பூக்களை பரிக்காதீர்கள் பெற்றோர்களே!

வலைப்பதிவு எழுதுவது, புத்தகம் படிப்பது போன்ற என்னுடைய செயல்கள் என் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. வாழ்க்கையில் கவணமில்லாமல் இதெல்லாம் எதற்கு என்கின்றார்கள். பணம் சேர்க்கும் வேலை மட்டுமே உகந்ததாக எண்ணுகிறார்கள். பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பது என் எண்ணம். அதை தாண்டி இருப்பவைகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பாதையை தொடர இயலாமல் கசப்பான விசயங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒரு நிறுவத்தில் புத்தகம் வெளியிடுவதற்காக அன்பான அழைப்பு வந்தது. அதற்கான கதைகள் தயாராக இருந்தும், சில சடங்குகளுக்காக அந்த வேலை காத்துக் கிடக்கின்றது. அந்த சடங்குகளை சேகரிக்க முடியாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் தடுத்துவிட்டார்கள். ஒரு எழுத்தாளனாக முடியாமல் தவித்து நிற்கிறேன். இது போல நடப்பது ஒன்னும் புதிதல்ல,.

எட்டாம் வகுப்பு முடித்தவுடன் என் பெற்றோர்களால் நாமக்கலில் உள்ள பெரிய பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அதுவும் விடுதியில்,. அதுவரை இருந்த என்னுடைய உறவுகளோடு இருந்த தொடர்புகள் அறுந்து போயின. அது ஒரு சிறை. அங்கு தொலைபேசியில் பேச இயலாது. செய்திதாள்களோ, தொலைக்காட்சி பெட்டிகளோ இல்லை. வெளிநடப்புகளை தெரிந்து கொள்ளவதே பெரும்பாடு. மாதம் ஒரு முறை இரண்டு நாட்கள் வீட்டிற்குச் செல்வேன். அதுவும் மெஸ் பணத்தினை வாங்குவதற்காக. அந்த இரண்டு நாட்கள் மட்டுமே எனக்கும் வெளியுலகிற்குமான தொடர்பு.

வீட்டிற்கு வந்ததும் முக்கிய உறவுகளையும், நண்பர்களை சந்தித்துவிட்டு வீட்டில் நடந்த நல்லது கெட்டதுகளை விசாரிப்பேன். ஒரு சமயம் என்னுடைய கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாதென, பெரிய பாட்டி இறந்து போன விஷயத்தினைக் கூட என்னிடமிருந்து மறைத்திருந்தார்கள். இப்படி எனக்கும் குடும்பத்திற்கும் இடையே பெரும் இடைவெளி வந்திருந்தது. நேரம் கிடைக்கும் போது பழைய செய்திதாள்களை புரட்டுவேன். ஒரு மாதத்திற்குள் நடந்த அத்தனை விசயங்களும் அப்போதுதான் தெரியும். இந்த விடுதி வாழ்க்கை என்க்கு பிடிக்கவில்லை. அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். உறவுகளை விட உன்னதமான நட்புகள். இருந்தும் இரண்டு வருடத்திற்கு பின் ஊருக்கே திரும்பி வந்தேன்.

ஆனாலும் பொறியியல் படிப்பிற்காக மீண்டும் விடுதிவாசம். இந்த முறை அந்த பிரட்சனைகள் இல்லை. செய்திதாள்களிலிருந்து செல்போன் வரை எல்லாவற்றிற்கும் அனுமதி இருந்தமையால் பிரட்சனைகள் இல்லை. சில சுபகாரியங்களுக்குச் செல்கையில் “நான் யார்ன்னு சொல்லு”ன்னு ஒரு கூட்டம் வந்து நிற்கும். அவர்களின் முகங்களே எனக்கு புதிதாக தோன்றும். சிலர் உரிமையோடு “மாப்ள எப்படி இருக்கிங்க” என்பார்கள். அவர்களெல்லாம் யார் யாரென தெரிந்து கொள்வதிலேயே நாட்கள் கழிந்துவிடும். கல்லூரிகள் அருகில் அமையாது, ஆனால் பள்ளிகள் நிச்சயம் அமையும். எனவே பள்ளிக் காலத்தில் குழந்தைகளை அருகிலிருக்கும் பள்ளியிலேயே படிக்க வைக்காலாம் என்பது என் எண்ணம்.

