என்னுடன் முகநூலில் இணையுங்கள் நண்பர்களே!

பேஸ்புக் என்பதற்கு நண்பர்கள் முகநூல் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள். 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சமூக வலைதளம். இப்போது 5 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதில் 13 வயதுக்கு மேற்பட்டவர்களால் தங்களுக்கென ஒரு இணையபக்கத்தினை உருவாக்கி கொள்ள இயலும். அதன் மூலம் உலகம் முழுக்க நண்பர்களை பெற இயலும்.

கூகுளின் சமூக வலைதளமான ஆர்குட் புதிய மாற்றத்திற்கு உள்ளனதும், அதன் அமைப்பு பிடிக்காமல் போனது. நண்பர்களின் பரிந்துரையால் பேஸ்புக் பக்கம் சென்றேன். முதலில் கல்லூரி நண்பர்கள் மட்டுமே இருந்தார்கள். அதன் பிறகு மிகப் பிரபலமான விவசாய விளையாட்டை(Farmville) ஆரமித்ததும், சில வெளிநாட்டு நண்பர்கள் கூட கிடைத்தார்கள். அவர்களில் பலர் மொழி என்னவென்றுகூட தெரியாது. திடீரென சாட்டிங்கிற்கு வந்து ஏதேதோ எழுதுவார்கள். பிறகு ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் மட்டும் உரையாடி வருவேன். நாடு கடந்த நட்பு எளிதாக சாத்தியமானது.

இப்போது கல்லூரி நண்பர்களுடன், வலைப்பூ நண்பர்களும் இணைந்து நட்பு வட்டத்தினை பெரிதாக்கியிருக்கின்றார்கள். விவாதங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருப்பதால், பொழுதுபோகாத சமயங்களில் எல்லாம் அங்குதான் இருக்கிறேன். நண்பர் சேவியர், பத்மஹரி, யுவகிருஷ்ணா என சிலரை அடையாளம் காண முடிந்தது. அவர்களுடன் இணைந்திருக்கிறேன். தமிழச்சி, டாக்டர் ருத்திரன் என வலை பிரபலங்களும் இருக்கின்றார்கள். பாலா அவர்களின் புதுபுது கார்டூன்களை உடனே ரசிக்க முடிகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் சொந்த ஊர்காரர்களும் நட்புடன் வந்து இணைந்து கொள்கின்றார்கள். “அட நான் மசூதி தெருப்பா, நீ எந்த தெரு?. இப்ப என்ன எங்கிருக்க?” என்றெல்லாம் கேட்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. முகம்பாராமல் நட்பு பாராட்டும் உங்களுடனும் இணைவதற்கு நான் ஆர்வமுடன் இருக்கிறேன். என்னைப் போல ஆர்வம் மிக்கவர்கள், கீழிருக்கும் படத்தினை சொடுக்கி இணைந்திடுங்கள். நாம் இணைந்து முகநூலில் பயணத்தினை தொடர்வோம். நன்றி!.

படத்தினை சொடுக்குங்கள்

படத்தினை சொடுக்குங்கள்

 

2 comments on “என்னுடன் முகநூலில் இணையுங்கள் நண்பர்களே!

  1. எஸ். கே சொல்கிறார்:

    நல்ல தகவல நானும் முயற்சிக்கிறேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s