கடவுள் இருக்கிறாரா? – சுஜாதா

ஆயிஷா புத்தகத்தினை நாளொன்றுக்கு குறைந்தது 25 நண்பர்களாவது நம் தளம் மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நல்ல விஷயங்கள் நம்மூலம் பரவுகின்றன என மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாக இணையத்திலிருந்து மின்புத்தகங்களை தரவிரக்கம் செய்து படித்துக் கொண்டிருக்கிறேன். சில நல்ல புத்தகங்களைக் கூட படிக்காமல் நான் தவறவிட்டிருக்கிறேன் என அப்போதுதான் தெரிந்தது. கற்றது கையளவு என்ற பழமொழியை படித்தது என மாற்றுக்கொள்ள வேண்டும் போல,. அப்படி படிக்காத  ஒன்று சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா என்ற புத்தகம்.

எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவிடுவார் என்று நம்பியே புத்தகத்தினை புரட்டினேன். முதல் அத்தியாயத்தினை தொடுகையிலேயே எப்படிப்பட்ட புத்தகம் என புரிந்தது போனது. நம்மாழ்வார் சொல்வதற்கும் நவீன விஞ்ஞானம் சொல்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசிக் கொண்டே, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு முன் பிரபஞ்சத்தினை உருவாக்கியது கடவுளா என்ற கேள்விக்கு திரும்புகிறார். இன்னும் அத்தியாயங்களில் நுழைய நுழைய அத்தனையும் அறிவியல். கெப்ளர், நியூட்டன், ஐன்ஸ்டீன் என பிரபலங்களையும் அவர்கள் அறிவித்த சமன்பாடுகளையும் புரட்டி புரட்டி எடுக்கிறார்.

அறிவியல் பற்றி அதிக அறிவு எனக்கில்லை. தசவதாரம் வந்தவுடன் பதிவுலகில் அதிகம் பேசப்பட்டது “வண்ணத்துப்பூச்சி விளைவு”(கெயாஸ் தியரி). படத்தில் சொன்னதை விட பல பதிவர்கள் இன்னும் எளிமையாக விளக்கம் சொல்லியிருந்தார்கள். அதன் சாதங்களையும் பாதகங்களையும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளினார்கள். அதன் பின் அறிவியல் பதிவுலகிலிருந்து விலகிக் கொண்டது. இப்போது INCEPTION படத்தினால் மீண்டும் ஒரு அறிவியல் அலை. பல விசயங்களை எளிமையாக மாற்றி பலர் தந்திருந்தார்கள். தமிழ் வலைப்பதிவுலகிற்கு அறிவியல் விளக்கம் அளிக்கும் பல தனி வலைப்பூக்கள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். அதற்காக இப்போது ஒன்றுமே இல்லை என்று கூறவில்லை. இன்னும் அதிகமாக வேண்டும் என்றே பொருள் கொள்க.

எப்படி நம்மாழ்வரின் வரிகளுக்கு விளக்கத்தினை சொல்கிறாரோ. அதுபோலவே காஸ்மிக் விதிகளுக்கும் நல்லதொரு விளக்கம் சொல்கிறார். வாசகர்களுக்கு மிகவும் குழப்பமாகக் கூடும் என்று நினைக்கும் சில அறிவியல் விசயங்களை மட்டும் விட்டுவிட்டு தொடர்கிறார். பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை அறிவியல் விளக்கலாம். ஆனால் ஏன் தோன்றியது என்பதற்கு அதனால் பதில் கூற முடியாது என்று சொல்லும் போது, நாமும் அதனைப் பற்றி சிந்திக்க ஆரமிக்கிறோம். இது வரை நம்மாழ்வார் முதற்கொண்டு ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை என்ன சொல்லுகின்றார்கள் என்ற விரிவான செய்தியை மட்டுமே பதிக்கிறார்.

