கலைத்தாகம் – சிறுகதை

yyஎன்னடே, எதுக்கு ஆளனுப்பி விட்டே.
அண்ணே அடுத்த புரோஜெக்ட்
அதுக்குள்ளவா. ஏன்டே, போன தடவை கொடுத்ததையே முடிக்கறத்துக்குள்ள போதும் போதும் ஆகிடுச்சு. செத்த கழிச்சு ஏற்பாடு பண்ணக்கூடாதா.
அதெல்லாம் நம்ம கையிலேயா இருக்குதுண்ணே. இப்பவே பதுக்கி வைச்சுக்கிட்டாத்தான் அவுங்களுக்கு தோதுவா இருக்கும் போல. எல்லாத்தையும் விரசா முடிங்கன்னு சொல்லிடாங்க.
அந்தாளுக்கு வேற சோளியே இல்லையா. போன தடவக் கொடுத்தை வித்திருப்பான்னாலே.
நீங்க வேற நாம கொடுத்தது இரண்டே இரண்டு. அந்தாளுக்கு முதலமைச்சர் மாதிரி ஒன்பது ராசியாம். போன தடவை நூத்தியெட்டு பொருள் கடல் தாண்டி போயிருக்காம்.
அடக் கடவுளே, கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போனா கோயிலையேக் காணாமுன்னு பழமொழி வந்திடும் போல. அது சரி. இந்த தடவை கொஞ்சம் விலையை ஏத்தி சொல்லிடு. ஒன்னுத்துக்கும் ஆகாத கூட இங்க எடுக்கறத்துக்கு படாதபாடு பட வேண்டிக் கிடைக்கு.
அதெல்லம் சரிண்ணா. நான் பார்த்துக்குறேன். இந்த தடவை எல்லாமே கல்லுங்க. ஒரு ஐம்பொன், செம்பு சிலை கிடையாது. நமக்கு பொருளை எடுத்துக்கிட்டு போறது செம சுலபம்.
சரி கிடக்கட்டும். எந்தக் கோயில், எந்தச் சிலை.
அண்ணே, திருவட்டார்.
அட்ரா.. அந்த ரதி மன்மதன் சிலையா.
இல்லைண்ணே.
டேய் பெருமாளேவாடா.
அய்யோ.. அண்ணே இது ஏதோ ஒரு கோமாளி அவன் சுன்னையை எடுத்து அவனே வாயில வைச்சுக்கிற சிலையாம்.
கருமம்,.. கருமம்.. இதையெல்லாம் எடுத்துக்கிட்டு வெளிநாட்டுக் கொண்டு போய் நம்ம மானத்தை வாங்கவாடா. இந்த மாதிரி சிலையெல்லாம் எதுக்குத்தான் நம்ம சிற்பிங்க செதுக்கி வைச்சானுங்களோ. அதுசரியாப் போச்சு. வேற என்ன சிலை வேணுமாம்.
இப்போதைக்கு இதுமட்டும் தான்ணே. இந்தச் சிலையை பாண்டிச்சேரி குடோனுக்கு அனுப்பி வைச்சாதான் அடுத்தது.
ஓகோ. சரிடா. இதுக்கு அந்த மானங்கெட்ட ஆபிசருங்கள சரிக்கட்டி சீக்கிரம் கோயில் மண்டபத்தை வேலை செய்ய வைக்கனும், அதுக்கு அப்புறம் அந்தத் தூணை மட்டும் மேல ஒடச்சு. அது பின்னமாகிடுச்சுன்னு கோயிலுக்கு வெளியே போட்டுடலாம். எல்லோரும் அதைப்பத்தி மறந்த உடனேயே அதை பாண்டிச்சேரிக்கு அனுப்பிடலாம். நான் அந்த மரத் தேரை வாங்கி வைச்சுருக்கேனே, அதுல இருக்கிற பிரம்மா சிலைக்கு ஒரு கணக்கு வந்திருக்கு. இவனுங்கக்கிட்ட கேளு மரச்சிலையை வாங்கிக்குவானுங்களான்னு.
அண்ணே அவனுங்களுக்கு இந்த மரமெல்லாம் தேவைப்படாதுன்னா, இப்போதைக்கு கல்லுக்குதான் வேலையே.
சரிடே. வந்திருக்கிறது டெல்லிக்காரன் பாரு, நம்ம ஊரு காசுக்கு மதிப்பு போடறான். வெளிநாட்டுக்காரன் யாராவது சிக்குன்னா சொல்லு. அதைக் கொடுத்திடலாம். மரம் பாரு நாம ரொம்ப காலம் வைச்சுக் காப்பாத்த முடியாது.
ம்.. நீங்க போயி திருவட்டாரு வேலையைப் பாருங்க. நான் சொல்லியனுப்பறேன்.
சரிடே.

குறிப்பு : நான் மிகவும் ரசித்துப் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு உந்துதலாக அமைந்த திருவட்டாறு ஆதிக்கேசவப் பெருமாள் கோயில் பற்றி சமீபத்தில் கேள்வியுற்றேன். திருவட்டாறு பற்றி இணையத்தில் தேடியமையால் எண்ணற்ற செய்திகள் கிடைத்தன. அச்செய்திகளையும் ஒரு கதையும் இணைக்க எனக்கு தற்போதைய நிலையில் சிலைத்திருட்டு செய்திகள் கை கொடுத்தன. அதனையே கதைக்களமாக்கியுள்ளேன்.
மங்களாசனம் செய்யப்பட்ட கோயிலின் துரும்பை எவரும் எடுக்க முடியாது என்று நினைத்தால் மூலவரையே விலைக்கு விற்றுவிடக்கூடியவர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள். இறை நம்மைக் காப்பது போல தன் சிலையையும் காத்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s