்கு பிறகுதான் வந்திருக்கின்றன. அதனால் வளர்த்த ஆதிக்க சக்திகளே பிராமணர்களை எதிர்த்து விரட்டி கோவில்களை மீட்க வேண்டும்.

ஜெயேந்திரர், பிரேமாநந்தர், தேவநந்தன் என சங்கித் தொடர் காமுகர்கள் இனியும் தோன்றா வண்ணம் செய்வது நம் பணி என்றே எண்ணுகிறேன். நாம் முயற்சி செய்யாவிடால் (பிராமணர்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் கூட) பார்பனீயம் அழியாது.

சாதி

சாதி –

சாதி எதிப்பு என்று சொல்லி நம்மை நாம் முட்டாள்களாக்கி கொண்டிருக்கிறோம். சாதிகள் வேண்டாமென்றால் எப்போதோ நாம் அவற்றை தூக்கி எரிந்திருக்க முடியும். ஆனால் இன்று சாதியை இன்னும் வலுவாக்கி கொண்டிருக்கிறோம். இந்தியாவின் கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் கூட தலித் கிறிஸ்து, தலித் முஸ்லிம் என அடையாளம் காண விளைகிறோம். அவர்களும் அதையே தான் விரும்புகிறார்கள். காரணம் சலுகை.

சாதியை மதியாமல் கலப்பு திருமணம் நடந்து செய்து கொண்டாலும் குழந்தைக்கு சாதியை வைக்கிறோம். சாதிச் சான்றிதல்கள் இன்றி அரசு வேலையிலோ, கல்விக் கூடங்களிலேயே நுழைய இயலாது. சாதியில்லாமல் குழந்தையை பள்ளியில் சேர்க்க நீங்கள் கோர்ட் படிக்கட்டுகளை மிதிக்க வேண்டும். அப்படி செய்து வெற்றி பெற்றாலும் பொதுப் பிரிவுக்கு உங்கள் குழந்தை போய்விடும். எத்தனை பெரியார் தொண்டர்கள் அப்படி தங்கள் பிள்ளைகளை பொதுப்பிரிவின் கீழ் சேர்த்திருக்கின்றார்கள் என தகவலில்லை. நாம் அப்பா சாதியோ, அம்மா சாதியோ எதற்கு சலுகைகள் அதிகம் கிடைக்குமோ அதற்கு குழந்தை மாற்றி விடுகிறோம். அம்பேத்கார் மிகப் பெரிய மேதை. அவர் சட்டங்களால் சாதியை வலுவாக்கி விட்டு வேறு மதத்திற்கு அழகாக போய்விட்டார். சாதியை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கோ, பெரியாருக்கோ இருந்த்தாக தெரியவில்லை.

நான் இப்படி சொல்ல காரணம், பெரியார் இஸ்லாமிய மதத்திற்கு போய்விடுங்கள் என்றார். அம்பேத்கார் ஒரு படி மேலே போய் இந்து மத்திலிருந்து தோன்றிய புத்ததிற்கு போய்விட்டார். இவர்கள் யாருமே கிறிஸ்துவ மதத்தினை சிபாசு செய்யவில்லை. ஆனால் நம் மக்கள் அதிகம் போனது கிறிஸ்துவ மதத்திற்கு தான். சாதியை அழிக்க முடியாது என கிறிஸ்துவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். விளைவு கிறித்துவப் பிள்ளை, கிறிஸ்துவ முதலியார், கிறிஸ்துவப் பள்ளன் என சாதிகள் கிளைபரப்பின. (எம்.ஜி.ஆர் என்ற மகான் தான் சாதி அடிப்படையிலான கல்விச் சலுகையை நிறுத்திவிட்டு பொருளாதார அடிப்படையில் கல்விச் சலுகையை அறிவித்தவர். ஆனால் அறிவித்த நேரத்திலேயே ஏகப்பட்ட எதிர்ப்பு மக்களிடமிருந்து கிளம்ப. அந்த திட்டத்தை வாபஸ் பெற்றார். அந்த திட்டம் மட்டும் இருந்திருந்தால் ஏழைகளுக்கு இன்னும் ஒரு நல்ல திட்டம் நடைமுறையில் இருந்திருக்கும்.)

