நான் யார் தமிழ்தாயே!


தமிழ்த்தாயே,.

நீ ஒரு இந்துவாக இருப்பதால்
தமிழனாக இருக்க முடியாது என்கிறார்கள்

இஸ்லாமியனும், கிறிஸ்துவனும், ஜைனனும்
தமிழனாக இருக்கலாமாம்,.

வீட்டில் அரபு மொழி பேசுபவனும்,
தெலுங்கு, கன்னடம் பேசுபவனும்,
தமிழனாக இருக்கலாமாம்,.

நித்தம் நித்தம்
தமிழ் பேசும் என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

—-

பன்னிரு திருமுறைகள் தந்த எம் பாட்டன்கள்
தமிழன் இல்லையாமே…
தேவராத்திலும் திருவாசகத்திலும் இருக்கும் பாடல்கள்
தமிழில் இல்லையாமே..

கம்பன் பாடியதில் காமம் மட்டும் தெரிகிறதாமே,
சேக்கிலார் பாடியதில் காதல் மட்டும் வழிகிறதாமே,.
பக்தி இலக்கியத்தால் தாயே நீ வளரவில்லையாமே,.

நித்தம் நித்தம்
தமிழையே துதிக்கும் என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

பூவைத்து புடவை கட்டி
ஒய்யாரமாய் நீயும் வந்ததுவிடாதே,
பர்தாவும், கவுனும் அணியாதவர்களை
பாவப்பட்ட தமிழர்கள் ஏற்பதில்லை,.

இங்கே,..
சிறு தெய்வங்களெல்லாம் சாத்தானாக மாறி
பல வருடங்கள் ஆகின்றன.

இப்போது அவர்கள் வந்தால்
வேப்பிலையால் அடிப்பதில்லை,
விளக்கமாறால் அடிக்கிறார்கள்,..

முருகனும், இந்திரனும்,வருனனும்,
கொற்றவையும், திருமாலும் வடநாட்டு சாமிகளாம்,
அயல்நாட்டு சாமிகளான அல்லாவும் ஏசுவும்
தமிழ்நாட்டு சாமிகளாம்!.

அதெல்லாம் இருக்கட்டும்,..

நித்தம் நித்தம்
தமிழையே தாய்மொழி என நம்பியிருந்த என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

சொல்லிவிட்டுப் போ!..

அன்புடன்,

உன் மைந்தன் ஜெகதீஸ்வரன்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

8 comments on “நான் யார் தமிழ்தாயே!

 1. Babou சொல்கிறார்:

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெகதீசுவரன்..

  முகநூலில் தினமும் உங்களை பின் தொடர்ந்து வரும் ஒரு அன்பன். அங்கு உங்கள் கருத்துக்களையும் மேல உள்ள பதிவையும் என்னால் நன்கு ஒப்பிட்டு உணர முடிகிறது.

  வழியில் போகும் எவனோ ஒருவன் திடீரென நம்மைப் பார்த்து “முட்டாள்” என்று சொன்ன மாத்திரத்தில் அது ஒன்றும் உண்மையாகிவிடப்போவதில்லை. அதற்கு மிகுந்த வருத்தம் கொள்ளவும் அவசியம் இல்லை. அதை சிரம் மேற்க்கொண்டு சிந்திக்க ஆரம்பித்தால் அவர்கள் சொன்னது உண்மையாகிவிடும். அது போலவே “பகுத்தறிவு” என்ற சொல்லின் பொருளை முழுதாக உணர தெரியாதவர்களின் வார்த்தைகள் நமக்கானவை அல்ல.. அவை அவர்களின் பகுத்து உணர முடியாத – இயலாமையைதான் காட்டுகிறது. அவர்களுக்காக பரிதாப படுவதோடு நமது பணி முடிந்து விடுகிறது.

  தொடர்ந்து உங்கள் தமிழ் எழுத்துப் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்! தமிழ்த்தாய் உங்கள் துணை நிற்பாள்!..

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தமிழ் மாதங்கள்,.. சித்திரை, வைகாசி,.. என்றே சிறுவயதில் படித்திருக்கிறேன். இப்போது சித்திரையல்ல தமிழ்ப்புத்தாண்டு என்பதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடினால் நீ தமிழன்னல்ல என்றார்கள். அந்த ஆதங்கமே இந்த கவிதை.

   தொடர்ந்து படித்து. தக்க சமயத்தில் ஊக்கமும் தந்து பாராட்டுகளை தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

 2. HARIHARASUDHAN RAVINDRAN சொல்கிறார்:

  ENNudaya NenjakKumuralgalai Thelivaga Eluthiyirukkireergal, Mikka Nanri

 3. தமிழர் தோழமை (@ttozhamai) சொல்கிறார்:

  நல்ல கேள்வி. எனக்கு ஏத்த வரை நான் பதிலளிக்கிறேன்.

  முருகனும் கொற்றவையும் மால்யோனும் பண்டையத் தமிழ் கடவுள்மார் தான். ஆனால் இந்திரனும் வருணணும் அல்ல – பெயரிலே சொல்லலாம். அம்மன் ஐயனார் கருப்புச்சாமி மதுரைவீரன் எனப்படும் கடவுள்களை தமிழ் நாடு, ஈழ நாடு மற்றும் தமிழர் வாழ் மலேசியா சிங்கப்பூரில் மட்டுமே காண்கிறோம். ஏன்? இவைகளே தமிழரின் முதல் வழிப்பாட்டு முறை.

  மேலும் தமிழ் இலக்கியத்தை பல மதத்தினர், மதமற்றவர்க்கூட இயக்கியுள்ளன. வள்ளுவர் இயக்கியது “கடவுள் வாழ்து”, அதில் சிவன், ஏசு, அல்லா பெயரளித்துள்ளாரா? இல்லை. யாவர் மனம் கவரவே ‘உலகியற்றியான்’ ‘மலர்மிசை ஏகினான்’ என்று கூறுகிறார். ஏன்? கடவுளுக்கு மனிதன் படைத்த பெயர்கள் இவை, தெய்வம் என வடமொழியில், அல்லா என்று அரபியில், ஏசு என எபிரேயில்.

  செம்மொழியில் நாம் கடவுள் என்கிறோம் ஏன்என்றால் ‘உள்’ளனைத்தை எவன் ‘கட’க்கிறானோ அவனே வணக்கத்துக்குறியவன் என்பது பொருள்- ஆகவே இது தமிழ்மொழி தீட்டும் உயர் பண்பு.

  முருகனை வணங்கிய தமிழர் நாம் மால்யோணை வணங்கவில்லையா? அல்ல நம் கடவுள்தான் உண்மை, பிற கடவுள்கள் எல்லாம் பொய்யென பித்துப் படைத்தோமா?

  தேவாரம், திருவாய்மொழி, திருப்புகழ், நாலடியார், தேம்பாவணி, சீரப்புராணம், மற்றும் சீவக சிந்தாமணி யாவும் பண்டையக் காலம் முடிந்து 10ஆம் நூ.ஆ.க்கு பின் இயற்றியவையே. நான் குறித்திருப்பவை யாவும் வெவ்வேரு கடவுள்களையும் வழிப்பாட்டுமுறைகளையும் பரக்க செய்தவை – இவை யாவும் தமிழே, அது போல, நீர் இந்துவோ நத்திகரோ, குள்ளமோ, உயரமோ – தமிழ் பற்றிருந்தால், தமிழ் மொழி தீட்டும் உயர்பண்பில் யாவும் சமமானவையே.

 4. கண்ணன் சொல்கிறார்:

  உண்மை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s