மெக்ஸிகோ சலவைக்காரி முதல் ஹைக்கூ வரை – எழுத்தாளர் சுஜாதா

சிலிகான் ஷெல்ஃப் வலைப்பூவில் சுஜாதா 25 என்ற ஆனந்தவிகடன் கட்டுரையை நண்பர் ஆர்.வி வெளியிட்டிருந்தார்.

அந்த 25 செய்திகளில் கடைசி செய்தி இது. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கிக் ஜோக் அது!. ஒரு சிற்றிதழில் பருவ வயதினருக்கான நகைச்சுவையை போற்றி எழுதியிருப்பது கொஞ்சம் வியப்பாக இருந்தது.

நான் படித்த அவரது புத்தகங்களில் இந்த நகைச்சுவையை ஒரு விருப்ப வெளிபாட்டிற்காகவே சுஜாதா பயன்படுத்தியிருக்கிறார். “அது என்ன ஜோக், அது என்ன” என்று வாசகர்கள் தேடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருக்கலாம். வியாபார உத்தி என்று வைத்துக்கொள்ளலாம். அவர் நினைத்து இன்று வரை சாத்தியப்பட்டிருக்கிறது.

ஆனால் மெக்சிகோ சலவைக்காரி நகைச்சுவை எல்லா பிரபல காமதளங்களிலும் பிரசுகமாகி இருக்கிறது. நல்ல நண்பர்கள் பலர் அந்த தளங்களுக்கு செல்லும் பழக்கம் இல்லாததால் இன்னும் “சுஜாதா கடைசி வரை அந்த மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை சொல்லாமலே சென்றுவிட்டாரே” என வருத்தம் கொள்கின்றனர். சுஜாதா நெருங்கியவர்களிடம் மட்டுமே அந்த நகைச்சுவையை சொல்லியுள்ளார் என ஆனந்தவிகடன் சொல்கிறது. அந்த நண்பர்களில் யார் வெளியிட்டார்களோ தெரியவில்லை. சரி அந்த நகைச்சுவையை நீயாவது சொல்லேன் என்கிற நல்லவர்கள் மட்டும் கீழே படிக்கவும்.,

மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள் அவளின் பின்பக்கமாக வந்து அவளை புணர்ந்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவளின் செல்லக் கழுதைக்கும் புணரும் ஆசை வந்தது. எனவே கழுதையும் அவளை பின்பக்கமாக வந்து புணர்ந்து சென்றது. சிறிது நேரம் கழித்து சலவைக்காரி சொன்னாளாம்,

“அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க!”.

புதுவகையான முயற்சிகளை வரவேற்பவர் சுஜாதா. ஆனால் ஹைக்கூ விசயத்தில் அவர் மிகவும் மனம் வெறுத்திருந்தார். “ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்” என்ற நூலிலின் முன்னுரையில் ” இதை படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இந்த புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது” என எழுதியிருந்தார். தினமலர் நாளிதலுடன் வெளிவரும் பெண்கள் மலரில் ஹைக்கூ என்று பெயரிட்டு உரைநடைக் கவிதைகள் வெளிவருவதை பார்த்திருக்கிறேன். அது பல இல்லத்தரசிகளின் கன்னி முயற்சி என்பதால், அதிக சாடல்களை பெறவில்லை.

அந்த புத்தகம் முழுவதும் இதுதான் ஹைக்கூ. இப்படிதான் எழுதவேண்டும். அதன் பாரம்பரியம் இது. அதன் வேறு வடிவங்கள் இவை என்று ஒரு தீர்க்கமான கட்டமைப்பினை உணர்த்தியிருந்தார். அவரை இந்தளவிற்கு பாதித்த ஹைக்கூ வாசகனால் எழுதப்பட்டதா இல்லை கவிஞனுடையதா என தெரியவில்லை. ஒரு வாசகனின் கவிதை முயற்ச்சிக்காக சுஜாதா இத்தனை சிரமம் மேற்கொண்டு புத்தகம் எழுதியிருக்க தேவையில்லை. ஆனால் அந்த புத்தகம் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மூன்று வரிக்கு தக்கபடி மடித்து எழுதினால் ஹைக்கு கிடைத்துவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் கவிதைக்கும் ஹைக்கூவுக்குமிடையேயான வேறுபாடுகளை தெளிவாக கூறிவிட்டார்.

காதல்
மனங்களை இணைக்கும்
மதங்களை பிணைக்கும்
ஒரே மந்திரச் சொல்!

சுஜாதாவின் புத்தகத்தினை படிக்கும் முன் இதைதான் ஹைக்கூ என நம்பியிருந்தேன். படித்தபின்தான் அது கவிதையென புரிந்தது. சரி ஹைக்கூ எப்படியிருக்கும் தெரியுமா?.

கடும் வெயிலில்
இன்னும் ஆடும்
காலி ஊஞ்சல்!.

இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தினை படிக்கும் போது உணர்ந்திருப்பீகள். முதலில் இருப்பதை படித்தவுடன் எந்த சலனமும் இல்லாமல் மனம் அப்படியே கிடைக்கும். ஆனால் இரண்டாவதை படித்தவுடன் அந்த வெயிலில் ஆடும் ஊஞ்சல் உங்கள் மனக்கண்களுக்கு தெரியும். அது மட்டுமல்லாமல் இன்னும் இன்னும் கற்பனைகள் விரியும். இதுதான் ஹைக்கூ.

16 comments on “மெக்ஸிகோ சலவைக்காரி முதல் ஹைக்கூ வரை – எழுத்தாளர் சுஜாதா

 1. எஸ். கே சொல்கிறார்:

  அந்த ஹைக்கூ விசயம் ரொம்ப சூப்பர்!

 2. vasudevan சொல்கிறார்:

  ஜோக் சூப்பரோ சூப்பர் .

  சுஜாதாவின் வாழ்க்கை விபரங்கள் , மற்ற கவிதைகள் , சிறுகதைகள் போன்றவற்றை பற்றி கட்டுரையை விரைவில் எதிர்பார்கிறேன் .

 3. Kaman சொல்கிறார்:

  Hi!
  I am KAMAN.
  Your work is so good and I run a blog for counseling specially for S.E.X.
  Anyone need help, send the question to me. and visit my blog.
  I am interested to join with your blog for this service.
  Thanks

 4. nathikkarai சொல்கிறார்:

  ஹைக்கூ மற்றும் சலவைக்காரி விவரங்கள்-
  சுஜாதாவின் நினைவூட்டலுக்கு நன்றி

 5. Mani சொல்கிறார்:

  andha mexico joke suthama puriyala. yaravadhu konjam vilakunga.

 6. raja சொல்கிறார்:

  suuupar thks

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s