ஜோடியாக்(zodiac) – கொலையும் கலையும்

1960களிலின் இறுதியிலிருந்து 1970கள் வரை அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ மாகானத்தினை கதிகலங்க வைத்துக்கொண்டிருந்த பெயர் – ஜோடியாக்(zodiac). இது தொடர் கொலைகாரன் தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர். மக்கள் வைத்த பெயர் – ஜோடியாக் கில்லர். எத்தனையோ தொடர் கொலைகாரர்கள் இருக்கும் போது கொலையும் கலையும் தொடரில் ஏன் ஜோடியாக் பற்றி முதன்முதலாக சொல்கின்றேன் என்பதை,.. இந்த இடுகையை முழுமையாக படிக்கும் போது புரிந்து கொள்விர்கள்.

ஜோடியாக் கடிதங்கள் –

1961 வது வருடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, Vallejo Times Herald, San Francisco Chronicle, The San Francisco Examiner என்ற மூன்று பெரிய செய்திதாள் நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் வந்தது. அதில் மிக சமீபத்தில் நடந்தேரிய இரண்டு கொலை சம்பவங்களையும் தானே செய்ததாகவும், ஒவ்வொரு கொலையிலும் குண்டுகள் உபயோகித்தது முதல், இறந்தவர்களின் ஆடைகள் வரை விவரமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் பெயருக்கு பதிலாக cipher எனப்படுகின்ற ஒருவகை மாற்றுமொழியில் எழுதப்பட்ட கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதனை முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் தவறினால், மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஒரு வழியாக அந்த cipherக்கான விடையை கண்டுபிடித்தார்கள். ஆனால் அதை படிக்கும் போது உறைந்து போனார்கள். அக் கடிதம் ” நான் மக்களை கொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது” என்று ஆரமிக்கப்பட்டிருந்தது. அதைப் படிக்க படிக்க கடிதத்தினை எழுதிய நபர் சாதாரண ஆள் அல்ல என்பதை புரிந்துகொண்டார்கள். பின் ஆகஸ்ட் 7, 1969ல் மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அதில் “This is the Zodiac speaking” என்று தனக்குதானே சூட்டிக் கொண்ட பெயரை முதல்முதலாக அந்த கொலையாளி பதிவு செய்திருந்தான். அத்துடன் முன்பு நடந்த மூன்று கொலைகளுக்கும் தானே பொறுப்பேற்று. அதன் அதிகமாக குறிப்புகளையும் கொடுத்திருந்தான். ஆனால் வேறு எந்த இடங்களிலும் உண்மையான பெயரினை அவன் பதிவு செய்யவே இல்லை என்பது அதனுடன் இணைக்கப் பட்டிருந்த இன்னொரு cipherன் புதிரை விடுவிக்கும் போதுதான் தெரிந்தது.

Berryessa சம்பவம் –

Berryessa ஏரிக்கருகே பிக்னிக் சென்றிருந்த ஜோடியை ஜோடியாக் செப்டம்பர் 27, 1969ல் தாக்கினான். உல்லாசமாக இருந்த ஜோடியை கட்டிபோட்டுவிட்டு, கைகளில் துப்பாக்கி இருந்தும் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவத்தில் மூலம் அவனுடைய உருவம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்கா முகமூடி அணிந்திருந்தான். மார்பில் ஒரு குறியீடு இருந்தது. அது ஜோடியாக் என்ற கைகடிகார நிறுவனத்தின் குறி்யீடோடு ஒத்துப்போனது பின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்து சுமார் 500 அடி தொலைவில் இங்கிருந்து திருடப்பட்டிருந்து கார் கதவில் “Sept 27 69 6:30 by knife” என்று குறிப்பிட்டுவிட்டு சென்றிருந்தான்.

தொடர் கொலைகளாலும், அதற்கடுத்து வரும் கடிதங்களாலும் நகரமே கதிகலங்கிப் போயிருந்தது. சான் பிரன்சிஸ்கோ காவல்துறை வரைபடமாக அவனின் உருவத்தினை வரைந்து வெளியிட்டது. இருப்பினும் தேடல்கள் ஓயவில்லை. இதற்கு மத்தியில் அக்டோபர் 11, 1969ல் மீண்டும் ஒரு கொலை நடந்தது. இந்த முறை ஜோடிகள் இல்லை, டாக்ஸி ஓட்டுனர் பலியாகியிருந்தார். பயணியாக டாக்ஸியில் ஏறிய கொலைகாரன். ஒரு தெருவில் ஓரமாக டாக்ஸியை நிறுத்த சொல்லி, பின்னால் அமர்ந்து கொண்டே தலையில் சுட்டிருக்கிறான்.

இந்தக்கொலை நடந்தபோது அதைக் கண்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இரண்டாவது வரைபடம் தயாரிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமானவர்களை விசாரித்தனர். இரண்டு அதிகாரிகள் இந்த வழக்கிற்காக தனியாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பிறகும் கொலைகளும், கடிதங்களும் நிகழந்து கொண்டே இருந்தன. அவைகள் அனைத்தையும் விரிவாக கூறினால், கொஞ்சம் போர் அடிக்கும். எனவே அடுத்த விசயத்திற்கு செல்லுவோம்.

