அன்பு தமிழ்தாய்க்கு ஒரு கவிதை!

அன்பு தாயே!

ஈழத்திற்காக வருத்தம் தெரிவிப்பதா – இல்லை
இலவசங்களுக்காக வாழ்த்துகள் தெரிவிப்பதா
பெரும் குழப்பத்தில் இருக்கிறோம் நாங்கள்.

அய்யாவுக்கு ஓட்டா – இல்லை
அம்மாவுக்கு ஓட்டா
இது நேற்றைய குழப்பம்!.

சித்திரையில் புத்தாண்டா – இல்லை
தையில் புத்தாண்டா
இது இன்றைய குழப்பம்!.

விடுமுறை எடுத்துக்கொள்ளாமா – இல்லை
அலுவலகம் செல்லாமா
இது நாளைய குழப்பம்!.

குழப்பங்களுக்கு மத்தியில்
குப்பைகளாய் இருக்கிறோம் நாங்கள்.

தமிழ் கற்பிக்காத பள்ளியில் படிக்கிறோம்,
தமிழ் வேண்டாத அலுவலகத்தில் பணிபுகிறோம்,
தமிழ் பேசாத நண்பர்களிடம் பழகுகிறோம்,
தமிழே இல்லாத தமிழகத்தில் வாழ்கிறோம்,
அட
தமிழ் இல்லாத தமிழ்ப்படத்தையே பார்க்கிறோம்,

அட சொல்லவந்ததை மறந்துவிட்டு
பலவற்றை பேசிக்கொண்டிருக்கிறேனே!

Wish You Happy Tamil New Year!.
(தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்).

12 comments on “அன்பு தமிழ்தாய்க்கு ஒரு கவிதை!

 1. purushoth சொல்கிறார்:

  நண்பரே வணக்கம்….
  கொஞ்ச நாள உங்களோட வலைப்பூ புதுசா எதுவும் வரல. அதனால நான் இந்த கவிதைய இப்போ தான் பார்த்தேன். இருந்தாலும் அழகா சொல்லிடிங்க..கலக்கலா இருக்கு..நன்றி..

 2. suganthiny75 சொல்கிறார்:

  pala kalaihalil palavaaru pala pny seithu vaalha

 3. தஞ்சை சரவணன் சொல்கிறார்:

  நல்ல கவிதை நன்றி

 4. kathirmuruga சொல்கிறார்:

  :..குழப்பங்களுக்கு மத்தியில்
  குப்பைகளாய் இருக்கிறோம் நாங்கள்…”
  ஆனால் குப்பைக்குள் வைரமாகக் கூர்த்தெழுவோம் என்று நம்பிக்கை கொள்வோம்.

 5. suryamathy சொல்கிறார்:

  Dear sir…
  I am very much impressed on your poetry not only this but also each and every pages of your web . You have been discussing more than anything .. and above all you are giving suitable reply for every comments.. If you have free time just visit my website sir.. I need your comments in it. It will be great pleasure to me.Thank you. my poetry website suryamathy.com

 6. கோவை கவி சொல்கிறார்:

  நல்ல சிந்தனை ஓட்டம்! வாழ்த்துகள்! சகோதரனே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s