மொக்க பிகர் ஒன்னு….

இந்த மொக்க பிகர் யாருன்னு தெரியுதா…

அட தெரியலையா….

இப்பயாச்சும் தெரியுதா….

இதுக்கும் மேலே தெரியாதவங்களுக்கு ….

நீதி –

அழகு பொருட்களை வைத்து எந்த மொக்க பிகர் கூட சூப்பர் பிகர் ஆகலாம்.

ஒரு புகைப்படம் சொல்லும் செய்தி

சிற்பங்களின் மீது கொஞ்சம் ஆர்வம் எனக்கு. சிற்பங்களை ரசிப்பதற்காக மட்டுமே கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருவானைக்காவலில் மூன்று கால் முனிவரின் சிற்பத்தை பார்த்தேன். இராவணன் வீனை வாசிக்கும் ஓவியத்தை கண்டு சிறுவயதில் கதை சொன்ன அப்பாவிடமே இம்முறையும் சென்றேன்.

பிருங்கி முனிவர் –

அந்த மூன்று கால் முனிவரின் பெயர் பிருங்கி முனிவர். அவர் சிவ பக்தர். இந்த முனிவரால் தான் சிவன் உமாபாகனாக மாறினார். அந்தக் கதை.

பிருங்கி முனிவர் எப்போதும் சிவனையே வணங்குவதால் பார்வதி தேவி சிவனிடம் வேண்டி அர்த்தநாரிஸ்வராக கைலயில் இருந்தாள். சிவன் ஒரு புறமும் பார்வதி மறு புறமும் இருந்தால் சிவனை மட்டும் வணங்கலாம், இப்போது முடியாதல்லவா என பார்வதி மகிழ்ந்தாள். முனிவர் வழக்கம் போல வழிபட வந்தார். சிவன் உமாமகேஸ்வரனாக மாறியிருப்பதை கண்டு திகைத்தார். பின்பு வண்டு வடிவெடுத்து உடலை துளைத்து சிவனை மட்டும் வணங்கினார்.

இதை அவமானமாக கருதிய தேவி, எல்லா உயிர்கள் உடலிலும் இருக்கும் சதைகள் எனது வடிவமே என்பதால் அதையும் துறந்துவிடுவீரோ என்று வினவ. முனிவரும் சதைகளை உதறிவிட்டு எழும்புடன் நின்றார். ஆனால் சதைகள் இல்லாமல் அவரால் சரியாக நிற்க இயலவில்லை. உடனே ஆபாத்தான்டவன் உதவி செய்ய மற்றொரு கால் துணையாக வந்தது.

கோவிலில் ஒரு புறம் மூன்று கைகளுடனும், மூன்று கால்களுடனும் பிருங்கி முனிவர் இருக்கின்றார்.கற்பனைக்கு அளவேயில்லாமல் பல கதைகளை நம் முன்னோர்கள் உண்டாக்கியிருக்கின்றார்கள்.

கல் தேர் –

சந்தர்பங்கள் கிடைக்கும் போது மற்ற ஆச்சிரியமான படைப்புகளைப் பற்றி சொல்கிறேன். மைசூர் அருகை இருக்கும் ஒரு பழைய சிதிலமடைந்த கோவிலின் புகைப்படங்கள் கிடைத்தன. அதில் ஒரு கல் தேரை மட்டும் இப்போது பார்ப்போம்.

உங்களால் இதில் காணப்படும் சிற்பங்களை கண்டுகொள்ள முடிகிறதா.

நலினமான நரசிம்மர்-

தேரிழுக்கும் யானை-

பூதங்கள் –

மேல் பாகம் –

கிளி வாகணம் –

சிற்பக்கலையை பாதுகாப்போம்

உலகம் முழுவதும் இந்தியா இனங்காணப்படுவது காந்திய நாடென்றும், கலையில் சிறந்த நாடென்றும் தான். பல்வேறான கோவில்கள் நிறைந்த பூமி என்பதால் சிற்பக்கலைக்கு பஞ்சமில்லா பூமி இந்தியா.

மற்ற நாட்டிலிருந்து வந்து புகைப்படம் எடுக்கவும், வரலாற்றை தெரிந்து கொள்ளவும் வருகின்ற கூட்டத்தினரிடையே இருக்கும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. திருவரங்கத்தின் தாயார் சன்னதியில் வெளிநாட்டினருக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. வேறு மதத்தவருக்கு அனுமதி மறுக்கபடும் இடங்களில் எனக்கு கொஞ்சம் வருத்தம் வருவதுண்டு, என்றாலும் மகிழ்வும் வரும் இந்துவாக பிறந்தமைக்காக.

ஒருவேளை மாற்று மத்த்தில் பிறந்திருந்தால் அரிய பல சிற்பங்களும் கதைகளும் கிட்டாமலேயே போயிருக்கும். இதற்கே அதிக இடங்களை பார்க்க முடியாமல் வருத்தம் கொண்டிருக்கின்றேன். சுற்றிப் பார்க்க வேண்டிய கோவில்களுள் எனக்கு தாராசுரம் தான் முதல் இடம். அந்தக் குறையையும் தீர்த்து வைக்க கல்லிலே கலைவண்ணம் கண்டோம் எனும் வலைப்பூ இருக்கிறது. அதன் முகவரி இது http://www.poetryinstone.in/

படங்களை மட்டும் தராமல் விளக்கங்களும், நேர்த்தியான கலை நுனுக்கங்களை விவரித்து எழுதியிருக்கும் விதமும் அருமை. பலவகையான இடங்களுக்கு சென்று சேகரித்த விசங்களை படிக்கும் போது, எனக்கு பொறாமையாக இருக்கிறது, கடவுள் அவர்களுக்கு மட்டும் ஏதோ சலுகை காட்டிவிட்டது போல.

