பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதை- தமிழ் மண்ணின் சாமிகள்

பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதைகளை பார்க்கும்போது நம்முடைய முன்னோர்களின் வாழ்கையில் பிரிவு என்பது மிகக் கொடூரமாக இருப்பதை அறிய முடிகிறது. இன்றைய காலக்கட்டத்திலும் காதல் செய்த பலரை பிரிப்பது சமூகமாகவோ, பொருளாதாரமாகவோ இருக்கிறது. ஆனால் இவர்கள் கொண்ட நட்பை வறுமை பிரிக்க பார்க்கிறது. கதையை படியுங்கள், இது மனம் கனக்கும் தோழிமார் கதை.

குடுமியான் மலை. புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம். சில தலைமுறைக்கு முன்னால் ஊரே மழையின்றி காய்ந்து போனது. நிலம் காய்ந்து போனதால், விவசாயத்தையே நம்பி இருந்தவர்களுக்கு ஏழ்மை மட்டுமே எஞ்சியது. எங்கு நோக்கினும் வறுமை தாண்டவம் ஆடியுது.

பஞ்சம் தணியும் எனக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனார்கள். இறுதியாக என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க ஊர்க் கூட்டம் போட்டார்கள். கூடத்தில் இருந்த ஒருவர் மதுரைக்குப் பக்கம் சென்றால் பிழைப்பு தேட வழியுண்டு என்று சொல்ல. ஊரை விட்டு ஒட்டுமொத்தமாய் வெறியேற முடிவெடுத்தார்கள். ஆனால் காலம்காலமாக பாட்டன், பாட்டனுக்குப் பாட்டன் வசித்த பூமியை எளிதாக விட்டுச் செல்ல முடியவில்லை.

மக்களெல்லாம் மண்ணைப் பிரியும் துக்கத்தில் இருக்க, இரண்டு பெண்கள் மடடும் தாங்கள் பிரியப்போவதை எண்ணி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பாப்பன வீட்டுப் பெண் பாப்பாத்தி, மற்றொருத்தி கருப்பாயி. இருவரும் சிறுவயது முதல் தோழிகள். ஆச்சாரம் என்று பாப்பாத்தியை கருப்பாயுடன் சேர அனுமதிக்காவிட்டாலும், சாதிய கட்டுப்பாடுகளை தகர்த்து எரிந்துவி்டடு கருப்பாயுடன் நட்பாக இருந்தால் பாப்பாத்தி. வெவ்வேறு சாதியை சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒருவர்மேல் ஒருவர் அளவுகட்ந்த அன்பு வைத்திருந்தார்கள்.

தொலைதொடர்பு வசதியெல்லாம் இல்லாத காலம் அது. இருவர் பிரிந்து வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரமித்தால் மீண்டும் வாழ்க்கையில் சந்திப்பதே கடினம். ஆனால் கருப்பாயி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் முதலில் ஊரைவிட்டு செல்வதென முடிவெடுத்தார்கள். மாட்டு வண்டியில் பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாரானார்கள். “பாப்பாத்தியுடனே இருந்து கொள்கிறேன்” என உறவுகளுடனும், பெற்றவர்களுடனும் செல்ல மறுத்தாள் கருப்பாயி. பாப்பாத்தியோ “அவர்களுடன் நானும் செல்கிறேன். அனுமதிகொடுங்கள்” என்று கெஞ்சினாள்.

இருவரின் சொற்களையும் காதில் போட்டுக்கொள்ளக் கூட யாரும் தயாராய் இல்லை. பாப்பாத்தியை அவர்கள் வீட்டிற்குள் அடைத்துவைத்தார்கள். கருப்பாயை அவளின் சொந்தங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்கள். இருவருக்கும் அழுவது தவிற வேறெதையும் செய்ய முடியவில்லை. கருப்பாயி உறவுகள் நெடு நேரம் நடந்து சென்றார்கள். இரவு நெருங்கியதும் ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள். நல்ல இடமாக பார்த்து எல்லோரும் தூங்கத் தொடங்கினார்கள். வண்டிமாடுகள் கூட கண்கள் அசந்தன. ஆனால் கருப்பாயி மட்டும் பாப்பத்தியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

திடிரென ஒரு முடிவுக்கு வந்தவளாய், வந்த வழியே ஓடத்தொடங்கினாள் கருபப்பாயி. அவர்கள் தங்கியிருந்தப் பகுதி அடர்ந்த காடு. தனியாக செல்கிறோமென்ற பயமும் அவளிடம் இல்லை. பாப்பாயை பார்த்தால் போதும் என சக்தி வந்தவளாய் ஆவேசமாய் ஓடுகினாள். பாதி வழியில் எதிரே ஒரு உருவம் வருவது தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் அது பாப்பாத்தி. யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தியை தேடி கருப்பாயி ஓடிவந்தது போலவே பாப்பாத்தியும் வந்திருந்தாள்.

