யுனிகார்ன் – ஒற்றைக் கொம்பு உயிரினத்தின் அற்புதம்

நன்மை சொல்ல புனையப்பட்ட கதைகளில் நீதிகளை தவறவிட்டுவிட்டு கதைபாத்திரங்களை கெட்டியாக பிடித்துக் கொள்வது உலக மக்களின் பொது பண்பு. அப்படி கெட்டியாக பிடித்துக் கொண்ட சில கற்பனை கதைபாத்திரங்களான யுனிகார்ன், டிரகான், காமதேனு, ஆதிசேசன் என்பவைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள எண்ணினேன். தெரிந்துகொண்டால் சும்மா இருந்துவிட முடியுமா?. முடியாதே,. அதனால் உங்களுக்கும் நான் தெரிந்துகொண்டதை சொல்லிவிடுகிறேன்.

யுனிகார்ன் –

சிறுபிள்ளையாய் இருக்கும் போது இப்படி ஒரு உயிரினம் உலகில் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைத்திருந்தேன். பட்டு போன்ற மென்மையான உடல். சுருள் சுருளாய் ஒற்றை கொம்பு, மேகம் போல வெண்ணிற தேகம் என்று கதைகளில் வந்த கற்பனை வடிவம் யுனிகார்ன் மனதினை கொள்ளை கொண்டது. அன்பான விலங்கு, கருணை மிக்கது, காயங்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்று ஏகத்திற்கும் அதன் குணங்கள் அம்பியை போல இருந்ததும் காரணமாக இருக்கலாம். உலகத்தில் இந்த உயிரினம் போல நல்ல உயிரினம் வேறில்லை என்றே கதைகள் சொல்லின. யுனி என்றால் ஒரு, கார்ன் என்றால் கொம்பு என்று படித்த போது அடப்பாவிகளா, ஒற்றைக் கொம்பு என்று சொல்லைவைத்தே இத்தனை நாள் ஏமாற்றிவிட்டார்களே என்று தோன்றியது.

எந்த புனைவும் 100 % கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை. சிற்சில மாற்றங்களை உலகில் காண்பவற்றில் புகுத்தியே புனைவாக வடிவம் பெறுகின்றன. இதற்கு யுனிகார்னும் விதிவிலக்கில்லை. நான் சிறுபிள்ளையில் பார்த்த யுனிகார்ன் ஒற்றைக் கொம்புடைய வெண்குதிரை. ஆனால் யுனிகார்னை இணையத்தில் பார்த்தபோது அவை பல்வேறு விலங்குகளை ஞாபகம் செய்தன. ஆடு, மாடு என ஆரமித்து பன்றிவரை அத்தனை விலங்கினங்களையும் யுனிகார்னுக்கு பயன்படுத்தியிருந்தார்கள். ஒற்றை கொம்புடைய ஆடு, ஒற்றை கொம்புடைய மாடு என்பதோடு ஒற்றை கொம்புடைய பன்றி என்று நினைத்துவிடாதீர்கள். ஆட்டின் தாடி, சிங்கத்தின் வால், பன்றியின் வால், புறாவின் சிறகு என கிடைப்பவைகளை குதிரையோடு இணைத்துவிட்டார்கள்.

ஹரப்பா மொகஞ்சதாரோ –

கிமு 2500 வாக்கில் சிந்து சமவெளி நாகரீங்களான ஹரப்பா மொகஞ்சதாரோ பகுதியில் செய்யப்பட்ட யுனிகார்ன் தோற்றத்தினை ஒத்த ஒரு லட்சனை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒற்றைக் கொம்புடையதாக உள்ள அந்த உருவம், குதிரை போன்ற தோற்றத்தில் அல்லாமல் தடித்த தேகத்துடன் காணப்பட்டது. Elasmotherium என்று அழைக்கப்படும் உயிரினத்தின் வடிவமே அது என்கிறார்கள். தடித்த உடலுடைய காண்டாமிருகத்தின் தலையில் கொம்பு வைத்தது போல இருக்கும் இந்த உயிரினத்தினை யுனிகார்ன் என்ற தோற்றத்தின் தந்தை என்று சொல்லலாம். 13 ம் நூற்றாண்டுகளில் ஆசியாவில் சுற்றி திரிந்த மார்க போலோ என்றும் நாடோடி யுனிகார்ன் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்துள்ளார். ஆனால் அவற்றினை நன்கு ஆராய்கையில் அவை காண்டாமிருகமாக இருக்க கூடும் என்று கருதுகிறார்கள்.

ஒற்றைக் கொம்பு மருத்துவ குணம் கொண்டது என்று அசைக்கமுடியாத நம்பிக்கையில் இப்போதும் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்ற என்பது துயரமான செய்தி. யுனிகார்னும் அதுபோன்ற நம்பிக்கையால் வேட்டையாடப்பட்டு மறைந்து போன உயிரினமாக இருக்கலாம் என்று மனதினை தேற்றிக் கொள்கின்றார்கள். டைனோசர்களின் எலும்புகளும் முட்டைகளும் கிடைத்திருக்கும் வேலையில் யுனிகார்னின் எலும்புகள் கிடைத்தால் அது வாழ்ந்தற்காக அடையாளம் கிடைக்கும். சில இடங்களில் யுனிகார்ன் போல ஒற்றைக் கொம்புடைய உயிர்களின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவை குதிரையின் எலும்புகளை ஒத்துப்போகாமல், ஆடுகளைப் போன்று இருக்கின்றன.