நான் பார்த்து ரசித்தவை,.

கற்சங்கிலி –

நவீன கருவிகளுன் செய்யப்படுகின்ற வேலைகளை விட சின்ன சின்ன உளிகள் கொண்டே முடித்திட்ட நம் சிற்பிகள் இன்னும் வியப்பு தருகின்றார்கள். பலருக்கும் திருச்சி என்றவுடன் மலைக்கோட்டைதான் ஞாபகம் வரும். அந்த மாபெரும் மலைக்கோட்டையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் அழகான ஓவியக் கூடம் இருக்கிறது.

நான்கு, ஐந்து உடல்களுடன் உள்ள குரங்கு ஓவியம் வெகுவாக ஈர்த்தது. அந்த ஓவியத்தின் நடுப்பகுதியில் மட்டும் ஒரு குரங்கு தலை காணப்படும். அந்த தலைக்கு தகுந்தாற்போல குரங்குகளின் உடல்கள் சுற்றி சுற்றி வரையப்பட்டிருக்கும். அந்தக் கூடத்தில் கல்சங்கிலி ஒன்றை கண்டேன். இரும்பு சங்கிலியைப்போலவே முழுக்க முழுக்க கற்கலால் நேரித்தியாக செய்யப்பட்ட அற்புதம் அது.

குடைவரைக் கோவில் –

இது நாமக்கல் மலையில் உள்ளது. நாமக்கல் என்றாலே பலருக்கும் ஆஞ்சிநேயர்தான் ஞாபகம் வருவார். சிலருக்கு முட்டையும், விவரம் அறிந்தவர்களுக்கு எய்சும் ஞாபகம் வரலாம். நாமகிரி என்ர அந்த மலையிலும் கோட்டை அமைந்துள்ளது. அந்த மலையில் இருக்கும் நரசிம்மர் சந்னதியில் இருக்கும் குடைந்து செய்யப்பட்ட சிலைகள் மனதை கொள்ளையடிப்பவை. நரசிம்மரின் இருபுறமும் தேவர்கள், புராண சிற்பங்களும் இருக்கும். எல்லாம் குடைந்து செய்யப்பட்டவை. பக்தனுக்கு கடவுளாக காட்சி தரும் சிலைகள். எனக்கு அருமையான கலையாகவும் தெரிந்த்தே பெரும் பாக்கியம்.

பெரிய நந்தி –

தஞ்சையை தவிற பெரிய நந்தியை நான் வேறெங்கும் பார்த்து இல்லை. மிகப்பெரிய கோவிலின் ஆவுடையாரும் சிறப்பு. கோவில் அமைப்பு மிகவும் பெரியது. எனக்கு தெரிந்து பல காலமாக வராகிக்கென தனி கோவில் இருப்பது அங்குதான். இப்போது சில இடங்களில் சப்த கன்னியர்களில் வராகிக்கும், கௌமாரிக்கும் கோவில்கள் அமைக்கப்படுகின்றன. தினமலர் ந்ந்தி அபிசேகத்தை எப்போதும் வண்ணப் படங்களுடன் வெளியிடும். அந்தப் படங்களைப் பார்க்கவே அத்தனை இன்பமாக இருக்கும் எனக்கு.

கோவிலுக்குள் இசைகலைஞர்கள் –

பறைகளை அடிக்கும் இருவரின் சிலைகள் தொட்டியம் மருதகாளியம்மன் கோவிலுக்குள் இருக்கும். மதுரையில் இருந்த காளியின் திருவிழாவிற்கு பறையடிக்க சென்ர இருவரின் இசையில் மயங்கி தேவி. அவரிகளுடனே தொட்டயத்திற்கு வந்துவிட்டதாக தளபுராணம் இங்கு சொல்லப்படுகின்றது. அதற்கு சாட்சியாய் இரண்டு பறையடிக்கும் மேதைகளும் அங்கே சிலையாய் இருக்கின்றார்கள். இந்த கோவிலில் எருமைமாடுகள் பலி கொடுப்பதை பார்த்திருக்கின்றேன். ஆடுகளைப் போல மாடுகள் பலி கொடுக்கும் இடம் எனக்கு தெரிந்து இது ஒன்று மட்டுமே.

நுண்ணிய வேலைபாடுகளுடன் இருக்கும் சிலைகள் சுற்றுப் பிரகாரங்களில் சில புராணக் கதைகள் முழுவதும் செதுக்கிஇருக்கும் சிற்பிகளுக்கு பாராட்டையும் நன்றியையும் அந்த சிற்பங்களை பலகாலம் பாதுகாத்து சொல்லவேண்டும். உயிருள்ள புலிகளை பாதுகாக்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது போல சிலைகளை காக்கவும் ஏதேனும் அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.