மனிதன் இல்லாத உலகம் இப்படி இருக்கும்

டைனோசர்கள், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மிகப்பெரிய விலங்குகள். உலகமுழுதும் வியாப்பிருந்த அவைகள் வாழ்ந்தமைக்கான சான்றுகளாக இன்று சில மக்காத எலும்புகளும், படிமங்களும் மட்டுமே ஆதாரமாக இருக்கின்றன. உலகிலேயே பெரிய உயிரினங்களாக வலம் வந்த அந்த மிருகங்கள், ஏதோ விபத்தினால் முழுவதுமாக அழிந்து போயின.

அவைகளுக்குப்பின் ஜனித்த நாம் இயல்பான உலகத்தில் வாழ்ந்து வந்த மிருகங்களை தன்னுடைய சுயநலத்திற்காக, தெரிந்தோ தெரியாமலோ அழித்துக் கொண்டிருக்கின்றோம். நம்மால் விலங்குகளெல்லாம் அரிய இனங்களாக மாறி, அழிந்து கொண்டிருக்கின்றன. பாண்டா கரடி முதல் சிட்டுக் குருவி வரை எவையும் இதற்கு விதிவிலக்கல்ல.

இப்படி நாம் அழிக்கின்ற உயிர்களுக்கு பதிலாக, நோய்களை வாங்கிக் கொண்டிருக்கின்றோம். விலங்குகளை வலையில் பிடித்த காலம் போய் கொசுக்களுக்காக வலையில் ஒளிந்து கொண்டிருக்கின்றோம். திடீரென ஒருநாள் நாம் அனைவரும் இந்த உலகிலிருந்து மறைந்து விட்டால், இந்த உலகம் எப்படியிருக்கும். இந்தக் கற்பனையை அறிவியலோடு தொடர்பு படுத்தி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கின்றார்கள்.

தற்போதை பூமி –

அழிகின்ற மனித அடையாளங்கள் –

இறுதியாக பூமி பழையபடி –

பார்த்து பார்த்து உருவாக்கிய மனித அடையாளங்கள் அழியும் போது கொஞ்சம் வேதனையாக இருக்கின்றது. ஆனால் முழுமையாக எல்லாம் அழிந்த பின், பச்சையாக பூமி காட்சியளிக்கும் போது மனது நிறைவாக இருக்கின்றது. இந்த விஞ்ஞானப் பார்வை காணோளி வடிவத்தில்.

150-300 வருடங்களுக்குப் பிறகு –

500-1000 வருடங்களுக்குப் பிறகு –

10,000 வருடங்களுக்குப் பிறகு –

வாங்க ஒரு கப் விஷம் சாப்பிடலாம்

சாப்பாட்டுல தினமும் ஒரு கீரையை சேர்த்துக்கோங்க என்கின்றார்கள் மருத்துவர்கள். அதற்கு எப்போதும் பூச்சி அரிக்காத, பாலிஸ் கீரைகள் தான் நம்முடைய சாய்ஸ். ஆனால் அவ்வாறு பூச்சி அரிக்காத கீரைகளை சாப்பிடாதீர்கள் என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.

பூச்சிகள் கூட உண்ண முடியாத அளவிற்கு தகுதியற்று போயிருக்கும் விஷ கீரையை நீங்கள் உண்ணுவதால் என்ன நேரும் என நினைத்துப் பார்க்க சொல்கிறார். கீரையில் தானே விஷம் இருக்கிறது என பழங்களுக்குப் போனால், இதைவிட கொடூரமாக இருக்கிறது விளைவுகள். பளபளக்கும் பழங்களில் எல்லாம் மறைமுகமாக ஒளிந்திருக்கிறது விஷம்.

பயிர் செய்யும் முன்பிருந்தே விதைகளை பூச்சி கொல்லி மருந்தில் ஊர வைப்பதை எங்கள் கிராமத்திலேயே பார்த்திருக்கிறேன். அடுத்தடுத்து பூச்சி கொல்லி மருந்தை தெளிப்பதால் நிலமே விஷமாகிப் போயிருக்கின்றது. ஆங்கில மருத்துவத்திற்கு பயந்து சிலர் இன்னும் சித்த மருத்துவத்தையே கடைபிடிக்கின்றார்கள். விளைவுகள் இல்லாத மருந்தென தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தால் காலம்காலமாக பயன்படுத்தி வந்த வேப்பண்ணையே விஷமாகி உயிரைக் குடித்திருக்கின்றது.

சித்த மருத்துவம் வேண்டாமென சென்றவர்களையும் போலி மாத்திரைகள் பயமுருத்தியிருக்கின்றன. எதைச் சாப்பிட்டாலும் கண்டிப்பாக விஷம் நமக்குள் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கோக், பெப்சி மட்டுமல்ல சாதாரண குடிநீரையே இப்போது நம்ப முடியவில்லை.

இதிலிருந்து தப்புவது எப்படி, பூச்சி தின்ற கீரையை வாங்க வேண்டும், நன்கு அலசிவிட வேண்டும். பழம் வாங்கும் போது சரியான அளவிலும், சரியான ருசியையும் தருவதை மட்டுமே வாங்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

போலி மருந்து, போலியான காய்கறி, பழங்களை விற்பதாக உங்களுக்குத் தெரிந்தால் காவல் துறையை அனுகலாம். அதற்கான தொலைப்பேசி எண் – 044-24321830. பல உயிர்களை காப்பாற்றிய பெருமை உங்களுக்குச் சேரட்டும்.

நன்றி- குமுதம் சினேகிதி.