கல்யாணம் பண்ணும் முன் பெண்ணிடம் கவனிக்க வேண்டியது


சாரயச் சாவுகளை நேரில் கண்டிருக்கிறேன் என்பதால் அதன் வீரியமும், விளைவுகளும் நன்றாக தெரியும். கணவன் இருக்கிறான், தகப்பன் இருக்கிறான் என எதைப் பற்றியும் கவலையில்லாமல் இருந்த வாழ்க்கையில், சட்டென நிகழும் மரணத்தால் ஏற்படும் மாற்றங்கள் எழுத்தால் கொண்டுவர முடியாதவை. அந்த மரணங்கள் உலகமறிய தாய்மார்களை உழைக்கும் நிலைக்கும், படிப்பை ஒதுக்கிவிட்டு குழந்தைகள் குடும்ப பாரம் சுமக்கும் நிலைக்கும் கொண்டுவந்துவிடுகிறது.

ஆனால் மக்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டியவர்கள் பணம் ஈட்டுவதில் மட்டுமே கவணமாக உள்ளார்கள். தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு தண்ணீர் பம்புகள் இருக்கிறதோ இல்லையோ, தமிழன் தண்ணியடிக்க டாஸ்மார்க் கடைகள் இருக்கின்றன. கோவில்களில் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ, டாஸ்மார்க்குகளில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. திருவிழா சமயங்களில் 200 கோடிக்கும் 300 கோடிக்கும் விற்பனை செய்ய வேண்டுமென அரசே வற்புறுத்துகிறது. கள்ளச்சாராயம் விற்பதும், கள் குடிப்பதும் குற்றம், அதனால் அரசிற்கு வருமானம் இல்லை என வருத்தம் கொள்கின்றார்கள்.

கருப்பு சாமிக்கும், முனி சாமிக்கும் பக்தர்கள் பாட்டில்களை படைக்கின்றனர் என ஒரு புறம் நாத்திகர்களின் கோசம் கேட்டுக்கொண்டிருக்கையில், புதிய ரக சரக்குகளை அறிமுகம் செய்து குடிமகன்களை குசிப்படுத்தபோவதாக செய்திகள் வருகின்றன. அரசே மதுபானம் விற்பதை எதிர்த்த ஒரே அரசியல்வாதி ராமதாஸ். தனிப்பட்ட அரசியலுக்காக எதிர்த்தார் என்றாலும், உண்மையில் சந்தோசமாகவே இருந்தது. அவரும் இப்போது அடக்கிவாசிக்கிறார். அடுத்த கூட்டணிக்காக அரசியல்வாதிகள் மாறுவது இது ஒன்றும் புதிதல்ல. எனினும் மதுக்கடையில் புரளுகின்ற பணத்தில் இருக்கும் மகாத்தமா நிச்சயம் நம்மை மன்னிக்கமாட்டார் என்பது மட்டும் உறுதி.

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே மதுஅருந்தி வந்தனர். இப்போது எல்லாவற்றிலும் சரிநிகராய் இருக்க வேண்டும் என பெண்களும் மது அருந்த தொடங்கிவிட்டார். மேலை நாடுகளின் கலாச்சாரம் மெதுவாக இங்கும் பரவதொடங்கிவிட்டது. கால்சென்டர்களுக்கு முன்னால் இருக்கும் பொட்டிக்கடையில் பெண்கள் புகைப்பிடிப்பதும், கல்லூரிப் பெண்கள் மது அருந்துவம் இயல்பாகிக் கொண்டிருக்கிறது. அதை பறைசாற்றும் விதமாக நண்பன் அனுப்பிய மின்னஞ்சல்.

ஆணுக்கு பெண் சரி நிகர்!

 

குவாட்டர் சாமி

 

காலியாயிடுச்சு!

