கதைகளும் நானும் – விடலை ஞாபகங்கள்

கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள் ன் தொடர்ச்சி,..

சிறுவர் மலரில் தொடங்கிய என் வாசிப்பனுவபம் வாரமலர், குமுதம், ஆனந்தவிகடன் என சிற்றிதழ்களாக நீண்டது.  சிற்றிதழ் கதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொஞ்சம் சிற்றின்பமும் இணைந்தன.  மலரின் வாசனையில் மதிமயங்கிய வண்டென மனம் தள்ளாடின. அதன் புரிதலை நோக்கிய பயணத்தில் புராணக் கதைகளில் கூட இதுவரை தெரிந்த கதைகளிலேயே சில சம்பவங்கள் உடன் சேரத் தொடங்கின.  பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்கள், தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள், இராமனின் மனைவிக்கு இராவணன் ஆசை கொண்டது என கதைகளின் அடிநாதம் காமமாக இருந்தது.

உடலுறவு என்பதை வெறுத்தோ, குழந்தைகளுக்கு சொல்ல மறுத்தோ புராண, இதிகாசங்களில் ஒரு நகைப்புக்குறிய விசயத்தினை செய்திருப்பார்கள். குமரன் சிவ நெற்றி பொறியில் இருந்து பிறந்தான், வினாயகன் சக்தியின் அழுக்கில் இருந்து பிறந்தான், ஐயப்பனை மன்னன் கண்டெடுத்தான் என்று கதையளந்திருப்பார்கள். மகாபாரதத்தில் பாண்டு இறந்தபிறகு குந்திக்கு ஐந்து மகன்கள் பிறந்தன என்றும், ஒவ்வொருவரின் தந்தையும் எமன்(தர்மனின் தந்தை), வாயு(பீமனின் தந்தை), இந்திரன்(அர்ஜூன்னின் தந்தை), அஸ்வினி தேவர்கள்(நகுலன்,சகாதேவனின் தந்தை) என்று சொன்னவர்கள். மந்திரத்தால் பிறந்தவர்களாக சுட்டியிருப்பார்கள். அதனால்தான் கண்ணனும், இயேசுவும் கன்னித்தாய்க்கு பிறந்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

நல்லவேளை சிற்பிகளும் அவ்வாறு நினைக்காததால் பாலியல் கல்வி கோயில் சிற்பங்களாக இருந்துவந்துள்ளன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருந்தன. கோயிலே கதியென இருந்த அந்தகால மக்களுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு இருந்திருக்கலாம். கருவறை மட்டுமே பிரதானமாக மாறியிருக்கும் இந்த காலத்தில் நிச்சயம் கோவில்சிற்பங்களால் பலனில்லை. காரைக்கால் அருகே இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் 500 ரூபாய் தரிசன நபர்கள் மட்டுமே ராஜகோபுரம் வழியாக நுழைய முடியும். விழாக்காலங்களில் வாசலில் ஆரமிக்கும் இரும்பு தடுப்புகள், சனீஸ்வரை நமக்கு காட்டிவிட்டு மறுபடியும் வாசலுக்கே கொண்டுவந்து விட்டுவிடும். பிறகு எங்கிருந்து கோயில் சிற்பங்களை கண்டுகளிப்பதெல்லாம்.

ஒவ்வொரு ஆணின் பருவ வயது ஒரு சிக்கலான நூல்கண்டினைப் போன்றது. அதன் சிக்கல்களை நீக்க முடியாமல் நூல் முழுவதையும் வீணாக்கிவிடுகின்றதைப் போல வாழ்க்கையை வீணடித்த ஆண்களே இங்கு அதிகம். வெகுசிலரே அதன் சிக்கல்களை புரிந்துகொண்டு வாழ்கின்றார்கள். இந்த சமூகத்தின் கட்டமைப்பில் ஆண்களின் நிலையை விட பெண்ணின் நிலை மிகவும் தெளிவானதாக இருக்கிறது. அவளுக்கு அன்னை, பாட்டி என எல்லோரும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள். போதாக்குறைக்கு சமூலநல இயக்கங்களும் உடனிருக்கின்றன. ஆனால் ஆணின் அருகில் வரக் கூட தகப்பன்மார்கள் விரும்புவதில்லை. சமூகமும் அதன் பொறுப்புணர்வில்லாமல் ஊமையாக இருந்துவிடுகிறது. அதனால் முட்டிமோதி பருவத்தினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்படுகிறது.

