ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1

எம்.ஜி.ஆர் இறந்த அதே 1987 -ல் நான் பிறந்தேன். பின் எவ்வாறு நான் எம்.ஜி.ஆர் ரசிகனானேன்? என்பதை எண்ணுகையில் வியப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆரமித்துவைத்த சத்தணவு திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் ஒரு பெண்ணிற்கு வேலை கிடைத்தது. அந்த வேலையை வைத்து அவளின் ஆறு பெண் பிள்ளைகளையும் நன்றாக வளர்க்க முடிந்தது. அந்த ஆறில் ஒருவர் என் அன்னை. அந்த பெண்மணி என் அம்மாச்சி. இதனால் அம்மாச்சி எப்போதுமே எம்.ஜி.ஆரைப் பற்றி புகழந்து கொண்டிருப்பார். அம்மாச்சிக்கு அரசியல் தெரியாது அதனால் அவர் எம்.ஜி.ஆரின் அரசியல் பற்றி புகழமாட்டார். அம்மாச்சி அதிகமாக படங்களை பார்த்தது கிடையாது, பாட்டாளியாக உழைக்கவே நேரமில்லாத காலத்தில் படம் எப்படி பார்ப்பார். அதனால் எம்.ஜி.ஆரின் படங்களைப் பற்றி அதிகம் புகழமாட்டார். அவர் எம்.ஜி.ஆர் பற்றி கூறுவதெல்லாம் சத்துணவு சார்ந்தவைகள் மட்டுமே.

எம்.ஜி.ஆர் திருச்சிராப்பள்ளியில் அந்த திட்டத்தினை ஆரமித்துவைத்தது முதற்கொண்டு, அந்த திட்டத்தில் கொடுக்கப்பட்ட காய்கறி அளவுகள், எண்ணைய், பருப்பு வைகைகளின் அளவுகள் என்று எல்லாமும் அம்மாச்சிக்கு அத்துபடி. கட்டைவிரல் மடக்கி நான்கு விரல்களை அளவாக காண்மித்து “அந்த காலத்துல இம்புட்டு எண்ணைய் ஒரு புள்ளைக்குன்னு கொடுப்பாங்க பாரு. அதே அளவு எடுத்துப் போட்டா,.. புள்ளைகளுக்கு கழிசலே வந்துடும்” என்பார். “அம்மாம் பெரிசா யானமெல்லாம் தன் கையாலேயே கொடுத்தாரு” என்று சொல்லும் போது அம்மாச்சியின் கண்களில் இன்றும் பிரகாரம் மிளிரும். இப்படி ஆயிரம் முறை கூறக் கேட்டும் இன்னும் சலிக்காமல் இருப்பதுதான் எம்.ஜி.ஆரின் புகழ்.

அதன் பின் எம்.ஜி.ஆரின் திரைப்படம், அரசியல், அன்பு, ஈகை, வீரம் என பல பரிணாமங்களை கண்டு இன்றும் வியந்து கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர் பற்றி படிக்கும் போதும், பிறர் பேச கேட்கும் போதும் மனம் துள்ளலாக இருக்கும். அவரைப் பற்றி விக்கியில், வலையில், முகநூலில் என கிடைக்கும் இடங்களிலெல்லாம் எழுதி தள்ளியிருக்கிறேன். சகோதரனிலும் அவரைப் பற்றி சில இடுகைகள் எழுதியிருப்பேன், என்றாலும் ஒரு தொடராக அவரைப் பற்றி எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்காகவே அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று கடந்த சில வாரங்களாக செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

“நான் ஏன் பிறந்தேன்” என்று எம்.ஜி.ஆர் தொடங்கி, அவருடன் இருந்த புகைப்படக்காரர் வரை எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரசியங்களை தந்துள்ளார்கள். அவைகள் நூலகத்தில் இருக்கின்றன. ஆனால் இணையத்தில் சொற்பமே கிடைக்கின்றன. அவைகளில் சுவாரசியம் மிகுந்தவையை சிறு சிறு தகவல்களாக தந்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே எம்.ஜி.ஆர் 25 என ஆனந்தவிகடன் வெளியிட்டு விட்டது. எம்.ஜி.ஆர் 100 என நக்கீரன் புத்தகமே வெளிவந்துள்ளது. இவைகளைப் போல ஆயிரம் தகவல்களை திரட்ட முடிவு செய்திருக்கிறேன். அப்படியே சுவாரசியம் குன்றினால் தொகுத்தோடு நிறுத்திவிடலாம். நம்பிக்கை இருக்கிறது. இனி ஈசன் அருள் செய்ய வேண்டும்.

ஆயிரத்தில் ஒருவன் –

1) ஒரு வருடத்தின் உதயம் ஜனவரி மாதம். மறைவு டிசம்பர் மாதம். எம்.ஜி.ஆர் உதித்தது ஜனவரி 17, 1917, மறைந்தது டிசம்பர் 24, 1987. இதை ஆண்டவனின் விளையாட்டாக எண்ணுவதா, இல்லை விருப்பமாக எண்ணுவதா என தெரியவில்லை. எம்.ஜி.ஆரின் பிறப்பும், இறப்பும் கூட தனிசிறப்பாக இருக்கிறது.

2) எம்.ஜி.ஆருக்கு ஒரு பைட் மாஸ்டருக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டுமோ, அத்தனையும் தெரியும். சிலம்பம், வாள், குஸ்தி, குதிரையேற்றம், தற்காப்பு கலைகள், சண்டை முறைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

3) எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் குறைந்த வேகத்தில் சண்டைகளை எடு்த்துவிட்டு, பின் திரையில் அதிக வேகத்துடன் ஓட வைக்கும் கேமிராக்கள் வரவில்லை. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் காட்சிகளில் இருக்கும் வேகம் உண்மையான சண்டை வேகம்.

