அழவைத்த ஆயிஷா – இரா.நடராசனின் சின்னஞ்சிறு நாவல் பதிவிரக்கத்துடன்

ஆயிஷா, இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் கிடைத்த பொக்கிசம். பொதுவாக அழகான ஓவியங்களின் மீது எனக்கு தீராத காதல். புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் போது, பல சமயங்களில் மிக அழகான ஓவியங்களை அட்டைப்படமாக கொண்டவைகளை தேர்ந்தெடுப்பேன். அப்படிதான் ஆயிஷாவையும் தேர்ந்தெடுத்தேன்.
ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான புத்தகம் என்று பொறிக்கப்பட்டிருந்தது கூடுதல் கவர்ச்சி.

ஆனால் இந்தக் கவர்ச்சி மட்டும் இருந்து உள்ளே ஒன்றும் இல்லாமல் இருந்திருந்தால், ஆயிஷாவைப் பற்றி இங்கு எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால் ஆயிஷா நெஞ்சை உலுக்கி கேள்வி கேட்டாள். இங்கிருக்கும் கல்வி முறையில் உடன்பாடில்லாத நிலை எனக்கு எப்போதும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இங்கிருப்பது கல்வியே இல்லை, “வாந்தி”.

ஒரு பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் சென்று, ஒரு விடுமுறைக் கடிதம் எழுதச் சொன்னால் நிச்சயம், எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என்றே ஆரமித்திருப்பார்கள். எனக்கு நான்காம் வகுப்பிலேயே விடுமுறைக் கடிதம் எழுதுவது பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். அதை எழுதியே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். இடைப்பட்ட காலத்தில் போதிக்கப்பட்டது கடிதத்தினைப் பொருத்த வரை ஒன்றுமே இல்லை. ஒட்டுமொத்த கல்வி முறையில் இப்படி வளர்ச்சி பெறாத நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது.

அதனால்தான் இந்தக் கல்வி ஒரு ஓவியனையோ, கவிஞனையோ உருவாக்குவதற்கோ, அவனை மெருகேற்றவோ உதவுவதில்லை. அதிகாரிகளை உருவாக்குவதற்காகவாவது உதவுகின்றதா என்றுப் பார்த்தால் அதுவும் இல்லை. இன்று பி.இ முடித்தவர்கள் கூட வேலைக்கு தகுதியானவர்களாக இல்லை. இந்த தகுதியின்மை அவர்களை கொலை, கடத்தல், கற்பழிப்பு என தடம் மாறிச் செல்ல உதவியிருக்கிறது. பகுத்தறிவாதிகளும், கல்வியாளர்களும் காலம் காலமாக இருக்கும் தமிழ்நாடு இந்நேரம் சொர்க்கமாக மாறியிருக்க வேண்டும்.

ஆனால் வரதட்சனை முதற்கொண்டு கொலைகள் வரை படித்தவர்களே அலட்சியமாக செய்யும் நிலைதான் வந்திருக்கிறது. இதற்கு மூலக் காரணம் நம்முடைய கல்விமுறை என்பதை என்னால் அடித்துக் கூற இயலும். இந்தக் கல்வி முறையில் சில சில நல்ல விஷயங்களும் இப்போது மறைந்து கொண்டிருக்கின்றன என்பது இன்னும் வேதனையான செய்தி. கல்வியைச் சார்ந்த இரண்டு விசயங்களை ஞாநி அவர்கள் ஸ்டாலினுக்கும் பொன்முடிக்கும் இரண்டு கடிதங்கள் என்ற இடுகையில் குறிப்பட்டிருக்கிறார். அந்த விஷயங்கள் இந்த இடுகைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனையும் பதிக்கிறேன். முதல் விஷயம் 12ம் வகுப்பில் புகைப்படத்திற்கா தனியொரு பிரிவு இருக்கிறதாம். அது தமிழகத்திலேயே சூலைமேட்டில் மட்டும் இருப்பதாகவும், அதுவும் மூடப்படப் போவதாக வந்த செய்தி.

