பொன்னியின் செல்வன் – திறனாய்வு

ஒரு புத்தகத்தினை படிக்கிறேன் என்று நண்பர்களிடமோ, உறவுகளிடமோ சொல்லும் போது, ஓ அப்படியொரு புத்தகம் இருக்கிறதா?. அதன் ஆசிரியர் பெயர் என்ன?. எதைப் பற்றிய கதை அது?. அந்த புத்தகத்தினை நான் படித்திருக்கிறேனே, நன்றாக இருக்கும் நீயும் படி போன்ற சம்பாசனைகள் வருவது வழக்கம். ஆனால் இம்முறை நான் பொன்னியின் செல்வன் படிக்கிறேன் என்றபோது “இப்போதுதான் படிக்கிறாயா அப்பனே!”என்று திருமலை கதாப்பாத்திரம் கூறுவது போன்ற கிண்டலான மறுமொழிதான் கிடைத்தது. பெரும்பாலும் எல்லோருமே பொன்னியின் செல்வனை படித்திருந்தார்கள். அவர்களிடம் நான் உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் யாது?. நந்தினி வீரபாண்டியனின் மகளா மனைவியா?. ஆதித்த கரிகாலனை கொன்றவர் யாராக இருக்கும்?. போன்ற கேள்விகளை தொடுத்து என்னை காப்பாற்றிக் கொண்டேன். வலையுலகில் பெரிய ஆய்வே பொன்னியின் செல்வனைப் பற்றி நடந்துள்ளதை, நீங்கள் காணமுடியும். ஒருவர் ஏழுவயதில் பொன்னியின் செல்வனை படித்ததாக எழுதியிருந்த போது, அது சாத்தியமே என்று தோன்றியது. பொன்னியின் செல்வனை சிறுபிராயத்திலேயே படித்திருக்க முடியும், அதை புரிந்து கொள்ளவும் முடியும்.

பொன்னியின் செல்வனை நான் இதற்கு முன் ஒரு முறை வாசிக்க ஆசை கொண்டிருக்கிறேன். கோடை கால விடுமுறை நாட்களில் மணவாடி கிராமத்திற்கு சென்றிருந்தபோது, அங்கிருக்கும் சிறு நூலகத்தில் எங்கள் பக்கத்துவிட்டு தங்காள்தான் பொறுப்பு வகித்தாள். என்னை விட சிறுபெண்ணான அவளுக்கு இருந்த புத்தக ஆர்வத்தினால் நூலகர் போலவே செயல்பட்டாள். அவளுடைய உறுப்பினர் அட்டையை உபயோகம் செய்து புத்தகம் எடுத்து படித்துக் கொள்ள அனுமதி தந்தாள். நானும் அவளும் நூலகத்திற்கு சென்றோம், அங்கே கலைக்களஞ்சியம் போன்ற பருமனுடைய பொன்னியின் செல்வனை பார்த்தேன். கைகளில் முதல் பாகத்தினை எடுத்து விரிந்த கண்களுடன் நோக்கினேன். அத்துடன் நின்றிருக்கலாம். அதனருகே இருந்த ஐந்து பாகங்களையும் கண்டதும், ஐந்து பாகங்களை முடித்திட யுகமொன்று தேவைப்படுமென முடிவு செய்து கொண்டேன். ஏன் அந்தப் புத்தகத்தினை எடுத்துவிட்டு பின் வைத்துவிட்டாய் என்று கேட்டாள். அதை இந்த விடுமுறையில் படித்துமுடித்துவிட முடியும் என்று தோன்றிவில்லை என்று கூறி, சில சின்ன புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.

