சுஜாத்…ஆ…! – மின் நாவல் பதிவிரக்கத்துடன்

சுஜாதாவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் வைக்கும் நபர்கள் கூட, அவரைப்போல விஞ்ஞானத்தினை எளிமையாக்கும் கலை வேறெவரிடத்திலும் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். அறிவியலை அசாதரணமாக கையாளும் வரம் பெற்றவர். சில விஞ்ஞான விசயங்களை எடுத்துச் சொல்லும் போது, சாதாரண மனிதர்களும் அதனை எளிதாக புரிந்து கொள்ளும்படி சொல்லுவார். அதை சுஜாதாவின் எழுத்துகளை படித்தவர்கள் உணர்வார்கள். இலக்கியவாதிகளுக்கு வசந்த் கதாபாத்திரம் வழியாக சொல்லப்படும் சில விசயங்கள் பிடிக்கவில்லை. ஜனரஞ்சக எழுத்தாளராக அதை புறக்கணிக்க வேண்டிய நிலையிலேயே சுஜாதா இருந்தார்.

அவருடைய அறிவியல் திறனை நான் உணர்ந்த நாவல் கணேஸ், வசந்த் வரும் ஆ..!. காதல், க்ரைம் என்று இரண்டு குதிரைகளில் மட்டுமே நிரம்பியிருக்கும் நாவல் உலகில் நிச்சயமாய் ஒரு மாற்று நாவல் இது. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பொண்டாட்டி, நல்ல ரசனை என்றெல்லாம் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பூர்வ ஜென்மத்தின் மனிதர்கள் தலையிட்டால் என்ன நடக்கும்? என்பதுதான் கதையின் நாட். பூர்வ ஜென்மம் என்றெல்லாம் சொல்லும் கதையில் மூடநம்பிக்கைகள்தான் நிறைந்தி்ருக்க வேண்டும். ஆனால் கதையில் இருந்தது “குரல்”களைப் பற்றிய அறிவியல். அதுமட்டும்தானா என்கின்றீர்களா. இல்லை,..

தினேஸ்குமார் என்றொரு மென்பொருள் வல்லுனன். நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பொண்டாட்டி, நல்ல ரசனை என்று நல்லபடியாக செல்லும் அவனுக்குள் ஒரு குரல் தற்கொலை செய்துகொள்ள சொல்கிறது. சில தற்கொலை முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. அதன்பின்பு அந்தக் குரல் அவனின் மனைவியை கொல்ல சொல்ல, அவனும் கொன்று விடுகிறான். அந்தக் குரலின் பின்னனியில் அவனுடைய முன் ஜென்மம் இருக்கிறது. இதை இந்த பகுத்தறிவு உலகம் நம்புமா. அவனின் நிலை என்ன என்பதே முழுமையான கதை.

சிலசமயங்களில் அப்போதுதான் நடக்கும் விசயங்கள் முன்பொருமுறை நடந்ததாக நினைவுக்கு வரும். வாழ்க்கையில் முதன்முறையாக பார்க்கும் சிலரை, நன்கு அறிமுகமானவர்கள் என்று நம்பத்தோன்றும். நம்முடைய வாழ்க்கையிலும் மிக அரிதாக அமானுஸ்யங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அமானுஸ்யங்கள் என்று சொல்கின்ற விசயங்களில் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் என்னுடைய நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் ஏற்பட்டிருப்பதை அவர்களுடன் பேச்சுவாக்கில் உறுதி செய்திருக்கிறேன். இவற்றுக்கான விடையை சைக்காலஜி வழியாக தேடலாம் என்றாலும், அதை பெரிது படுத்தாமல் விட்டுவிடுவோம்.

நாம் மனசாட்சி என்று நம்புகின்ற ஒரு குரல் நமக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பல சமயங்களில் உற்ற நண்பனாக இருக்கும் அந்தக் குரலை நம்பிதான், முக்கிய முடிவுகளை நாம் எடுக்கிறோம். அந்தக் குரலை நம்பிதான் தனிமையை விரட்டுகிறோம். (பிறவி செவிடர்கள் இந்த விசயங்களை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்று நீண்ட காலமாகவே சிந்தனை இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லவும்). இந்தக் குரல் நமக்கு தவறான ஆலோசனை சொன்னாலும், அதையே செய்யவோம். அதே குரல் நம்மை தற்கொலைக்கு முயற்சிக்க வற்புறுத்தினால் நிச்சயமாக நாம் தப்பிக்கவே முடியாது. சரி… சரி இப்படியே போனால் நான் சைக்கியாட்ரிஸ்டுகளை பார்க்க நேரிடும். நாவலுக்குச் செல்வோம்.

நாவலில் நான் ரசித்தவை,…

1. ஒவ்வொரு பகுதியும் முடியும் போது ஆ என்று முடியும். சில இடங்களில் வலிய திணிக்கப்பட்டிருப்பது தெரிந்தாலும் பெரும்பான்மையான இடங்களில் இயல்பாக வரும். இந்த சிந்தனை எப்படி வந்தது என்று தெரியவில்லை. நாவலின் வித்தியாச தன்மையை இரண்டு அத்தியாங்களை படிக்கும் போதே உணர்ந்தேன்.

2. ஹிப்னாட்டிக்ரிக்ரெஷன், ரோர்ஷாக் டெஸ்ட், தீமாட்டிக் அப்ரிஸியேஷன் என்றெல்லாம் மருத்துவ அறிவியல் பெயர்கள் நாவல் முழுவதும் வியாப்பித்திருக்கின்றன. அவைகள் எதற்கானவை என்பது நாவலை படிக்கும் போதே புரிந்துவிடும்.

