தொட்டியச்சியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

தொட்டியம் நாயக்கர் பற்றியும், சோழிய வெள்ளாளர் பற்றியும் தெரிந்து கொண்டால் மட்டுமே நாட்டார் தெய்வமான தொட்டியச்சியின் கதையை அறிய முடியும். இந்த இரண்டு சமூகமும் தொட்டியச்சியின் கதையோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. அதனால் இந்த சமூகங்களைப் பற்றி முதலில் சில வரிகள்,…

தொட்டியம் நாயக்கர்கள் –

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம். ஆந்திராவில் அதிகமாக வாழும் காப்பு என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த தொட்டியம் நாயக்கர்கள் இருக்கிறார்கள். காப்பு இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் தொட்டியம் நாயக்கர்கள் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “கம்பளம்” நாட்டினை வைத்து ராஜகம்பளம் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

சோழிய வெள்ளாளர் –

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம்.  தமிழகத்தின் தென்பகுதியில் அதிகமாக வாழும் இல்லத்துப் பிள்ளைமார்(ஈழவர்) என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த சோழிய வேள்ளாளர்கள் இருக்கிறார்கள். ஈழவர் இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் சோழிய வெள்ளாளர் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “சோழ” நாட்டினை வைத்து  சோழிய வெள்ளாளர் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

மணவாடி –

கரூர் மாநகரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் சாலையில் இருக்கிறது மணவாடி என்ற குக்கிராமம். எனது சிற்றன்னையை மணம்முடித்து கொடுத்த ஊர் என்பதால் சிறுவயதிலிருந்தே மிகவும் நெருக்கமான ஊர். பாறை பூமி என்பதால் தண்ணீருக்கு கொஞ்சம் பஞ்சம். அதனாலேயே சோளப் பயிர்கள் வயல்களிலும், கள்ளி செடிகள் மற்ற இடங்களிலும் காணப்படும். சென்ற தலைமுறை வரை அத்தனை பேரும் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வந்தார்கள். நிற்காது ஓடும் எண்ணை செக்கும், நிரம்பி வழியும் பசுமையும் காணப்படும். இப்போது கரூர் நகரின் வளர்ச்சியால் பலர் டெக்டைல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதோடு இங்கு வயக்காடுகளின் வரப்போரங்களில் விளையும் குண்டுமணியையும், காதுகுத்தி முள்ளையும் வேறுபகுதியில் நான் கண்டதில்லை. பனை மரங்கள் அதிகம் இருந்த பகுதி இப்போது புதியதாக வந்திருக்கும் பணக்கார வெள்ளாளர்களால் பாசன வசதி செய்யப்பட்டு தென்னை தோப்பாக காட்சியளிக்கன்ற புதுமையும் காண முடிந்தது. குக்கிராமம் என்ற நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்ள ஆரமித்திருக்கிறது மணவாடி.

தொட்டியச்சி அம்மன் –

முக்கிய சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் பக்கம் நடந்து சென்றால்தான் மணவாடி கிராமம் வரும். அப்படி கிராமத்திற்கு செல்லும் சாலையின் வலது பக்கத்தில் ஒரு ஒத்தயடி பாதை பிரிகிறது. அந்த பாதையில் நடந்து சென்றால் ஆள் அரவமற்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாய் விரிந்து நிற்கும் வேப்பம்மரத்தின் அடியில் மண்ணில் சொறுகப்பட்டிருக்கும் வேல்கம்புகளும், செங்குத்தான  நான்கு பெரிய கற்களும் தெரிகின்றன. அந்த கற்கள் திருவிழா காலங்களி்ல் குடில் அமைக்க வைக்கப்பட்டவை. அந்த நான்கு கற்களுக்கும் மத்தியில் முக்கோண வடிவம் என்று கணிக்கும்படியான கற்கள் வரிசையாக இருக்கின்றன. அவை கன்னிமார்கள். வலது புறம் இருப்பது பெரியசாமி, இடது புறம் இருப்பது கருப்புசாமி, அதோ அதுதான் தொட்டியச்சி என்றார் உடன் வந்த உறவினர். சரியான களமின்மை, இதுதான் நாட்டார் தெய்வங்களின் பலமும், பலவீனமும்.