அதன்பிறகு பொன்னியின் செல்வனை பார்க்கிற பொழுதெல்லாம் எனக்கு பழைய நினைவுகள் வந்து, அதன் பெரும் கனம் பயம் செய்வித்தே வந்தது. கல்கி எழுத்தின் ருசியை பார்த்திபன் கனவில் கண்டேன். இருந்தும் பொன்னியின் செல்வனை மட்டும் தவிர்த்துவந்தேன். மதனுடைய ஒலிப்புத்தகங்கள் நன்றாக இருந்தமையினால் மேலும் சில புத்தகங்கள் ஒலிவடிவில் கிடைக்கின்றனவா என்று தேடியபோது, பொன்னியின் செல்வன் அகப்பட்டுக் கொண்டது. கேட்கதானே போகிறோம் என்ற உணர்வு இதுநாள் வரை இருந்த பயத்தினை நீக்கிவிட்டது. சில அத்தியாயங்களை கேட்டதுமே, பொன்னியின் செல்வனைப் பற்றி சகோதரன் வலைப்பூவில் எழுதலாம் என்ற எண்ணம் உதயமாயிற்று. ஆனால் ஏற்கனவே விஷ்ணுபுரம் போல தொக்கி நிற்க வேண்டாமென தீர்மானித்து முழுவதுமாக முடித்தபின்பே எழுத தொடங்கியிருக்கிறேன். இடையே சும்மா இருக்க முடியாமையினால் விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தொடங்கி, செம்மை படுத்தியிருக்கிறேன்.  அங்கு சில நண்பர்கள் எனக்கு உதவி செய்து பொன்னியின் செல்வன் குறித்தான பல சந்தேகங்களையும்,  தவறான புரிந்துணர்வினையும் நீக்கினார்கள்.  அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

பொன்னியின் செல்வன் வாசிப்பு முடிந்த பின், அதன் மைய நோக்கம், கதைமாந்தர் இயல்பு போன்றவற்றை அலசி பார்க்கலாம் என்று இந்த பதிவை தொடங்கியிருக்கிறேன்.

தியாக உள்ளம் – பொன்னியின் செல்வன் என்ற பெயரும், இறுதி பாகமான தியாக சிகரமும் அருள்மொழிவர்மனை (ராஜராஜன்) முன்வைத்தே கட்டமைக்கப்பட்டது. மதுராந்தக தேவனான தன் சித்தப்பனுக்கு சோழப் பேரரசை தியாகம் செய்த அருள்மொழியை கொண்டாடவே பொன்னியின் செல்வனை எழுதியதாக கல்கியே முடிவுரையில் குறிப்பிட்டுள்ளார். அருள்மொழியின் வீரத்திற்காக சம்பவங்களும், வாழ்வினையும், மனநிலையையும் கல்கி புனைவாக கூட சொல்லவில்லை. வானதி, அருள்மொழியின் திருமணம் கூட சொல்லப்படாமல் மறைந்திடுவதைப் பார்க்கும் போது, இந்த கோணத்தினை ஏற்றுக் கொள்வது சற்று கடினமான காரியம். மூன்றரை வருடங்கள் எழுதப்பட்ட போது, கல்கியின் மனம் மதுராந்தகனின் பட்டாபிசேகத்தோடு முடித்துவிடலாம் என்று எண்ணியிருக்கவும் கூடும்.

வந்தியத்தேவன் – இப்புதினத்தில் கதைநாயகன் என்று அங்கிகாரம் செய்யப்பட்டிருப்பவன் வந்தியத்தேவன்.  குந்தவை மீதான காதல், மணிமேகலையின் ஒருதலை காதல், ஆதித்த கரிகாலன், அருள்மொழி, சேந்தன் அமுதன், கந்தன் மாறன், திருமலையப்பன் என்று நட்பு பட்டியல், இப்படி நிகழ்பவைகளுக்கும் வந்தியத்தேவனுக்குமாக பிணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. மலையமான், வேளார், பழுவேட்டரையர் போன்றவர்களின் ஆதரவும் வந்தியத்தேவனுக்கு உண்டு. ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது நாவலின் மையம் வந்தியத்தேவன் அல்ல என்பது புலப்படும். நீரோட்டம் போன்ற புதின முறைக்கு வந்தியத்தேவனை கல்கி பயன்படுத்தியுள்ளார் என்பது மட்டுமே உண்மை.