இப்படி அருகிலிருக்கும் பள்ளியில் படிக்க வைப்பதால் குடும்பம் நடத்தும் பாங்கினை அவர்கள் அறிந்து கொள்ள இயலும். உறவுகள் இல்லாத, பாசம் இல்லாத வெற்றுக் கல்வியை வைத்துக் கொண்டு அவர்கள் எதிர்காலத்தில் தடுமாறாமல் இருக்கட்டும். ஏன் இப்போது அவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கையை நடத்தவில்லையா என்று நீங்கள் கேட்டால்,. நிச்சயமாக அவர்கள் வாழ்க்கையை வேறு கோணத்தில் வாழ்கின்றார்கள். எல்லாவற்றையும் பணம் தீர்த்துவிடும் என்கின்றார்கள். சமீபத்தில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதிகள்,. காரில் குழந்தையை வைத்துவிட்டு, ஷிப்ட் முறையில் பார்த்துக் கொண்டதாக செய்தி வந்தது. சிறுவர்களை அவர்களுடைய விளையாட்டு பொருள்களுடன் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அலுவலகம் செய்யும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் என் பெற்றோர்களும் அப்படி செய்திருக்கின்றார்கள். அந்த நாட்களில் கிரில் கேட்டினை பிடித்துக்கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களையும், விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களையும் ஏக்கத்தோடு பார்ப்பேன். இன்று ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால், எல்லாம் உனக்காக பணம் சேர்க்கத்தான் என்கின்றார்கள். அவர்களும் பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று நினைத்துவிட்டார்கள். அவர்களின் நினைப்பினால் நான் இழந்தவைகள் மிக அதிகம்.

என்னுடைய சிறுகதை முதன்முதலாக குமுதத்திலோ, குங்குமத்திலோ வெளிவந்திருக்கிறது. என்ன இப்படி ஏனோ தானோவென சொல்லுகின்றேன் என வியப்பாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. படிக்காமல் பத்திரிக்கைகளுக்கெல்லாம் கதை அனுப்புகின்றாயா என்று கேள்விகேட்டு மிரட்டினார்களே தவிற,. அதற்கு பாராட்டோ, அது எந்த பத்திரிக்கை என்பதையோ சொல்லவில்லை. அவர்களுக்கு ரூபாய் 500 மணியாடரில் வந்திருக்கிறது என்றுமட்டும் சொன்னார்கள். விடுதியிலிருந்து வந்து அந்த மணியாடரை கேட்கும் முன்பே அவர்கள் பணத்தினை வாங்கிவிட்டு அதை வங்கியிடம் சமர்ப்பித்திருந்தார்கள். நான் மிகவும் நொந்து போனேன். தினத்தந்தியில் என்னுடைய முதல் கவிதை பிரசுகமானது. எல்லையற்ற மகிழ்ச்சியில் வீட்டிற்கு சென்று தெரிவித்தபோது, எங்கே காட்டுபார்க்கலாம் என்று படித்துப் பார்க்க யாருமில்லை. வாழ்த்து சொல்வதற்கு ஆளில்லாமல் வெறுமையாகவே கழிந்தது பொழுது.

வலைப்பதிவுகள் மற்றவர்களின் அனுபவங்களின் புதையல்., அட இப்படி கூட நடந்திருக்கிறதா என உங்களுக்குத் தோன்றினால் அதுவே அந்த பதிவின் வெற்றி. அந்த அனுபவத்தினை உங்களுக்குப் பொறுத்திப் பார்த்து தவறுகள் நிகழா வண்ணம் திருத்திவிடுவீர்கள் என்பதால்தான் என்னுடைய சோகங்களையும், என் பெற்றோர்களின் தவறுகளையும் இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறேன். உங்களுடைய செல்லம் ஒரு கவிதை, ஓவியம் என்று எதை கிறுக்கினாலும், அதை மெருகேற்ற வைத்து உலகிற்கு சொல்லுங்கள். அவளுடைய திறமையை மதிப்பதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய மரியாதை. பள்ளியில் வழங்கப்படும் மதிப்பெண்களுக்காக அவர்களை முடமாக்கி விடாதீர்கள் என்பது என் கோரிக்கை.