கதை –

சுற்றிலும் அடர்ந்த காடுகளாக இருக்க, கரூர் மாநாகராக மாறியிறாத காலம். வேட்டைக்கு பழக்கம் செய்யப்பட்ட உயர் ரக நாய்களுடன் தொட்டியம் நாயக்கர்களில் ஒரு குழு வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த குழுவில் ஆண்களுக்கு நிகராய் பெண்களும் வீரத்துடன் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பெருமுயல்களை பிடிப்பதற்கு நிலத்தில் வலையமைத்தல், பெருமிருங்களை வேட்டையாட துப்பாக்கியை பயன்செய்தல் என பல வழிமுறைகளை கையாண்டனர். இரவு பகலாய் விலங்குகளை வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்கள் குழுவில் இருந்த பெண்ணொருத்தி வழிதவறியது தெரியவில்லை. நெடுநேரத்திற்குபின் அந்த பெண் தவறியதை அறிந்து தேடத்தொடங்கினர்.

இரவு முழுவதும் தேடியும் அவர்களுக்கு பலன்கிடைக்கவில்லை. இது அந்த குழுவில் இருந்த மற்ற பெண்களுக்கு மிகவும் வேதனை தருவதாக இருந்தது. மறுநாள் காலையில் வழிதவறியப் அந்தப் பெண் மணவாடி கிராமத்திற்கு வந்தாள். வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த சோழிய வெள்ளாள மக்கள் வேட்டை தோரனையுடன் குதிரையில் வீரத்தின் உருவாகவே வந்து நிற்கும் பெண்ணைக் கண்டு அசந்து போனார்கள். அவள் வழிதவறி அலைவதையும், அவளுடன் வந்த கூட்டம் அவளை தேடுவதையும் அறிந்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் துயர் தீர்க்க ஆட்கள் சிலரை தொட்டியம் நாயக்கர்களை தேடி அனுப்பினார்கள். அந்த ஆட்களும் விரைந்து தேடுதலில் ஈடுபட்டார்கள்.

ஒரு வழியாக தொட்டியம் நாயக்கர் குழுவானது கண்டுபிடிக்கப்பட்டு, வழிதவறிய அந்த வேட்டைக்காரப் பெண்ணோடு சேர்த்துவைக்கப்பட்டது. பெருநிம்மதியுடன் தங்கள் வேலையை பார்க்க திரும்பிய சோழிய வெள்ளாளர்களுக்கு தொட்டியம் நாயக்கர்களின் கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். அது இரவு முழுதும் வேறு இடத்தில் தங்கியப் பெண்ணை மீண்டும் தங்கள் குழுவுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு. அந்தப்பெண் தவறு செய்யவில்லை என்று அறிந்தும் கூட மனதினை கல்லாக்கிக் கொண்டு சமூகத்தின் கட்டுப்பாட்டினை காப்பாற்ற, அவளை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். தன் இனமக்களின் பிரிவினை தாங்கமுடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இந்த செய்தி சோழிய வெள்ளாளர்களுக்கு தெரியவருகையில் மிகவும் வருத்தம் கொள்கின்றார்கள். பிள்ளைமாரான சோழிய வெள்ளாளர்கள் கன்னி தெய்வங்களை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள்.பொதுவாக தன் வீட்டு கன்னி தெய்வங்களை தங்கள் வீட்டிலேயே வைத்து வணங்குதல்தான் வழக்கம்.தங்கள் இனமில்லை என்ற போதும் தங்கள் மண்ணில் உயிர்நீத்த பெண்ணை வணங்குவதென ஒருமித்து தீர்மானித்து இன்று வரை வணங்கி வருகிறார்கள். தொட்டியச்சி என்ற தொட்டியம் நாயக்கர் சமூகத்தின் பெயரையே தெய்வத்தின் பெயராக சொல்கிறார்கள். இறந்தபோன அந்தப் பெண்ணின் உண்மைப் பெயர் தெரியவில்லை. மேலும் தொட்டியம் நாயக்கர் சமூகத்திலிருந்து ஒரு தம்பதியை அழைத்துவந்து, அவர்கள் தலைமையில் தான் தொட்டியச்சியின் திருவிழாவினை சோழிய வெள்ளாளர்கள் நடத்துகிறார்கள்.

