செவிட்டு சாமியின் கதை

ஈசனை வணங்குவதற்காக சிவாலயம் சென்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுதெல்லாம் சிவாலயம் சென்றால் தூணில் என்ன செதுக்கியிருக்கின்றார்கள். கோபுரத்தில் இருக்கும் சிற்பங்களின் கதையென்ன என்று ஆய்வு செய்து கொண்டே திரும்பிவிடுகிறேன். எப்பொழுதாவது ஈசனை வணங்க வேண்டுமென்றால், அக்கணமே நினைவில் வேண்டுவதோடு சரி.

ஆனால் சிறுவயதில் யாரேனும் கூறிய நியதிகளுடன் மிகக்கவனமாக ஈசனை வணங்குவேன். சிவாலயங்களின் வழிபாட்டு முறைகளையும், எந்த எந்த தெய்வங்களை எப்படி வணங்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றார்களோ அப்படியே வணங்கியிருக்கிறேன். கருவறையில் இருக்கும் லிங்கத்தினை வணங்கிவிட்டு சுற்றி வருகையில் தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய விஷ்ணு, வடக்கு நோக்கிய பிரம்மா ஆகியோரை தரிசித்துவிட்டு தனியாக சந்நிதி கொண்டிருக்கும் செவிட்டு சாமியிடம் வருவேன்.

எத்தனை பலமாக கைதட்ட முடிகின்றதோ அத்தனை பலமாக தட்டி அட்டனஸ் போட்டுக் கொள்வேன். நான் அறிந்தது செவுட்டு சாமி எப்பொழுதும் சிவனை நினைத்து தியானத்தில் இருப்பார். அவருக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை சொ்ன்னால்தான் நல்லது நடக்கும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. சிலர் சொடுக்கிடுவார்கள். எனக்கு சத்தமாக சொடுக்கிட வராது என்பதால் கைதட்டுவேன். கொஞ்சம் வளர்ந்த பொழுது செவுட்டு சாமியின் பெயர் சண்டீசர் என்பதை அறிந்தேன் அத்துடன் சத்தம் அதிகமில்லாமல் சொடுக்கிடுவேன். இவ்வாறு சொடுக்கிடுவதும், கைதட்டுவது தவறு அவரை அமைதியாக வணங்கவேண்டும் என்று சிலர் கூறினார்கள்.

சண்டீசர்

சண்டீசரை வணங்குவதற்கு இத்தனை கெடுபிடிகளா?. யார் இவர்?. இவரை எப்படிதான் வணங்குவது? என்று அறிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

“சண்டீசர்” என்பது நான் நினைத்துக் கொண்டிருந்த மாதிரி ஒரு சாமியே அல்ல. அது ஒரு பதவி. எப்படி அலுவலகங்களில் கணக்கு அதிகாரி இருக்கின்றாரோ!, அதுபோல சண்டீசர் என்பது சிவாலயத்தின் நிர்மால்ய அதிகாரப் பதவி. நிர்மால்யம் என்பது சிவபெருமானுக்கு படைத்த பொருள்களையும், அவருக்கு அணிவித்த ஆடைகள், மாலைகள் என அனைத்தையும் குறிக்கின்ற சொல். நிர்மால்யம் என்ற சொல்லிற்கு நிகராக சிவப்பிரசாதங்கள் என்ற தமிழ் சொல்லைப் பயன்படுத்தலாம்.

சண்டீசர் என்பது ஒரு பதவியென்றால், அதை கொடுப்பவர் யார்?. வேறு யார் சிவன் தான். யார் சிவன் மீது அதீத பாசத்தினையும், சிவ நிந்தனை செய்வோரிடத்து அதீத கடுமையும் கொள்கின்றார்களோ, அவர்களுக்கு சிவன் இப்பதவி தருகின்றார். இவ்வாறு சிவனிடமிருந்து பதவி பெற்றவர்களின் பட்டியல் சரிவர தெரியவில்லை. நான்முகனான பிரம்மா சதுர்முக சண்டீசர் என தில்லையிலும், தர்ம அதிகரியான யமதேவன் யம சண்டீசர் என திருவாரூரிலும் இருக்கின்றார்கள். மற்ற சிவாலயங்களைப் பொறுத்த வரை சண்டீச பதவியில் இருப்பவர் விசாரசருமர் எனும் சிவபக்தர்.

விசாரசருமர் –

எச்சத்தன் – பவித்திரை என்ற பிராமணத் தம்பதியரின் மகன் விசாரசருமர். ஒரு முறை இடையரினச் சிறுவன் பசுவினை துன்புருத்துவது கண்டு ஆவேசம் கொண்டு, அவனைத் தடுத்து, அவனிடமிருந்த பசுக்களை பராமரிக்கத் தொடங்கினார். சில நாட்களில் பசுக்களின் பாலை இறைவனுக்கு அபிசேகம் செய்ய எண்ணி, மணலினால் லிங்கம் அமைத்து அதற்கு அபிசேகம் செய்து வந்தார். பசுவிற்கு உரியவர்கள், பாலை மண்ணில் கொட்டி வீணாக்குகிறானே என்று எச்சத்தனிடம் கடிந்து கொண்டனர்.

