பொருந்தா காமமும் தமிழ் சமூகமும்

காதல் விடுத்து கதை சொல்ல எதுவுமில்லை என்கின்ற திரையுலகில் சில கட்டுப்பாடுகளை உடைத்திருக்கின்றன. ஆனால் அவை காதலை விடவும் கடுமையான காமத்தினை கையில் எடுத்திருக்கின்றன. சில வலைப்பதிவு நண்பர்கள் இதனை ஏற்றுக்கொள்ள தமிழர்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்கின்றார்கள்.

இந்து மத புராணங்களையும், தமிழ் இலக்கியங்களையும் கேட்டு வளர்ந்த சமூகத்தில் பக்குவம் வந்திருக்க வேண்டுமே!. எப்படி தவறியது?. ஒரு வேளை இந்து மத புராணங்களையும், தமிழ் இலக்கியங்களையும் தவற விட்டுவிட்டார்களா நம் தமிழர்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம். ஏன் என்கின்றீர்களா. அதற்காகத்தான் இந்த இடுகை.

பொருந்தா காமம் –
அன்பு, அறம், சமூகம், ஒழுக்கம் இவைகளை தகர்த்துவிட்டு காமுறுவதை பொருந்தா காமம் என்கின்றார்கள். காதலை ஊரறிய வெளிப்படுத்துவதிலிருந்து தொடங்கும் பொருந்தா காமம், வரைமுறையில்லா புணர்ச்சியில் வந்து முடிவடைகிறது. புனிதம் என்று போற்றி வளர்த்த உறவுகள் எல்லாம் தகர்ந்து நிற்கின்றன, சமூகம் எள்ளி நகையாடுகிறது என்பதோடு இத்தனையும் நிகழ்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியங்களில் –

இப்போது அரசியல்வாதிகளுடன் இருக்கும் மனைவியார், துணைவியார் போல அப்போது இல்லக் கிழத்தி, காதல் கிழத்தி, காமக் கிழத்தி என இருந்தார்கள் என்கின்றன தமிழ் இலக்கியங்கள். வீரம், கொடை போன்றவற்றை விடுத்து அகத்தினை முழுமையும் காமத்திற்காக எழுதப்பட்டது.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் காதல் கிழத்தியையும், இல்லக் கிழத்தையும் ஒருசேரக் கொண்டவனின் கதை, சீவகசிந்தாமணியோ எட்டு கன்னிகளை மணம் முடிக்கும் மனிதனுடையது. ‘கற்பகத்தின் பூங்கொம்போ, காமன் தன் பெருவாழ்வோ‘ என்கிறது பெரிய புராணம். தமிழர்களின் வேதநூலானான திருக்குறளோ ‘கள்ளினும் காமம் இனிது‘ என்கிறது. கம்ப ராமயணமோ ‘விழும்தொறும் மண்ணும் கீழுற
குழைவிழும்’ என்று மிருகங்களின் புணர்ச்சியைப் பற்றிக் கூட குறிப்பிடுகின்றன.

கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என காமத்தினை வைத்தே வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள். முறையான காமத்திற்கு ஐந்து திணைகளும் முறையற்ற காமத்திற்கு இரண்டு திணைகளையும் வகுத்துள்ளனர். கைக்கிளை என்பது ஒருதலைக்காதல், பெருந்திணை என்பது பொருந்தா காமம். மற்ற ஐந்துதிணைகளும் தலைவனும் தலைவியும் புணர்தல், பிரிதல், காத்திருத்தல், ஊடல், வருந்துதல் என்பவையே.

இந்து மத புராணங்களில் –

பொருந்தா காமம் என்ற ஒன்றை மட்டுமே வகையாக பிடித்துக்கொண்டு புராணங்களை படைத்திருக்கின்றார்கள். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இப்போது நடப்பது போலவே பழங்காலத்திலும் ஏகப்பட்ட முறை தவறிய உறவுகள் சமூகத்தில் உலாவினவோ என்று சந்தேகம் வருகிறது. வெறும் கற்பனையாக எடுத்துக் கொண்டால், இத்தனை வன்மம் என்று எண்ணம் வரும், மேலும் படியுங்கள்.

மோகினி -(ஆணாக இருந்து பெண்ணாக மாறியபின் உறவு)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு)
திரௌபதி என்று உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக வாழ்ந்தாள் என்கின்றனர்.

ருமை- (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

பிருந்தை -(மாற்றன் மனைவியுடன் உறவு)
சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்கள்.

குந்தி – திருமணத்திற்கு முன் உறவு
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் உறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. மேலும் ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை என்று வேறு கூறப்படுகிறது.

