நடுநிசி கவிதைகள்!

யார் கவிதையோ!

எல்லோரும் உறங்கும் அந்த நடுநிசியில்

கன்னியொருத்தி கோலமிட
நீர்தெரித்த வாசல்போல
சாரல்மழையில் சாலை நனைந்திருக்கிறது!

காலை முதல் கட்டித்திரிந்த சேலையை
கழற்றி எறிவதுபோல
வெம்மையை எறிந்துவிட்டு பூமி குளிர்ந்திருக்கிறது!.

இதையெல்லாம் ரசித்து
சாலையோரம் நிற்கும் கவிஞனின் சிற்பம்
கவிதையை எழுதி காற்றல் விடுகிறது!

குளிருக்கு இதமாய் போர்வையிட்டு தூங்கிவிட்டு
காற்றில் இருக்கும் கவிதையை பிடித்து
காகிதத்தில் எழுதி என் பேரையும் இட்டுக்கொள்கிறேன்!.

அரிக்கன்

இரவெல்லாம் மகன் படிக்க
மண்ணென்னைய் வேண்டுமென
சுல்லிபொறுக்கி சோறுசமைத்திடுவாள் அன்னை!

காலைவரும் கடுங்குளிரிலும்
சுடுநீரில் குளிக்கும் சுகத்தினை
மகனுக்காக மறந்துவிடுவான் தகப்பன்!

ஆனால் மகனோ

பாடபுத்தகத்தை புரட்டாமல்
குடிசையின் ஓட்டைவழியே
எட்டிப்பார்க்கும் நிலாவை
கவிதையாய் வடித்துக்கொண்டிருக்கிறான்.

காண்பதை சொல்ல முடியாமல்
கதறி எரிந்து கொண்டிருக்கிறது
அரிக்கன் விளக்கு!.

என்னுடைய சுமை கவிதையை முகம் தெரியாத பேஸ்புக் தோழி ஒருத்தி சேமித்து வைத்திருந்தாள். நாம் அடையாத தூரத்தை நம் கவிதை அடைந்திருக்கிறது என மகிழ்ச்சியுற்றேன். சிலருக்கு சில கவிதைகள் பிடிக்கின்றன. இவை நெடுநாட்களுக்குப்பின் ஒரு மழையின் இரவில் எழுதிய கவிதைகள்.

22 comments on “நடுநிசி கவிதைகள்!

  1. எஸ். கே சொல்கிறார்:

    அருமையான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

  2. question சொல்கிறார்:

    “…கலட்டி எறிவதுபோல…”

    “களட்டி எறிவதுபோல” என திருத்தவேண்டும்

  3. adhithakarikalan சொல்கிறார்:

    அருமையான கவிதை…. அசத்தறீங்க நண்பரே…

  4. பிரவின்குமார் சொல்கிறார்:

    கவிதை ரசிக்கும்படியாய் அருமையாக உள்ளது..!!

  5. தஞ்சைசரவணன் சொல்கிறார்:

    ஆஹா இரண்டு கவிதைகளுமே மிகவும் நன்று அதுவும் யார் கவிதையோ கவிதை படிக்க படிக்க திகட்டியது அருமையான அற்புதமான கவிதைகள் இதுபோல் இன்னும் நிறைய எழுத எனது நல்வாழ்த்துக்கள்

  6. தஞ்சைசரவணன் சொல்கிறார்:

    கவிதை காதலரே தங்களின் இன்னொரு தளத்தில் உள்ள கவிதைகளை படித்தேன் நன்று

  7. படைப்பாளி சொல்கிறார்:

    ஆஹா…அருமை..இனிமையான எழுத்துக்கள்…அழகிய வரிகள்..

  8. thozhilnutpam சொல்கிறார்:

    கவிதை அருமை சகோதரா!

  9. M.Kalidoss சொல்கிறார்:

    தங்கள் கவிதை நிரம்பவும்
    பிடித்திருந்தது.பாராட்டுக்கள்

  10. கோவை கவி சொல்கிறார்:

    மழையிரவில் கவிதைகளும் மழையாக் பொழிந்து வரும் தான்! இக் கவிதைச் சிந்தனை நன்றாக உள்ளது . வாழ்த்துகள் சகோரதரே!! Vetha. Elangathilakam.Denmark.

  11. Rani சொல்கிறார்:

    நண்பரே…!
    வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய சுவையான கவிதை…
    இங்கு சிறு திருத்தம் செய்ய நான் விழைகிறேன்…
    “…களட்டி எறிவது போல…” அல்ல..
    அது “…கழற்றி எறிவது போல…”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s