என் சகவயது தோழர்களும் ஏறக்குறைய இதே நிலையில்தான் இருந்தார்கள். அவர்களிடமும் பல கேள்விகள் இருந்தன, விடையின்றி. எங்கிருந்து இதற்காக விடைபெறுவது. இணையம் அறிமுகம் இல்லா காலம் என்பதால் ஒரே உபாயம் புத்தகம் மட்டுமே. அறிமுகமானது குறுநாவல் படிக்கும் வழக்கம். ஒரு கதாநாயகன் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதிலிருந்து கதை ஆரமிக்கிறது. அவன் அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நேரம்கால கணக்கின்றி அவளை அனுபவிப்பதிலேயே குறியாக இருக்கிறான். அவள் அன்னையிடம் புகார் கூறும் போது, அன்னை அதை அலட்சியம் செய்கிறாள். இப்படி போகின்ற கதையின் இறுதியில் அவளின் தகப்பன் இறந்ததை கூட மறைத்து இரவு முழுதும் அவளுடன் கழித்துவிட்டு காலையில் சொல்கிறான். அதனால் கோபம் கொண்டு அவள் வெளியேறுவதாக முடிகிறது கதை. எது புரிந்த்தோ இல்லையோ, இவ்வகை கதைகளை படிப்பதால் கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று நன்கு புரிந்தது.

ஆனாலும் பருவக் கதைகள் சகதோழர்களிடம் ஏகம் இருந்தன. வழிவழியாக நாடோடிப் பாடல்களைப் போல கடத்தப்பட்டுவந்த அது, இன்னமும் வரிவடிவம் பெறாமல் இருக்கின்றன. சில எழுத்தாளர்கள் சுஜாதா, கி.ராஜநாராயணன் போல துணிந்து எழுதினாலும் அதெல்லாம் முதல் மழைதுளி போன்றதே. இன்றும் கடலளவு கதைகள் காற்றோடு காற்றாய் பரிமாறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுத்துருவம் பெறும் கதைகள் திரிதலுக்கும் உட்படுகின்றன. நாட்டார் பாடல்கள் போல அப்படியே ஆவணம் செய்தல் கடினமே. மூன்றாம் தர எழுத்தாளர்களால் எழுதப்படும் கதைகளில் நான் மேலே கூறிய எதையும் நீங்கள் பெற முடியாது. காமத்தினை காசாக்க நினைப்பவர்களின் கதையில் சதை வர்ணனை தவிற ஏதையும் எதிர்பார்க்க முடியாது. 13+, 18+ என வயதுவரையரை செய்தாலும் கதைகளுக்கு வயதில்லை.

இதில் ரசனை மிகுந்த நகைச்சுவை கதைகளும் ஏராளம். விடுதியின் ஞாயிறுகளில் மேடைமீதேறி ஒவ்வொருவராய் கதை பகிர்ந்திருக்கிறோம். மண்குடம் கதை சொல்லி நான் அமர்ந்த பிறகு அரங்கேறிய கதைகளால் விடுதியறை வெட்கம் கொண்டிருக்கும். குபீர் சிரிப்பலைகளை அடக்கி விடுதி கண்காணிப்பாளரிடமிருந்து தப்பிய அனுபவங்களை எத்தனை தோழர்கள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே கேள்விக் குறிதான். இறுக்கமாக இருக்கும் நம் சமூகத்திலேயே இத்தனை கதைகள் புழங்குகையில், வெளிநாடுகளில் எளிமையான  காமிக்ஸ் வரை சென்றது வியப்புகுறியதல்ல.

பாலுறுப்புகளின் அமைப்பினையும், செயல்பாட்டினையும் பள்ளி பாடபுத்தகம் கற்றுக் கொடுத்தாலும், வாழ்வியல் சந்தேகங்களை அவைகள் கண்டுகொள்வதில்லை. காமகதைகளும் உதவாது என்றானபோது, ஏன்?ஏதற்கு?எப்படி? என்பதில் வாசகர் சுயஇன்பம் பற்றி கேட்ட கேள்விக்கு சுஜாதா விடை எழுதியிருந்தார். எதார்த்த உண்மையானது கதையில் வருவது போல கற்பனையல்ல என்று உணர்ந்த போது, நாராயணரெட்டி, ஷாலினி போன்ற மருத்துவர்களின் நூல்கள் கிடைக்க தொடங்கின. இதெல்லாம் இணையமென்ற பரந்தவெளி அறிமுகமி்ல்லா காலத்தில் நிகழந்த ஒரு விடலை வாழ்வியல் நிகழ்வுகள். இப்போதிருக்கும் விடலைகளுக்கு இதைவிட அதிக கதைகள் கிடைத்திருக்கலாம், இல்லை கிடைக்கப்பெறாமல் கூட போயிருக்கலாம். கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லமுடியாத போது என்ன கவலை?

பி.கு –

விரசமின்றி எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இருப்பினும் விரும்பாதவர்கள் பொருட்செய்யாதீர்கள்.

இணையத்தில் மக்கள் விரும்பிப் பார்ப்பது இதைதான்

மற்ற எல்லா விசயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பேசவும் மக்களுக்கு சுகந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கலவியைப் பற்றி பேசவோ எழுதவோ இங்கு சட்டங்கள் தடுக்கின்றன, சமூகமும் தடுக்கின்றன.

அதனால் கட்டுப்பாடுகள் இல்லாத இணையத்தில் கலவியைப் பற்றி அதிகம் தேடப்படுகின்றன. அதற்கு சான்றுகள் இங்கே.

படங்களைப் பெரிதாகப் பார்க்க, சொடுக்கங்கள்.