 

மூஞ்சிய மட்டும் பார்த்து ஏமாந்திடதிங்க !. 🙂

இவங்கள கல்யாணம் பண்ணா நம்ம குவாட்டர், கட்டிங்ல பங்கு கேப்பான்களே… 🙂

முன்னாடிலாம் பொண்ணு பார்க்க போகும் போது பொண்ண பாட சொல்லுவாங்க, ஆனா இப்போலாம் ஊத சொல்லணும் போல இருக்கு.. 🙂

28 comments on “கல்யாணம் பண்ணும் முன் பெண்ணிடம் கவனிக்க வேண்டியது

 1. அடங்கொன்னியா, பொண்ணுக இப்பிடி ரவுண்டு கட்டி அடிக்கிறத இப்பத்தான் பாக்குறேன். பீரு அடிப்பாளுங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன், இதெல்லாம் ஒவர்டா சாமி! புள்ளைங்க மூஞ்சிய பாத்தா பாவம்போல இருக்காளுக, ஆனா பண்றதோ? ம்ம்ம் வேற என்னென்ன கருமாந்திரம்லாம் பண்றாளுங்களோ?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வாருங்கள் நண்பரே!. உங்களின் வலைப்பூவுக்கு அடிக்கடி நான் வந்திருக்கிறேன். கவுண்டரே பதிவு எழுதினால் எப்படியிருக்குமோ அப்படியே இருக்கிறது. நையாண்டிகளும், நகைச்சுவைகளும் அருமை.

   இங்கு தங்கள் கருத்தினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!

 2. Dinesh சொல்கிறார்:

  So what? What is wrong in girls drinking??
  College life is not for boys alone to enjoy. This is part of growing up. Come out of your shell and welcome the change that is happening around you. Girls are as good (or as bad) as boys nowadays.

  Kudos to the girls for not shying away from the camera! Bold is beautiful!!

 3. adhithakarikalan சொல்கிறார்:

  புகைப்படங்களைத் தவிர்த்திருக்கலாம் நண்பரே… குடிக்கும் பெண்கள் விழுக்காடு ஆண்களின் எண்ணிகையை பார்க்கும் போது புறக்கணிக்கத்தக்க அளவிற்கு தான் உள்ளது. மேலும் குடிப்பது என்பது இன்றைக்கு வந்த பழக்கம் இல்லை, தன்னிலை மறக்க மனிதன் சமுதாயமாக மாறுவதற்கு முன்பே போதைவஸ்துகளை உபயோகப்படுத்தி இருக்கிறான். உங்கள் பக்தி புராணங்களில் கூட மது அருந்திவிட்டு தன்னிலை மறந்த கதைகள் பல உண்டு அது உங்களுக்கே தெரியும்.

  மது அருந்துவதை நான் ஆதரிக்றேன் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இன்றைய காலகட்டத்தில் மனிதன் மதுவை புறக்கணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் . ஒரு BUSINESS MEETINGல் நீங்கள் குடிக்காதவர்களாக இருந்தால் நீங்கள் தனித்து இருக்கவேண்டும், உளவியல் ரீதியாக உங்களை சந்தேகப்படுவார்கள் என்ற கருத்தும் உண்டு. உங்களின் வியாபார ரீதியான பல விசயங்களை உங்களால் சரியாக விளக்கமுடியாது. இன்னும் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன நண்பரே. ஆனால் குடியே கதி என்பதை கண்டிப்பாக கண்டிக்கிறேன். மேலை நாடுகளில் மது ஒரு உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உணவின் போது பரிமாறும் மது அனுமதிக்கப் படுகிறது. அதிகமாக குடிப்பவர்களிட் தான் அவர்கள் ALCHOLIC என்று கூறுகிறார்கள்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   புகைப்படங்களுக்காத்தான் பதிவு என்பதால் தவிர்க்க முடியவில்லை. மது இல்லாமல் வாழ முடியாது என்ற காலக்கட்டத்திற்கு எல்லோரும் சென்று கொண்டிருக்கின்றார்கள். அரசே நடத்தும் போது மதுவிலக்கை எதிர்ப்பார்க்க முடியாது. ஆண்கள் குடிக்கும் குடும்பங்களே மிகவும் சிரமம் கொள்கின்றன. இப்போது பெண்களும் சேர்ந்து கொண்டால் குடும்பம் என்ன ஆவது. புகைப் பிடிப்பதும், பொடி போடுவதும் நாகரீகத்தின் குறியீடுகளாய் இருந்த காலங்கள் அழிந்துவிட்டன. இது மதுவின் முறை.

   தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!@

 4. thozhilnutpam சொல்கிறார்:

  என்ன பண்றது இனிமேல் இப்படி பட்ட பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்.. நமக்கு Quarter செலவு மிச்சம்…அவங்களே வாங்கி வச்சிருப்பாங்க!