நந்தினி – பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் எப்படி அங்கிகாரம் பெற்ற கதாநாயகனோ, அதுபோல அங்கிகரிக்கப்பட்ட வில்லி நந்தினி. ஆதித்த கரிகாலனின் உயிருக்குயிரான காதலியாக இருந்தவளை, அவன் உயிரை எடுக்கும் விரோதியாக விதி மாற்றுவதை காணலாம். ஆனால் ஒன்றினைச் செய்ய வேண்டாம் என்று கூறினால், அதை முன்வந்து செய்யக் கூடிய ஆதித்த கரிகாலனை நந்தினி முழுமையாக அறிந்திருந்தும். வீரபாண்டியனை கொல்ல வேண்டாம் என்று நந்தினி கூறியதன் காரணமும், தகப்பனை காதலன் என்று கூறியமையும் ஆதித்த கரிகாலனை கொலைகாரன் ஆக்குவதற்காகவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரு துருவங்கள்- நேர் எதிர் குணாதிசயம் கொண்ட இரு பெண்களை இப்புதினத்தில் காணமுடிகிறது. ஒருத்தி பெருங்கடலில் தனியாக பயணம் செய்யக்கூடிய துணிவுள்ள படகோட்டும் பெண்ணான பூங்குழலி.  மறுபுறம் சிறுபார்வை சீண்டலுக்கே மயக்கமிட்டு விழும் கொடும்பாளூர் இளவரசி வானதி. சக்கரவர்த்தினியாக காதலை பயன்படுத்தும் பெண்ணான பூங்குழலி. அருள்மொழி மீதும், வந்தியத்தேவன் மீதும் அவள் வைக்கும் காதலுக்கு காரணமாக அரச பதவியை குறிப்பிடுகிறாள். சக்கரவர்த்தியானியாக வேண்டாம் என்பதற்காகவே காதலையும் விடத்துணியும் பெண்ணாக வானதி. அருள்மொழி மீதான அளவுகடந்த காதலை விடுவதற்கு அரச பதவியை காரணமாக குறிப்பிடுகிறாள். இருவரின் மனோரதமும் நிறைவேறியதாக கல்கி குறிப்பிடுகிறார்.

மூன்று குடும்பங்கள் – சுந்தர சோழர் குடும்பத்திற்கும், தியாகவிடங்கர் குடும்பத்திற்குமான தொடர்பாக கதை பின்னப்பட்டிருப்பதாக நினைத்தேன். இந்த இரு குடும்பங்களை தவிற வீர பாண்டியன் குடும்பமும் இறுதியாக இணைந்திருப்பது கதையின் இறுதியில்தான் புரிகிறது.வீரபாண்டியனின் ஒரு வாரிசு சோழ இளவரசனாக வளர்கிறது. மறு வாரிசு தியாகவிடங்கரின் உறவினர் வீட்டில் வளர்கிறது. சோழவாரிசு தியாகவிடங்கரின் சகோதரி வீட்டில் வளர்கிறது. இப்படி ஒரு குடும்பத்தின் வாரிசு மறு குடும்பத்தில் வளர்வதும், இறுதியாக உண்மை அறிந்து தத்தம் குடும்பங்களை சேர்வதும் கதையின் ஒரு கோணம். அரச குடும்பத்து வாரிசுகள் அரண்மனையில் வளராமல், குடிசையில் வளர்வதை கண்டாலும், குடிசையில் இருக்கும் வாரிசு எதுவும் அரண்மனையில் வாழவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆதித்த கரிகாலன் கொலை – புதினத்தின் முன் சிறுபகுதியையும், பின் சிறுபகுதியையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் ஆதித்த கரிகாலனின் கொலையே  நாவலின் மையப்புள்ளியாக இருப்பதை அறிய முடியும். ஆதித்த கரிகாலனை கொலை செய்ய திட்டமிடுதல் முதலிலும், கொலை நடுவிலும், கொலையின் விளைவால் எழுந்த ராஜ்ய சர்ச்சை இறுதியிலும் இடம்பிடிக்கின்றன.  ஆயிரம் வருடங்களுக்கு மேலாகியும் சிக்கல் நிறைந்த கொலையாக கருதப்படும் ஆதித்த கரிகாலன் கொலையை மேலும் சிக்கலாகவே கல்கி சொல்லியிருக்கிறார். வீரபாண்டியனை முறையற்று கொன்றமையால், ஆதித்த கரிகாலனை பாண்டிய ஆபத்துதவிகள் கொன்றார்கள் என்ற பழிவாங்கும் படலமே புதினத்தில் விரவியிருக்கிறது.  இருந்தும் பட்டத்து இளவரசர் கொலையை விதி என்று கூறி அனைவருமே ஜஸ்ட் லைக் தட் என்பது போல செல்வதும், ஆபத்துதவிகளை கண்டு கூட அவர்களை பிடிக்க சிரத்தியின்றி இருப்பது போலவுமான கதையமைப்பு ஆச்சரியமான ஒன்று.