பெண்களின் டீ சர்ட் படங்களும் – ஹாட் காணோளியும்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பக்குவம் அடைந்தவர்களுக்கும் இந்தப் பதிவு.

“கற்றது தமிழ்” படத்தில் நடிகர் ஜீவா, தன்னுடைய நண்பனின் அலுவலகத்திற்கு செல்வார். அங்கே ஒரு பெண் “” என்று டீ சர்டில் எழுதியுருப்பார். ஜீவாவும் எழுதியிருப்பதை செய்து விடுவார். அவ்வளவு தான் ஓவென ஒப்பாரி வைத்து அலுவலகமே அரண்டு போய் விடும்.

தமிழ் போக்கிரிக்கு முன்பே தெலுங்கில் போக்கிரியை பார்த்து விட்டதால், மகேஸ் பாவு – இலியான சந்திப்புக் காட்சியிலும் பொறி தட்டியது. மார்பின் மேல் எழுத்துகளை எழுதிய டீ சர்ட்டுகளைப் போட்டுக் கொண்டு திரியும் பெண்களுக்கு, எதிர் பாலினத்தின் பார்வை அவர்களின் மீது, குறிப்பாக அந்தப் பகுதியின் மீது பார்வை பட வேண்டும் என்று எண்ணம்.

தான் அணிந்திருக்கும் உடையில் என்ன எழுதியிருக்கின்றது, அதன் விளைவுகள் என்ன என்று கூட தெரியாமல் சில பெண்கள் அணிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பலர் விளைவுகளைத் தெரிந்து கொண்டு அதை அணிந்திருக்கின்றனர். ஏனென்றால் ஆண்களை விட பெண்கள் அறிவாளிகள் என்று சமூகம் சொல்கிறது.

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பெண்களின் மனோ தெகிரியம் புரியும்.


பெண்களின் டீ சர்ட் படங்கள் –

கணோளி –

நோ டே – நியூட் டே கலாட்டா 18+

கலாச்சார பாதுகாவலர்களும், கற்புள்ளவர்களும் இதை படிக்கவேண்டாம்.

நோ பேன்ட் டே –

உங்கள் முன் வரும் ஒருவர் டை உட்பட எல்லாவற்றையும் சரியாக அணிந்து கொண்டு வந்தாலும் நம்ப ரஜினி ஒரு படத்தில் வேஸ்டியை மறந்துவிடுவாரே அதுபோல பேன்ட் இல்லாமல் வந்தால் எப்படியிருக்கும். சரி ஒருவர் என்றால் பாவம் மறதி என்று நினைவு படுத்தலாம், ஆனால் எல்லோருமே அப்படியென்றால் அது நிச்சயம் நோ பேன்ட் டேவாக இருக்கும்.

அட இதென்னய்யா கலாட்டா…

வேலை வேலை என்று சந்தோசத்தை தொலைத்துவிட்ட மேலை நாட்டு மக்களின் அரிய கண்டுபிடிப்புதான் இந்த நோ பேன்ட் டே. இதன் நோக்கம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்சம் சந்தோசமாக இருப்பது. இந்த கொண்டாட்டத்திற்காக பல நிறுவனங்கள் செலவு செய்கின்றன. மக்களிடம் தங்களுக்கு அன்பு இருப்பதாக காட்டிக்கொள்ள இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் ஏது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டாத்தின் உச்சியில் இந்த விழாவை கொண்டாடுகின்றன. ஏதோ வெட்கம் கெட்ட சிலர் மட்டும் கொண்டாடுவார்கள் என எண்ண வேண்டாம், குடும்பத்துடன் கொண்டாடும் குதுகலப் பிரியர்களும் இதில் உண்டு. சிறுவர்கள், வயதுவந்த பெண்கள், தள்ளாடும் பெரியவர்கள் என பாரபட்சம் இல்லாமல் கலந்து கொள்வார்கள்.

இப்போது இந்த நோ பேன்ட் டே பல்வேறு வடிவங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று நோ பேன்ட் சப்வே டே. இந்த நாளில் ரயிலுக்குள் கூத்து நடக்கும். ஆட்டம், பாட்டம் கொண்டாட்ம் தான். இதில் நீங்கள் கலந்து கொள்ள உங்கள் பேன்டை இழக்க வேண்டியிருக்கும்.

நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் இதில் கொஞ்சம் ஆபாசமும், அருவருப்பும் இருப்பது உண்மைதான். மேலைநாட்டின் கலாச்சாரத்தை விரும்பி ஏற்கும் நம் மக்கள் இதையும் ஏற்றுக்கொணடு கடைபிடித்தாலும் ஆச்சிரியம் கொள்வதற்கில்லை.

அது சரி, நோ பேன்ட் டேஐ கொண்டாடினால் அடுத்து நியூட் டேவை கொண்டாட வேண்டியிருக்குமே. இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து மெரினா நிர்வாணப் பிரியர்களால் நிரம்பியும் போயிருக்கலாம். யார்கண்டது.

பயபுள்ளைங்க செஞ்சாலும் செய்வாங்க.