 5. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

  எனக்கும் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்குதுங்க .
  ஆனா என்ன பிரச்சினை அப்படின்னு பார்த்தா பொண்ணுங்க குடிக்கக்கூடாது அப்படின்னு யாரு சொன்னதுங்க ..? குடிப்பழக்கம் ஒரு கேவலமான பழக்கம் .
  என்னைப் பொறுத்த வரை அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தவறுதான் .. !!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   பெண்களும் பரவலாக குடிக்க ஆரமித்துவிட்டால், எதிர்கால சந்ததிகள்தான் பாதிக்கப்படுவார்கள். குடிப்பது அவர்கள் உரிமை என்பதால் அதில் தலையிட முடியாது,. அரசே பெண்களுக்கென தனி டாஸ்மார்க் திறந்தாலும் ஆச்சிரியம் கொள்வதற்கில்லை. நன்றி நண்பரே!.

 6. படைப்பாளி சொல்கிறார்:

  எனக்கு கம்பெனிக்கு ஆள் வேணும் நண்பரே..யாராவது வருவாங்களா…ஹா..ஹா..தப்பா நெனைக்கப்படாது..குடிக்க மட்டும்தான்..

 7. question சொல்கிறார்:

  If you say consume alcohol is wrong, I will accept it.

  If you say its wrong for girls to consume alcohol, then I cannot accept it!

 8. question சொல்கிறார்:

  தமிழ் பெண்களுக்கு கற்பே தேவையில்லை என்று சொன்ன குஸ்பு ஒரு VIP ஆகவும் அரசியல் முக்கியஸ்தர் ஆகவும் தமிழ்நாட்டிலேயே வலம்வரும்போது, அதையெல்லாம் நாம் கைகட்டி பார்த்துக்கொண்டு இருக்கும்போது, பெண்கள் மது அருந்துவது குறித்து பேசி பலனேது?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நம்மால் எதுவும் செய்ய முடியாது நண்பரே@!. அழகிரியும், ஸ்டாலினுமே கைகட்டி நிற்பதாக சொன்னார்கள். மது அருந்தும் பெண்களால் குடும்ப சூழ்நிலைகள் மாறிப் போகும் என்பதால் வருத்தம் மட்டுமே கொள்ள முடியும்.

   நன்றி நண்பரே@

 9. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  முன்னாடிலாம் பொண்ணு பார்க்க போகும் போது பொண்ண பாட சொல்லுவாங்க, ஆனா இப்போலாம் ஊத சொல்லணும் போல இருக்கு.. 🙂

  Good punch Sakka

 10. veerabathiran சொல்கிறார்:

  ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு வணக்கம். நான் சிறிது காலமாக தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். முற்போக்கு சிந்தனைகளுடன் பல புதிய செய்திகளை எழுதி வருகிறீர்கள் நன்றி. ” கல்யாணம் பண்ணும் முன் பெண்ணிடம் கவனிக்க வேண்டியது” என்ற தலைப்பில் தங்கள் எழுதி உள்ள கருத்துக்களை ஆதரிக்கிறேன். ஆனால் அந்த புகைப்படங்களை பிரசுரித்ததை வன்மையாக எதிர்க்கிறேன். அந்த புகைபடத்தில் மது பாட்டில் ஒன்று உள்ளது. அதை வைத்து அவர்கள் மது அருந்தகூடியவர்கள் என்று தாங்கள் எப்படி முடிவுக்கு வரலாம்??அவர்கள் மது அருந்த கூடியவர்கள் என்பதாக தங்கள் கட்டுரை சித்தரிக்கிறது. எந்த வித ஆதாரமும் இல்லாமல் தங்கள் மின்னஞ்சலில் தங்கள் கடவு சொல்லை பயன்படுத்தி மட்டுமே பார்க்ககூடிய தளத்தில் வந்த படங்களை பொது தளத்தில் வெளி இடுவது நியாயமா? நீங்கள் நினைப்பது போல் அந்த பெண்கள் மது அருந்துபவர்களாகவே இருப்பினும் அவர்கள் படத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் வெளி இடுவது சரி அல்ல. இது தங்கள் உடைய சொந்த வலைபதிவு. இதில் இருந்து அந்த படங்களை நீக்க சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் தங்கள் மேல் கொண்ட அபிமானத்தாலும் தங்கள் வலை பூவின் மேல் உள்ள அக்கறையினாலும் அந்த படங்களை வலை பூவில் இருந்து நீக்குமாறு கேட்டு கொள்கிறேன். சகோதரன் என்று தங்கள் வலைபூவுக்கு பெயர் வைத்ததன் காரணம் தங்கள் வலை பூவை படிப்பவர்கள் தங்களை சகோதர பாசத்துடன் அணுகி தங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக இருக்கலாம். அதன் காரணமாகவே நான் இந்த மறுமொழியை இட்டுள்ளேன். நன்றி.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   முதலில் தளத்திற்கு வந்து பார்வையிட்டு கருத்தினை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!. அனுமதி பெற்று புகைப்படம் வெளியிட வேண்டுமென்றால் எந்த புகைப்படத்தினையும் வெளியிட இயலாது நண்பா!. புகைப்படம் இல்லாத கட்டுரைகள் வீரியம் குறைவாக இருப்பதாக நினைப்பவன் நான். மேலும் இந்தப்பதிவு அந்த புகைப்படங்களுக்கானது. வலைப்பூவின் மேலும் என் மீதும் வைத்திருக்கும் பின்பம் உடைபடும்போது இப்படி நிகழ்வதுண்டு. அதனையெல்லாம் கண்டுகொள்ள முடியாது. உலகம் மிகவும் சுருங்கிவிட்டது என்பதால், அந்த மின்னஞ்சல் உங்களுக்கும் வரலாம்.