மிகவும் சுருக்கமாக சொல்வதானல் சமூகத்தின் கட்டுப்பாட்டினால் ஒதுக்கிவைக்கப்பட்டு இறந்த போன ஒரு பெண் தெய்வமான கதைதான் தொட்டியச்சியின் கதை.

10 comments on “தொட்டியச்சியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

 1. Sathuragiri vEL சொல்கிறார்:

  You have written:
  தமிழகத்தின் தென்பகுதியில் அதிகமாக வாழும் இல்லத்துப் பிள்ளைமார்(ஈழவர்) என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த சோழிய வேள்ளாளர்கள் இருக்கிறார்கள். ஈழவர் இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் சோழிய வெள்ளாளர் அதிகளவு உள்ளார்கள்.

  I am afraid this is not a correct statement.

  Ezhavas are found in Kerala and they are a numerous caste only in Kerala. Most of them were involved in Toddy business like some sections of Nadars of Tamilnadu. They are more related to the Tamilnadu’s Nadars, as affluent Ezhavas used to use ‘Nadan’ title and poor ones involved in Toddy business used ‘Saanan’ title earlier in Kerala. They were also called Thiyas, indicating a migration from some island, could have been the then Ceylon, as they were called Ezhava as well as Thiya.

  The caste known as Illaththu Pillaimar in South Tamilnadu have descended from migrants of Ezhavas in tamilnadu.

  Please refer: http://www.gurudevan.info/forum/ezhava-related-castes-t425.html

  The illaththup pillaimar are not related to the vELaLa Pillaimar (Saiva Pillaimar, Karkartha Pillaimar, Pandiya vELaLar, etc.,) in South Tamilnadu. You can see that even their caste website has Narayana Guru’s picture, who was the reformer-leader of Ezhavas. Even in Kerala, the title Pillai is used by Nairs, not by Ezhavas. I do not know why they call themselves as iLLaththup Pillaimar.

  I saw this kind of a history being written in Wikipedia also and being used every where else..

  Chozhia veLaLars have different origins. They are domicile of Chozha nadu, like Pandya vELaLar are from South and Kongu vELaLar are from Kongu. In fact, Kongu vELaLar claim that they are descended from Chozhia vELaLar, as they were migrated by Chozhas to Kongu Country. According to what i have heard, the other community who could be related .to Chozhia vELalar are the Udayars (Moopanar & Udayar) of Thanjavur district. Till three hundred years ago, Udayars in Thanjavur areas were part of vELaLars and decided to go separate ways in a maha panchayat due to some local politics.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இல்லத்துப் பிள்ளைமாரில் வரும் இல்லங்களில் சோழிய இல்லமும் ஒன்று. நீங்கள் கூறியது போல சோழிய வெள்ளாளர் இனம் தனித்த சோழநாட்டு மக்களை குறிப்பதாக இருந்தாலும், சோழர்களின் ஆட்சிக்கு முந்தைய காலங்களில் அவர்களின் நிலை என்ன என்பதை அறிவீர்களா. ஏதேனும் ஒரு இனக்குழுவிலிருந்தே மறு குழு உருவாக இயலும். எனக்கு ஈழவர் எனும் இல்லத்துப் பிள்ளைமாரில் சோழிய வெள்ளாளர்கள் இருந்திருப்பார்கள் என்றே தோன்றியதால் இவ்வாறு பதிவிட்டேன். இணையம் முழுவதும் நீங்கள் சொல்லியது போல இல்லத்துப் பிள்ளைமாரிலிருந்தே சோழிய வெள்ளாளர்கள் தோற்றியிருப்பதாக ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. எனினும் உங்களது இந்த எதி்ர்பினால் மீண்டும் சரி பார்த்தேன். இன்னும் அவைகள் அப்படியேத்தான் உள்ளன.