சில குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் அதிக சலுகைகள் தருவதைப் பார்த்தும் மற்ற சாதிக்காரர்ளும் தங்களுக்கும் அந்த சலுகைகள் வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றார்கள். குறிப்பாக கல்வியிலும், வேலையும் . காரணம் அதுதான் வாழ்வாதாரம். 60 சதவீத மதிப்பெண் வாங்கிய இரண்டு மாணவர்களில் ஒரு மாணவனுக்கு மட்டும் அவனுடைய சாதியின் அடிப்படையில் மேல் படிப்பிற்கு இடம் கொடுத்தால், கிடைக்காத மாணவனுக்கு ஏமாற்றத்திற்கு பதில் கோபம் தான் வருகிறது. அது சாதியடிப்படையான அரசுமீதானால் வரவேற்க தக்கது. ஆனால் அவனோ இன்னொரு சாதியை வெறுக்க தொடங்குகிறான். தன்னைப் போலவே இருக்கும் அவன் சாதிக்காரர்கள் மேல் பற்று வருகிறது. இடம் கிடைத்தவனுக்கோ தன் சாதியின் மீது அளவு கடந்த பற்று உண்டாகிறது. இதையெல்லாம் நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்க கூடும்.

ஒரே செயல் இரண்டு சாதியையும் வலுபடுத்துகிறது. சாதியை காக்க சங்கங்கள் அமைத்து பின் அவற்றைக் கொண்டே கட்சியாக மாற்றி அரசியலில் சாதிக்கு எத்தனை ஓட்டுகள் என கணக்கிட வைத்திருக்கிறோம். சாதி அழிப்பதாக சொல்லிய திமுகவோ என்னன்ன வழியில் சாதியை வழுபடுத்த முடியும் என்றே பார்க்கின்றது. தேர்தலின் போது அதிக சாதியுள்ள மக்களிடைய அந்த சாதிக்காரனை நிறுத்துகிறது. எல்லா கட்சிகளும் அந்த நிலைக்கு வந்துவிட்டன. அவர்களுக்கு சாதி ஓட்டுவங்கி தான் பலமாக இருகிறது.

ஆனால் சமத்துவபுரம் அமைத்து பெரியாரின் சிலை அமைத்து வெளியில் சாதியொழிப்பிற்காக பாடுபடுவதாய் காட்டிக் கொள்கின்றார்கள். வன்னியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனம் காட்டிய பாமகவின் நிலைமூலம் எல்லோருக்கும் சாதியின் வலிமை தெரிந்துவிட்டது. போட்டியிட்ட ஏழு தொகுதியிலும் மண்ணைக் கவ்விக் கொண்டு இருந்த்தை மறந்துவிட முடியாது. அதனால் எல்லா சாதிக்காரர்களும் தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்றில்லை பொழுதுபோக்கு அம்சமான திரையுலகிலும் அதன் தாக்கத்தினை இன்னும் முறியடிக்க முடியவில்லை. நாத்திகன் கமல் எடுத்த “தசவதாரத்தில்” பல இடங்களில் சாதிகள் தெரித்து ஓடின. சாதியே வேண்டாம் ஒழித்துக் கட்டுங்கள் என சொன்ன பெரியாரின் சாதியையும் சுட்டிகாட்டி கொண்டார்கள். இன்று கூட தேசத்தலைவர்களை சாதியடிப்படையில் பிரித்து வைத்திருக்கின்றார்கள். காமராசர், முத்துராமலிங்க தேவர், வா.உ.சிதம்பரம் பிள்ளை என எவரையும் விட்டுவைக்கவில்லை.

மிகப்பெரும் சக்தியாக மாறிக்கொண்டு இருக்கும் சாதியை ஒழிக்க முடியுமா என கேட்டேன். பதில் வந்தது.
முடியும், ஆனா முடியாது.

நீங்க என்ன சொல்றீங்க?.