சரோஜாதேவி முதல் சகுந்தலாதேவி வரை இனி இல்லை

“புத்தகங்களைத் திருடுங்கள். ஏனென்றால் புத்தகம் திருடுவது வெண்ணையைத் திருடுவதைவிடப் புனிதமானது” என்று சொன்னார் வலம்புரிஜான். பல மனிதர்களிடம் புத்தகங்கள் செய்திருக்கும் மாற்றங்கள் அலாதியானது. நிறைய மின்புத்தகங்களை வாசிக்க கிடைக்கையிலும், அச்சுப் புத்தகத்தினை புரட்டி படிப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று.

வான் முட்டி நிற்கும் விலைவாசியில், வயிற்றிக்கு செலவு செய்யவே விழிபிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கத்தினர். அறிவுப் பசிக்காய் அச்சு புத்தகங்களை வாங்கிப் படிப்பது இயலாத ஒன்றாகி விட்டது. ஆடி கழிவு போல வருடம் ஒரு முறை வந்து போகும் புத்தகச் சந்தை எதிர்நோக்கி என்னைப் போல எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு மத்தியில் அபூர்வமாய் சில இடங்களில் நூலகங்கள் உண்டு. அதிலும் அபூர்வமாய் சில இடங்களிலும் புத்தகங்களும் உண்டு. ஏனென்றால் நிறைய நூலகங்கள் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன. அப்படி பெயரளவில் இல்லாமல் கணக்கற்ற புத்தகங்களை தாங்கிக் கொண்டிருக்கும் நூலகங்களில் “அண்ணா நூற்றாண்டு நூலகமு”ம் ஒன்று. சைதைக்கு அருகே இருப்பதால் சில ஞாயிறுகள் நண்பர்களுடன் அங்கு சென்றிருக்கிறேன்.

இது போன்ற மிக நவீனமயமான நூலகத்தினை இதுவரை நான் கண்டதில்லை. ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலத்தினை பார்த்தவனுக்கு ஆசியாவிலேயே பெரிய நூலகத்தினை பார்த்த போது எற்பட்ட மகிழ்ச்சியை உங்களால் அறிந்து கொள்ள முடியும். எங்கள் கிராமத்து நூலகத்தில் பெரும்பாலும் பொழுது போகாத பெருசுகளும், நாவல்களில் ஊறிப்போன சிறுசுகளை மட்டுமே காண முடியும். ஆனால் இங்கே ஏகப்பட்ட உழைக்கும் வர்கத்தினரைப் பார்க்க முடியும்.

கணினி முதற்கொண்டு வரலாறு வரை தனித்தனிப் பிரிவுகளாக ஏகப்பட்ட புத்தகங்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் என்று கண்டாலும். என்னை வியக்க வைத்தது இங்கு வரும் குழந்தைகள்தான். திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் தொலைந்து விடாமல் அறிவு வளர்க்க வரும் அந்த அடுத்த தலைமுறையை காணும் போது,.. இன்னும் படிப்பவர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஆனந்தம் ஏற்பட்டது.

கடந்த முறை சென்ற போது கூட உறுப்பினர் அட்டைக்காக அங்குள்ளவர்களை நாங்கள் அனுகினோம். விரைவில் அதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிடும் என நம்பிக்கையாக சொன்னார்கள். ஆனால் இன்று இடிபோல ஒரு செய்தி “சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிபிஐ வளாகத்திற்கு மாற்றப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்”.

வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக நூலகத்தினை முடக்குவது எந்த நாட்டின் வரலாற்றிலும் நிகழ்ந்திருக்க முடியாத ஒன்று. நான் அறிந்த வரையில் ஹிட்லர் மட்டுமே நூலகத்தினை அழித்தாக கேள்வியுற்றிருக்கிறேன். ஆனாலும் என்னால் ஜெயலலிதாவை ஹிட்லருடன் கூட ஒப்பிட முடியவில்லை. ஏனென்றால் அவர் அழித்த நூலகம் “செக்ஸ்” பற்றியது என்று குறிப்புகள் கூறுகின்றன. எனவே ஜெயலலிதா இன்று ஹிட்லரையும் மிஞ்சிவிட்டார்.

முதல்வர் அதிகாரத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் இந்த அறிவில்லாத செயலுக்காக அவரை நடுத்தெருவில் நிற்க வைத்து செருப்பினால் அடித்தாலும் தகும் என்றே தோன்றுகிறது.
– புத்தகத்தினை நேசிக்கும் ஒரு மனிதன்.

நூலகத்தினைப் பற்றி மேலும் அறிய ,..

http://annanootrandunoolagam.blogspot.com

6 comments on “சரோஜாதேவி முதல் சகுந்தலாதேவி வரை இனி இல்லை

  1. Ramesh Nerkundram சொல்கிறார்:

    உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் அந்த கடைசி இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அவர் தான் அப்படி இருக்கிறார் என்றால், நாமும் அவ்வாறு மாற வேண்டாமே!

    இனி “செருப்பால் அடிப்பது” போன்ற வார்த்தை தவிர்க்கவும்.

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!., முதன்முதலாக தளத்திற்கு வருவதனால் இங்கு எழுதப்படுபவைகளைப் பற்றிய உங்கள் பார்வை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து வாருங்கள்,.. இங்கே மனதில் உள்ளவைகள் எழுதப்படுவதை உணர்ந்து கொள்வீர்கள்.

  2. scribblingsofhari சொல்கிறார்:

    ஏற்கனவே DPI அருகில் கன்னிமாரா நூலகம் அமைந்துள்ளது. இது முட்டாள்தனமான செயல்.

  3. rajagopal சொல்கிறார்:

    ungu katantha aiadkk atcee irunta pothu talaimai sayalagm attikal natteyathu tankalukku tareyata nanba

ஜெகதீஸ்வரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி