தமிழ் மாணவனின் திறமை

என்னுடைய குடும்பம் ஆசிரிய குடும்பம் என்பதால் தேர்வு தாள்களை கட்டுக்கட்டாக படித்திருக்கிறேன், திருத்தம் செய்திருக்கிறேன். என் வீட்டிற்கு அருகிலிருக்கும் ஆசிரியரும், மாணவர்களின் பயிற்சிக்காக குட்டி குட்டி தேர்வுகளை வைத்து அதை திருத்த என்னிடம் தந்துவிடுவார். கட்டுரைகளில் மாணவர்கள் பலரின் கற்பனை திறனை கண்டு வியந்திருக்கிறேன். அந்த கற்பனை திறனுக்கு இந்த கல்வி முறை ஏற்றதல்ல. விடுமுறைக்கடிதம் எழுதச் சொன்னால் இன்றும் பலர் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என்றே எழுதுவார்கள். அன்னைக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு கூட்டி செல்ல விடுமுறை வேண்டும் என்பதுபோல எழுதி இதுவரை நான் கண்டதில்லை. நானும் அப்படி எழுதியதில்லை. ஏனென்றால் ஆசிரியர்கள் எழுதச் சொன்ன படிதான் எழுதவேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் கிடைக்காது.

கல்வி முறைகள் பல குறைகளோடு இருப்பதை பல முறை நான் கண்டிருக்கிறேன்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஆசிரியர் அந்த தேர்வு தாளை பார்த்ததும், கோபத்தின் உச்சிக்கே சென்றார். அவர் கோபப்பட்டது விடைத்தாளை எழுதிய மாணவன் மேல் அல்ல. அங்கு தேர்வறையில் கண்காணித்த ஆசிரியரின் மீது. அதில் “நான் விமலாவை காதலிக்கிறேன். நான் விமலாவை காதலிக்கிறேன்” என்று மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அதுவும் மூன்று அடிசனல் பக்கங்களை வாங்கி அதிலிலும் இது தொடர்ந்திருந்தது. சில இப்படி என்றால் “என் குடும்பத்தில் அப்பா இறந்துவிட்டார். அம்மாவுக்கு நெஞ்சுவலி. அக்காவுக்கு கண்தெரியாது. எனவே தயவு செய்து என்னை பாஸ் செய்துவிடுங்கள்” என கெஞ்சல்கள் இருக்கும். ஏதாவது எழுதியிருந்தால் நிச்சயம் தேர்ச்சி பெறவாவது செய்திருப்பேன் என்று மதிப்பெண் போட முடியாமல் என் அம்மா புலம்பியிருக்கிறார்.

ஆனால் சில விடைத்தாள்களில், கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். தனக்கு தெரிந்ததை, பார்த்தை, கேள்வியுற்றதை கேள்விக்கு தக்வாறு எழுதி தள்ளியிருப்பார்கள் மாணவர்கள். கேள்விக்கும் விடைக்கும் சம்மந்தமில்லை என்றாலும் படித்து படித்து வயிறுகுலுங்க சிரிக்கலாம். (சொல்லி கொடுத்த ஆசிரியர் சிரிக்க முடியாது). அப்படியொரு வினாத்தாளை புகைப்படம் எடுத்து நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். மிக பொறுமையாக ஒரு வரி விடாமல் படியுங்கள். எப்படியிருக்கும் என்பதற்காக சிலவரிகள்,

“டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்” இப்பாடலடி எனக்கு அவ்வளவுதான் தெரியும்.அரையாண்டுத் தேர்வில் முழுமையாக எழுதிவிடுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன்.

நாயக்கர்களுக்கு நாய்கள் பிடிக்கும் என்பதால் நாயக்கர்கள் என்று பெயர் வந்ததாக சிலர் கூறுகின்றார்கள்.

நாலடியாரில் வாத்தியார் எனும் அதிகாரத்தில் உள்ள பாட்டு, “என்னடி முனியம்மா…”

இவ்வாறு என் தாளையும், பேனா மையையும், நேரத்தையும், சக்தியையும் செலவழித்து கேள்வியை ஒரு பக்கம் எழுதியுள்ளமையால், குறைந்தது ஒரு மதிப்பெண்ணாவது போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன். நன்றி. வணக்கம்.

என்ன படித்துவிட்டீர்களா?. இந்த மாணவனுக்கு எத்தனை மதிப்பெண்கள் போடலாம். சொல்லுங்கள்.

20 comments on “தமிழ் மாணவனின் திறமை

 1. maduraisaravanan சொல்கிறார்:

  some hidden trues always bitter. s i too agree with u that there should be change in our on evaluvation system and in the exam pattern. and the teaching system will also need to change. thank u for sharing.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நிச்சயம் மாற்றம் வேண்டும். சீர்திருத்துகிறேன் என்று இன்னும் மட்டமான கல்வியையே மாணவர்களுக்கு தருகின்றார்கள். ஆசிரியர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சில மாணவர்களைக் கண்டு பயந்து நடுங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பிரம்பு எடுக்க முடியாது, கடுமையாக பேச முடியாது. வாயை மூடிக்கொண்டு, அவனுடைய வருங்காலத்தை நினைத்து நொந்தவாறு செல்கின்றார்கள்.

 2. நல்ல பகிர்வு,ரொம்ப மெனக்கெட்டு ஸ்கேன் எல்லாம் எடுத்து போட்டு பஹிர்ந்தமைக்கு நன்றி.ஒரே ஒரு பிழை>>> அறையாண்டுத் தேர்வில்>>> அரை ஆண்டு

 3. ஃபாலோயர்ஸ் பகுதி வைக்கலையா?அலாஸ்கா ரேங்கிங்க்,விசிட்டர்ஸ் டொடே பகுதி வைக்கவும்

 4. கல்பனா சொல்கிறார்:

  //மலர்கள் பூத்துக் குலுங்கும் போது கோவிலில் குதுகலமாக இருக்கும்//

  மாணவனின் கிண்டல் மிக அதிகமாக இருக்கிறது. எந்த ஆசிரியர் மாட்டிக்கொண்டாரோ தெரியவில்லை.

  எழுத்தில் நான் விரும்பிய மாற்றம் தெரிகிறது சகோதரா,. வாழ்த்துகள்.

 5. எஸ். கே சொல்கிறார்:

  சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🙂

 6. adhithakarikalan சொல்கிறார்:

  சிரிக்க வைத்ததற்காகவாது 1 மதிப்பெண் போட்டிருக்கலாம்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அதற்கு தேர்வு விதிகள் ஆசிரியர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. பொது கட்டுரைகளுக்கும், கடிதங்களுக்கும் கூட மாணவர்களை சுயமாக எழுத சில ஆசிரியர்கள் விடுவதில்லை.

   நம்மை சிரிக்க வைத்ததற்கு நாம் மதிப்பெண்கள் போட வேண்டியதுதான்.

 7. படைப்பாளி சொல்கிறார்:

  100% க்கு 100% கொடுக்கலாம் நண்பரே..இதுபோன்ற தனித்தன்மை வாய்ந்த தைரியமான மாணவர்கள்தான் பிற்காலத்தில் வாழ்க்கையில் ஜெயிக்கிறவர்கள் ஆகிறார்கள்.

 8. தஞ்சை சரவணன் சொல்கிறார்:

  சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது!
  சிரிக்க வைத்ததற்காகவாது 100 மதிப்பெண் இட்டிருக்கலாம்.

  உண்மையில் இது நடந்த சம்பவமா நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டதா ?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அது சரியாக தெரியவில்லை நண்பரே!. மின்னஞ்சலில் நண்பர் பார்க்க சொல்லி அனுப்பியிருந்தார். என்னை சிரிக்க வைத்தது உங்களையும் சிரிக்க வைக்கும் என்று பகிர்ந்தேன்.

 9. காவேரி சொல்கிறார்:

  கலக்கல் பதிவு.

 10. வைகறை சொல்கிறார்:

  அப்படிப் பார்த்தால் நான் அநேக வலைப்பூக்களைப் படித்திருக்கிறேன்!! ச்சே.. இப்ப ஏண்டா அரசாங்கம் பரிட்சை வேண்டாம்ன்னு சொல்லுச்சோன்னு கவலையா இருக்கு!! ( நான் தொடக்கப்பள்ளி ஆசிரியர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s