பைபிலில் –

புனித வேதகாமத்தில் கூட யுனிகார்ன் பற்றிய செய்தி குறிப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக உள்ள ஓவியத்தில் பெண்ணின்(மேரி) அரவனைப்பில் உள்ள யுனிகார்ன் மலை ஆட்டின் (oryx) தோற்றத்துடன் ஒத்துப்போகிறது. இரண்டு கொம்புகள் இருந்தாலும், ஒரே சீரான வளர்ச்சியுடையதால் சில சமயங்களில் ஒற்றை கொம்பு போல தோற்றம் தருகின்றன இந்த ஆடுகள். ஒரு அற்புதம் என்னவென்று கேட்டால், இந்த ஆடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு, அதில் ஏதேனும் ஒற்றை கொம்பினை உடைத்திருந்தால் கூட பக்கவாட்டில் பார்க்கும் போது யுனிகார்ன் தோற்றத்தினை தருகிறது.
இருந்தும் சிலர் இந்த கற்பனை கதாபாத்திரத்தினை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். அதற்காக யுனிகார்ன் என்பதன் பொருள் காளைமாடு, குதிரை என பலவாறு தெரிவிக்கப்படுகிறது.

சிங்க தோற்றம் –

முற்றிலும் மாறுபட்ட சிங்கவடிவ யுனிகார்ன் சைனாவில் காணப்படுகிறது. சிறிய ஒற்றை கொம்பு உடைய சிங்கமாக காட்சியளிக்கிறது யுனிகார்ன். சில ஓவியங்களில் டிரகான் போன்றும் காட்சியளிக்கிறது. Qilin என்ற பெயரில் அழைக்கப்படும் சீனா யுனிகார்ன், சிங்கத்தின் நெற்றிப் பொட்டில் ஏற்ப்பட்ட வீ்க்கம் போல கொம்பு காணப்படுகிறது. டிராகன் தலை, எருதின் வால், மீன் அல்லது டிராகன் செதில்கள், மான் போன்ற கால்கள் கொண்டதாகவும் உள்ளது. உலக புகழ்பெற்ற யுனிகார்ன் சீன நடனம் பற்றி கேள்வியுற்றிருக்கின்றீர்களா. மிக நலினமான நடமாக அறியப்படும் இது, மிகவும் ஆடம்பரமான நடனமும் கூட. மற்றபடி சீன யுனிகார்ன் அதிஸ்டம் நிறைந்தது என நம்புகிறார்கள். டீசர்ட் முதல் ஏகப்பட்ட பொருகள்களில் ராஜ்யம் செலுத்துகிறது யுனிகார்ன் சின்னம்.

ஒரு சில லட்சனைகளில் யுனிகார்ன் சிங்கத்துடன் உள்ளது. யுனிகார்ன் குதிரையின் வால் பகுதி சிங்கத்தின் வால் போன்று காணப்படுகிறது. சிங்கத்தின் வாலுக்கு எதிர் வாலாக பன்றியின் வாலோடு இருக்கும் யுனிகார்னையும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

யுனிகார்னின் சக்தி-

ஆதி காலம் தொட்டே யுனிகார்கள் புனிதமாக கருதப்பட்டுவந்ததால், அதன் கொம்பு முனை தீண்டிய நீர் புனிதமாகும் என்று நம்பபட்டது. அடர்ந்த காடுகளிலும், உயர்ந்த மலைகளிலும் வசிக்கும் என்று நம்ப பட்ட யுனிகார்னினை வானவில் தோற்றுவிக்கும் சக்தி பெற்றதாகவும் நம்பினார்கள். அறிவில் சிறந்த கிரேக்கர்கள் கூட யுனிகார்ன் இந்தியாவில் வாழ்வதாக நம்பியிருந்தார்களாம். மேலும் வீரம் நிறைந்த இந்த யுனிகார்னை பிடிக்க கன்னியால் மட்டுமே முடியும். யுனிகார்ன் அவளுடைய மடியில் வந்து தலைவைத்து அரவனைப்பில் இருக்கும் போது பிடிக்கலாம் என்று நம்பினார்களாம். ஆர்ட்டெமிஸ் என்ற கிரேக்க பெண் கடவுளுடன் எப்போதுமே யுனிகார்ன் காணப்படுகிறது. அது சிறியதாக மான் போன்று உள்ளது. அமைதியை விரும்பும் உயிராக கருதபட்ட யுனிகார்ன் ஆர்ட்டெமிஸூடன் இருப்பது வியப்பானது. ஏனென்றால் ஆர்ட்டெமிஸ் போரின் கடவுள். வில் அம்புடன் இருக்கும் அவளுடன் பாசத்தினை பொழிந்து கொண்டு யுனிகார்ன் அருகி்ல் இருப்பதை கிரேக்கர்கள் பெரிதும் விரும்பியிருக்க கூடும். அதிஸ்டமானது, நன்மை செய்வது, அன்பானது என்ற போற்றுதற்குறிய பண்பினால் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது யுனிகார்ன்.

தொடர்புடைய பதிவுகள் –
விரைவில் நடமாடப்போகின்றன புராண மிருகங்கள்

2 comments on “யுனிகார்ன் – ஒற்றைக் கொம்பு உயிரினத்தின் அற்புதம்

 1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  எங்கே வெகு நாட்களாக காணவில்லை.தங்களது பதிவுகளை படிக்காமல் எனக்கு வாழ பிடிக்கவில்லை.ஏன் இப்படி?
  வாழ்க வளமுடன்.
  கொச்சின் தேவதாஸ்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   உங்களைப் போன்ற நண்பர்களை விட்டுவிட்டு, என்னால் எங்கு செல்ல முடியும் நண்பரே,.
   \\தங்களது பதிவுகளை படிக்காமல் எனக்கு வாழ பிடிக்கவில்லை\\
   ஏன் இப்படி? என்று நான் தான் கேட்டிருக்க வேண்டும், நீங்களே கேட்டுவிட்டீர்கள்.

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s