ஆயுதபூஜை அரசு பேருந்து + ஆட்சியர் வலைப்பூ

நேற்றைய முன்தினம் என் பள்ளி தமிழ் ஆசிரியரைப் பார்க்க பெரம்பூர் சென்றேன். அந்த பேருந்து நிலையத்தில், காத்திருந்த போது ஒரு பேருந்து மட்டும் இருபுறமும் வாழைமரம் கட்டி, பூக்களெல்லாம் தொங்கவிட்டு, எல்லா இடங்களிலும் பட்டை இட்டுக்கொண்டு வந்து நின்றது. ஆயுத பூஜைக்காக செய்த அலங்காரத்துடன் ஓர் அரசுப் பேருந்தினை கண்டது, ஆச்சிரியமாக இருந்தது. அதுவும் சென்னை போன்ற மாநகரில் இத்தனை படித்தவர்களின் மத்தியில் கிராமத்து மாட்டுவண்டி போல அலங்காரத்துடன் வலம் வரும் பேருந்தை எப்படி அனுமதித்தார்கள் என தெரியவில்லை. மற்ற பேருந்துகள் சிலவற்றிலும் கூட திருநீர் பட்டை அடிக்கப்பட்டிருந்தது.

ஆயுத பூஜைக்காக வாகணங்களை தூய்மை செய்து, அலங்காரப்படுத்துவது இந்துகளின் செயல். அதை எப்படி அரசே ஏற்றுநடத்தும் பேருந்து கழகத்தில் கொண்டாடினார்கள்?. பேருந்து கழகமென்ன காவல் நிலையங்களிலும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. சுகந்திர தின விழாவிற்கு ஒருநாள் விடுமுறை விட்டும், அதற்கு முதல்நாளே கொடியேற்றி விழா கொண்டாடிவிட்டு செல்லும் அரசு அலுவலங்களிலும், அரசு பள்ளிகளிலும் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் பெருங் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது என்பது வியப்புதானே.

அரசு அலுவலகங்களில் கடவுளின் படங்கள் வைப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும் அரசானை கூட பிரப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கடவுள்களின் படங்கள் இல்லாத அரசு அலுவங்களை இதுவரை நான் பார்த்தில்லை. காலாண்டரிலாவது கணபதி காட்சியளிப்பார். “ஏதோ அன்று மட்டுமாவது பேருந்தை கழுவுகின்றார்கள். அதைப் போய் ஏன் தடுப்பானேன்” என்கின்றீர்களா?. அதுவும் சரிதான். மாற்று மதத்தினர் இதனை பொருட்படுத்தாத வரை இதுபோன்ற நிகழ்வுகள் தொடராத்தான் செய்யும். சொல்வது நம் வேலை. பிரட்சனைகள் வரும் முன்பு களையவேண்டியது அரசின் வேலை.

ஆட்சியர் வலைப்பூ –

எண்ணங்களை பகிர்வது முதல் மதங்களை பரப்புவது வரை எண்ணற்ற வலைப்பூக்களை பார்த்திருக்கிறோம். முதன்முதலாக மக்கள் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் வலைப்பூ திறந்திருக்கிறாராம். அவர் பெயர் சகாயம் நாமக்கல் மாவட்டம். வேலைகளை விட்டுவிட்டு, நடையாக நடந்து கலெக்டரை சந்தித்து மனுக்கள் கொடுப்பதற்கு ஆயிரக்கணக்கானோர் படையெடுக்கின்றனர். பயண செலவுகளை விடவும், காத்திருப்பு, அலைகழிப்பு என ஏறாளமான சிரமங்கள். அதற்கு பதில் ஆன்லைனில் பதிவது சிரமத்தினை குறைப்பதுதானே.

எளிமையாக பூர்த்தி செய்ய வசதியாக படிவம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி, இதுவரை அந்த புகாருக்கோ, குறைக்கோ எடுக்கப்பட்டிருக்கும் நடவெடிக்கையை பதிவு செய்கின்றார்கள். முதியோர் உதவிதொகை, பட்டா மாற்றுதல், ஆக்கிரமிப்பு அகற்றம் என பல பல குறைகள், புகார்கள். இவை மட்டுமல்ல, அலோசனைகள் சொல்லலாம், தன்னார்வலார்களாக சேர்ந்து கொள்ளலாம். நன்றாக வடிவமைத்திருக்கின்றார்கள். காணொளியில் பேசுவதற்கு கூட வசதி செய்திருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த வலைப்பூ –

நாமக்கல் கலெக்டர்

நவீன வசதிகளை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவது மிகவும் அவசியம். இதுவரை 1764 மனுக்கள் பெறப்பட்டு, 1761 தீர்வு காணப்பட்டிருக்கிறதாம். உண்மையில் அதிசயமான ஒன்று. நீங்க என்ன நினைக்கறீங்க?.

பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…

11 comments on “ஆயுதபூஜை அரசு பேருந்து + ஆட்சியர் வலைப்பூ

 1. பிரவின்குமார் சொல்கிறார்:

  மிகவும் ஆச்சரியமான தகவல். அவரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

 2. vasudevan சொல்கிறார்:

  ஆட்சியர் வலைப்பூ – மிகவும் சூப்பரான விஷயம் . கணினி, ஏழைகளின் வீடுகளிலும் இடம் பிடித்திருக்கும் இக்காலத்தில் , இம்முயற்சி மிகவும் பயனுள்ளதாக அமையும் . ஆட்சியர் முயற்சி உண்மையில் பாராட்டப்படவேண்டிய ஒன்று .

 3. படைப்பாளி சொல்கிறார்:

  சகாயம் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் நண்பரே…முன்மாதிரியான மனிதர் .நல்ல தகவல் சொன்னீர்கள்..நன்றி

 4. akbar சொல்கிறார்:

  nalla karuththai solli irukkireerkal vaazththukkal matham enRu baarkkaalal pothuvaana karuththu sonnathukku thanks samiibaththil vimaana nilaiyaththil ( trichy ) flight bus anaiththukm buu maalai poottirunththathu

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றி நண்பா,..

   நீங்கள் இங்கு எழுதியதை http://www.google.com/transliterate/indic/Tamil உதவியால் இப்படி மாற்றியிருக்கிறேன். அதைவிட தமிழில் இருப்பது நன்றாக இருக்கிறதல்லவா,. தமிழில் எழுத முயன்றுபாருங்கள்,.

   நல்ல கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மதம் என்று பார்க்காமல் பொதுவான கருத்து சொன்னதுக்கு தேங்க்ஸ் சமீபத்தில் விமான நிலையத்தில் ( trichy ) flight பஸ் அனைத்துக்ம் பூ மாலை பூட்டிருந்த்தது …

 5. kumaresan சொல்கிறார்:

  நண்பரே இந்த வலையை எனக்கு காட்டிய ஈசனுக்கு நன்றி . எனது ஆன்மீக தேடலுக்கு மட்டுமல்லாமல் எனது மனத்துன் பல்வேறு கருத்துக்களும் இதில் பிரதிபலித்து இருப்பதை எண்ண வியப்பாக இருக்கிறது . உம்மை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி இனி எனது முதல் வலைப்பார்வை இதுவாகவே இருக்கும் என எண்ணுகிறேன் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s