பொன்னியின் செல்வனின் மைய நோக்கம் எதுவென கண்டறிவது சற்று கடினமான காரியம். ஒருவருக்கு இதுதான் பொன்னியின் செல்வன் கதை என்று தோன்றுவதும், இதுதான் இக்கதையின் நீதி என்று தோன்றுவதும் மற்றொருவருக்கு ஏற்க முடியாத அளவிற்கு இருப்பதை நான் உணர்கிறேன். மேலே கூறப்பட்ட ஐந்து கோணத்திற்கும் சம்மந்தமே இல்லாத கோணங்களும் உண்டு. அதனை கதாப்பாத்திரங்களின் திறனாய்வில் கூறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

பி.கு –

ஒரு புதினத்தினை எடுத்து வாசித்த பின்பு அத்துடன் முடிந்தாக எண்ணாமல் இப்படி எதையாவது எழுதி நன்றாக படித்திருப்பவர்களை குழப்பினால் அதுதான் திறனாய்வு.  🙂

5 comments on “பொன்னியின் செல்வன் – திறனாய்வு

 1. N. Murali Naicker சொல்கிறார்:

  பழுவேட்டரையர்கள்

  நா. முரளி நாயக்கர்
  சென்னை-44

  பழுவேட்டரைய அரசர்கள் பிற்கால சோழர்களின் தொடக்க காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கிய குறுநிலமன்னர்கள் ஆவார்கள். இப் புகழ் மிகு அரசர்கள் எந்த மரபை சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

  பழுவேட்டரையர்களை “கேரள அரசர்கள்” என்று அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சோழர்களுடன் திருமணஉறவும் புரிந்திருக்கின்றனர். (1 & 2).

  சேரர்குடி, கொல்லிமழவர்குடி, அதியமான்குடி இவர்கள் யாவரும் “மழவர்குடியை” சார்ந்தவர்கள் என்று பல சான்றுகள் மூலம் நமக்கு நன்கு அறியக்கிடைக்கின்றது.(3) பழுவேட்டரையர்களும் தங்களை “மழவர்” ஏன்றே குறிப்பிட்டுள்ளனர். பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று மழவர் கொங்கணி சென்னி நம்பி என்பாரைக் கீழபழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.(4) அது :

  “பழுவேட்டரையர் மறவன் கண்டநார் மாமடிகள் மழவர் கொங்கணி செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று”

  பிற்கால சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களும் தங்களை “சேரர்குடியை” சார்ந்தவர்கள் என்றும் மற்றும் அவர்கள் தங்களை “கேரள அரசர்கள்” என்றும் திருமலை கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத பகுதியில் தெரிவித்துகொண்டிருகின்றனர்.(5) அது :

  “ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா”

  “ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி”

  கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்(6) பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை “தகடூர் அதியரையன்” (தகடதரையன்) என்றும் அவர்களில் ஒருவரது மகனை “பள்ளி” என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அதியமான்கள் “வன்னிய மரபினர்” என்று பெறப்படுகிறது.

