என்னை நில்லென்று சொல்ல நீயார் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை

மற்ற மொழி கவிஞர்கள் எழுதியதை மொழிபெயர்த்து தன்னுடைய அனுபவ கவிதையாக மாற்றிச் சொல்லும் கவிஞர்கள் இப்போது அதிகம். ஆனால் சில கவிஞர்கள் பிறவிக்கவிஞர்களாக இருந்திருக்கின்றார்கள். நிகழ்வுகள் நடக்கும்போதே கோபமோ, மகிழ்ச்சியோ அதை அப்படியே கவிதையாக வடித்திடும் ஆற்றல் பெற்றிருக்கின்றார்கள். அவர்களுள் முக்கியமானவர் பாட்டுக்கோட்டையாகிய நம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கனநேரத்தில் கவிதை எழுதி சம்பளம் வாங்கிய சம்பவம் இது.

தஞ்சையை சேர்ந்த ஐயர் ஒருவர் பட்டுக்கோட்டையை ஒரு படத்திற்கு பாடல் எழுத ஒப்பந்தம் செய்திருந்தார். பட்டுக்கோட்டையும் சிறந்த பாடல்களை எழுதித்தந்தார். அந்தப் பாடல்கள் ரிகார்டிங்கும் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் ஐயர் பட்டுக்கோட்டைக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

ஒருநாள் ஐயர் வீட்டிற்கு சென்று பணத்தினை தரும்படி பட்டுக்கோட்டை கேட்டார். அன்றும் ஐயருக்கு பணம் தரும் எண்ணமில்லை. “பணம் இன்னிக்கு இல்லே. நாளைக்கு வேணும்னா வந்து பாருங்கோ..” என்று சொன்னார். ஆனால் ஐயரைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார் பட்டுக்கோட்டையார்.

“என்ன.. நின்னுன்டே இருக்கேள்.. போயிட்டு நாளைக்கு வாங்கோன்னோன்!. இல்லே, நிக்கிறதா இருந்தா நின்னுக்கிட்டே இரும்…” என்று கூறிவிட்டு ஐயர் உள்ளே போய்விட்டார்.

முதலில் “நாளைக்கு வாங்கோ” என்றிருந்த மரியாதை, இறுதியில் “நின்னுன்டே இரும்” என்று வாரும் போரும் என்றளவிற்கு சென்றதை பட்டுக்கோட்டையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. யாசகம் கேட்டு வருபவரிடம் கூட கரிசம் காட்ட கடமைப்பட்டுள்ளவர்கள், ஊதியம் கேட்டு வந்தவரிடம் இப்படி போசவும், பட்டுக்கோட்டைக்கு கோபம் வந்தது. அதை கவிதையாக்கி காகிதத்தில் வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். சிறிது நேரத்திலேயே கவிஞருக்கான சம்பளம் வீடு தேடி வந்தது.

அந்த காகிதத்தில் இருந்த கவிதை இது,.

தாயால் வளர்ந்தேன்
தமிழால் அறிவு பெற்றேன்
நாயே… நேற்றுன்னை
நடுத்தெருவில் சந்தித்தேன்
நீ யார் என்னை
நில்லென்று சொல்ல?

கொதித்தெழும் கோபத்தின் கவிதையிலும் தாயையும், தமிழ் மொழியையும் மறவாத கவிஞனை என்ன சொல்லி போற்றிட.

கவிஞர் எப்போதும் பாரதிதாசனை வணங்கிவிட்டுதான் கவிதை எழுத ஆரமிப்பாராம். இதோ அதை அறிய ஒரு அரிய கையெழுத்துப்பிரதி.

வாழ்க பாரதிதாசன்

14 comments on “என்னை நில்லென்று சொல்ல நீயார் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 1. எஸ். கேcom சொல்கிறார்:

  அருமையான தகவல்கள்!!

 2. M.Kalidoss சொல்கிறார்:

  வானத்தின் பெரிது தன்மானம்
  உழைத்தவர்க்கு ஊதியம் தர
  மறுத்தவருக்கு, மானமிகு
  பட்டுக்கோட்டையார் அளித்த
  பதிலடி அருமையிலும் அருமை.

 3. thozhilnutpam சொல்கிறார்:

  தன்மானமிக்க தமிழ்க் கவிஞரின் அரிய கையெழுத்துப்பிரதியுடன் அமைந்த அருமையான பதிவு! நன்றி சகோதரா!

 4. rajagopal சொல்கிறார்:

  ethaipondra arumai ana karuthukalai patheou saium makal panee valaraittum

 5. lalithavel jagan சொல்கிறார்:

  ஒரு உண்மையான கலைஞனுக்கு இருக்க வேண்டிய-இப்போது கலைஞன் என சொல்லிக்கொள்ளும் நபர்களிடம் காணக் கிடைக்காத தன்மான உணர்ச்சி…!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s