கொலைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் – கொலையும் கலையும்

சமீபத்தில் வந்துள்ள மர்டர்-2 சக்கை போடு போட்டுக்கொண்டுப்பதாக அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். அது தொடர் கொலையை மையப்படுத்தி வந்துள்ள படம் என்பதை அறிந்தேன். கடந்த இரண்டு நாட்களாக வேலை சுமை குறைந்து போனதால், நெடுநாட்களுக்கு முன் “கொலையும் கலையும்”க்காக சேகரித்த தகவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. அதுவே இந்த இடுகைக்கு காரணம்.

தொடர் கொலைகளைப் பற்றியும், அதைச் செய்பவர்கள் பற்றியும் நமக்கு பல தகவல்கள் தெரியும். அன்றைய ஆட்டோ சங்கர் முதல் இன்றைய சைக்கோ மனிதன் வரை நம்முடனே நிறைய மனிதர்கள் அவர்களாக இருந்திருக்கின்றார்கள். கொலைகாரர்கள் என்றால் இவர்கள் மட்டுமா. இல்லை கொலைகள் இந்த விதத்தில் மட்டுமா நடந்துள்ளன. எல்லாவற்றைப் பற்றியும் சிறு பார்வை பார்த்துவிடுவோம்.

தற்கொலை –

எப்பொழுது மனிதனின் கடைசி நம்பிக்கை தகர்க்கப்படுகிறதோ அப்போது, நிகழும் பெரும் துயரம் இந்த தற்கொலை. பல தற்கொலைகள் துயரத்திலிருந்து தன்னை தற்காத்துகொள்ளும் கேடயமாக எண்ணி நிகழ்ந்தவை. சில மட்டும் வெறுப்பினால், மாறாதுயரத்தினால், தியாகத்தினால் நிகழ்ந்தவை. உண்ணாநோம்பால் உயிர் துறந்தாலும், பசியின் கொடுமை தாளாமல் உயிர் மாய்த்துக் கொண்டாலும் தற்கொலைதானே.

கொலை –

தன் உயிர் அல்லாமல் பிற உயிர்களை அழிக்கும் இந்த செயலில், வன்மமும், கொடூரமும் அதிகளவு கலந்திருக்கின்றன. தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் கொலைகளிலிருந்து, பொழுதுபோக்கிற்காக செய்யும் கொலைகள் வரை ஆயிரமாயிரம் வகைகள் உள்ளன. சின்ன சின்ன கொலைகளையெல்லாம் விட்டு விட்டு கொஞ்சம் பெரிய கொலை அறிந்து கொள்ள செல்வோமானால், நிச்சயம் உடல் நடுங்கத்தான் செய்யும்.

தொடர் கொலை –
கோபத்தினாலோ, கொள்கைக்காகவோ, கொலை செய்யும் சுகத்திற்காகவோ, பணத்திற்காகவோ, பிறர் கவணத்தினை ஈர்ப்பதற்காகவோ இந்த தொடர் கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் ஒரே ஒரு மனிதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதை தொடர் கொலைகள் என்கிறோம். இந்த தொடர் கொலைகளில் இருக்கும் பொதுத்தன்மை குறித்தே பல சந்தேகங்கள் இருந்தாலும், கொல்லப்படுகின்றவர்கள் ஒரே பாலினத்திலோ, ஒரே வேலை செய்பவராகவோ, ஒரே வயதுடையவராகவோ இல்லை ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த கொலைகள் நடக்கும் காலத்தினை cooling-off period என FBI குறிப்பிடுகிறது.

அதிக மக்களை கொல்லுதல் –
மிகக் குறுகிய காலத்தில் அதிக மக்களை கொல்லும் முறை இது. இவை தனிமனிதன் மூலமாகவோ இல்லை ஒரு கும்பலினாலோ செய்யப்படுகிறது. மிக எளிமையாக சொல்வதென்றால் எப்போதும் இந்தியாவில் நிகழும் குண்டு வெடிப்புகள். சில சமயங்களில் தனியொரு மனிதனாலும் இவை நிகழ்கின்றன. வெளிநாடுகளில் படிக்கும் மாணவன், தன் கல்லூரியில் கண்ணில் படுபவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதைப் போன்ற செய்திகள் உங்களுக்கு ஞாபகம் வரலாம். அவையெல்லாம் இந்த வகையினைச் சார்ந்தவையே.,

ராம்பேஜ் கில்லர்ஸ் என்று சிலரை குறிப்பிடுகின்றார்கள், இவர்களுக்கும் தொடர் கொலைகார்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் குறிப்பிடும் cooling-off period நேரம் மட்டுமே!… இப்படி பல வகையான கொலைகள் இருந்தாலும், தொடர் கொலைகளைப் பற்றியும், அதன் சுவாரசியான அறிவியல் முடிச்சுகள் பற்றியும் இனி வரும் இடுகைகளில் பார்க்க இருக்கிறோம். இது முன்னுரை மட்டுமே…

ரத்தம் தெறிக்கும்!…

8 comments on “கொலைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் – கொலையும் கலையும்

 1. durairajv சொல்கிறார்:

  கொன்னுட்டீங்க.. சகோதரா,
  வித்தியாசமான பதிவு.கொலைகளில் இன்னும் நிறைய வகைகளை விட்டு விட்டீர்களே.. சகோதரா.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   கொலைகளைப் பற்றி சொல்வதற்குள் ஆயுசே முடிஞ்சுடும் போலிருக்கு அதனால்தான், மிகச் சிலவைகளோடு விட்டுவிட்டேன். இருப்பினும் நேரம் நமதல்வா,.. எழுதுவோம் நண்பரே!…

 2. PuthiyavaN சொல்கிறார்:

  உங்கள் ப்ளாக் பார்வையிட்டேன்.. அனைத்தும் அருமையான தனித்துவமான தகவல்கள் மற்றும் செய்திகள்.. தொடருங்கள் வாழ்த்துக்கள்

 3. suganthiny சொல்கிறார்:

  இதை படிக்கவே என் தலை எல்லாம் சுற்றுகிறதே

  எப்படி உங்களால் இவைகளை படைக்க முடிகிறது?

  http://suganthiny77.wordpress.com/

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மனவருத்தம் தந்தால் பதிவினை தவிர்த்துவிடுங்கள். இளகிய மனம் படைத்தவர்களுக்கு அப்படிதான் இருக்கும். ஆனால் என்ன செய்ய உண்மை மிகவும் கொடூரமாக அல்லவா இருக்கிறது.

 4. பிரபுவின் சொல்கிறார்:

  நல்ல பயனுள்ள அனைவரும் படிக்க வேண்டிய தகவல்.தகவலுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s