எச்சத்தனும் இதை தடுத்த நிறுத்த பூசையிலிருந்த விசாரசருமரிடம் பேசிப் பார்த்தார். விசாரசருமர் கண்டுகொள்ளாமல் பூசையிலேயே கவனமாக இருந்தார். கோபம் கொண்ட எச்சத்தன் கோலால் விசாரசருமரை அடித்தும் பார்த்தார். விசாரசருமர் அசைவதாக இல்லை. பூசைக்கு வைத்திருந்த பால்குடத்தினை காலால் எத்தி தன்னுடைய கோபத்தினை காண்மித்தார் எச்சத்தர். சிவ அபிசேகத்திற்கு வைத்திருந்த பாலை உதைத்து தள்ளியமைக் கண்டு விசாரசருமருக்கு கோபம் வந்தது. தன்னருகே இருந்த கோலொன்றை எடுத்து எச்சத்தனின் காலை நோக்கி வீசினார், கோல் மழுவாக (கோடாரி) மாறி காலை வெட்டியது.

பெற்ற தகப்பன் எனவும் பாராது சிவநிந்தனை செய்தமைக்காக தண்டனை கொடுத்தபடியால், சிவன் பார்வதி சமேதராக தோன்றி, த்வனி சண்டர் பதவி தந்தார். இவரை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சண்டீசரை வணங்கும் முறை

சிவாலய தரிசனமும், சிவ வழிபாடும் சண்டீசரை வணங்கினால் மட்டுமே நிறைவடையும். எனவே இவர் சந்நிதியில் “அம்மையையும் அப்பனையும் தரிசித்த பலனைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டி, சிவாலய பிரசாதமன திருநீறு, மலர் போன்றவற்றைச் சமர்பித்து வணங்க வேண்டும். பின் தாளத்திரயம் எனப்படும் பூஜை தாள முறையை செய்யலாம். இதற்கு வலது கையின் நடுவிரல்களை இடதுகையின் உள்ளங்கையில் மும்முறை மெதுவாக தட்ட வேண்டும். அதைவிடுத்து கைகொட்டுவதும், சொடுக்கிடுவதும், ஆடையிலிருந்து நூல் எடுத்து அணிவிப்பதும் முறையன்று. இவருக்கும் மூலவருக்கும் இடையே வருதல் கூடாது என்பதால் இவருடைய சந்நிதியை வலம் வருதல் தடை செய்யப்படுகிறது.

கருவி
* பெரியபுராணம் – திருமுருக கிருபானந்தவாரியார்

மேலும்
சண்டர்
சண்டேசுவர நாயனார்

6 comments on “செவிட்டு சாமியின் கதை

 1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  அன்புடையீர்.வணக்கம்.
  ஒரு அற்புதமான பதிவு எழுதி உள்ளீர்கள்.
  எனக்கு விடைதெரியாமல் இருந்தது.
  தங்களால் இன்று அறிந்துகொண்டேன்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நானும் ஒரு காலத்தில் அறியாமல்தான் இருந்தேன் நண்பரே, அதன் காரணமாகவே பதிவிட தோன்றியது.

   எல்லா மதங்களிலும் குருமார்கள் தங்களின் மதத்தினை பக்தர்களுக்குப் போதிக்கின்றார்கள். நம் மதத்தில் காசு வாங்கி கற்பூரம் காட்டுவதில் தான் ஈடுபடுகிறார்கள். 😦

 2. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  நமது மதத்தின் சிறப்பே அதுதான்
  ஹிந்துதத்தை யாரும் வளர்த்துவிட வேண்டியதில்லை.மற்ற மதத்தில்ஒழுக்கம் கட்டுப்பாடு,வாழும் வாழ்க்கை முறை,தனி மனித ஒழுக்கம் அனைத்தையும் போதனை செய்கிறார்கள்.
  ஆனால் ஹிந்து மதத்தில் மட்டுமே எவனும் எவனுக்கும் குருவுமில்லை,ஆசானுமில்லை.
  அனைத்தையும் அவனவன் அவனவன் வாழ்க்கையில் அனுபவத்து தெரிந்துகொள்ளச் சொல்கிறது.
  அப்படி தெரிந்துகொள்வதால்தான் அவன் அவனது வாரிசுகளுக்கு நல்லது கெட்டதை தனது வாழ்க்கை அனுபவத்தால் சொல்லி வழி நடத்திச் செல்கிறான்.
  ஹிந்து மதம் சொல்லிக்கொடுத்து புரிவதில்லை.
  அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டிய மதம்.
  தங்களது பதிவில் கூட நமது மதத்தில் உள்ள குறையை நாமே சுட்டிக்காண்பிக்கிறோம்.
  ஆனால் மற்ற வலைதளங்களில்,பிளாக்குகளில் மற்ற மதங்களில் உள்ள நியாமான ஆதங்கத்தை எழுதினால் கூட எவ்வளவு கேவலமாக விமர்சிகிறார்கள்.
  அதனால்தான் ஹிந்து மதத்தை யாரும் வளர்க்க வேண்டியதில்லை..
  அதே சமயம் யாராலும் அழிக்க இயலாததும் கூட
  வாழ்க வளமுடன்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தங்களது மொழிகளை ஏற்கிறேன் நண்பரே, பிற மதத்தினை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது எழுந்த ஏக்கமே என் முந்தைய மொழி. இம்மதம் தோன்றியிருந்தால்தானே அழிவதற்கு ஆதியும் அந்தம் இல்லா இறைவனைப் போன்றது நம் மதம். நன்றி நண்பரே.

 3. Dindigul Dhanabalan (DD) சொல்கிறார்:

  விளக்கம் மிகவும் அருமை… நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s