அதிசயக்க வைத்த அஷ்டலட்சுமி கோவில்

கிராம தெய்வங்களுடன் கொண்ட அன்பால், பெரிய தெய்வங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துபோனது. இன்னும் சொல்லப்போனால், அவையெல்லாம் அந்நிய தெய்வங்களைப் போல காட்சியளிக்கின்றன. இருந்தும் சென்ற ஞாயிறு பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு நண்பனின் விருப்பத்திற்காக அவனுடன் சென்றேன். பல முறை ஏலியட்ஸ் கடற்கரைக்கு சென்றிருந்தாலும், அஷ்டலட்சுமி கோவில் அருகில் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டதேயில்லை. என்னுடைய கற்பனையில் அஷ்டலட்சுமிகள் ஒரு கருவரையில் இருப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அங்கு பெசன்ட் நகரை நெருங்கியதிலிருந்து எங்களுக்கு ஆச்சிரியங்கள் காத்துக்கொண்டே இருந்தன.

கோவிலின் அமைவிடத்தினை கூகுளில் கண்டிருந்தாலும் அங்கே மாதா கோவில் மட்டுமே தெரிந்தது. அந்த மதத்தினருக்கான பொருட்கள் வழிநெடுகிலும் இருந்தன. அவர்களிடம் அஷ்டலட்சுமி கோவிலுக்கான வழியை கேட்பசதில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பின் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் வழியை கேட்டு சென்றோம். மாதா கோவிலுக்கு அருகே செல்லும் சாலையில் செல்ல வேண்டியிருந்ததால், அங்கிருப்பவைகளை கண்களில் பட்டன. மெழுகுவர்த்திகள் ஏற்றும் இடத்தில், ஒரு யானை சிலை பக்தர்களை பார்த்துக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் மஞ்சள் தாலிகளும், தொட்டில்களும் கட்டப்பட்டிருந்தன. அங்கேயே பூட்டுகள் பலவும் இருந்தன. அண்ணா சாலையில் உள்ள தர்காவொன்றிலும் இந்த பூட்டு முறையை கண்டிருக்கிறேன். மாதாவிற்கு சேலை காணிக்கையாக செலுத்தும் இடம் என்று எழுதப்பட்டிருந்தது. மேரி எப்போது புடவை கட்டிக்கொள்ள பழகிக் கொண்டாளோ தெரியவில்லை. வெளிநாடு கோவில்களில் இருக்கும் நம் மாரியும் சுடிதார் போட்டுக் கொள்கின்றாளோ என்னவோ!. சரி இனி கோவில்,..

கோவிலின் முன்தோற்றம் - பழைய படம்

கோவிலின் முன்தோற்றம் - பழைய படம்

கடற்கரைக்கு அருகே, பிரம்மாண்டமாய் விரிந்திருக்கிறது கோவில். விடுமுறை தினம் என்பதால், மக்கள் சாரைசாரையாக நின்றிருந்தனர். இலவசம், ஒரு ரூபாய், நூறு ரூபாய் என பக்தர்களை தரம் பிரித்து கடவுள்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காசு கொடுத்து கடவுளை பார்க்கும் அளவிற்கு நாங்கள் இன்னும் பொருளாதாரத்தில் உயரவில்லை என்பதால் நாங்கள் எப்போதும் போல இலவசத்திலேயே நின்று கொண்டோம். கொடிமரத்தின் அடிபாகம் விரிசல் விட்டிருந்தது. கோவில் புணரமைப்பு நிகழ்ந்துகொண்டிருந்ததால், அதையும் சீரமைப்பார்கள் என்றே நினைக்கிறேன். வரிசையில் ஊர்ந்து செல்லும் போது, அந்த பெரிய பலகை கண்களில் பட்டது. சற்று குறுகலான பாதை என்பதால், செல்ல இயலாதவர்கள் பின்னால் வருபவர்களுக்கு தொல்லை கொடுக்கவேண்டாம் என்ற ரீதியில் பயமுறுத்தியது. கருவரையை அடைந்துவி்ட்ட நிலையில் இதுவரை குறுகலான பாதையே இல்லையே எதற்காக வீணாக ஒரு பலகை என்று எண்ணினேன்.

