தமிழ் திருமண அழைப்பிதழ் – வழிகாட்டுதலுக்காக

என் சிற்றன்னைக்கு “மணிவிழா” விரைவில் நடைபெறவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழ் தயார் செய்யும் பணியை என்னிடம் கொடுத்தார்கள். நல்ல தமிழில் அழைப்பிதழைத் தர வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக வலைமனையில் தேடியும் பலனில்லை.

சட்டென தோழி ஒருத்தியின் மண விழா அழைப்பிதழ் முழுவதும் தமிழில் எழுதப்பட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. என் பழைய புத்தகங்களோடு உறவாடிக்கொண்டிருந்த அந்த அழைப்பிதழை கண்டபின் மனநிறைவானது. அதனை வழிகாட்டுதலாக கொண்டு, அழைப்பிதழை வடிவமைத்துவிட்டேன்.

எனக்கு வழிகாட்டுதலாக இருந்த அந்த அழைப்பிதழ் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்கட்டும் என நம்முடைய சகோதரன் வலைப்பூவில் தருகிறேன்.

அழைப்பிதழின் உறை –
வழக்கமான மேளதாளங்கள், ஊர்வலங்கள் போன்ற படங்களோ, கடவுளின் படங்களோ இல்லாமல் ஆதி தமிழனின் வாழ்வை சித்தரிக்கும் படத்துடன். மனம் விடு தூது என்ற வாசகமும் இணைந்து புதுமையான அழைப்பிதழ் என்ற தோற்றத்தினை உறையிலேயே கொடுத்திடும் அழகு!.

அழைப்பிதழின் முகப்பு –
“யாயும் ஞாயும் யாரா” எனத் தொடங்கும் குறுந்தொகை பாடல் முழுவதும் இடம்பெற்று, அதன் கீழே மணமக்களின் பெயர்கள்.

அழைப்பு –
நிகழும் சர்வமங்கள விகிர்தி வருடம் ஆவணித் திங்கள் 10ம் நாள் (02.01.0000) திங்கள் கிழமை சித்திரை நட்சத்திரமும் ஆயுஷ்மன் யோகமும் பாலய கரணமும் இறையருளும் கூடிய சுபயோகதினத்தில் என்று வழக்கமான முறையில் எழுதப்படாமல் மிக அழகாக எளிமையாக வடிவமைக்கப்பட்ட அழைப்பு,.

அழைப்பிதழின் பின்புறம் –
குறுந்தொகை பாடலுக்கான விளக்கம் நடைமுறைத் தமிழில்,.

31 comments on “தமிழ் திருமண அழைப்பிதழ் – வழிகாட்டுதலுக்காக

 1. வாசுதேவன் சொல்கிறார்:

  மிக அருமையான முயற்சி நண்பரே !
  செம்புலம் சேர வருகிறோம் !

 2. MSK சொல்கிறார்:

  அழைப்பிதழ் என்பதே சரி என்று நினைக்கிறன். அழைப்பிதல் அல்ல.

 3. Anbu சொல்கிறார்:

  அருமையான முயற்சி நண்பரே!!

  வாழ்த்துக்கள் 🙂

 4. sathya சொல்கிறார்:

  i am going to use this for my brothers marriage

 5. சிவா கார்த்திகேயன் சொல்கிறார்:

  நன்றி நன்றி நன்றி நன்றி

 6. bala சொல்கிறார்:

  Superb .. good work.

 7. The Thinker சொல்கிறார்:

  மிக்க நன்றி நண்பரே! திருமண அழைப்பிதளுக்கான ஒரு அருமையான கவிதை!

 8. R HARIHARASUDHAN சொல்கிறார்:

  nanri……..

 9. Moorthy, Chennimalai, Erode (Dist.) சொல்கிறார்:

  Thank you for that invitation model. Because this is very nice, I will inform this invitation model to my another friends for using our marriage…..

 10. நகுலன் சொல்கிறார்:

  எனது திருமணம் தமிழ் நெறித் திருமணமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதி உண்டு, அதற்கான அழைப்பிதழ் கிடைத்தது மகிழ்ச்சி. “அவிழ் மடல்” என்றால் என்பதை மட்டும் விளக்கவும் அல்லது அவிழ் என்பதன் கருத்து என்ன??

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அவிழ் என்ற சொற்பதத்திற்கு பிரி்த்தல் என்று பொருள் வரும். அவிழ் மடல் என்பது பிரிக்கும் படியாக உள்ள மடல் என்று பொருள் கொள்ள வேண்டும். அவிழ் மடல் தலைப்பு அல்ல நண்பரே. அது “POST” அல்லது “Book-Post” என்று இடம்பெரும் வார்த்தைக்கு நிகராக இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் நண்பரே.

 11. நகுலன் சொல்கிறார்:

  மிக்க நன்றி. “அவிழ்” என்பதற்கான இன்னுமொரு கருத்தும் கிடைத்து.

  சொல் : அவிழ்
  அகரவரிசையில் : அ
  மெய் உயிர் இயைவு
  அ = அ
  வ்+இ = வி
  ழ் = ழ்

  மெய்யும் (உடலும்) உயிரும் இயையும் திருமணம் என்றும் அர்த்தம் வருமென்றோ???

  http://tamillexicon.com/ta/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.html

 12. நகுலன் சொல்கிறார்:

  எனது திருமணம் தமிழ் நெறியில் நடைபெற முற்றாகியுள்ளது.

 13. sivanet சொல்கிறார்:

  very good .. this line were uesd for us. thank you

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s