கொஞ்சம் அதிகமாகவே புழுங்கிவிட்டேன் என தோன்றுகிறது. உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல இப்போதைய பிரட்சனை வேலையில்லை என்பதே. அதை சரிகட்டிவிட்டு உங்களை விரைவில் சந்திக்கிறேன். இது வரை ஊக்கமளித்துவந்த அனைத்து நண்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

வணக்கம்.

28 comments on “பூக்களை பரிக்காதீர்கள் பெற்றோர்களே!

 1. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  நிச்சயம் நல்ல வேலை வாய்புகள் உங்களுக்கு அமையும் மனதை தளர விடாதீர்கள் சகா,

  பணத்தால் வாழ்கையை வெற்றி காண்பதை விட
  மனதுக்கு பிடித்த வாழ்கையை ரசித்து வாழ்வதே உண்மையான வெற்றி
  ஆனா நம்ப ஜனம் பணத்துக்கு தரும் மதிப்பை
  நல்ல மனத்து தருவதில்லை.

  நல்ல பதிலுடன் விரைவில் வாருங்கள்.

 2. M.Kalidoss சொல்கிறார்:

  கடந்தவைகளை மறந்து ,இந்த அனுபவம் உங்கள் வருங்கால சந்ததிக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறேன்

 3. எஸ்.கே சொல்கிறார்:

  பெற்றோர்களின் ஊக்கம் கிடைக்காவிட்டால் பிள்ளைகளின் வளர்ச்சி கடினம்தான்!
  தங்கள் அனுபவம் வருந்ததக்கதே! ஆனால் அதை மற்றவர்கள் பாடமாக எடுத்துக் கொண்டால் நலம் தரும்!

 4. kani சொல்கிறார்:

  //என் பெற்றோர்களால்//, //என் பெற்றோர்களும்//-என் பெற்றோரால், என் பெற்றோரும்
  //அலுவலகம் செய்யும்//-அலுவலகம் செல்லும்
  //அவளுடைய திறமையை//-அவர்களுடைய திறமையை

  //அவர்களின் நினைப்பினால் நான் இழந்தவைகள் மிக அதிகம்//- சிலவற்றை மட்டுமே இங்கு பதித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்?.

  //பள்ளியில் வழங்கப்படும் மதிப்பெண்களுக்காக அவர்களை முடமாக்கி விடாதீர்கள்//-சத்தியமான வார்த்தை

  //இப்போதைய பிரட்சனை வேலையில்லை என்பதே//-இது இப்போது உலகளாவிய பிரச்சினை ஆயிற்றே? விரைவில் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

 5. யூர்கன் க்ருகியர் சொல்கிறார்:

  nice

 6. கை.அறிவழகன் சொல்கிறார்:

  அன்புத் தம்பிக்கு,

  பூக்களைப் பறிக்காதீர்கள் பெற்றோர்களே என்ற உங்கள் கட்டுரையை உங்கள் வலைப்பூவில் படித்தேன், அந்தக் கட்டுரை ஒரு சிறு தாக்கத்தை எனக்குள் உண்டாக்கியது, உங்களைப் போலவே தத்தம் துறைகளைத் தேர்வு செய்ய இயலாத மனிதர்களாகவே நமது சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது, அது ஒரு சமூக மன நிலையாகி விட்டது, அதற்கு மிக முக்கியமான காரணம் பொருள் தேடும் வாழ்க்கை அல்லது முதலாளித்துவத்தின் மீதான சார்பு மனநிலை, இந்தச் சார்பு மனநிலையை வளர்த்தெடுக்கவே நமது கல்வி முறையும், இயக்கங்களும் அயராது உழைக்கின்றன, பொருள் தேடுவதும், ஒரு கடினமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் எல்லா மனித சமூகங்களின் தேவை என்பதை நான் மறுக்கவில்லை, அதே நேரத்தில் தேவைக்கும் அதிகமான பொருளாசை என்பது ஒரு சமூகத்தை எப்படிச் சீரழிக்கும் என்று வரலாறு நமக்கு உணர்த்தி இருக்கிறது. ஆகவே இதன் மூல காரணிகளான பொருளாதாரச் சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்வதை உங்கள் எழுத்தின் ஊடாகச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