அறிவியலைக் கடந்து கணிதத்தின் பக்கம் பார்வை செல்கிறது. கலிலியோ, டெஸ்கார்ட்டஸ், ரோஜர் பென்ரோல் என மேதைகளின் கூற்றுகளை நினைவு கூறுகிறார். கேயாஸ் தியரியும், பிரைம் நம்பர்களையும் விவரிக்கையில், கடவுளை கண்டுபிடிக்க எத்தனை பெரிய தேடல்களை தாண்ட வேண்டியிருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்ததாக ராமானுஜம் வந்தபின்தான் தெம்பே வந்தது. கணிதமேதை என்ற போதும் கனவில் பல விடைகள் தெரிந்ததாக சொல்லியிருக்கிறார். கார்ல் காஸ், ஹென்றி பாயின்கேரே போன்ற கணித மேதைகளுக்கும் பல மாதங்கள் ஜகா வாங்கிய விடைகள் சட்டென ஒரு நாள் வந்ததாக கூறியிருக்கிறார்கள்.

கடவுள் இருப்பதை இன்னும் நம்புவதற்கு காரணம், எதிர்பாரா நிகழ்வுகளும், தனித்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கும் உயிரினங்களும் மட்டுமே. மிக உயரத்தில் பறக்கும் கழுகுகளுக்கு கண்கள் மிக கூர்மையாகவும், இரவில் உணவு தேடும் ஆந்தைகளுக்கு செவிதிறன் உயர்ந்து இருப்பதையும் காணும் போது பெரும் வியப்பு ஏற்படுகிறது. இந்த வியப்பின் ஓரத்தில்தான் கடவுள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஒளிந்திருக்கின்றன. கடவுளை சிலர் கணிதவடிவாகவும், சிலர் மனம் போல ஒரு சக்தி எனவும் கருதிவந்திருக்கின்றனர். ஆனால் இவைகளும் போதவில்லை.

இந்த விவாதங்களும் தேடல்களும் அறிவியலில் முடிவற்றதாக போய் நிற்கிறது. கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு சுஜாதா இறுதியாக சொல்லும் பதில்,..

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – இருக்கலாம். ஆன்மீக்த்தின் பதில் இருக்கிறார். என் பதில் it depends!

மிகவும் சாமர்த்தியமாக முடித்துவிட்டார். நாளுக்கு நாள் அறிவியலால் பலவற்றினை அறிந்து கொண்டிருக்கிறோம். முன்பு பிறப்பு இறப்பு என்ற இரண்டுமே மிக மர்மமாக இருந்தது,. இப்போது பிறப்பினை துள்ளியமாக அறிந்து கொண்டோம், இறப்பும் சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனை கடவுள் நேரடியாக படைத்தார் என்பதை டார்வினின் பரினாமக் கொள்கை பொய்ப்பித்திருக்கிறது. இது தொடர்ந்து கடவுள் இருக்கும் சாத்தியக் கூறுகளை கலைந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தன்மையையும் அதற்கான தகவமைப்பு, சூழ்நிலை இவற்றையெல்லாம் பார்த்து இவை எப்படி சாத்தியப்பட்டிருக்கின்றன என ஆச்சிரியம் கொள்ள வைக்கின்றன.

புத்தகத்தினை முழுவதுமாக படித்துவிட்டாலும், அறிவியல் விதிகளை அறிந்து கொண்டு மீண்டும் ஒரு முறை புரட்டினால் இன்னும் சில விஷயங்கள் தெளிவாகும் என நினைக்கிறேன். அதனால் இந்த தியரிகளை நமக்கு ஏற்றவாறு சொல்லியிருக்கும் வலைப்பூக்களை தேடிப்போகிறேன். இன்று கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும், வருங்காலம் கடவுளை கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கையில் முடித்துக் கொள்கிறேன்.

கடவுள் இருக்கிறாரா? – சுஜாதா எழுதிய புத்தகம் தரவிரக்கம்.

குறிப்பு – இந்த தரவிரக்கத்தில் முதல் 54 பக்கங்களிலேயே கடவுள் இருக்கிறாரா முடிந்துவிடுகிறது. அடுத்ததாக மிக எளிமையான என்ன ஆச்சிரியம் தொடங்குகிறது. இது ஏறக்குறைய கடவுள் இருக்கிறாரா புத்தகத்தின் தொடர்ச்சி போல தோன்றும். இதில் சுஜாதா தன்னுடைய அனுபவங்களையும், உலகமெங்கும் நடந்த அதிசயங்களையும் முன் வைக்கின்றார்.

