தொட்டியம் மதுர(மதுரை) காளியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

எனது ஊருக்கு அருகில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில்களில் மதுரை காளியம்மன் கோவிலும் ஒன்று. பிரம்மாண்டமும், ஆச்சிரியங்களும் நிறைந்த அதன் தேர் திருவிழாக் காலங்களை என்னால் எளிதில் மறக்க இயலாது. மற்ற குலதெய்வக் கோவில்களைப் போலன்றி மாறுபட்டு இருப்பது அதன் சிறப்பு. அந்தக் கோவிலைப் பற்றிய இடுகையே இது.

கோவில் முன்தோற்றம்

பறையன் இசையில் மயங்கிய காளி –

தொட்டியம் பகுதியிலிருந்து மதுரை திருவிழாவிற்கு சென்ற இரண்டு பறை இசைக் கலைஞர்கள், விழா முடிந்து திரும்பி வருகையிலும் தங்கள் களைப்பு தெரியாமல் இருக்க இசைத்துக் கொண்டே வந்தார்கள். அவர்களின் இசையில் மயங்கியிருந்த காளி, அவர்களின் இசையைக் கேட்டுக் கொண்டே தொட்டியம் வந்ததாக கூறுகின்றார்கள்.

பறை இசை கலைஞர்கள்

பறையையும், பறை இசைப்பவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களாய் ஒதுக்கி வைத்திருக்கும் சமூகத்திற்கு மத்தியில் அவர்களை முதன்மைப்படுத்தி சொல்லப்படும் கதை ஆச்சிரியமான ஒன்றுதானே. மேலும் அவர்கள் இருவரின் சிலையும் கோவில் பிரகாரத்தில் அமைக்கப்படுள்ளது. சில கோவிலுக்குள் நுழையவே அனுமதி மறுக்கின்ற நிலை இப்போதும் உள்ளது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

தமிழர்களின் இசைக் கருவியென பறையை கொண்டாட இப்போதுதான் ஆரமித்திருக்கின்றார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒரு தெய்வம் அந்த இசையில் மயங்கி வந்தமையே இதன் மூலக் கதை எனும் போது, பறை இசையையும், அதன் கலைஞர்களின் மகத்துவமும் புரிகிறது. இதை வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்க
வேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் எண்ணம் நம் சகோதரன் வலைப்பூவின் மூலம் நிறைவேறிவிட்டது என நினைக்கிறேன்.

எருமைக் கிடா பலி –

மதுர காளியம்மன்

ஆடு, மாடு, கோழி என முப்பலிகளை தருவது பழங்கால வழக்கம். அந்த வழக்கம் இன்றும் தொட்டியம் மதுர காளியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. பொதுவாக கோழியும், ஆட்டுக்கிடாவும் பலி தரப்பட்டாலும்., எருமைக் கிடா பலி திருவிழாக்காலங்களில் நடைபெறுகிறது. வெட்டப்பட்ட எருமைக் கிடாயை புதைப்பதற்கென பெரும் நிலப்பரப்பும் கோவிலுக்கு அருகிலேயே இருக்கின்றது.

சிறப்புகள் –

 • பறையன் இருவரின் சிலையும் கோவிலுள் இருப்பது.
 • முப்பலி நடைபெருவது.
 • பலருக்கு குலதெய்வமாக இருந்தாலும், அருகில் வசிப்பவர்களுக்கு விருப்பமான தெய்வமாகவும் மதுரகாளி அருள் செய்கிறார்.
 • மக்களின் அன்பால், வெகு விமர்சையாக தேர்திருவிழா கொண்டாடப்படுகிறது.
 • திருமணங்களும், இன்னும் பிற விஷேசங்களும் நடத்தப்படுகின்றன.
 • எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தெய்வமாக இருக்கிறாள் மதுரகாளியம்மன்.

16 comments on “தொட்டியம் மதுர(மதுரை) காளியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

 1. purushoth சொல்கிறார்:

  Vanakkam nanbarae,
  Migavum arumaiyana pathivu…intha pathivu ippothu irukum thalai muraiku oru sirantha eduthu kaataga irukum….

  Nandri….

 2. rajagopal சொல்கிறார்:

  essai all vasamatathar idayam athu

 3. எஸ்.கே சொல்கிறார்:

  வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றி நண்பரே!.

   எளிமையாக தமிழில் கடினமான அறிவியல் விசயங்களை சொல்லும் வலைப்பூக்கள் என்பதில் நமது சகோதரனும் இருப்பதே பெருமையாக இருக்கிறது. வலைசரத்திலும் சகோதரனை கொடு சேர்த்தற்கு மிக்கநன்றி.

 4. படைப்பாளி சொல்கிறார்:

  எப்படித்தான் இவ்வளவு வரலாறுகளை வாரித் தருகிறீரோ..அருமை!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இக் கோவில் என் அன்னையின் தாய்க்கு பிடித்தமான கோவி்ல். அதனால் சிறுவயதிலிருந்தே இக்கோவிலின் வரலாறு தெரிந்ததே. பகிர இப்போதுதான் நேரம் கிடைத்து.

   நன்றி நண்பரே!.,

 5. கோவை பாலா சொல்கிறார்:

  அருமையான பதிவு. பறையர்கள் இசையுடன் காளியின் கதையை விவரிக்கக் கேட்டிருக்கிறேன். எங்க குலதெய்வத்தின் பதிவு பிரமாதம்…

 6. தஞ்சை சரவணன் சொல்கிறார்:

  கண்டிப்பா சென்று பார்க்கிறேன் .தாங்கள் அடிக்கடி காணாமல் போய்விடுகிரீர்களே ,ஏன்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வேலைக்கு செல்வதால், கிடைக்கும் நேரத்தினை திரைப்படம், நண்பர்கள் என்று பங்கிட்டு விடுகிறேன். வலைப்பூவினைப் பற்றிய தாக்கம் அதிகம் ஏற்பட்டால் மட்டுமே இங்கு வருகிறேன்.

   முன்பெல்லாம் என் எழுத்துக்களை ஒருவர் படிக்கமாட்டாரா என்று ஏங்கிருக்கிறேன். இப்போது அங்கிகாரம் கிடைத்துவிட்டதால், கொஞ்சம் கவனக்குறைவு. இனி முயற்சிசெய்கிறேன்.

 7. சன்முகவேல் சொல்கிறார்:

  எங்களுடைய குலதெய்வம் மதுரகாளிதான் நண்பரே!
  அருமையான பதிவு

 8. சன்முகவேல் சொல்கிறார்:

  மேலும் சில புகைபடங்களை பதிவுசெய்தால் நன்றாக இருக்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s