இரண்டாவது இன்றைய கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டில் சமர்ப்பிக்கும் புரோஜெக்ட் பற்றியது. பெரும்பாலும் எல்லா கல்லூரியிலும் ஆசிரியர்களின் சிபாரிகளிலேயே புரோஜெக்ட் விற்கப்படுகின்றன. முறைப்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு அந்த திறன் வந்திருக்க வேண்டும். ஆனால் கல்விமுறையில் உள்ள சீர்கேட்டால் அது நடைமுறைக்கு வருவதில்லை. எங்கள் கல்லூரியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே புரோஜெக்ட் செய்ய உதவி செய்தார். மற்ற எல்லோரும் அதற்காக இயங்கும் கடைகளுக்கே செல்ல வழியுருத்தினார்கள். நடைமுறையில் 216 கோடி இதில் புழங்குவதாக ஞாநி குறிப்பிடுகின்றார். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்தக் கல்வி முறைக்கும் ஆயிஷாவுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்கின்றீர்களா. ஆயிஷா இந்தக் கல்வி முறையால் பாதிக்கப்பட்ட லட்சக் கணக்கானவர்களில் ஒருத்தி. “பேப்பர் வந்தது. மார்க் சரியா போடல. கேட்டேன் சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம் நோட்ஸ்ல இருக்கிறத, அப்படியே எழுதனுமாம்.” என்று அவள் வேதனை கொள்கின்ற இடத்தில் என்னுடைய கடந்த காலங்கள் நினைவுக்கு வந்ததன. இன்றைய ஆசிரியர்களும் பிசாசுகாலாகவே இருக்கின்றார்கள். மாணவிகளை காம இச்சைக்கு ஆட்படுத்துவது, வேலைக்காரர்கள் போல வீட்டிற்கே அழைத்து சென்று வேலை வாங்குவது, கொடூரமான தண்டனைகள் தருவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆசிரியப்பணியை சேவையாக செய்யும் மனிதர்கள் குறைந்து கொண்டே போகின்றார்கள். இங்கும் ஆசிரியரிடம் கேள்வி கேட்டதற்காக அடிகள், அவர்கள் நடத்தும் டியூசனுக்கு போகாததால் அடிகள், பரிட்சையில் கேள்விகளுக்கு சொந்த மூளையை உபயோகித்து எழுதியதால் கிடைத்த அடிகள் என அடிகளிலின் வலிகளிலிருந்து தப்பிக்க தானே கண்டறிந்த தவறான வலிநிவாரணியை தனக்குள் செலுத்தி இறந்து போகின்றாள் ஆயிஷா. ஆசிரியர்களின் அலட்சியங்களும், தவறான கல்விமுறையும் இந்தளவிற்கு கொடுமையான நிகழ்விற்கு காரணமாக இருந்திருகின்றது எனும் போது இன்னும் கூடுதலாக வேதனைதான் வருகிறது. இதனை மாற்ற முடியாதா என்று ஏக்கமான கேள்வியுடன் இந்த இடுகையை முடிக்கிறேன்.

ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. இரா. நடராசன் இந்தப் புத்தகத்தினை தன்னுடைய இணையப் பக்கத்தில் இலவசமாகவே இணைத்திருக்கிறார். எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று அவர் ஆயிஷா புத்தகத்தினை தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள். ஆங்கிலத்தில் பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்,.

நன்றி –

நடராசனின் வலைப்பூ

ஞாநி

10 comments on “அழவைத்த ஆயிஷா – இரா.நடராசனின் சின்னஞ்சிறு நாவல் பதிவிரக்கத்துடன்

 1. படைப்பாளி சொல்கிறார்:

  நமது கல்வி தரமான மாணவர்களை உருவாக்குவதில்லை.புத்தகப் புழுக்களை மட்டுமே தலையில் தூக்கி வைத்து ஆடும் தலையாயக் கடமையைக் கொண்டிருக்கிறது..நச்சின்னு சொல்லிருக்கீங்க..ஆயிசாவை அறிமுகம் செய்ததற்கு நன்றி .