3. குரல் பிரட்சனையை ஆன்மீக ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பிரித்து எழுதியிருப்பார் சுஜாதா. பாராஸைக்காலஜி, பாராநார்மல் என்று இயற்க்கைக்கு அப்பாட்ட விசயங்களின் ரகசியங்களை அறிய ஆன்மீகமும், விஞ்ஞானமும் போராடிக் கொண்டு இருக்கின்றன. ஆன்மீகத்தில் “கடவுள்” என்றொரு விடையை கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுகின்றார்கள். விஞ்ஞானத்திற்கு அது சாத்தியப்படுவதில்லை. எனவே தேடல் அங்கு இருந்து கொண்டே இருக்கிறது.

4. மென்பொருள்துறையின் தொழில் நுட்பத்தில் ஆரமிக்கும் நாவலில், மருத்துவ துறையின் தொழில் நுட்பத்தினை விவரித்து, இறுதியில் சட்டத்தின் தொழில் நுட்பங்களில் விளையாடியிருப்பார்.

5. இது வசந்த் சொல்லும் ஒரு ஜோக்,…
ஒரு பைத்தியக்காரன் தன் கை முஷ்டியை மூடிக்கிட்டு “என் கைக்குள்ள என்ன இருக்கு” ன்னு கேட்டானாம். அதுக்கு இன்னொரு பைத்தியக்காரன் “குஷ்பு”ன்னு சொன்னானாம். இவன் லேசா கண்ணை வெச்சுப் பார்த்துட்டு “ம், தப்பாட்டம்!. நான் வெக்கிற போது பார்த்துட்டே”ன்னானாம்.

6. முன் ஜென்மக் கதையும் அதன் கதாபாத்திரங்களும் மிகவும் அருமை. ஜெயலட்சுமி டீச்சரின் மீதான காதல், அவரை ஜெய்யூ என அழைக்கும் விதம், திருச்சியைச் சுற்றிய இடங்கள் என பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்.

7. இந்தக் கதையை விகடனி்ல் தொடராக எழுதிக்கொண்டிருந்த போது, கதையின் நாயகன் நான் என்றொருவர் வந்திருக்கிறார். அவருக்கு கதையில் இருப்பதை போல குரல்கள் கேட்பதாக தொல்லை செய்திருக்கிறார்.

8. அதுமட்டுமல்லாமல் பல வாசகர்களும் இதுபோல குரல்கள் கேட்பதாகவும், அதற்கு தீர்வு தருமாரும் சுஜாதாவை அனுகியிருக்கின்றார்கள். அதுவும் 8ம் அத்தியாயம் ஆரமிக்கும் முன்பே. அவர்கள் எல்லோரையும் சைக்கியாட்ரிஸ்டுகளை பார்க்க சிபாரிசு செய்திருக்கிறார்.

9. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் ஒருவன் அம்மாவைக் கொன்றுவிட்டு கடவுள் சிவன் சொன்னார், நான் கொன்றேன் என்று சொல்வதாக செய்திதாள்களில் வந்திருந்தது. இதுபோல விசித்திரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்காகச் சொன்னேன். பைத்தியக்காரத்தனம் என்று ஊடகங்கள் இந்த விசயத்தை பெரிது படுத்தாமல் போயிருக்கின்றன. இல்லையென்றால் நிச்சயம் புதுவகையான பிரட்சனைகளை எல்லோரும் அலசியிருப்பார்கள்.

10. கதையின் முடிவு, என்னால் யூகம் செய்து பார்க்க முடியாதபடி இருந்தது. ஏறத்தாள கதையை படித்து ஒரு மாதம் வரை எல்லா கதாபாத்திரங்களும் எனக்குள் வலம் வந்தன. காலப்போக்கில் எல்லாம் கரைந்தாலும் ஜெயலட்சுமி டீச்சர் மட்டும் மறையவே இல்லை.

நாவலை ஏற்கனவே படித்திருக்கும் நண்பர்கள் உங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். இனிதான் படிக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் இங்கு சொடுக்கி நாவலின் மென்நூலை எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த இடுகையை பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…

12 comments on “சுஜாத்…ஆ…! – மின் நாவல் பதிவிரக்கத்துடன்

 1. Annu சொல்கிறார்:

  மின் புத்தகத்திற்கு மிக்க நன்றி. நானும் ‘கொலையுதிர் காலம்’ என்கிற நாவலின் மின் நூலை தேடிக் கொண்டுள்ளேன். தங்களிடம் இருந்தால் பகிரவும். நன்றி.

 2. seenivasan சொல்கிறார்:

  I cant view downloaded pdf file my dear brother. pls check and correct

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   படத்தினை சொடுக்குவதால் இடுகையின் பி.டி.எப் கிடைக்கும். அனேகமாக அதைதான் செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன். புதியதாக வலைப்பூவையே பி.டி.எபாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்தேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும். அதற்கு மேல் இங்கு என்று வார்த்தையிருக்கும் அதை சொடுக்குங்கள்,.. புத்தகம் கிடைக்கும்.

 3. படைப்பாளி சொல்கிறார்:

  நீங்கள் விவரிக்கும்போதே படிக்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது..தெளிவு..அருமை

 4. விமல் சொல்கிறார்:

  நண்பா மிக்க நன்றி…… நான் சுஜாதாவின் ரசிகன்…. ஆதலால் இந்த புத்தகம் எனக்கு பயன்னுலதாக இருந்தது……

 5. pandi சொல்கிறார்:

  i have kolaiyuthirkaalam ebook contact me or give ur mail ID to sjpandiyan@yahoo.com.sg

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s