  பெற்றோர்களைத் தவிர நம் மீது முழுமையான அன்பு கொண்டவர்கள் இவ்வுலகில் வேறெவரும் இல்லை, நீங்கள் வளர்ந்து ஒரு குழந்தைக்குத் தந்தையாகும் போது தான் அதனை உங்களால் உணர முடியும் என்று நினைக்கிறேன், பெற்றோர்கள் உங்கள் மீது உருவாக்கும் அழுத்தங்கள் பெரும்பாலும் உங்கள் மீதான அன்பினால் கட்டப்பட்டது, அவர்கள் உங்கள் வாழ்க்கை நலமாகவும், மகிழ்வாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

  பெற்றோர்கள் பூக்களைப் பறிப்பதில்லை, மாறாக அவர்கள் முள்ளை நீக்க நினைப்பதை நாம் பூக்களைப் பறிப்பதாக எண்ணுகிறோம்.

  உறுதியோடும், கூறிய அறிவோடும் உங்கள் இலக்குகளை நோக்கிப் பயணம் செய்யுங்கள், ஒரு வெற்றி பெற்ற எழுத்தாளனாக உங்களைக் காண்போம் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

  வாழ்த்துக்களுடனும், அன்புடனும்

  கை.அறிவழகன்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பரே. சுயமாக பாதை அமைக்க அவர்கள் விடிவதில்லை. அதற்கு அவர்களின் கசப்பான அனுபவங்களும் காரணம். இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். நான் இன்னும் பயணிக்கவேண்டிய காலம் நிறைய இருப்பதால் நிச்சயம் என்னுடைய ஆசையும் ஒரு நாள் நிறைவேறும் என்றே நம்புகிறேன்.

 7. ramanans சொல்கிறார்:

  விரைவில் வாருங்கள் சகோதரன், காத்திருக்கிறோம். அப்புறம் ஒரு விஷயம் ஜெ.மோவின் தளத்தில் ’குலதெய்வம்’ பற்றிய உங்கள் ஆர்வ, ஆய்வுக் குறிப்பைப் பார்த்தேன். பல கிராமத்துச் சிறு தெய்வங்கள் ஒரு காலத்தில் மனிதர்களாக வாழ்ந்தவைதான். இதற்கு பல ஆதாரத் தரவுகள் கிடைக்கின்றன, ஆனால் நிறைய கற்பனைகள் கலந்து.

  65 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண் இன்று தெய்வமாகத் திகழ்கிறார். மிக பிரமாண்டமான ஆலயம் அவருக்கு உள்ளது. வழிபாடு, பூஜை என அமர்க்களப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்தப் பெண்ணேடு பழகியவர்கள் இன்றும் இருக்கின்றனர். அந்தக் குடும்பத்தினர், வாரிசுதாரர்கள் கூட உள்ளனர். எனக்கு நேரிலும் அவர்களைத் தெரியும்.

  இது ஆய்வு செய்து நூலாக எழுத வேண்டிய விஷயம். நான் இதை ஏன் செய்யவில்லை என்றால்,’ எல்லா தெய்வங்களுமே இப்படித்தான் போலும்’ என்ற மலின சிந்தனை பலருக்கு வந்து விடும் என்பதற்காகத் தான்.

  அந்தத் தெய்வம் மனம் உவந்து தன் வரலாறு வெளிவர அனுமதித்தால் அது என்றானும், யாராலும் நூலாக வரக் கூடும். காத்திருக்கிறேன்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   ஜெயமோகன் அவர்களின் தளத்தை வாசிக்கும் பழக்கம் உள்ளதால், அவரிடம் எனது சந்தேகத்தினைக் கேட்டேன். உடனே விளக்கம் தந்துவிட்டார்.

   65 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணா. நான் கேள்வியுற்றவற்றில் நாம் வாழும் காலத்திலேயே தெய்வமாகியிருக்கும் பெண். நானும் காத்திருக்கிறேன் நண்பரே!. அந்த தெய்வத்தின் பெயர் தெரிந்தால் கூறுங்கள். மிக சமீபத்தில் தர்மபுரியில் பேருந்தில் இறந்த பெண்களுக்காக ஒரு கோவில் கட்டப்பட்டிருப்பதை அறிந்தேன்.