 2. ம‌கிடேஸ்வ‌ர‌ன் செ சொல்கிறார்:

  “எல்லா ஆசிரிய‌ர்க‌ளுமே ஏதாவ‌து ஒரு வ‌கையில் மாண‌வ‌ரின் அறிவை அவ‌மான‌ப்ப‌டுத்துகிறார்க‌ள் என்ப‌தைக் க‌ண்டேன். அவ‌ர்க‌ளில் ஒருத்தியா நான்?”

  உண‌ர்ச்சி மிகுந்த‌ இந்த‌ கேள்வியே இன்றைய‌ ஆசிரிய‌ர், ஆசிரியைக‌ளுக்கு ச‌வுக்க‌டி…

  ந‌ன்றி ஜெக‌தீஸ்…

 3. kani சொல்கிறார்:

  is it a true store?

 4. ambi சொல்கிறார்:

  heart feeling realistic thing in novel form,real teachers should have guts to change the situation.

 5. selviarulselvan சொல்கிறார்:

  கடந்த சில மாதங்களுக்கு முன், மாலையில் நான் நடந்து சென்று கொண்டிருந்தபோது,
  வழியில் ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்டது.கவனித்த போது, எலும்பும் தோலுமாக ஒரு ஐந்து வயதுச் சிறுவனை அவன் தாய் அடித்து வீட்டுப்பாடம் எழுத வைக்க‌
  முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவனோ,சிறிய‌ முண்டா பனியன் மட்டும் [கீழே எதுவும் போடாமல்] போட்டுக் கொண்டு,கையில் முனை உடைந்த பென்சிலுடன் குத்தும் கல் மீது உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அருகில் சென்று விசாரிக்கையில்,
  அவ‌னுக்கு [ஒன்று, இர‌ண்டு]… ஆங்கில‌த்தில் எண்ணும்,எழுத்தும் எழுதும் பாட‌ம் எழுத வரவில்லை என்றாள் அவள். பலமுறை பார்த்து எழுதுகிறான், ஆனால் பார்க்காமல் ஒருமுறை கூட எழுதவில்லை என்பதால் தான் அடித்ததாகக் கூறினாள். அவனை நான் அணுகியபோது, அவனுக்கு எது 1, எது 2 என்பது கூடத் தெரியவில்லை, பிறகு எப்படி அவன் எழுத்து வடிவம் எழுத முடியும்? வாய்வடிவில் கூட அவன் அதை அறியாத போது, எண்ணிலும்,எழுத்திலும் அதை எழுதமுடியாது என்பதை அவள் அறியவில்லை. மறுநாள் வகுப்புத் தேர்வு மட்டுமே அவள் முன் உள்ள பிரச்சனை; எத்தனை ஐஸ்கிரீம் வாங்கித்தந்தும் அவன் அதை எழுதாததால் மட்டுமே அடித்ததாகக் கூறினாள்,ஆனால் அவனது பிரச்சினையை அவள் அறியவில்லை, ஆசிரியரும் அறியவில்லை?
  நான் குறிப்பிட்டது சிறிய நிகழ்வுதான்,இது போல் பல அன்றாடம் நாம் கவனித்தாலும் யார் இதை சரி செய்வது?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது நண்பரே. சிறு குழந்தைகளை கையாளுகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தை இவ்வாறு படிக்காமல் இருந்தது. அதற்கு பார்வை குறைபாடு இருக்கிறது என்பதே பிறகுதான் கண்டறியப்பட்டது. அக்குழந்தைக்கு தனக்கு பார்வை சரியாக தெரியவில்லை என்று கூறக் கூட தெரியவில்லை. இதுபோன்ற உடல்சார்ந்த உளவியல் சார்ந்த பிரட்சனைகளுக்கு நடுவேதான் நம்முடைய குழந்தைகள் வாழ்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s