காகிதத்தில் கனவுகள் செய்து

இன்னும் எந்திரன் ஜூரம் தீர்ந்தபாடில்லை. வலைப்பூக்களிலும் தொலைக்காட்சிகளும் எந்தரமையமாகவே இருக்கின்றன. அதென்னமோ தெரியவில்லை, எந்திரனைப் படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கிறது. இத்தனை செய்திகள் எப்படிதான் சாத்தியப்படுகிறதோ வலைப்பதிவர்களுக்கு!. சங்கர் அடுத்த படம் எடுக்கும் முன், எல்லா வலைப்பூக்களிலும் வெளிவந்திருக்கும் விமர்சனங்களை படித்தால், இன்னும் தரமான படம் கொடுப்பார். ஆனால் படிப்பாரா என தெரியவில்லை. சரி பதிவிற்கு செல்வோம்.

Origami –

காகிதத்தில் கப்பல் செய்ய தெரியாத மனிதன் உலகில் இருக்கிறானா?. மழை வந்ததும் பலருக்கும் காகித கப்பல் ஞாபகம் வரும். சட்டென ஒரு காலெண்டர் பேப்பரை கிழித்து கப்பல் செய்து, அதை மழை நீரில் மிதக்கவிடுபவர்களில் நானும் ஒருவன். அரை டவுசரும், அழுக்கு சட்டையும் அணிந்து திரிந்த பருவத்தில் கப்பல் விட கற்றுக்கொண்டது. வாலிபம் வந்ததும் ராக்கெட்டாக மாறியது. கையில் கொஞ்சம் காகிதம் கிடைத்தால், குட்டி குட்டியாய் பறக்கும் கப்பல்கள், ராக்கெட்டுகள் என செய்வது எனக்கு பிடிக்கும். இது வரை அந்தப் பழக்கம் தொடர்கிறது. ஆனால் அதிகப்பட்சமாக ஐந்தோ, ஆறோ பொம்மைகள் மட்டுமே செய்ய தெரியும். ரொம்ப கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டதெல்லாம் மறந்துபோச்சு.

இப்போது புதிதாக சில பொம்மைகள் செய்ய கற்றுக்கொள்ள ஆசை ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலை என்று தெரியாமல் தேடத் தொடங்கினேன். காகிதத்தினை மடிப்பதே கலை என அதன் பின்தான் தெரிந்தது. இணையத்தில் யானை, டிரகான், ரோபோ என விதவிதமாக செய்து வைத்திருக்கின்றார்கள். சிலர் செய்யும் முறையையும் விவரித்திருக்கின்றார்கள். இந்த கலைக்கு ஆர்காமி(Origami) என்று பெயராம். ori என்றால் மடக்குதல், kami என்றால் காகிதம். ஆக காகிதத்தினை மடக்குதல். இப்படி சூப்பரா விளக்கம் சொல்லிருக்காங்க ஜப்பான்காரங்க!. இது அவங்களோட கலை. இந்தக் கலையில பல வடிவம் இருக்கு!. சும்மா ஒரு ரெண்டு மட்டும்,…

Action origami –

காகிதத்தில் தவளை செய்து, அதன் பின்புறம் அழுத்தியதும் அது தவ்வி தவ்வி ஓடுமே. அது போன்ற செயல்படும் பொம்மைகளெல்லாம் இந்த பிரிவில் அடங்கும். இறக்கையை அசைக்கும் பறவை, வாயை அசைக்கும் மான் என இதில் பல ஆச்சிரியங்கள் உண்டு.

Modular origami –

பல காகிதங்களைக் கொண்டு செய்யப்படும் பொம்மைகள் இந்த ரகத்தினை சார்ந்தவை. இந்த வகையில் காகித ஜெட் விமானம் செய்வதை பார்த்திருக்கிறேன். ஒரே மாதிரியான காகித மடிப்புகளை இணைத்து செய்யப்படும். பறக்கவிட்டால் கீழே விழுந்து பாகங்களாக பிரிந்துவிடும். :-(. ஆனால் இணையத்தில் கொடுத்திருப்பது பெரும்பாலும் பந்து போன்ற பொம்மைகளைதான்.

Kirigami –

இதையெல்லாம் தவிற Kirigami என்று ஒன்று இருக்கிறது. (தமிழ்ப்படுத்த முயன்றால் கிரிகாமி என்று வருகிறது. நண்பன் கிரி என்னாத்த காமிக்க என கோபம் கொண்டால் என்ன செய்வது!)kiru என்றால் கத்தரித்தல் , kami என்றால் காகிதம். ஆக, காகிதத்தினை கத்தரித்தல். (மீண்டும் நல்லதொரு விளக்கம்.) காகிதத்தினை மடக்கி செய்யும் முறைகளில் இல்லாத கலைநயம் காகிதத்தினை கத்தரிப்பதால் கிடைக்கிறது. இது சம்மந்தமாக வெட்டி வேலையே ஒரு கலைதான் என்றொரு பதிவு கூட இட்டிருக்கிறேன். பள்ளிப் பருவங்களின் ஞாபகங்கள் எப்போதும் இனிமையானவையாகவே இருக்கின்றன.

கற்றுக்கொடுக்கும் தளங்கள் –

வரைபடம் மூலமாக கற்றுதரும் தளங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை விட காணொளிகள் சிறந்தவைகளாக இருக்கும்.

origami-resource-center
webindia123
origaminut
youtube
origami diagrams

7 comments on “காகிதத்தில் கனவுகள் செய்து

  1. எஸ். கே சொல்கிறார்:

    origami, kirigami இரண்டுமே சூப்பர்கலை சிறிய வயதில் நான்கூட பேப்பரை மடித்து பொம்மைகள் செய்வேன். நல்ல தகவல்! நன்றி!

  2. thozhilnutpam சொல்கிறார்:

    சிறு வயது ஞாபகங்களை அசை போட வைத்துவிட்டீர்கள் …

  3. படைப்பாளி சொல்கிறார்:

    பழைய ஞாபகத்த தூண்டி விட்டுடீங்க..பேப்பர் கப்பல் மறக்கவே முடியாதுங்க..அதுலயும் கத்திக் கப்பல் செய்வாங்கப் பாருங்க..அத கத்துக்க கொஞ்சம் டைம் ஆச்சு..ஹ்ம்ம்..ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!!நல்லப் பதிவு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s