பத்மை -தகப்பன் மகள் உறவு
பத்மை என்ற பெண்ணை படைத்தார் பிரம்மா. படைத்தவனுக்கு எப்போதும் தகப்பன் அந்தஸ்த்து தரப்படுவது வழக்கம், எனவே பத்மையை பிரம்மனின் மகள் என்கின்றார்கள். ஆனால் பத்மை மிக அழகாக இருந்தமையினால் பிரம்மனே கற்பழித்தான் என்று கூறப்படுகிறது.

இதுபோல பறவைகள், விலங்கள் புணர்ச்சியும் புராணங்களில் வருகின்றன. இதுவே போதும் என இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நம் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வேண்டுமா என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், வகுப்பறையில் குழந்தையை பெற்று கழிவறையில் எறிந்துக் கொண்டிருக்கின்றார்கள். அடிப்படை பாலியலறிவை தரவேண்டுமா என யோசனை செய்கையில், பிஞ்சுகளை வைத்து அரிப்புகளை ஒருகூட்டம் தீர்த்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுக்க சட்டமும் இல்லை, அதைக் கேட்க நாம் தயாராகவும் இல்லை.

தமிழ் இலக்கியங்களையும், இந்துமத புராணங்களையும் தவறவிட்டவர்கள் கூட, அபூர்வ ராகங்களில் தொடங்கி உயர், கலாபக் காதலன், சிந்து சமவெளி என்று பொருந்தா காமத்தினை மையப்படுத்திய கதைகளை மறந்துவிட்டார்களா?. இன்று மாணவர்களும், மாணவிகளும் காதல் கடிதங்களை பரிமாறிக் கொள்வதில்லை. மாறாக கைப்பேசியில் நிர்வாண படங்களையும், காம குறுஞ்சேய்திகளையும் பகிர்ந்துகொள்ளும் காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது. இதெல்லாம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராவிட்டால் தடுத்து நிறுத்த, தற்காத்துக் கொள்ள என்பது பற்றிய சிந்தனையே எழாமல் போய்விடும். சிந்திப்பீர்.

16 comments on “பொருந்தா காமமும் தமிழ் சமூகமும்

 1. Rajasurian சொல்கிறார்:

  //ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராவிட்டால் தடுத்து நிறுத்த, தற்காத்துக் கொள்ள என்பது பற்றிய சிந்தனையே எழாமல் போய்விடும்//

  நல்ல கருத்து

 2. rajagopal சொல்கிறார்:

  arummaianna karuthu

 3. purushoth சொல்கிறார்:

  Nanbarae nengal solvathu migavum sariyana ondru..nethu oru tamiz padam parthen(nadunisi naaikal) valatha ammavayae thappu panra mathiri oru kaatchi..yengae poi kondu irukirathu intha ulagam..athae mathiri delhi la oru news 8 vayasu ponna avanga appavae rape panni murder pani irukan…ini varum kalangalil yara nambarathunae therla….

  azhgana pathivuku nandri nanbarae……

 4. kuwait kumar சொல்கிறார்:

  நீங்க சொன்னது 100/100 உண்மை சார்.

  எங்க கிராமத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

  அடுத்தவன் பொண்டாட்டிக்காக, அவனுடைய நண்பர்கள் சண்டை போட்டு கொண்டனர். அதில் ஒருவன், கல்லை தூக்கி இன்னொருவன் தலையில் போட, ஒருவன் சிறையில், ஒருவன் எமலோகத்தில்.

  இப்பொழுது அந்த ‘பத்தினி’ மன்னித்து விட்டான் அந்த ‘கணவன்’.
  இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர்.
  இருவர் வாழ்க்கை போனது தான் மிச்சம்.

  இது போல, ஏகப்பட்ட கள்ளக் காதல்கள் இருக்குங்க.
  யாரும் யாரையும் நம்ப முடியாது.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   காதலனுடனும் கணவனுடனும் வாழ்கின்ற “பத்தினிகளை” க்கூட நான் பார்த்திருக்கிறேன் நண்பரே!. கற்பு, பத்தினி என்றெல்லாம் சும்மா உதார் விடுகின்றார்கள்.

   கருத்துகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

 5. தஞ்சை சரவணன் சொல்கிறார்:

  அனுபவம் புதுமை

 6. udesh's blog சொல்கிறார்:

  சிறப்பான செய்திகள் அன்பரே!

 7. மீனாட்சி தேவி சொல்கிறார்:

  “கற்பு , பத்தினி என்றெல்லாம் உதார் விடுகிறார்கள்”.
  நீங்கள் இப்படி சொல்லி இருக்க வேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s