எபா டபா டூ (Yabba-Dabba Do)

எபா டபா டூவென தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு பிளிங்ஸ்டோன் ஞாபகம் வந்தால், நீங்கள் கார்டூனை விரும்பும் மனிதர். தி பிளிங்ஸ்டோன் என்று கார்டூன் உலகை பிரம்மிக்க வைத்த கார்டூன் மனிதன் தோன்றி 50 வருடங்கள் ஆகின்றன. அதன் கொண்டாட்டமே இந்த இடுகை. பிளிங்ஸ்டோனை அறிந்தவர்கள் சிறுவயது நினைவுகளில் மூழ்குங்கள். அறியாதவர்கள் தொடருங்கள்.

Fred Flintstone & Barney Rubble Family

கி.பி 1960- ல் அமெரிக்கன் பிராட்கேஷ்டிங் கம்பேனி ஒளிபரப்பிய கார்டூன் சித்திரம் பிளிங்ஸ்டோன். கற்கால மனித வாழ்க்கையும், இந்த நவீன வாழ்க்கையும் கற்பனையில் கைகோர்த்தால் எப்படி இருக்கும் என்பதன் வெளிபாடே, பிளிங்ஸ்டோன் கார்டூனின் ஆதாரம். சிறுவயதில் நாள் தவறாமல் பார்த்து ரசித்திருக்கிறேன். பிளிங்ஸ்டோன் மனைவி குழந்தையுடன் வாழ்ந்துவரும் ஒரு கற்கால மனிதன். அவன் கற்குவாரியில் வேலை செய்பவன். ஸ்டோன் ஏஜ் என்பதற்காக கார்டூன் முழுக்க கற்களை பார்க்க முடியும். அவன் வேலை செய்யும் இடத்தில் எந்திரங்களுக்கு பதிலாக டைனோசர்கள் இருக்கும். அதனை கட்டுபடுத்தி கற்களை உடைக்க வைப்பது அவன் பணி. கார்டூனில் அவனுடைய குடும்பமும் அவன் நண்பனின் குடும்பமும் செய்யும் கலாட்டாக்கள்தான் கதைகளம். நகைச்சுவைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருக்கும் இதில், கற்பனை வளமும் அபாரமானது.

கற்காலத்தில் இருந்த டைனோசர்கள், மாமுத் யானைகள், பெரிய புலிகள் என எல்லாவற்றையும் கொண்டிருப்பதோடு, நவீன உலகத்தில் இருக்கும் விமானங்கள், விளையாட்டுகள், அடையாளங்கள் என எதையும் விடுவதாக இல்லை. கற்காலத்தில் இருப்பதைப் போன்ற உணர்வில் நவீன விமானங்கள் தலையிட்டால், நெருடலாக இருக்குமல்லவா?.

அதனால் அவைகளையும் கற்கள், விலங்குகளின் தோல், எலும்புகள் என கற்காலத்திற்கு தக்கவாறு மாற்றி அமைத்துவிட்டார்கள். கல்லை செதுக்கி புகைப்படம் தரும் மரம்கொத்தி, அலுவலகத்தில் அலாரத்திற்கு பதிலாய் பறவை, நாய்களைப் போல செல்லப்பிராணியாக டைனோசர்கள் என கலக்கல் கற்பனை உலகம். ரேடியோ, கம்பியூட்டர், வாக்குவேம் கிளினர்கள் எப்படி செய்யப்பட்டிருக்கின்றன என்று இந்தப் படங்களை பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.

ரேடியோ

வாக்குவோம் கிளினர்

கம்பியூட்டர்

கார்டூனைக் கடந்து திரையிலும் 1994 -ல் The Flintstones என்ற படமாக வந்திருக்கிறது. இப்போது இருப்பதுபோல தொழில்நுட்பம் இல்லாததால், திரைப்படத்தின் சிலகாட்சிகளில் பொம்மைகள் இருப்பது தெரியும். ஆனால் 2000த்தில் The Flintstones in Viva Rock Vegas என்ற படம் வந்திருக்கிறது. அதில் தொழில்நுட்பம் முன்பைவிட சிறப்பாக இருப்பதால், காண நன்றாக இருக்கிறது. கிராபிஸில் கைதேர்ந்தவர்களாக திரையுலகம் இருக்கும் இந்த வேளையில் மீண்டுமொரு படம் வந்தால் நிச்சயம் எல்லோரும் விரும்புவார்கள்.

14 comments on “எபா டபா டூ (Yabba-Dabba Do)

 1. question சொல்கிறார்:

  என் பெயர் ஜீவா. சென்னையில் வசித்து வருகிறேன். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் முடிந்தது. என்னுடைய திருமணம் ஒரு காதல் திருமணம். நான் கிறித்துவக் குடும்பம் என் மனைவி பிராமண வகுப்பை சார்ந்தவள். பல போராட்டங்களுக்கு பிறகு இரண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நல்ல படியாக நடந்தது.(…)

 2. கல்பனா சொல்கிறார்:

  நான் சிறுவயதில் ரசித்தது.

 3. adhithakarikalan சொல்கிறார்:

  FLINTSTONE எனக்கு மிகவும் பிடித்த கார்டூன் கதை… 2 படங்களையும் கூட பார்த்திருக்கிறேன்… TOM and JERRYக்கு அடுத்தபடியாக அலுக்கவே அலுக்காத சில கதைகளில் இதுவும் ஒன்று.

 4. படைப்பாளி சொல்கிறார்:

  வாவ்..சிறுவயது ஞாபகங்களை தூண்டி விடுகிறீர்கள்…

 5. கேள்விநாயகன் சொல்கிறார்:

  Yabba-Dabba Do னா என்ன.

 6. vasudevan சொல்கிறார்:

  நான் சிறு வயதில் ரசித்த நிகழ்ச்சி இதுதான் . எனக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பல நகைச்சுவைகளை ரசித்திருக்கிறேன் . இவ்விதம் மொழி பிரச்சினையே இல்லாமல் காமெடிகளை தருகிறது.முக்கியமாக அந்த வீட்டில் இருக்கும் டைனோசர் பண்ணும் காமெடியில் என் வயிறு புண்ணாகும் படி சிரித்து இருக்கிறேன்.

 7. மருதநாயகம் சொல்கிறார்:

  எபா டபா டூ வைப் பற்றி நீங்கள் மட்டுமே எழுதியிருக்கின்றீர்கள். http://www.google.co.in/search?q=%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%9F%E0%AF%82+&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s