பிச்சாயி அம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

பிச்சாயி அம்மன்

வீரய்யா

அது 17ம் நூற்றாண்டு. சைவமும் வைணவமும் தங்களுக்குள் கொண்ட போட்டியால் வளர்ந்து சிறு சிறு கிராமங்களுக்கும் சென்றடைந்துவிட்ட நேரம். அப்போது வாழ்ந்துவந்தார் வீரய்யா என்ற விவசாயி. பெருமாளின் பெரும் பக்தர். அருகிலிருக்கும் பெருமாள் மலையில் பெருமாளை தரிசனம் செய்து, மனமுருகி வேண்டியபின்பே உணவருந்துவது அவருடைய நாள் தவறாத வழக்கம்.

அன்று வயலில் வேலை அதிகமாக இருந்த்து வீரய்யாவுக்கு. அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பசியெடுக்க ஆரமித்தது. வேலைகளை செய்து முடித்துவிட்டு நன்நீரில் கைகால்களை சுத்தம் செய்தார். பின் மதிய உணவுக்காக காத்திருந்தார். பிச்சாயி நிறைமாத கற்பிணியாக இருந்தமையால் உச்சி வெயிலில் அவளால் வேகமாக வரமுடியவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல பசி அதிகமாகிக் கொண்டே போனது. பசிக் கோபமும் வீரய்யாவுக்கு வந்தது.

பிச்சாயி வீரய்யாவிடம் வரும் போது அவருக்கு பசியைவிட கோபமே அதிகமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திருநாமம் இட்டுக்கொள்ள நாமக்கட்டியை கேட்டார். ஆனால் அப்போதுதான் பிச்சாயிக்கு நாமக்கட்டியை மறந்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. வீரய்யா கோபமாக இருக்கிறார் என்பதை அறியாமல் தான் மறந்துவிட்டு வந்ததை பிச்சாயி தெரியப்படுத்த, பசிக்கோபத்துடன் இருந்தவரின் புத்தி தடுமாறியது.

அவளுக்கு தண்டனை தரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அருகில் கிடந்த மண் உருண்டையை பிச்சாயின் மீது கோபமாக வீசினார். ஏற்கனவே உச்சி வெயிலில் நடந்து வந்த களைப்புடன் இருந்தவள் தலையின்மீது மண் உருண்டை தாக்க உடனே மரணமடைந்தாள். நடந்த விபரீத்த்தை உணர்ந்த வீரய்யா தன்னையும் மாய்த்துக் கொண்டார். ஒரு சிறு கோபம் தம்பதிகள் இருவரின் மரணத்திற்கு காரணமானதை பிச்சாயி வீரய்யாவின் கதை எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

கோவில் –

பிச்சாயி அம்மன், வீரய்யா கோவில்,
பெருமாள் மலை அடிவாரம்,
துறையூர்.

நன்றி –
பிச்சாயி தெய்வத்தினை நண்பர் பின்னோக்கியின் வலைப்பூவில் அறிந்தேன். அந்தக் கோவிலுக்கு சென்றேன். அங்கே வணங்க வந்த சிலரிடம் அந்தக் கோவிலின் மகிமையை கூறுமாறு கேட்டேன். ஆனாலும் நண்பர் சொன்ன அளவு யாரும் சொல்லவில்லை. கதையின் முழு சாரமும் அவரிடமிருந்து கேட்டு வாங்கியது. அவருக்கு மிக்க நன்றி.

21 comments on “பிச்சாயி அம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

 1. தஞ்சைசரவணன் சொல்கிறார்:

  நன்று கோவில்படம் இல்லையோ ?

  அப்புறம் தஞ்சை ராஜராஜசோழன் விழா பற்றி எழுதும் எண்ணம் இல்லையோ ?

 2. vikram சொல்கிறார்:

  nice thangs for information

 3. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல விவரணை…அருமை நண்பா…இன்னும் நிறைய சாமிகளின் வரலாறுகளை அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன் நண்பரே..

 4. question சொல்கிறார்:

  இந்த கதையிலிருந்து பிட்சாயி ஒரு மனிதப் பெண் என்பது தெளிவாகிறது. இந்த மனிதப் பெண் எப்படி தெய்வமாக (அம்மனாக) மாறினார்?..

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   ஒரு சிறு கோபம் தம்பதிகள் இருவரின் மரணத்திற்கு காரணமானதை தன்னுடைய சந்ததிகளுக்கும் தெரிய வேண்டும் என சில முன்னோர்கள் நினைத்திருக்க வேண்டும். இறந்தவர்களை இறைவனைப்போல வணங்குவது தமிழ் மண்ணில் நடந்துகொண்டு இருக்கிறது. கடவுள்களை எதிர்க்கும் கலைஞர் தன்னுடைய தாய்க்கு சமாதி அமைத்து வணங்கி வருகிறார். அப்படியிருக்க சாதாரண மனிதர்கள் இறந்தவர்களை தெய்வமாக்கியதில் வியப்பொன்றும் இல்லை.

 5. question சொல்கிறார்:

  you describe all your dead relatives as gods!

 6. question சொல்கிறார்:

  பிட்சாயி ஒங்கட அத்த பொண்ணா?

 7. கணேசன்.வி சொல்கிறார்:

  பிச்சாயி வீரய்யா என்னுடைய குலதெய்வம். அதனைப் பற்றி அற்புதமாக எழுதியிருக்கின்றீர்கள். இணையதளத்தில் என்னுடைய சாமியை பற்றி எழுதியமைக்கு நன்றி

  இதுபோல பல கிராம தெய்வங்களை எழுதுங்கள். நிரைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சேவை பாராட்டுக்குறியது. வாழ்த்துகள்.

 8. question சொல்கிறார்:

  மனிதர்கள் கடவுளாக மாற முடியாது. அப்படி எழுதுவது தவறு. எழுதாதே.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மனிதர்கள் எம்.ஜி.ஆர், வள்ளலார் போல கடவுளாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். சிலர் கோவில்களுக்கு இருக்கின்றார்கள். சிலர் மனதில் இருக்கின்றார்கள். அதை எழுதாதே என்பது உகந்ததல்ல நண்பா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s