24 comments on “கடவுள் இருக்கிறாரா? – சுஜாதா

 1. raj சொல்கிறார்:

  kadavul sirai vaika pateerukar

 2. எஸ். கே சொல்கிறார்:

  நன்றி! நல்ல பகிர்வு!

 3. adhithakarikalan சொல்கிறார்:

  நன்றி பகிர்ந்தமைக்கு…

 4. THANJAI SARAVANAN சொல்கிறார்:

  நல்ல பகிர்வு! நன்றி! நன்றி நண்பரே

 5. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல பதிவு..அருமையான தரவிறக்க பகிர்வு!

 6. kavirimainthan சொல்கிறார்:

  நீண்ட நாட்களாக இந்தப் புத்தகத்தைத்
  தேடிக்கொண்டிருந்தேன்.

  மிக்க நன்றி நண்பரே.

  உங்கள் வலைப்பதிவு மிகவும்
  சுவையானதாகவும்,
  பலனுள்ளதாகவும் இருக்கிறது.

  பாராட்டுகள்.

  – காவிரிமைந்தன்

 7. அன்பு சொல்கிறார்:

  இது ஒரு நல்ல முயற்சி.. பகிர்வுக்கு நன்றி..
  இம்முயற்சி மேலும் தொடர‌ வாழ்த்துக்கள்..

 8. padmahari சொல்கிறார்:

  இந்தக் கேள்விக்கு இதுவரைக்கும் குத்து மதிப்பா பதில் சொல்றவங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த நூலை வாசித்துவிட்டு பின் உங்களுடன் உரையாடுகிறேன். என் ஆதங்களில் ஒன்றை நீங்களும் பகிர்ந்துகொண்டிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி! அது தமிழுக்கு தமிழிலேயே அறிவியலின் அறிமுகம் வேண்டும், அதுவும் வலைமூலம் வேண்டும் என்பது. சாத்தியக்கூறுகள் இருக்கிற மாதிரி தெரிந்தாலும், சாத்தியப்படுமா/நடைமுறையாகுமா என்று தெரியவில்லை! ஆகும் என்றே நம்புகிறேன். அந்த பாதையில் இயன்றளவும் அதிக நேரத்தையும் செலவிட முயற்சிக்கிறேன். நல்ல பகிர்வு, தரவிறக்கத் தொடர்புக்கு ஆயிரம் நன்றிகள்.

 9. perumal.s சொல்கிறார்:

  neengal sollum vithame migavum aarvaththai thoondugirathu .
  eantha nhokkamumindri eathaiyo thedikkondirinthavanai um valaippathivu eerthukkonathu .nanbare mikka nandri!!!!!!!!

 10. venkat சொல்கிறார்:

  Sir,
  Request you to kindly remove this download option for e-books, as they will act against sales of the books.
  Thanks,
  Venkat

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   புத்தகங்கள் மக்களை சென்றடைவது இன்றியமையாதது. அதனால்தான் இணைப்பினை கொடுத்துள்ளேன். புத்தக வடிவில் படிப்பவர்கள் நிச்சயம் தரவிரக்கம் செய்ய மாட்டார்கள். அதனால் கவலை வேண்டாம் நண்பரே!.

   ஒரு படைப்பாளியின் புத்தகங்கள் 25 ஆண்டுகளுக்குள் நாட்டுடைமையாக்கப்பட்டு எல்லோரையும் சென்றடைய வேண்டியது அவசியம். அதை அரசு நிச்சயம் செய்யாது. செய்பவர்களையாவது விட்டுவிடுங்கள்.

 11. BALAJI சொல்கிறார்:

  வாழ்க வளமுடன்

 12. bala sundaram சொல்கிறார்:

  kadavul nichayam irukkirar een enral naan irukkiren

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s