பிள்ளைமார் சமூகம்

பெரியாரும் அவரது சீடர்களும் இன்றும் தோல்வி அடைவது கடவுள் மறுப்பு கொள்கையிலும், சாதி ஒழிப்பிலும் தான். தமிழகத்தில் தெருக்கு தெரு முளைத்திருக்கும் கோவில்களும், சாதிச் சங்கங்களும் இதை நன்கு உணர்த்துகின்றன. சாதியின் அடிப்படையில் மட்டுமே ஓட்டுகள் கிடைக்கும் என அரசியல் வாதிகள் அதனை வலு சேர்க்க, சாதியின் அடிப்படையில் மட்டுமே சலுகை கிடைக்கும் என மக்களும் சாதியை வளர்க்க தொடங்கி விட்டார்கள்.

வன்னியர் சமூகம் அரசியலில் பெரும் பங்கு கொண்டுவிட்டதை முன் உதாரணமாக கொண்டு, சாதியின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகளுக்காக எல்லா சாதி மக்களும் தங்களை குழுவாக ஒருங்கினைக்க பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளன. சாதிச் சங்கம் அமைப்பது, தங்களுக்கென திருமண மண்டபம் அமைப்பது, தங்களுடைய குல தெய்வங்களின் கோவில்களை அமைப்பது என மிக தீவிரமாக செயல்பட்டு வரும் மக்களுக்கு, இப்போதைய உடனடித் தேவை தலைவர்கள்.

தங்களுடைய சாதியில் பெரிய மனிதராக விளங்கியவரையோ, அல்லது பெரிய மனிதர்களில் தங்கள் சாதியை சார்ந்தவர்களையோ தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவர் சமூகத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க அய்யாவும், நாடார் சமூகத்திற்கு காமராசர் அய்யாவும் உள்ளது போல பிள்ளைமார் சமூகத்திற்கு யாரை தேர்ந்தெடுப்பதென தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மிகவிரைவில் புதிய ஜாதிக் கட்சி மிகுந்த பலத்தோடு அரசியலில் குதிக்கும் எனவும் தெரிகிறது.

பிள்ளைமார் சமூகத்தில் உள்ள பெரியவர்களின் பட்டியல் இது –

வ.உ.சிதம்பரம் பிள்ளை – கப்பலோட்டிய தமிழன்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை – தமிழ்தாத்தா உ.வே.சாவின் ஆசிரியர்
மனோன்மணியம் சுந்திரம் பிள்ளை – தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர்
தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி
ஆனந்தரங்கப் பிள்ளை – கப்பல் ஓட்டிய முதல் தமிழர்
எஸ்.வையாபுரிப் பிள்ளை – தமிழறிஞர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை – தமிழ் நாவலாசிரியர்
சுப்ரமணியபிள்ளை – கட்டபொம்முவின் மந்திரி
சர்தார் வேதரத்தினம் பிள்ளை – சுகந்திர போராளி
ஜெய்ஹிந்த் செண்பகராமன் – சுகந்திர போராளி
வடலூர் வள்ளலார் – சைவ சன்மார்க்கத் தலைவர்
மறைமலையடிகள் – தமிழ்த் தொண்டர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் – புலிகளின் தலைவர்
தோழர் ஜீவா – கம்யூனிச தலைவர்
ஏ.சி.பி. வீரபாகு – முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
எம்.சி. வீரபாகு – சுகந்திர போராட்ட தியாகி
பரலி. சு. நெல்லையப்பர் – பாரதியின் உற்ற நண்பர்
சி.வை. தாமோதரம் பிள்ளை – பதிப்புப் பணியில் முன்னோடி
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை – விடுதலைக் கவிஞர்
கி.ஆ.பெ. விஸ்வநாத பிள்ளை – தமிழ் வளர்த்த மகாஞானி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – சிறந்த திரையுல கவிஞர்
கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை – உலகப் புகழ் பெற்ற கணித மேதை
அகிலன் – இலக்கிய எழுத்தாளர்
வல்லிக்கண்ணன் – பிரபல எழுத்தாளர்
சுகிசிவம் – ஆன்மீகப் பேச்சாளர்
ஜெயகாந்தன் – பிரபல எழுத்தாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

இந்தப்பட்டியலில் இடம் பெறாத தலைவர்கள் மன்னிக்கவும், சாதித் தலைவர்கள் யாரேனும் இருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும். பெயரோடு அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்தால் வருங்கால கட்சிக்கு உதவியாக இருக்கும்.

நன்றி –

இரா. மணிகண்டன், குமுதம்