 11. Thamizhan சொல்கிறார்:

  Hi friend,
  nice to see your article.It shows about your view on society.
  But in college days, students whether boys or girls are enjoying in many ways.
  In my life also,some of my friends who don’t have the drinks habit,they have taken some photos like the above one.
  It’s means they r thinking those things like funnies.
  Why don’t u think the above photos also like that.
  See your all photos,in all the bottle is empty.
  I appreciate your social care.
  But we should not expose that things.
  Thanks.
  GO ahead to your way.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இதெல்லாம் விபரீத விளையாட்டுகள் நண்பா. ஆணோ, பெண்ணோ தவிர்ப்பதுதான் நல்லது. கல்லூரி நாட்கள் வசந்தங்களாக இல்லாமல் முட்களாக மாற்றிவிடும். ஒரு முறை அதில் என்னதான் இருக்கு என்று பார்க்க கஞ்சா அடித்தவர்களையும் கல்லூரி நாட்களில் பார்த்திருக்கிறேன். நான் கல்லூரி படிப்பை முடித்து ஒரு வருடம்தான் ஆகிறது என்பதால் இன்றைய இளஞிகளின் போக்கையும் அறிந்திருக்கிறேன். ஆண்களோடு சமமாக போட்டியிட எவ்வளவோ இருக்க, இதெல்லாம் தேவையா என்பதே என் கேள்வி.

   சிலவற்றை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

   தங்களின் மேலான கருத்திற்கு நன்றி.

 12. vasudevan சொல்கிறார்:

  ஆணுக்கு சரிநிகர் நாங்கள் என்ற சமத்துவ பண்பு பெண்களிடம் நன்றாக வளர்ந்து வருகிறது . முடிவு என்ன ஆகுமோ என்று தெரியவில்லை .

 13. மனோ சொல்கிறார்:

  பெண்கள் குடித்தால் என்னாகும் ???
  ஆண்கள் அதிகமாக டிரிங் பண்ணினால் அவர்களின் ஆண்குறி அடங்கிவிடும், ஆகையால் அவர்களால் வன்புணர்ச்சி செய்ய இயலாது.

  ஆனால் பெண்கள் அதிகமாக டிரிங் பண்ணினால், அவர்கள் மயக்கத்திற்கு ஆட்ட்படுவதால், அவர்களை எளிதாக ஆண்களால் வன்புணர முடியும். இதனால் தான், பெண்களை டிரிங் பண்ணவேண்டாம் என்று சமூகம் சொல்கிறது. இதை பெண்கள் புரிந்து கொண்டால் நன்று. ஜாலியாக செய்வது எதுவும் தவறில்லை. ஆனால் கவனமாக பெண்கள் இருக்கவேண்டும்.

  தனிமையில், அதுவும் பெண்கள் மட்டும் இருக்கும் சூழ்நிலையில் அவர்கள், யூஸ் பண்ணுவது தவறில்லை. ஆனால் ஆண்களை தவறு செய்ய தூண்டதவாறு நடந்து கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s