தொலைக்காட்சியும் தொல்லைக்காட்சியும்

தொலைக்காட்சிகளில் வரும் அழுகை சீரியல்களுக்கு மத்தியில் சில நல்ல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகின்றார்கள். அதை தேடி கண்டுபிடித்து மட்டுமே பார்க்க முடியும். அப்படியொரு நல்ல நிகழ்ச்சி மக்களின் மனசாட்சி.

மக்களின் மனசாட்சி –

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓம் நமச்சிவாய, சிந்துபைரவி என்ற இரண்டு தொடர்களையும் வீட்டில் இருப்பவர்கள் பார்ப்பார்கள். அந்த தொலைக்காட்சியில் சென்னை மேயர் நேரடியாக கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியும் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு (இன்றும்) கிழமையும் காலை 9.30 மணியிலிருந்து 10.30 வரை மக்களின் மனசாட்சி என்ற பெயரில் ஒளிபரப்புகின்றார்கள். அவரிடம் சென்னை மக்கள் நேரடியாக தொலைப்பேசி மூலம் தங்கள் குறைகளை சொல்லலாம்.

சோம்பலை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புகார் கடிதம் எழுதி, அதை படாத பாடுபட்டு பொறுப்பானவர்களிடம் கொண்டு சேர்த்தாலும், அது படிக்கப்பட்டதா இல்லை பரன்மேல் கிடக்கின்றதா என நாம் அறிவது கடினம். இந்த நிகழ்ச்சியில் தொலைப்பேசி மூலம் மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை சொல்லுகிறார்கள். புது வீடு கட்டுவதற்காக பழைய வீட்டை இடித்து அதை சாலையில் கொட்டுவோர்க்கு ரூபாய் 500 தண்டனையாம். அதுபோல தன்னுடைய வீடு இருக்கும் சாலையில் கட்டிட உடைபாடுகள் கிடப்பதை ஒரு பெண் புகார் தெரிவித்திருந்தார். அதனை சீர் செய்ய மேயர் ஆட்கள் அனுப்பியும், உள்ளூர் அரசியல்வாதி தலையீடால் அது முடியாமல் போயிருக்கிறது. அந்தப் பெண் தொலைக்காட்சியில் மீண்டும் புகார் அளித்தார். நான் அன்றே ஆட்களை அனுப்பி வைத்தேனே என்று அவர் அதிர்ச்சியாக. வந்தார்கள், ஆனால் அரசியல்வாதி தலையீட்டால் திரும்பி விட்டார்கள் என சொல்லவும். அவர் கண்டிப்பாக செய்வதாக சொன்னார்.

இப்படி அரசியல்வாதிகளை எதிர்த்து தொலைப்பேசியில் மேயரிடமே பிகார் கொடுத்தாலும், அவை மீது நடவெடிக்கை எடுக்கப்படுகின்றனவா என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பே. முன் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட குறைகள் சரி செய்யப்படுவதை நிகழ்ச்சியின் பின் பகுதியில் காண்பிக்கின்றனர். மின்விளக்குகள், சாக்கடை என இயல்பான புகார்களுடன், வண்ண தொலைக்காட்சி கிடைக்கவில்லை, சொத்து வரி கட்ட தேவையில்லாத ஆவணம் கேட்கின்றார்கள் போன்ற பல புகார்களும் வருகின்றன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவெடிக்கைகளையும், பலன் அடந்தவர்களின் பேட்டியும் இடம் பெறுகிறது. அது கொஞ்சம் நம்பிக்கை வரவழைக்கின்றது. அது மட்டுமல்லாமல் மேயரின் பதிலில், அவருடைய அனுபவமும் கனிவும் தெரிவதை கவணத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தொலைப்பேசி எண்கள் –
044-39194112.
044-39194113.

ஒரு நல்ல நிகழ்ச்சியைப் பற்றி சொல்லிவிட்டேன். ஆனால் ஒரு பணம் பறிக்க மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சி பற்றி கீழே படியுங்கள்.

சினிமா தெரியுமா –

உன்னோடு இருக்கும் உண்மை என்றும் மறையாது என்ற வலைப்பூவில் நண்பர் பாலசந்தரின் ஒரு பதிவை படித்தேன். ராஜ் தொலைக்காட்சியில் “சினிமா தெரியுமா” என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிக நடிகர்களின் படங்களின் ஒரு பகுதியை காண்மித்து அது யார் என கண்டு பிடிக்கச் சொல்லுகிறார்கள். அப்படி நாம் எளிதாக கண்டுபிடிக்கும் அளவிற்குதான் அந்த புகைப்படங்கள் இருக்கின்றன.

உடனே அவர்களின் தொலைப்பேசிக்கு அழைப்பு விடுத்தால் நிமிடத்திற்கு 10 ரூபாய் எடுக்கப்படும். ஆனால் நிகழ்ச்சிக்கு இணைப்பு கொடுக்காமல் ஏற்கனவே பதியப்பட்ட குரல் ஒளித்துக்கொண்டே இருக்கும். வேறுயாராவது நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கின்றார்களா என பார்த்தால் அதுவும் இல்லை. இவ்வாறு அந்த இடுகையில் குறிப்பிட்டிருந்தார்.

எதற்ச்சையாக ஒருநாள் அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அதிர்ந்து போனேன். தொலைக்காட்சியில் விக்ரம் படம் காட்டப்பட்டது, அடுத்து கார்த்தியின் படம். ஆனால் யாரும் சரியான விடையை சொல்ல அழைக்கவே இல்லை. அவர் சொல்லுவது போலவே நிகழ்ச்சியின் கீழே ஒளிபரப்பும் கடிகாரம் கடைசி நிமிடங்களை எட்டும் போது மட்டுமே அழைப்புகள் வருகின்றன. அவர்களும் தவறான விடைகளை கூறுகின்றார்கள், இல்லை தொலைக்காட்சியின் சத்தத்தினை அதிகமாக வைத்து நேரம் முடியும் வரை காத்திருக்கின்றார்கள். 5000, 7000 என கேள்விகளுக்கு தனித்தனி மதிப்புகள் வேறு வைத்திருகக்கின்றார்கள் தொலைக்காட்சி அமைப்பினர். அதற்கு ஆசைப்பட்டால் உள்ளதும் போகும்.

அவருடைய ஏமாற்றும் ராஜ் டிவி இடுகையைப் படிக்க இங்கு சொடுக்குங்கள். நண்பர்களே தொலைக்காட்சியில் நீங்கள் ரசித்த உபயோகமான நிகழ்ச்சிகள் இருந்தால் குறிப்பிடுங்கள். இல்லை எச்சரிக்கை செய்வதானாலும் உகந்ததே. கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

10 comments on “தொலைக்காட்சியும் தொல்லைக்காட்சியும்

 1. arunaa சொல்கிறார்:

  mokkaiyaana pathivu puthusaa ethassum yosissu ezhuthungka sir appuram munnorkalin thedal super

 2. arunaa சொல்கிறார்:

  mokkai pathivu but munnorkalin thedal super sir

 3. Ganesh.K.T.P சொல்கிறார்:

  மேயர் நல்லது பண்ணறார். ஜீ போல மற்ற தொலைக்காட்சிகளும் செய்யலாம்.

 4. adhithakarikalan சொல்கிறார்:

  மக்களின் மனசாட்சி உண்மையில் ஒரு உருப்படியான நிகழ்ச்சி. மேயர் சென்னையின் இன்டு இடுக்கு பகுதிகளையும் தெரிந்து வைத்திருப்பதை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. மேயர் நல்ல ஒரு மேலாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s