4) “காதல் வாகணம்” என்ற தேவர் பிளிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படத்தில் எம்.ஜி.ஆரை பெண் வேடத்தில் காணலாம். நாடகத்துறையில் இருந்தபோது நிறைய முறை பெண் வேடமேற்று நடித்திருந்தாலும், திரையுலகில் எம்.ஜி.ஆர் பெண்ணாக நடத்தது ஒரே ஒரு படத்தில்தான்.

5) அண்ணா தி.மு.க வின் கட்சி சின்னம் இரட்டை இலை. இந்த சின்னத்தினை எம்.ஜி.ஆர் உருவாக்கவில்லை, தேர்ந்தெடுக்கவும் இல்லை. அப்போதெல்லாம் சுவர் ஓவியங்கள் மூலமாகவே விளம்பரம் செய்ய வேண்டிருந்தது. எனவே இந்த இலை சின்னம் வரைய எளிதாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்தவர் திண்டுகல் தொகுதி வேட்பாளர் மாயத் தேவர். அந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக தொண்டர்களைம், வேட்பாளர்களையும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

6) எம்.ஜி.ஆரின் தாய் சத்தியபாமாவின் குலதெய்வம் மூகாம்பிகை. அதன் காரணமாகவே எம்.ஜி.ஆருக்கு மூகாம்பிகையை பிடிக்கும். தாயார் இறந்த பின் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மூகாம்பிகையை பார்க்கும் போதெல்லாம் என் தாயை பார்ப்பது போல இருக்கிறது என்பார்.

7) தமிழக மக்களுக்கு “எம்.ஜி.ஆர்”. நடுநிலை பேசுகிறவர்களுக்கு “எம்.ஜி.ராமச்சந்திரன்”. தொண்டர்களுக்கு “புரட்சி தலைவர்”. இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆரின் அன்பான செல்ல பெயர் என்ன தெரியுமா?. ராமு.

8) எப்போதுமே தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே எம்.ஜி.ஆருக்கு பிடிக்கும். விருந்தாளிகள் வந்தால் மட்டும்தான் டைனிங் டேபிலில் அமர்ந்து சாப்பிடுவாராம் எம்.ஜி.ஆர்.

9) டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்,பிளொட் இந்த பெயர்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால்,. நீங்கள் ஈழம் பற்றி அறிந்தவராவீர்கள். இத்துடன் சேர்த்து விடுதலைப்புலிகள் என ஐந்து அமைப்புகள் ஈழத்தினை பெறுவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இவற்றில் விடுதலைப் புலிகள் மட்டும் மிகப் பெரும் அளவிற்கு வருவதற்கு பிரபாகரனும், அவருக்கு பக்கபலமாக இருந்த எம்.ஜி.ஆரும் காரணம்.

10) ரிக்சாகாரன் படவெற்றியை கொண்டாட சென்னையில் இருக்கும் 6,000 ரிக்சா காரர்களுக்கு மழைகாலங்களில் உதவியாக இருக்கும்படி, மழைநீர் கோர்டுகளை வாங்கிதந்தார். இன்று கூட ஆட்டோக்களில் எம்.ஜி.ஆரின் உருவம் பதித்து வலம் வர அவரின் இந்த தொழிலாளர்களை மதிக்கும் தன்மையை காரணமென நினைக்கிறேன்,.

ஆயிரம் புகழ் மாலைகள் நோக்கி…

14 comments on “ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1

 1. சகோதரா…! நம்ம தலைவரின் தகவல்கள் அருமை…
  தொடருங்கள்… வாழ்த்துக்கள்… நன்றி…

 2. chandrasekar சொல்கிறார்:

  Sir MGR uthitathu is it 1971 pl check

 3. suria jothi சொல்கிறார்:

  எம் ஜி ஆரைப் பற்றிய கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது.

 4. devadass சொல்கிறார்:

  தங்களது பதிவுக்கு இத்தனை பேர் பின்னுாட்டம் தருகிறார்கள்.அதில் சிலா் தமிங்கிலீஸ் தருகிறார்கள்.
  தாங்கள் ஏன் NHM writer பற்றி ஒரு பதிவை விளக்கமாகத் தரக்கூடாது?
  வாழ்க வளமுடன்.
  snr.DEVADASS

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தமிழ் மொழியில் எழுதுவது பற்றி ஏகப்பட்ட வலைதளங்கள் எழுதியிருக்கின்றன. யாராவது தமிழில் எழுத விருப்பப்பட்டால் நிச்சயம் அந்த பதிவுகள் உதவும். எனினும் பலருக்கு அதில் விருப்பம் இருப்பதில்லை. நன்றி நண்பரே.

 5. விஜயன் துரைராஜ் சொல்கிறார்:

  தொடருங்கள் தொடர்கிறேன் …
  நல்ல முயற்சி
  தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

 6. விஜயன் துரைராஜ் சொல்கிறார்:

  சகோதரா பேஸ்புக் ஃபேன் பேஜ் ஜை wordpress ல் வைப்பது எப்படி??

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வெளித்தோற்றம் என்பதில் நிரற்பலகைகள் உள்ளனவல்லவா, அங்கு Facebook Like Box என்ற பெயரில் இந்த விஜெட்கள் அமைந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் அமைப்புகள் இருந்தால் Template பகுதியில் இருக்கும் விஜெட் பகுதிகளைப் பாருங்கள் நண்பரே.

 7. யுவகிருஷ்ணா சொல்கிறார்:

  நல்ல முயற்சி நண்பரே. எம்.ஜி.ஆர் ரசிகன் என்கிறவகையில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s