கருப்பாயிக்கு என்ன யோசனை தோன்றியதோ, அதுவே பாப்பாத்திக்கும் தோன்றியது. கருப்பாயின் உறவுகள் பாப்பாத்தியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பாப்பாத்தியின் உறவுகள் கருப்பாயை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே “உயிரோடு இருந்தால் தானே பிரிப்பார்கள். ஒன்றாய் இறந்து போனால் என்ன செய்வார்கள் ” என விபரீதமான முடிவை சேர்ந்தே எடுத்தார்கள்.

பொழுது விடிந்ததும் கருப்பாயை காணாமல் ஒரு புறம் அவளின் உறவுகள் தேட, பாப்பாத்தியை காணாமல் மறுபுறம் அவளின் உறவுகள் தேடினார்கள். இந்த இரண்டு கூட்டமும் நடுக்காட்டில் சந்தித்துக் கொள்ள, இருவரையும் சேர்ந்து தேடத் தோடங்கினார்கள். அடர்ந்த காட்டையும், ஊரையும் சல்லடைப் போட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மொட்டைக் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தார்கள், கருப்பாயும், பாப்பாத்தியும்.

வாழ வேண்டிய வயதில் இரண்டு கன்னிப் பெண்களின் சாவைக் கண்டு கதிகலங்கி போனார்கள் இரண்டு கூட்டமும். சாதி பேரைச் சொல்லி இழந்தது போதுன்னு இரண்டு பிணங்களையும் ஒன்னாவே எரித்துவிட்டு, சாதி பார்க்காம இரண்டு பேரையும் வணங்கத் தொடங்கினார்கள்.

நன்றி –

இயக்குனர் சேரனின் டூரிங் டாக்கிஸ் புத்தகம். அதில் சேரனின் பாட்டி சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. சொல் வழக்கிலிருந்து கதையாக மாற்றியுள்ளேன். சில இடங்களில் அவை சிரமாக இருந்தாலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பாப்பாத்தி பிரமண குலத்தை சேர்ந்தவள். கருப்பாயி எந்த குலத்தை சார்ந்தவள் என தெரியவில்லை. அதை எப்படியோ சரி கட்டி கதையாக எழுதிவிட்டேன். விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் இணைக்க வசதியாக இருக்கும். வலைப்பூவில் இருவரின் புகைப்படமும் கிடைக்கவில்லை. எங்கள் ஊருக்கு அருகிலும் கோவில்கள் இருப்பதாக தெரியவில்லை. அம்மனின் படங்கள் கிடைக்கும் போது பதிக்கிறேன்.

25 comments on “பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதை- தமிழ் மண்ணின் சாமிகள்

 1. adhithakarikalan சொல்கிறார்:

  நட்புக்கு ஏது ஜாதி… மதம், உண்மையில் மனம் கனக்கும் கதை தான்.

 2. தஞ்சை சரவணன் சொல்கிறார்:

  நன்று நண்பரே இன்னும் அறிய தேடலை எதிர் பார்க்கிறோம்

 3. தஞ்சை சரவணன் சொல்கிறார்:

  நம் வலைப்பூவில் நீங்கள் வேறு தளத்திற்கு சுட்டி கொடுக்கும் பொது நம்தளத்தை விட்டு வெளியேறித்தான் பார்க்க முடிகிறது நம் தளத்தை விட்டு வெளியே செல்லாமல் புதிய tab இல் பார்க்கும்படியாக மாற்றி அமைத்தால் என்ன நண்பரே

 4. படைப்பாளி சொல்கிறார்:

  நட்புக்கு இலக்கணமானக் கதை..அருமை

 5. கல்பனா சொல்கிறார்:

  கதையை படித்து அழுதே விட்டேன்.

  நட்பு கொள்ள சாதி தடையா. கொடுமை கொடுமை.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நீங்கள் மனம் வருந்தியது அவர்களின் நட்புக்கு கிடைத்த வெற்றி. இனி இதுபோல தவறுகள் எங்கும் நிகழா வண்ணம் தடுக்க உங்களைப் போல நல்ல மனம் படைத்தவர்கள் வேண்டும். அதை உருவாக்குவாக்கவே அந்த கதையை காலங்கள் கடந்தும் மக்களிடம் கொண்டு செல்லுகின்றனர்.

   மிக்க நன்றி!

 6. question சொல்கிறார்:

  Are both Pappathi and karuppaji lesbians?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   எல்லா காலத்திலும் பெண்கள் லெஸ்பியன்களாக வாழ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நட்பே கதையில் சொல்லப்படுகிறது. ஏன் நட்புக்காக உயிர் துறக்க மாட்டார்களா நண்பரே!. செக்ஸ்தான் வாழ்க்கையா. அதையும் தாண்டி நிறைய இருக்கிறது.