   நீங்கள் கூறியது போல உடையார் மற்றும் மூப்பனார் வரிசையில் சோழிய இனம் வருகிறதா என இனி ஆய்வு செய்கிறேன். கருத்தினை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

   • S vEL சொல்கிறார்:

    Dear Mr.Jegadeeswaran,

    First of all, i would like to appreciate that your tamil writing style is very good. Sincere apologies for not writing in Tamil. Since i felt that you can reach a large number of people through your writings, i wanted to submit my inputs. Please do not mind and take it otherwise.

    The community related to Ezhavas were mentioned during Chozha times also and Enadhi Nayanar is generally considered as belonging to this group.

    Please refer to this link where they have tried to analyse the history of Illathup pillaimar in Tamilnadu.

    http://www.muthukamalam.com/essay/community/p1.html

    While all that mentioned in this website and other websites as well as Wikipedia need not be correct, it may be a big disservice to a community as old as Chozhia vELaLars to be called as descendants of another community, when Karikal Chozha himself was married to Nanguur vEL’s daughter and there are a large number of Nayanmars belonging to Chozhanadu being mentioned as vELaLars.

    The confusion comes with the word Chozhiyar. Illathuthup Pillais mention Chozhiar as one of their iLLams and hence it is surmised that Chozhia vELaLar are also a sub-set of them. By this logic, the following castes shall also have to become part of Ezhavas or illathup pillaimar or Ezhavas:

    1. Sholiyar or Choliyal or Chozhiars a subsect of Iyer or Iyengars
    http://sholiyar.blogspot.in/

    2. Chozhiya Chettiar

    Hope this clarifies. Chozhiar means the locality and not all Chozhiars are Chozhia vELaLars.

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    \\சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார்களுடன் தொடர்புடையவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனெனில் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லாதவர்கள். ஆனால் சோழிய வேளாளர் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள். ஒரு வேளை, சோழிய வேளாளர் சாதியினர் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினராக இருந்து அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறிக் கொண்ட ஒரு குழுவினராக இருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது.\\

    முத்துக் கமலம் தளத்தில் இந்த வரிகளை காண நேர்ந்தது. மிக்க நன்றி.

 2. சிவஸ்ரீ விபூதிபூஷன் சொல்கிறார்:

  அன்புக்குரிய ஜெகதீஷ்
  உங்கள் தொட்டியச்சி அம்மன் கதை எழுதப்பட்டுள்ள விதம் அதை அறிந்து ஆவணப்படுத்தும் முயற்சி இவை யாவும் பாராட்டுக்குரியன.
  உங்கள் தொட்டிய நாயக்கர்களுடைய குறிப்பு சரியல்ல. தொட்டியர் காப்பு என்கிற குடியினர் அல்லர் என்பது கொங்கு மண்டலத்தில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கணிசமான தொட்டிய நாயக்கர்களை அறிந்த வரையில் அடியேனுடைய கருத்து.

  ஆந்திரத்தில் காப்பு பலிஜா ஆகிய இரண்டும் ஒன்று என்கின்றனர். தமிழகத்திலும் பலிஜா நாயுடு பிரிவினர் வாழ்கிறனர் காப்பு என்று அவர்களை அழைப்பதில்லை. தொட்டியர் அதாவது ராஜ கம்பளத்தினர் ஆந்திரத்தில் கொல்லவாடு எனப்படுகின்றனர். அவர்களுக்கு அருகே தமிழகத்தில் வாழும் தெலுகு கன்னடம் பேசும் இதர குடியினரும் அவர்களை கொல்லர் என்றே அழைப்பதை இன்றும் காணமுடிகிறது. இன்னும் ஒன்று கொல்லர்களின் அடிப்படைத்தொழில் மாடு மேய்த்தல் பால் கறந்து விற்றல். நிலைத்த வேளாண்மையில் அவர்கள் இன்றைக்குப்பெரும்பாலும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் இன்றும் கால்நடை வளர்ப்பில் காட்டும் ஈடுபாடு அலாதியானது.
  இவையே தொட்டியர் வேறு காப்பு வேறு என்பதற்கு சான்றுகள்.

