விரைவில் நடமாடப்போகின்றன புராண மிருகங்கள்

நண்பரின் வீட்டிற்கு போகின்றீர்கள். அவர் வீட்டிற்கு முன் நாய்க்கு பதில் யாளி, பின்புறம் பசுவிற்கு பதில் காமதேனு என புராண மிருகங்கள் இருந்தால் எப்படியிருக்கும். நினைத்துபார்க்கவே சிலிர்க்கின்றதல்வா. உண்மையில் இது மிக விரையில் சாத்தியப்படும் என்றால் நம்ப முடிகிறாதா. கண்டிப்பாக முடியாது.

யாளி – சிங்கமும், யானையும் இணைந்த மிருகம்.
காமதேனு – பெண், பசு, மயில் கலந்த மிருகம்.
டிராகன் – பாம்பும், பறவையும் இணைந்த மிருகம்.

இப்படி வித்தியாசமான கற்பனையில் மிருகங்களை உருவாக்கி புராணக் கதையின் சுவாரசியத்தினை கூட்டுவது உலகெங்கும் இருக்கும் ஒன்று. அது போல மனிதன் மிருகங்களுடன் புணர்வதை ஜுபீலியா என்பார்கள். இதனால் உண்டான புதுவகை கலவை விலங்குகளை புராணங்கள் ஏகத்திற்கு சொல்லியிருக்கின்றன. கிளிக்கும் விசாயருக்கும் பிறந்த கிளிமுகமும், மனித உடலையும் கொண்ட உயிர் சுகர் பிரம்மம். இதுபோல ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் புராணங்களில் இருக்கின்றன.

நடைமுறைக்கு சாத்தியப்படாதவைகளை சாத்தியப்படுத்துவதுதான் இன்றைய விஞ்ஞானிகளின் வேலை. ஒரு வகை விலங்கினை மற்றொரு வகை விலங்களோடு இணைத்து இன்று அறிவியல் உலகம் சாதனை செய்திருக்கிறது. அதற்கு ஹைபர்ட்(hybrid) என்று பெயர் வைத்திருக்கின்றார்கள். புலியோடு சிங்கம், கழுதையுடன் குதிரை இப்படி நிறைய. அதோடு விட்டுவிடவில்லை. இப்படி உண்டான மிருகங்களுடன் மீண்டும் புதிய விலங்கை இணையவைத்து இன்னும் புதுவகையான விலங்குகளை உருவாக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். அறிவியலின் வளர்ச்சி வியக்கதக்கதாக இருந்தாலும், உள்ளுக்குள் இயற்கையை மீறும் போது ஏற்படும் விளைவுகளை எண்ணி கொஞ்சம் உதறல் இருக்கதான் செய்கிறது.

வூல்பின் –

இது நமக்கு மிகவும் பிடித்தமான டால்பினுடன், திகிலான திமிங்கலத்தினை இணைத்து உருவாக்கப்பட்ட உயிரினம். பார்த்தால் சாதுவாகதான் தெரிகிறது. என்ன செய்யுமோ!

காமா –

இது ஒட்டகமும், லாமாவும் இணைந்து உருவாக்கப்பட்ட கலவை உயிரினம். லாமாவை ஒப்பிடுகையில் ஒட்டம் மிகவும் பெரியதாய் இருக்கும். எப்படி இந்த யோசனை அவர்களுக்கு தோன்றியதோ!

ஜோன்கீ –

இந்த உயிரினம் வரிக்குதிரையும், கழுதையும் இணைத்து உருவாக்கப்பட்டது. பழக்கப்படுத்த மிகவும் கடினமாக இருக்கும் என்று வலைப்பூக்கள் தெரிவிக்கின்றன.

வூல்ப் டாக் –

படத்தை பார்த்ததுமே தெரிந்திருக்கும். ஆம் நாய்க்கும், ஓநாய்க்கும் இடையே உருவாக்கப்பட்ட உயிரினம்தான் இது. ஓநாய் காடுகளிலே வாழ்ந்து பழக்கப்பட்டதால், மனிதனுடன் நாய் அளவிற்கு பழகாது. ஆனால் நாயின் குணம் கொண்ட வூல்ப் டாக் என்றால் நிச்சயம் பழகும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

12 comments on “விரைவில் நடமாடப்போகின்றன புராண மிருகங்கள்

 1. எஸ். கே சொல்கிறார்:

  அருமை! அறிவியல் நினைத்தால் அனைத்தும் சாத்தியம்தான்!

 2. ! பனித்துளி சங்கர் ! சொல்கிறார்:

  மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது தகவலும் புகைப்படங்களும் . பகிர்வுக்கு நன்றி

 3. செல்வராஜ் சொல்கிறார்:

  நல்ல தகவல்! இங்கு இதைப்போல மனிதர்களை பார்க்கலாம். அதாவது ஆப்ரிக்க கறுப்பு மற்றும் வெள்ளைக்கார தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆப்ரிக்கர்களின் கறுத்த சுருள் முடியுடனும் வெள்ளை நிற உடலுடனும் இருக்கும். இப்படி பட்டவர்கள் நிறைய லண்டனில் இருக்கிறார்கள்.

 4. படைப்பாளி சொல்கிறார்:

  அருமை..அருமை..என்னே அறிவியலின் விந்தை..!ஆனால் இந்த மிருகங்கள் பயமுறுத்துமா,பாதுகாக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

 5. adhithakarikalan சொல்கிறார்:

  வன்புணர்வு… மிருகங்கள் பெரிதாக எதிர்ப்பை காண்பிக்காது என்ற காரனத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? விவசாய அடிப்படையில் ஹைப்ரிட் என்பதை ஓரளவிற்கு உலகம் ஏற்றுக் கொண்டது. அதிலும் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஹைப்ரிட் விஷயங்களினால நிறைய நோய்நொடிகள் வருகின்றன, அது பார்க்க மட்டுமே அழகாக உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. இயற்கையான முறையில் பரிணாம வளர்ச்சியில் ஒரு மிருகம் மாறுவது ஏற்புடையது. ஆனால் இதுபோல வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவது உண்மையில் வருந்தத்தகக் செயல். ஒரு மனிதனை ஒரு மிருகத்திடம் அவனுடைய சம்மதம் இல்லாமல் புணரச் செய்வது எவ்வளவு கொடுமையான விஷயம் கொஞ்சம் எண்ணி பாருங்கள்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   கலப்பினங்கள் நன்மை பயக்கும் என சிந்து பசுகளை அறிமுகம் செய்தார்கள். இன்று கிராமங்களில் அவை மட்டுமே அதிகம் காணப்படுகின்றன. மாறுபட்ட விலங்கினங்களை வன்புணர்வுக்கு உட்படுத்துதல் கண்டிக்கத்தக்கதாக இருந்தாலும், மனித இனத்தின் நன்மைக்காக அதிகளவில் யாரும் கண்டு கொள்வதில்லை.

   மாற்றுக் கருத்து இல்லாத செயல் ஏதேனும் இருக்கின்றதா என்ன?.

   வேறோரு கோணத்தினை எங்களுக்கு எடுத்துக்காட்டியதற்கு நன்றி நண்பரே!.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s