முதல் மற்றும் இரண்டாவது கோபுர வரிசை

முதல் மற்றும் இரண்டாவது கோபுர வரிசை

கருவரை தரிசனம் முடித்து, எனக்கு முன்னால் சென்றவர்கள் படிகட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தார்கள். கோவில் கோபுரத்திற்கு எதற்கு ஏறுகின்றார்கள். வெளியே செல்ல அதுதான் வழியாக என நண்பனுடன் பேசிக்கொண்டே சென்றேன். முதன்முறையாக கோவிலின் கோபுரத்திற்குள் கருவரைகள் அமைக்கப்பட்டிருப்பதை அன்றுதான் கண்டேன். முதல் கோபுர வரிசையில், திசைக்கொன்றாக நான்கு லட்சுமிகள் இருந்தார்கள். இரண்டாவது வரிசையில் ஒரே ஒரு லட்சுமி மட்டும் இருக்கிறார். அடுத்ததாக கீழ் வரிசையில் மூலவர்தவிர்த்து மூன்று புறமும் மூன்று லட்சுமிகள். ஆக எட்டு லட்சுமிகள் இருக்கின்றார்கள். இந்த மாடி கட்டி குடியிருக்கும் சாமிகளைப் பார்த்தா இந்த ஆச்சியம் கொண்டாய் என நீங்கள் கேட்டால், இல்லை.

கருவரையில் உண்டியல்

கருவரையில் உண்டியல்

இதைத்தாண்டியும் ஒரு ஆச்சிரியம் எங்களுக்காக காத்திருந்தது. ஒவ்வொரு கருவரையிலும் ஒரு ஐயர் தட்டுயெந்தி அமர்ந்திருந்தார். அதோடு திரும்பி இடமெல்லாம் சின்னதும் பெரியதுமாய் உண்டியல்கள் பயமுருத்திக் கொண்டிருந்ததன. ஒரு கருவரை எதிரே அதிகமான கூட்டம், அந்த கருவரை தைரியலட்சுமியுடையது. அங்கே செல்லும் போது, காலை இடறியது ஒரு பொருள். என்னவென்று பார்த்தால் ஒரு குட்டி உண்டியல். நிறைய இடங்களில் பால் கேனை துளையிட்டு உண்டியலாக மாற்றியிருந்தார்கள்.

அதை விட ஒரு கருவரையில் மிகப்பெரிய உண்டியலையே கடவுளாக வைத்திருக்கின்றார்கள். அதற்கான கோபுர வாசலின் மேலே “பத்மநிதி” என்று எழுதப்பட்டிருந்தது. இறுதியாக,… தரிசனம், அர்ச்சனை, அர்ச்சனை பொருட்கள், பிரசாதம், தானம், பிராத்தனை என மக்களிடமிருந்து செல்வங்களை வாங்கி அங்கிருக்கும் லட்சுமிகளும், அவர்களின் அருகில் இருப்பவர்களும் செழிப்போடு இருக்கின்றார்கள். உங்களுக்கும் நேரமிருந்தால், அவர்களை காண அஷ்டலட்சுமி கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

கோவிலின் தற்போதைய தோற்றம்

கோவிலின் தற்போதைய தோற்றம்

கோவிலிலிருந்து கடற்கரை தோற்றம்

கோவிலிலிருந்து கடற்கரை தோற்றம்

4 comments on “அதிசயக்க வைத்த அஷ்டலட்சுமி கோவில்

 1. suganthiny சொல்கிறார்:

  வணக்கம் அண்ணா நீண்ட நாட்களுக்கு பின் தங்களுடைய பதிவிற்கு பதில்
  போடுகிறேன். நல்ல பதிவுகளையே தேடி தரும் என் இனிய அண்ணனுக்கு
  என் மரியாதைகள் உரித்தாகுக.நான் கூடsuganthiny77@wordpress.com இல் வலை பதிவு தோடங்கி உள்ளேன்.
  தாங்கள் இந்த தங்கைக்காக செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
  தயவு செய்து என் வலை பதிவிற்கு தாங்களும் வந்து வாழ்த்தினால்
  சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்

  http://suganthiny.wordpress.com/2011/06/16/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/?sn=l.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சேய்களால் வளர்க்கப்படும் தமிழ்த்தாய்க்கு, இன்னொரு பெண் குழந்தை பிறந்திருப்பதை வரவேற்கிறேன்.

   நிச்சயம் உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்.

 2. srinivasan சொல்கிறார்:

  ஒரு ஐயர் (archagar would be the right word) தட்டுயெந்தி அமர்ந்திருந்தார்.. no iyer is permitted to work as a priest in vaishnavite temples. ashtalaksmi temple is managed by vadagalai iyengars. the one you refer here also should be an iyengar, no doubt.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s