  • சிவஸ்ரீ விபூதிபூஷன் சொல்கிறார்:

   இன்னும் ஒன்று பலிஜா நாயக்கர்(காப்பு) வளையல் கார நாயக்கர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தொட்டிய நாயக்கர்களும் பலிஜா நாயுடுகளும் தமிழகத்தில் தெலுகு பேசும் இதரமக்களால் தனித்து அறியப்படுகின்றனர்.
   இந்த தொட்டியர் குடியில் தான் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தார் என்பது மற்றொரு போற்றுதலுக்குரிய செய்தி.

   கொங்கு மண்டலத்தில் சிறந்த ஒரு வைணவத்தலமாக விளங்கும் காரமடை ஸ்ரீ ரங்கநாதரை சுயம்புவாக கண்டுபிடித்ததும் மாடுமேய்த்த ஒரு தொட்டியர் என்பது மரபு வழி செய்தி.

   கன்னியாக இறந்து போனவர்களை தெய்வமாக வழிபடும் மரபு தென்னகம் முழுவதும் காணப்படும் ஒன்று. வீரமாஸ்தி அல்லது வீரமாத்தி எனப்படுவது இத்தகு வழிபாடே. பூவாடைக்காரி என வழிபடப்படும் பெண் தெய்வமும் இதுவே. மானம் காக்க உயிர் தியாகம் செய்த தொட்டியச்சி அம்மன் வழிபடப்படுவதில் ஐயம் ஏதும் இல்லை. மனிதனாய் பிறந்தவன்(ள்) தெய்வமாகலாம் தியாகத்தால் தொண்டால், ஈகையால், வீரத்தால் பக்தியால் ஞானத்தால் என்பது பாரதப்பாரம்பரியத்தின் ஆழ்ந்த நம்பிக்கை. என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   உங்கள் கருத்திற்கு நன்றி. நாயக்கர் நண்பர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றும், விக்கிப் பீடியா போன்ற தளங்களை ஆராய்ந்துமே இந்த நாயக்கர் பற்றி எழுதினேன். தவறாக இருக்கும் பட்சத்தில் திருத்தம் செய்வதில் எனக்கு பிரட்சனையில்லை,. நன்றி நண்பரே.

 3. jagan nadar சொல்கிறார்:

  தென் தமிழகத்தில் இல்லத்து பிள்ளைமார் என குறிப்பிடப்படும் குழுவினர் முன்னர் ஈழவர்கள் அல்லது நெசவு பணிக்கர்கள் என அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்சமயம் இச்சமூகத்தினர் நெசவுத் தொழிலில் ஈடுபடுவது குறைந்து விட்டது என்ற போதிலும் முன்னர் இவர்கள் சாணார்கள் (நாடார்கள்) எனப்படும் ஒரு சமூகத்தினருக்கு நெசவுத் தொழில் பணியில் ஈடுபட்டவர்களாக இருந்ததாக வரலாற்று, தொல்லியல் ஆய்வறிஞர் திரு.எஸ். ராமச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

  அத்துடன் இக்குழுவினர் சாணார் எனப்படும் (நாடார்கள்) சமூகத்தைச் சார்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பதற்கான சான்றுகள் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆவணங்களை ஆராயும் போது கிடைக்கப்பட்ட தகவலையும் குறிப்பிடுகின்றார்.

  கான் சாஹீப் ஒரு இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும்; கான் சாஹீப்பிற்கும் சாணார்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் எங்கே பிறந்தவர் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்..
  நாடாரும் ஈழவரும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் தான். கருமாபுரம் சான்றோர் குல நாடார் மடத்தின் செப்பேடு 1600 வருடங்களுக்கு முந்தையது அதில் நாடார்கள் பற்றியும் ஈழவர் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. நாயன்மார்களில் ஏனாதி நாயனாரும், ஆழ்வார்களில் நம்மாழ்வாரும் ஈழவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நம்மாழ்வாரை பாண்டிய அரச குலத்தை சார்ந்தவராக அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. நாடார்கள் பாண்டியர்கள் என்பதையும் இங்கு
  கவனிக்க வேண்டும். ஈழவர் வரலாற்றில் அவர்களின் இளவரசியை சிங்கள மன்னன் விஜயன் மனந்ததாக கூறுகிறது. விஜயன் மணந்தது பாண்டிய மன்னனின் மகளைதான் இதையும் கவணிக்க வேண்டும்,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s