நாகரீக கோமாளிகள்

மேலைநாடுகளின் மக்கள் எதைச் செய்தாலும் அதையே நம்மக்களும் பின்பற்றுவது என்பது புதிதல்ல என்றாலும், நல்லவைகளை எவ்வளவோ இருக்க, தீமைகளை பின்பற்றினால் எடுத்துறைப்பது நம்முடைய கடமை. கடவுளின் பெயரை கூறிக்கொண்டு தலையில் தேங்காய் உடைப்பதும், நேருப்பில் ஓடுவதும், அலகு குத்துவதும் என தங்களை வருத்திக்கொள்ளும் மக்களின் அறியாமையை புரியவைக்கவே போராடிக் கொண்டிருக்கிறோம். மூடநம்பிக்கைகளையெல்லாம் தூக்கியெரிந்த நவநாகரீக மனிதர்கள் செய்யும் கோமாளித்தனங்கள் இருக்கிறதே,. அப்பப்பா, சொல்லி மாளாது.

காடுகளில் மனிதன் வசித்த போது மனிதனிடம் உருவான ஆபரணங்கள் அணியும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் வளையல் போடுவதும், நகை அணிவதும் இளம் பெண்களால் மறுக்கப்பட்டதை அறிவேன். ஆனால் அது நிலைக்கவில்லை. நாகரீகத்தின் பெயரில் மாறு வடிவம் கொண்டு மீண்டு வந்திருக்கிறது. அதுவும் மிகக் கொடுரமாக, அதனுடைய பொதுவான பெயர் piercing.


உதடுகளில், மார்பு காம்புகளில், நாக்குகளில் என எல்லா இடங்களிலும் துளையிட்டு நகையணியும் வழக்கம் மிகத்தொன்மையானது என்று சமீபத்தில் கிடைத்த மம்மியால் எல்லோரும் உணர்ந்திருக்கின்றார்கள். அந்த மம்மி 6ம் நூற்றாண்டு அல்லது 7ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த மனிதனாக இருக்கலாம் என்று நினைக்கின்றார்கள். சென்ற நூற்றாண்டு வரை தமிழகத்தில் காது வளர்த்தல் என்ற முறை இருந்துள்ளது. தண்டட்டி பூச்சிக்கோடு என கேள்வியுற்றதாக ஞாபகம். அதற்காக காதுகள் துளையிட்டு பனையோலை சொறுகியும், கனமான தங்க தோடுகளை தொங்கவிட்டும் துளையை பெரிதாக்குவார்கள். இங்கு வழிக்கொழிந்த இம்முறை இன்னும் சில இடங்களில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. இதெல்லாம் இயல்புதானே என்கின்றீர்களா?. இனிதான் இருக்கிறது விபரீதம்.

மேலே இருக்கும் படத்தில் அந்தப் பெண் என்ன செய்திருக்கின்றாள் என தெரிகிறாதா. முதுகில் இருபுறமும் வளையங்களை தொங்க விட்டு அதற்குள் துணிகளை இணைத்து வர்ணஜாலம் காட்டியிருக்கிறாள். இப்படி வகைவகையான உலோகங்களை குத்திக்கொண்டு நடமாடும் கண்காட்சி கூடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள். உலோகங்களை உடலினுள் வைத்து தைத்துக்கொள்ளும் கொடூர முறையும் இருக்கிறது. வேண்டிய வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ளும் பொம்மைகளைப் போல தங்கள் வடிவங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.

ஆரறிவு படைத்த மனிதன் செய்கைகள் சில சமயங்களில் அவனுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தினை கிளப்பிவிடுகின்றன. முறையான வழிகளில் அல்லாமல் அழகிற்காக உடலில் துளையிடுவதால் உண்டாகும் காயங்களையும், விளைவுகளையும் அவர்கள் யோசிப்பதே இல்லை. இதனால் தீமை கூட உண்டாகுமா என கேள்வி கேட்கும் அளவிற்கே, இதனைப் பற்றி புரிந்திருக்கின்றார்கள் இளைஞர்கள். ஒருவருக்கு இம்முறை ஒத்து்ககொள்ளாமல் ஏற்பட்ட விளைவை இங்கு சொடுக்கி பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் கோரமாக இருந்தமையால் இணைப்பு மட்டும் கொடுத்திருக்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக இங்கும் இந்த நாகரீகம் வளர்ந்து கொண்டிருப்பதை பார்க்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆபத்தினை விளைவிக்கும் அளவிற்கு செல்லாமல் இந்த முறைகள் நின்றுவிட்டால் நல்லது. இல்லையென்றால் கீழே இருக்கும் படத்தில் இருப்பதுபோல பலமனிதர்களை நாம் சந்தித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

சரி இதோடு இவர்களின் கோமாளித்தனங்கள் முடிந்துவிட்டதா? என்றால் இல்லையே,.. டாட்டூ என்று பெயரில் இதைவிடவும் விபரீதம் இருக்கிறதே. அதைப் பற்றி அடுத்த இடுகையில் அலசுவோம்.

பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…

6 comments on “நாகரீக கோமாளிகள்

 1. vasudevan சொல்கிறார்:

  இந்த விசயத்தில் ஓரளவு தீமையும் நன்மையும் மறைந்துள்ளன . தீமைகளை மேற்கூரிய விவரங்கள் விரிவாக்குகின்றன. அதை மனப்பூர்வமாக நான் ஒத்து கொள்கிறேன் .அதே சமயம் இம்மாதிரியான முறைகளை நம் முன்னோர்களும் கடைப்பிடித்து உள்ளனர் . உதாரணமாக , காது குத்துவதை எடுத்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் இம்முறைகளின் மூலம் நரம்பு மண்டலத்தையே கட்டுபடுத்தியதாக அறிகிறேன். அலகு குத்துவதும், கத்திபோடுவதும் ( நானே சிறுவயதில் செய்திருக்கிறேன் ) சீன மருத்துவ முறைகளில் ( அக்குபஞ்சர் ) உள்ளன .எனவே இதை பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகள் அவசியம். வெறுக்கும் போது ஒரு விஷயத்தை நன்கு தெரிந்து கொண்டு வெறுக்கலாமே என்பது என் எண்ணம் .

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   காதுகுத்துதலும், கத்தி போடுதலும் அறிவியல் என்று எங்கு நிறுபனம் ஆகியிருக்கிறதென தெரியவில்லை. அக்குபச்சரும் அலகு குத்துவதும் எப்படி ஒன்றாகுமென தெரியவில்லை.
   —-
   வெறுக்கும் போது ஒரு விஷயத்தை நன்கு தெரிந்து கொண்டு வெறுக்கலாமே என்பது என் எண்ணம்.
   —-
   அதிகமாக அறிந்துகொள்கிறேன் நண்பா. நன்றி.

 2. படைப்பாளி சொல்கிறார்:

  முட்டாள்களுக்கு நல்லக் கருத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்..தலைப்பு மிகவும் பொருத்தம்.

 3. அன்பு சொல்கிறார்:

  நல்ல பதிவு. நாகரீகம் என்ற பெயரில் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கும் பலருக்கு உறைக்க வேண்டும். உறைக்குமா? சந்தேகம்தான்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s