யார் ஜோடியாக் –

சான் பிரான்ஸிஸ்கோ காவல் அதிகாரிகள் நிறைய பேரை சந்தேகப்பட்டனர். அவர்களில் முக்கியமாக கருதப்பட்ட நபர்கள் மட்டும் ஏழு பேர்.

 1. Arthur Leigh Allen
 2. Bruce Davis
 3. Lawrence Kane
 4. Michael O’Hare
 5. Richard Marshall
 6. Ted Kaczynski
 7. Robert Hunter

இதில் Arthur Leigh Allen தான் ஜோடியாக் என கருதிய காவல்துறை செப்டம்பர் 27, 1974ல் கைது வாரண்ட் கொடுத்தது. மற்றவர்களை விட அதிக சாதகமான விசயங்கள் Allen னிடம் இருப்பதாக காவல்துறை கருதியதே காரணம். அதனை தவறு என்று சிலர் கருதினார்கள். Allenன் கைரேகை ஜோடியாக்கோடு ஒத்துப்போகவில்லை. ஆனால் காவல்துறை ஏற்கவில்லை. அதற்கு காவல்துறையிடம் இருந்த சில ஆதாரங்களே காரணம். உதாரணத்திற்கு ஒன்று நவம்பர் 9, 1969ல் வந்த கடிதத்தில் ஜோடியாக் தனது பேஸ்மென்டில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தான். பிப்ரவரி 1991ல் Allen வீட்டின் பேஸ்மென்டில் வெடிகுண்டுகளை காவல்துறை கைப்பற்றியது போன்றவை.

ஆனால் 2002ல் நடந்த DNA சோதனையில் Allenனுடைய DNA ஒத்துப்போகவில்லை. ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண்டாட Allen உயிரோடு இல்லை. அவர் ஆகஸ்ட் 26, 1992லேயே மரணமடைந்துவிட்டார். ஜோடியாக் cipher கடிதங்கள் சில தீர்க்கப்படாமலேயே இருப்பதைப் போல இந்த வழக்கும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இதன் பாதிப்பில் ஏகப்பட்ட நாவல்களும் ஐந்து திரைப்படங்களும் வந்துள்ளன. அவ்வளவு ஏன் டி.சர்டுகளில் ஜோடியாக் cipher பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வழக்கில் ஆர்வமிருந்தால் cipherக்கான விடையை கண்டுபிடித்து எப்.பி.ஐக்கு அனுப்புங்கள் நண்பகர்களே!…

நன்றி –
wikipedia

zodiackiller.com

8 comments on “ஜோடியாக்(zodiac) – கொலையும் கலையும்

 1. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

  அருமை நண்பரே… நீண்ட நாளுக்கு பின் இடுகை.. நன்றாக இருக்கிறது…உலக அளவில் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் நிறைய இருக்கின்றன.
  நான் அறிந்த ஒரு வழக்கு 2001 ல் நடந்தது.. ஒரு பெண் இறந்ததாய் கூறி 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதி மன்றம் சில காரணங்களால் அவர்கள் சில ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கபட்டனர். ஆனால் அவர்கள் கொலை செய்ததாய் கூறிய பெண் போன ஆண்டு உயிரோடு திரும்பி வந்து விட்டாள். இன்று வரை விடை இல்லை 2001ல் இறந்த பெண் யாரேன்று.. இது நமது தமிழகத்தில் நீங்கள் கூட பத்திரிக்கைகளில் படித்திருக்க கூடும்..

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வினோதமான தீர்க்கப்படாத வழக்குகளில் சில ஆச்சிரியம் கொள்ள வைக்கின்றன, நண்பரே!. நீங்கள் கூறிய வழக்கு கூட சுவாரசியமாக இருக்கிறது. நமது நாட்டில் இது போன்று நிகழ்வது ஆச்சிரியம் இல்லைதான். ஆனால் சுவாரசியமானவை.

 2. புருஷோத் சொல்கிறார்:

  அருமையான பதிவு நண்பரே…இதை படிக்கும் போதே ஒரு வித அதிர்ச்சி கலந்த ஆர்வம இருந்தது ….இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா ?…இதே மாதிரி நிகழ்வு ஒன்று இப்போழ்து ஸ்ரீலங்கா வில் ஐந்து நாட்கள் முன்பு முதல் நடந்து கொண்டு இருப்பதாக என் முக புத்தக நண்பர்கள் மூலம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்…இப்பொழுது இதை படித்த உடன் இதெல்லாம் உண்மைதான் என் உணர்கிறேன்….நண்பரே…….

 3. புருஷோத் சொல்கிறார்:

  நன்றி நண்பரே…..

 4. KWrites சொல்கிறார்:

  அருமையான பதிவு சகோ. cipher மற்றும் crypto ஆகியவற்றின் மூலம் நாம் அரியபல இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
  என் முதல் முயற்சியான இந்த வலைப்பூவையும் பாருங்கள் சகோ உங்களின் வழிக்காட்டுதல் என் போன்ற கடையேனுக்கு தேவை http://marmamanaulagam.blogspot.com/2011/12/blog-post.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s