  பழுவேட்டரையர்களும் தங்களை “கேரள அரசர்கள்” என்று தெரிவித்து கொண்டிருப்பதால், அதியமான் மன்னர்களும் பழுவேட்டரைய மன்னர்களும் “மழவர் குடியை” சார்ந்த “சேர குல வன்னியர்கள்” என்று நிறுவப்படுகிறது. “சேரர்கள்” அக்னி குலத்தில் உதித்தவர்கள் என்று திருவிளையாடல் புராணம், வில்லிபாரதம், பேரூர் புராணம் மற்றும் பிற்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

  “கேரள அரசர்கள்” என்பதும் “சேர அரசர்கள்” என்பதும் ஒன்றாகும் அது முறையே சமஸ்கரிதம் மற்றும் தமிழ் பெயர்களின் விளக்கங்களாகும் என்பதை நமக்கு திருமலை கல்வெட்டு புலப்படுத்துகிறது.(7)

  பழுவேட்டரையர்களின் ஆலந்துறையார் கோயிலுக்கு பூப்பலகை ஒன்றளித்த “சேரமானாரின்” கைக்கோமாணி மாதேவன் பரமேஸ்வரன் அக்கோயிலில் “கொல்லிப்பெரியான்” என்ற பெயரில் திருச்சுற்றாலை அமைத்துத்தந்தார். இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் “சேரமானாரின்” மனைவியே அக்காரநங்கை. இவள் பழுவேட்டரையர் மகளாக அவனிகந்தர்ப்ப ஈஸ்வரகிருகக் கோயிலுக்கு விளக்குதானம் செய்துள்ளாள்.(8)

  சேரமானாரின் கைக்கோமாணி அச் சேரனின் பெயரில் “கொல்லிப்பெரியான்” (கொல்லி தலைவன்) என்ற திருச்சுற்றாலை அமைத்ததும் அந்த சேரனின் மனைவி அக்காரநங்கை என்பதும், அவள் பழுவேட்டரையர் மகள் என்பதும், இவர்கள் யாவரும் “மழவர் குடியை” சார்ந்த “வன்னிய குல க்ஷத்ரியர்கள்” என்பதும் தெரியவருகிறது.

  டாக்டர். மா. இராச. மாணிக்கனார், கல்வெட்டறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார், தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே. சா, கல்வெட்டறிஞர் திரு. நடன காசிநாதன் போன்ற அறிஞர் பெருமக்கள் மழநாட்டை சார்ந்த “அரியலூர் மழவராயர்களே”, “மழவர் குடி” வழிவந்தவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.

  பழுவேட்டரையர்கள் திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவமுது, நெய்யமுது, கறியமுது, தயிரமுது ஆகியன படைக்கவும் கோயிலில் இருந்த கணபதி திருமேனிக்குப் பங்குனித் திருவோணத் திருநாளன்று அவலமுது, தேங்காய் பத்து மற்றும் சர்க்கரை பத்துப் பலம் படைக்கவும் வெட்டக் குடியிலிருந்த “வன்னிச் செய்” என்ற நிலத்தை தனமாக தந்துள்ளார்கள்.(9)

  பழுவேட்டரையர்கள் “வன்னியர்கள்” என்பதால்தான் “வன்னிச் செய்” என்ற நிலத்தை திருவாலந்துறை மகாதேவர்க்குத் தனமாகத் தந்துள்ளனர்.

  அடிக்குறிப்புகள் :

  (1) S.I.I. Vol-II (Parts III, IV & V) No.76, Page-386, Verse-8.

  (He (Parantaka-I) married the daughter of the Lord of Kerala)

  (Cont’d…..)

 2. N. Murali Naicker சொல்கிறார்:

  Paluvettaraiyar article : Foot notes (Cont’d…..) :

  (2) S.I.I. Vol-XIII, Introduction-V, Para-12.

  (Amudanar who is referred to in the Anbil plates of Sundara Chola as a Kerala Prince whose daughter was married to Parantaka-I and born him prince Arinjaya (Ep. Ind. Vol-XV, P-50). By “Kerala Prince” should be meant a relation of the Chera King).

  (3) வன்னியர் மாட்சி, தொல்லியல் அறிஞர் திரு. நடன.காசிநாதன் ஐயா,
  மெய்யப்பன் பத்திப்பகம், Year-2006.

  (4) S.I.I. Vol-XIX, No.237, page-122.

  (5) S.I.I. Vol-I, No.75, Page-106.

  (6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழக தொல்லியல் துறை, Year-2007.

  (7) Atigaiman of the Chera race and he was the son of some Rajaraja and a descendant of a certain yavanika, King of Kerala, or (in Tamil) Erini, King of Vanji. (S.I.I. Vol-I, No.75, Page-106).

  (8) பழுவூர், இரா. கலைக்கோவன், பக்கம்-243.

  (9) S.I.I. Vol-XIX, No.406, page-214.

  -x-x-x-

 3. parthasarathy சொல்கிறார்:

  இவ்வாறு இவர்களின் சோழர் claim என்பதே இவர்களை பிராமணருக்கு அடிமையாக்கிய சோழனின் செயலை & வரலாறையும் மூடி மறைக்கும் செயலே.
  சிதம்பரத்தில் பிச்சாவரத்தை சேர்ந்த பள்ளி குடும்பம் ஒன்றை சோழன் என்று இன்று கொண்டாடுகின்றனர். ஆனால் 1891 census இல் முதலில் இவர்கள் பல்லவனான ஹிரன்ய வர்மனின் பரம்பரை என்று முதலில் புளுகி விழா எடுத்து நாடகமாடியத்தை மூடி மறைத்துவிட்டு, இவர்களாகவே 1901 இல் புதிதாய் சோழகனார் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொள்கின்றனர், சோழனை claim செய்ய. அந்த பிச்சாவரம் பரம்பரைகாரரே தன்னை ஹிரன்ய வர்மன் என்ற பல்லவன் பரம்பரை என்று claim செய்துள்ளார். அது பதிவாகியும் உள்ளது. இதன் பின்னராக இவர்கள் சோழர்கள் தான் geth என்று தெரிந்த பின்னர் பிச்சாவரம் பரம்பரைகாரரே இப்போது சோழர் சோழர் என்று துள்ளுகின்றனர்!!!. இவர்கள் மட்டும் புளுகினால் யாரும் நம்பமாட்டார்கள் என்று அத்தாச்சிக்கு ஒரு வெள்ளாளரையும் சேர்த்துக்கொள்கின்றனர்.
  மேலும் சென்னையில் மயிலாப்பூர் அருகே சாந்தோம் (Santhome / St.Thomas ) இல் இவர்கள் சொன்ன கண்டப்ப ராஜா புருடாவும் St. Thomas இன் வருகையும் எப்பேர்பட்ட புருடா என்று நீங்களே பாருங்கள். கொடுமைகள் தாங்காது மதம் மாற ஒத்துழைத்த பள்ளிகளை பரங்கியன் தன் டுமீல் கதைகளை பேச இவர்களை நியமித்துள்ளதாகவும், அதன் காரணமாக இவர்களை சமுதாயத்தில் மேம்படுத்த வெள்ளையன் முயற்சி எடுத்ததும் தெரிகின்றது
  http://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore
  http://www.santhomechurch.com/

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நானறிந்தவரை பிராமணர்களை வெறுப்பவனாகவே இராஜராஜசோழனை அறிகிறேன். ஒரு கிராமத்து பிராமணர்களை குழந்தை குட்டியுடன் வெளியேற்றியிருக்கிறான். வர்ண முறையில் அவன் பாகுபாடு பார்த்திருப்பான் என்பதை ஏற்க முடியவில்லை. மற்றபடி தாங்கள் மேலே கூறியிருக்கும் கருத்துகளை கவனத்தில் கொள்கிறேன். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s