   • question சொல்கிறார்:

    So, you admit that there could be a possibility that they were lesbians. I also think so.

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    வாய்ப்பு இருக்கலாம் என்பதால் அவர்களை லெஸ்பியன்களாக அறிவித்துவிட இயலாது. அவர்களின் நல்ல நட்பே இன்றுவரை சொல்லப்பட்டுவருகிறது. இல்லாததை கற்பனை செய்து அவர்களை நாம் களங்கப்படுத்த வேண்டாம். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பை பற்றி கேள்வுற்றிருக்கிறோம். அதற்காக அவர்களை ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதமுடியுமா. நட்பிற்காக உயிர் துறந்தவர்களின் பட்டியலில் இவர்கள் பெயரும் இருக்கிறது.

    சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என படித்திருக்கிறேன். ஒரு வேளை அது போல செய்தியின் தாக்கமாக நம்முடைய இந்தக் கருத்துகள் இருக்கலாம். இப்போதெல்லாம் நட்பிற்காக யாரும் இந்தளவிற்கு துணிவதில்லை. நன்றி நண்பரே!.

   • question சொல்கிறார்:

    லெஸ்பியன் என்பது களங்கம் அல்ல. லெஸ்பியன்களை வணங்கும் பழக்கம் சில சாதி மக்களிடையே இன்றும் உள்ளது.

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    அப்படிய ஆச்சிரியமான செய்தி. மேலும் தகவல்களை தர முடியுமா நண்பரே@!

 7. ARIVU சொல்கிறார்:

  Hi, Good story, My family godess is same as what u said above.
  that temple located near lalgudi ( Manakkal ).
  rgds
  arivu

 8. sakthivel சொல்கிறார்:

  எதற்காக இப்படி தவறான பாதையில் யோசிக்க வேண்டும்.
  நம் எண்ணங்கள் இந்த அளவு சுருங்கி விட்டதா.கடவுளை கடவுளாக மட்டும் பாருங்கள்.

 9. பாப்பாத்தி பிராமணர் எல்லாம் அல்ல. அது எல்லாம் சும்மா பின்னால் திரிந்தது தான். எங்கள் வீட்டில் பாப்பாத்திக்கும் கருப்பாயிக்கும் சின்ன கோயிலுண்டு.

  ஆனால் இங்கு கதையை அப்படியே மாத்திவிட்டார்கள். தென்காசிக்கு வந்த பிராமணர்கள் இருவர் அப்படியே ஜீவ சமாதி ஆகிவிட்டனர் என்று. முடியல……….. கேட்டா பெரிசா இருக்குற வடிவம் புருஷனாம். சிருசா இருக்குறது பொன்டாட்டியாம். இத மட்டும் அந்த பாப்பாத்தி கேட்டா அவ்வளவுதான். கருப்பாயி காணாமப் போயிட்டா.

  தொல்காப்பியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பார்ப்பனர் என்று கூறப்பட்டவர்கள் பறையர்களே.

  பின்வரும் சிலம்பின் வரிகளைக் பாருங்கள். இந்த சாக்கைக்கூத்து சேரன் செங்குட்டுவன் அவையில் ஆடப்பட்டது.

  “பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்” – சிலம்பு

  மேலும் சில இலக்கியங்களில் பாணர் நான்மறைகளைப் பாடினர் எனவரும்.

  வியாசர் எழுதிய பாகவதத்தில்

  ஏக ஏவ புற வேதாஹ்
  பிரணவ சர்வ வன்-மயஹ
  ::::::::::பாகவத புராணம்-9.14.48

  என்ற வரிகள் உண்டு. அதாவது மயன் எழுதிய பிரணவ வேதம் ஒன்று தான் முதலில் இருந்ததாம். மயன் என்பவன் சிலம்பின் வரிகளில் தமிழர் கலைகளுக்கு எல்லாம் முதன்மையானவன் எனக் கூறப்படுகிறான்.

  ஆக இதில் இருந்து அனுமானிப்பது என்ன என்றால் இங்கு மறை எழுதப்பட்டு அதை வியாசர் வர்ணாசிரமத்துடன் சேர்த்து திரித்து எழுதிவிட்டார் என்று நன்றாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் பார்ப்பணர் என்று கூறப்படுவோர் பறையர்களும் பாணர்களுமே ஆவர். பிற்காலத்தில் தான் பார்ப்பணர் என்றால் ஆரிய வர்ணாசிரமப் பிராமணர் என்று ஆனதெனத் தெரியும்.

 10. Malini சொல்கிறார்:

  தோழர் போல் தோழிமார் கதை தமிழ் சிறுதெந்வங்கள்ல வேறெதுவும் கதை இருக்கிறதா… நான் இந்த வாரம் புதுக்கோட்டை செல்கிறேன் அம்மன் புகை படங்களை அனுப்புகிறேன் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s