   தமிழ் சாமிகள் பற்றி அறிவதே ஆவலாக இருக்கிறது.

 8. சேவியர் சொல்கிறார்:

  சகோதரரே…. விரைவில் பிரச்சினைகள் விலகி, நூல் வந்துவிடும் எனும் நம்பிக்கை உண்டு. உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எடிட்டருக்கு ஒரு போன் போடலாமே ? நேற்று மாலையில் கூட உங்களை விசாரித்தார் !

 9. siva சொல்கிறார்:

  பல பெற்றோர்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விரும்புவதில்லை என்பது நிச்சயமான உண்மை.

 10. mozhidasan சொல்கிறார்:

  உங்களை நன்கு யோசிப்பவராகவே அறிகிறேன்.உங்களின் மன வருத்தங்கள் புரிகிறது.நீங்கள் கிராம பகுதியை சேர்ந்தவர் என்று நினைக்கிறன்.உங்கள் பெற்றோரின் மனநிலை உங்களுக்கு புரியலையா?
  உங்கள் வயதில் இருக்கின்ற பெரும்பான்மையானவர்களின் மனதில் நீங்கள் நினைப்பது மாதிரி தான் இருக்கும்.
  எந்த ஒரு பெற்றோருக்கும் தம் மகன் படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து நல்லா இருக்கணும்னு என்று தான் விரும்புவார்கள்.
  நீங்கள் ஒரு வேலையில் சேர்ந்து பிறகு உங்கள் விருப்பமான துறையில் ஈடுபடுங்களேன்.
  சுஜாதா முதற்கொண்டு எல்லா எழுத்தாளர்களும் அவர்களது ஆரம்ப வாழ்க்கையில் ஏதோ ஒரு வேலையில் இருந்த படி தான் தங்கள் விருப்பங்களை செய்தார்கள்.
  உங்களின் பெற்றோரின் நிலையில் இருந்து யோசியுங்களேன்.பிறகு உங்கள் வருத்தங்கள் பறந்து போயிரும்.
  உங்களின் அனுபவங்களை கொண்டு வரும் காலங்களில் உங்களது குழந்தைகளை வளருங்கள்.
  உங்களின் சிறந்த வருங்காலத்திற்கு என் வாழ்த்துக்கள்.
  –மொழிதாசன்

 11. padmahari சொல்கிறார்:

  ரொம்பக் கஷ்டமாப்போச்சுங்க நண்பரே இந்தப் பதிவைப் படிச்சப்பின்னாடி. நிறைய விஷயங்கள் இங்கே எழுதனும், ஆனா எழுத நேரம் இல்லை. அதனால உங்களை இன்று இரவு தொலைபேசியில் அழைக்கிறேன். ஆனா, ஒரு வலையுலக நண்பனா ஒன்னு சொல்லிக்க விரும்புறேன். முதல்ல ஒரு நல்ல வேலையைத் தேடுக்குங்க. அதுக்கப்புறமா, முதல் வேலையா அந்த நூல் எழுதும் வாய்ப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாம நூலை எழுதுங்க. அது உங்களுக்கான ஒரு எதிர்கால அடையாளத்தையும், உங்களால் நம் தமிழ் சமூகத்துக்கு கிடைக்கவிருக்கும் எண்ணற்ற தகவல்களையும், கருத்துக்கள்/கோணங்களையும் ஏற்படுத்தித்தரவல்ல ஒரு அரிய வாய்ப்பு. அதனால கவலைப்படாதீங்க, மற்றவை நேரில்…..

  நன்றி,
  பத்மஹரி.

 12. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் நண்பா…பிள்ளைகளை புத்தகபுழுவாக்கி நிறைய பெற்றோர்கள் அவர்களின் சுய அறிவை கொன்றுவிடுகிறார்கள்..படிப்பவர்களாவது உணரட்டும்.

 13. perumal.s சொல்கிறார்:

  nallathu nanbare !

 14. FRODE MAMA சொல்கிறார்:

  what problam ji continiu ji

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s