பால் ஊற்றெடுக்கா முலை!

அவள் காலையில் எழுகையில்
அவளோடு தலையணையில் உறங்கிய
அவள் பொம்மையும் விழித்தெழுகிறது!

அவள் ஆனந்தமாய் குளிக்கையில்
அதுவும் அருகிலேயே குளிக்கிறது!

அவள் ஒப்பனை செய்கையில்
அதுவும் ஓரளவு அழகாகிறது!

அவள் சொப்பு விளையாடுகையில்
அதுவும் சேர்ந்தே விளையாடுகிறது!

எல்லாம் முடிந்து,..
அவள்தன் தாய்மார்பில் பாலருந்துகையில்
அதுவும் பால்ஊற்றெடுக்காத
அவள்முலையில் பசியாருகிறது!

குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முன்பே
சில பெண் குழந்தைகள்
இப்படி தாயாகி விடுகின்றார்கள்!

– சகோதரன் ஜெகதீ்ஸ்வரன்.

12 comments on “பால் ஊற்றெடுக்கா முலை!

 1. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

  அருமையான கவிதை…

 2. rajagopal சொல்கிறார்:

  ungal kavetaikum karuthukkum vanakkam

 3. sakthivel சொல்கிறார்:

  thayavusaidu mukam suzikkum varththai kavithaiku payan padutha vandam ….
  kavithaikku nalla varthai innum neeraya irruku…

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அப்படியா நண்பரே,.. அந்த வார்த்தைகள் யாருடைய முகத்தையும் சுழிக்க வைக்காது என்று உறுதி தர இயலுமா உங்களால்.

   ரசனை என்பதும் ஆபாசம் என்பதும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். விரைவில் புரிந்து கொள்ள வாழ்த்துகள்.

 4. நதிக்கரை சொல்கிறார்:

  பெருத்த என்பதற்குதான் முலை, கொங்கை என்று கொள்ளப்படும்
  மார்பு அல்லது நெஞ்சு என்றிருந்தால் நல்லது

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   முலை என்பதே பொருத்தமாக தோன்றியது நண்பரே. ஆண்குறி முதற்கொண்டு, புணர்ச்சி பொம்மைகள் வரை சகோதரன் வலைப்பூவில் எழுதிவிட்டபடியால் இது ஒன்றும் பெரியதாகப்படவில்லை நண்பரே

 5. Fiyas சொல்கிறார்:

  அருமையான கவிதை…

 6. திவாகர் சொல்கிறார்:

  அருமை நண்பரே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s